Thursday, January 31, 2019

யோசிங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க - சுட்ட படம்


பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து விடுதலை. எஞ்சாய் சகோ,ஸ்..

Image may contain: text
கல்யாணத்தால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல!


இம்புட்டு பெருசா மூளை இருந்து என்ன பயன்?! யூஸ் பண்ணாம துருப்பிடிச்சு போகுது பாதிப்பேருக்கு...


மாற்றம் வேண்டும்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!

 சாணிமாடுன்னு சொல்வாங்களே! அது இதுதான் போல! மாட்டுப்பொங்கல் பரிதாபங்களில் இதும் ஒன்னு..

வெளிநாட்டில் இப்படிதான் சம்பளம் கிடைக்கும்ன்னு நிறைய பேருக்கு நினைப்பு...


பூனையை மாதிரி சூடு போட்டுக்காமயே நாய் புலியாகிட்டுது.

அடி ஆத்தி! நரம்பு மண்டலம் பாதிக்கும்ன்னு தெரியாம பாதி பல்லை புடுங்கி டாக்டருக்கு இனாமா கொடுத்திட்டு வந்துட்டேனே!


எத்தனை படத்து தீம் மியூசிக் கேட்டாலும் இதுக்கு ஈடு இணை இல்லை. என்ன படம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமோ?!
சதாசர்வ காலமும் தனக்கு அபிஷேகம் ஆராதனை செய்யும் அர்ச்சகரை, அதும் தனக்கு பணிவிடை செய்யும்போதே காப்பாத்த முன்வராத சாமியா கருவறைக்கு வெளிய இருக்கும் நம்மை காப்பாத்த முன்வரும்?! கர்மா, பாவம், புண்ணியம், சுத்தம்ன்னு காரணம் சொல்லாதீக. அப்புறம் நான் கடுப்பாகிடுவேன்.  இதுக்கு ஒரு கார்பெண்டரை நம்பி இருந்தால் அவனாவது நல்லதா ஒரு சாரம் கட்டி அர்ச்சகரை காப்பாத்தி இருப்பார். யோசிங்க! இல்லாட்டி வருத்தப்படுவீங்க!

நன்றியுடன்,
ராஜி




உனக்காக பொறந்தேனே! எனதழகா!


பதின்ம வயது காதலை முன்னெடுத்து சினிமாவாக்கி கல்லாக்கட்டிய தமிழ் சினிமா உலகம் வயது முதிர்ந்தவனின் காதலை புறந்தள்ளியது. முதல் மரியாதை படம் வந்தபோது பெருத்த விமர்சனம் எழுந்தது. அடப்பாவிகளா! காதல் என்ன நேரம், காலம், சூழல் பார்த்தா வரும்?!  சினிமாவுக்கே அப்படின்னா, வாழ்வியலில் சொல்லவே வேண்டாம்.  40 வயசாகிட்டுதா?! காதல், காமம், ஊடல், கூடல், கெஞ்சல், கொஞ்சல்லாம் மூட்டை கட்டி வச்சிடனும். என்ன இந்த வயசில் இப்படி சின்ன புள்ள மாதிரி நடந்துக்குதுங்க. இங்கிதம் தெரியாம, கிருஷ்ணா! ராமா!ன்னு இல்லாமன்னு விமர்சனம் வரும்.

ஒரு பெண்ணை எந்த ஆணாலும் தோல்வி அடைய செய்யமுடியாது. ஆனா, அவளை ஈசியா வெற்றிக்கொள்ளமுடியும். இந்த சூட்சுமத்தை புரிஞ்சவன் வாழ்க்கையில் ஜெயித்தவனாகிறான். பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது  பணம், நகை, காமம், சொத்து, மரியாதையை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அதையும்தாண்டி அன்பு, அக்கறையை எதிர்பார்க்கிறாள்.

இந்த பாட்டு முழுக்க அந்த அன்பும் அக்கறை காதலாகும் தருணத்தை அழகா சொல்லி இருப்பார். நிமிர்த்தி இருக்கும் அரிவாள்மனையை எல்லா ஆணும்தான் தினத்துக்கு பார்த்திருப்பாங்க. அந்த பக்கமா போகும் எத்தனை ஆண் அதை மனைவி, மகள், அம்மா, சகோதரி காலில் படக்கூடாதுன்னு சாய்ச்சி வச்சிருப்பீங்க!  இரவில் அவசர அவசரமா மனைவியின் ஆடை அவிழ்க்கும் எத்தனை ஆண்,  மறுநாள் காலை துவைச்சி கட்டியிருக்கும் புடவையை தொட்டிருப்பாங்க?! அந்த மூணு நாட்களிலும் எத்தனை ஆண்கள் ஒருவாய் காப்பி தண்ணி வச்சி கொடுத்திருப்பாங்க.  ஆனா, இதுலாம்தான் அன்னியோன்யத்தை கூட்டும்ன்னு சொல்லாம சொல்லும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மகாநதில கொச்சின் ஹனீபாகூட வந்து கமலை மயக்கி பணத்தை பிடுங்கும் நெகட்டிவ் கேரக்டரில் வந்த துளசிதான் இந்த பாட்டின்  நாயகி. பத்து ரூபா கொடுத்தா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஜெயகிருஷ்ணாதான் நாயகன். முதிர்காதலை அழகா சொல்லிச்செல்லும் பாட்டு. கேட்டு பாருங்க. பார்த்துக்கிட்டும் கேக்கலாம். நல்லா இருக்கும். மனசில் காதல் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?

போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்
ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்
இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்

உன்னத்தான் உட்காரவச்சிநா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு

நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !
ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
படம் :பண்ணையாரும் பாத்மினியும்
இசை :ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர் : வாலி 

பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்

நன்றியுடன்,
ராஜி

Wednesday, January 30, 2019

தியாகக்குணம் ஆணுக்கும் உண்டு- வெளிச்சத்தின் பின்னே

வலி, அவமானம், வேதனை, தியாகம்லாம் பெண்ணினத்துகே உரியதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா பாவப்பட்ட உயிரினம் எதுன்னு கேட்டா அது ஆணினம்தான். விட்டுக்கொடுத்தல், உணர்ச்சியினை வெளிக்காட்ட முடியாமை, பொறுப்புணர்ச்சின்னு போற்றத்தக்க பல விசயங்கள் ஆணிடம் உண்டு. தேதி நினைவில் கொள்ள முடியாமை, ஒரு நேரத்தில் ஒரு விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும், அவசரம், கோவம் மாதிரியான சில குணங்களால் ஆண்களுக்கு கெட்டப்பேரு.
Dasaratha offers half the payasam to his main Queen Kausalya (right), half of the remainder to Sumitra (middle), and the remaining quarter he offers half to Kaiykeyi (left) and the rest back to Sumitra. Southern Andhra Pradesh (north of Madras), bordering Karnataka, around 1720-1730
ராமாயணத்துல அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் சத்ருக்ணன் பாத்திரமும் ஒன்று. அப்பாத்திரம் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு. மொத்த ராமாயணத்துலயும் அவர் வாய் திறந்து பேசினதா  சொல்லப்படும் தருணங்களை விரல்விட்டு எண்ணிடலாம். தசரத மகாராஜாவுக்கு பிள்ளையில்லாத குறையை போக்க, புத்திரகாமேட்டி யாகத்தை நடத்த, அதில் கிடைத்த பாயாசத்தை  அறுபதினாயிரம் மனைவிமார்களில் பட்ட மகிஷியான கோசலைகும்,  அன்புக்கு பாத்திரமான கைகேயிக்கு இருபங்காக கொடுத்தார். தங்களுக்கு கிடைத்த  பாயாசத்திலிருந்து கொஞ்சமென சுமித்ரைக்கு கைகேயியும் கோசலையும்  சுபத்ரையிடம் கொடுத்தனர்.
Image may contain: 1 person
கோசலைக்கு விஷ்ணுவின் அம்சமான ராமரும், கைகேயிக்கு விஷ்ணு கையிலிருக்கும் சக்கரம் பரதனாகவும், சுமித்தரைக்கு ஆதிசேஷன் லட்சுமணனாகவும், விஷ்ணு கையிலிருக்கும் சங்கு  சத்ருக்ணனாகவும் அவதரித்தன. லட்சுமணன் எப்படி ராமர்மேல் பாசம் வைத்திருந்தானோ அதுமாதிரியே பரதன்மேல் மிகுந்த பக்தியும், அன்பும் வைத்திருந்தான் சத்ருக்ணன்.சத்ருக்ணன் பாசக்காரன் மட்டுமல்ல சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர், மக்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவர், வீரதீரத்துல் லட்சுமணனுக்கு சற்றும் சலைத்தவனில்லை. அதேநேரம் ராமன், பரதனைப்போல சாந்தசொரூபியாய்  இல்லாம லட்சுமணனைப்போல கோவக்காரன். நீதிநேர்மை, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன்.  ராமன் திருமணத்தின்போது சீதையின் மூன்றாவது தங்கையான ஸ்ருதகீர்த்தியை மணந்தான்.  திருமணம் முடிந்த, சில மாதங்களில், பரதன், தன் தாய்மாமன் வீட்டிற்குப் புறப்பட்டபோது, பரதனுடன் சத்ருக்ணனும் சென்றுவிட்டதாய் புராணங்கள் சொல்கிறது.
அதன்பிறகு தசரதன் இறந்த செய்தி கேட்டு, பரதனுடன் சத்ருக்ணன் நாடு திரும்பும்போதுதான் அவனைப்பற்றிய குறிப்புகள் மீண்டும் ராமாயணத்தில் வருகிறது. ! ராமனும், சீதையும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதைக்கேட்டு, முதலில் வருத்தமடைந்து, பின்னர்  தன் அண்ணனான லட்சுமணன்மீது கடுங்கோபம் கொள்கிறான்.  அப்பா, அம்மாக்களை, சிறைபிடித்தாவது, ராமன் காட்டிற்குச் சென்றதைத் தடுத்திருக்க வேண்டாமா? எனக் கோபம்கொள்கிறான். இதனை பரதனுடனும் பகிர்ந்து கொள்கிறான்.
பரதனுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆடை அலங்காரத்தோடு தனது எண்ணம் பலித்ததை எண்ணி மகிழ்ச்சியாய், மந்தரை அந்த பக்கமாய் வருகிறாள்., இதனைப்பார்த்த சத்ருக்ணன் கோபம் கொள்கிறான்! மந்தரையின் முடியைப் பிடித்திழுத்து கைகேயின் அரண்மனை விட்டு வெளியேத்த இழுத்து செல்கிறான்.  இதனைப் பார்த்த கைகேயியின் தோழியர், கைகேயிடம் சென்று நடந்ததைக் கூறுகின்றனர்! உடனே கைகேயி வந்து சத்ருக்ணனிடம், மந்தரையை விடுவிக்கும்படி சொல்கிறாள். அந்தக் கைகேயியையும் கடிந்து கொள்கிறான் சத்ருக்ணன்.  , மந்தரையை கொல்லத் துடிக்கிறது அவன் மனம். அப்போது பரதன் அங்கு வருகிறார். பெண்களைத் துன்புறுத்துவது சரியல்ல. இதனை ராமன் கேள்விப்பட்டால், உன்மீது கோபம் கொள்வார்.  மந்தரையை விட்டுவிடு என சத்ருக்ணனுக்கு ஆலோசனை கூறுகிறார். பரதனின் ஆலோசனைப்படி மந்தரையை விட்டுவிடுகிறான் சத்ருக்ணன்.
Image result for சத்ருக்ணன்

உடனே சத்ருக்ணன் சாந்தமடைந்து மந்தரையை விட்டு விடுகிறான்.  இதன்பின், ராமர், சீதா, லட்சுமணனை திரும்ப அழைத்துவர, பரதனுடன், சத்ருக்ணனும் செல்கிறான். சித்ரகூடத்தில் ராமர் தங்கியிருந்த இடத்தை முதலில் கண்டு பிடித்தது சத்ருக்ணந்தான்.  ராமனை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி, பரதனுடன் அழைக்கிறார்.
Related image
 மந்தரை, கைகேயியை சத்ருக்ணன் கடிந்துக்கொண்ட தகவல் தெரிய வந்து விடுகிறது! பரதனுடன், ராமனுடைய பாதுகையைப் பெற்று, நாடு திரும்ப எத்தனிக்கும்போது, ராமன் சத்ருக்ணனை அழைத்து, நீ அன்னை கைகேயிடம் அன்பு பாராட்டவேண்டும். ஒருபோதும் கோபித்துக் கொள்ளக்கூடாது, மந்தரையையும் நிந்திக்கக்கூடாதென அறிவுரை கூறிகிறார். பிறகு பரதனுடன், சத்ருக்ணன் நாடு திரும்புகிறார். பரதன், நாட்டின் பரிபாலனத்தை சத்ருக்ணனிடம் ஒப்படைத்து, கிட்டத்தட்ட தவவாழ்வினை அரண்மனையிலிருந்தபடியே ராமனை போலவே பரதனும் வாழ்ந்தான். பரதன் சார்பாக திறம்பட நாட்டினை ஆண்டான் சத்ருக்ணன். 
Do not abuse food.  Do not discard food.  Grow food in abundance!
இதன்பின் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள் ராமர், இலங்கையிலிருந்து திரும்பும் போதுதான் மீண்டும் வருகிறது. அனுமார் வந்து பரதனிடம், ராமனின் வருகையைத் தெரிவிக்கிறார். உடனே, பரதன் தம்பி சத்ருக்ணனை அழைத்து, பிரமாதமாக வரவேற்க ஏற்பாடு செய் என்கிறார். இதற்காக வழிகளை செப்பனிட்டு, கட்டிடங்களை அலங்கரித்து நகரை அழகுமிக்கதாக, சத்ருக்ணன் மாற்ற ஏற்பாடு செய்தான்.  ராமர் பட்டாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.
அதன்பிறகு மீண்டும் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள், லவணாசுரன் என்னும் அசுரன் கொடுமைகள் பற்றி ரிஷிகள் புகார் கூறும்போதுதான் வருகிறது.  பட்டாபிஷேகம் முடிந்து, பல ஆண்டுகள் கழிந்து, லவணாசுரன் கொடுமைகள் பற்றி அறிந்த ராமன், அவனைக் கொல்ல பரதனை அனுப்பலாமென  ஆலோசிக்கிறார். அப்போதுதான் சத்ருக்ணன் அண்ணன் ராமனிடம் அந்த வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறார். தம்பியின் வேண்டுதல் கேட்டு மகிழ்ந்த ராமன், ஆஹா! நீயே அதற்குச் சிறந்தவன். நீயே அவனைக் கொல்! நீ அவனை ஜெயித்து வந்தபின், லவணாசுரன் ஆண்டுவந்த  மது நாட்டின் அரசனாக பட்டாபிஷேகம் செய்விக்கிறேன் என ராமன் கூறியதைக் கேட்ட சத்ருக்ணன், தன்னுடைய பண்பை இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறார்.
Of the many illustrations by Raja Ravi Varma (1848–1906) which are available at Wikipedia, this is one of my favorites. I really like the details here, such as Rama's sandals on the throne. I was glad to include this in the Sunday class announcements since Sunday is a busy day; I hope a lot of people got to see this one.
நான் லாவணாசுரனைக் கொல்கிறேன் எனக்கூறியது என் வீரத்தை வெளிப்படுத்தத்தான். என் அண்ணா பரதன்.  அவனே அதனையும் ஆளட்டும்! அதற்குத் தாங்கள் உத்தரவிட்டாலே மகிழ்வேன் என்கிறார். ஆனால் ராமரோ, வென்றவன் அவனே  அரசாளவேண்டும். ஆக வென்றால் நீதான் மகுடம் சூட்டிக்கொள்ள வேண்டும். இது ராமனின் உத்தரவு. மறுப்பு கூறாதே! உத்தரவிட்டு பெரும்படையை சத்ருக்ணனுடன் ராமன் அனுப்பி வைக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தவேண்டும். லவணாசுரனை வெல்ல சத்ருக்ணன் புறப்படுபோது சீதை கர்ப்பிணியாய் இருந்தாள். ராமனின் சந்தேகத்திற்கு மீண்டும் ஆளான சீதை, காட்டுக்கு சென்று வால்மீகி ஆசிரமத்தை சரணடைகிறாள். இந்த வால்மீகி ஆசிரமத்தில் சத்ருக்ணன் ராமர் படையுடன் வந்து ஒருநாள் தங்குகிறார். அப்போது சீதைக்கு லவகுசர்கள் பிறக்கின்றனர். பிறகு ஏழு நாட்கள் பயணம் செய்து யமுனை நதிக்கரையில் இருந்த சயவன மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அங்கு லவணாசுரன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக்க்கொண்டு,  சத்ருக்ணன் கடும்போர் புரிந்து கடைசியில் அவனை தன்னுடைய அம்பினால் கொல்கிறார். அனைவரும் அவனை வாழ்த்துகின்றனர்.
Magic Transistor
ராமன் வாக்களித்தபடி  மது நாட்டுக்கு மன்னனாகி, புதிய மதுராவை உருவாக்குகிறான். இன்றைய மதுரா சத்ருக்ணனால் நகரமாக உருப்பெற்றதுன்னு குறிப்புகள் சொல்லுது. பனிரெண்டு வருடங்கள் ஆண்டபின் மீண்டும் அயோத்தி நோக்கி வருகிறார். வழியில் மீண்டும் வால்மீகி ஆசிரமத்தில் தங்குகிறார். அப்போது லவ-குசர்கள் ராமனின் கதையை இசையாக்கிப் பாடுவதை கேட்கிறார். 
அயோத்தி சென்று ராமரை சந்திக்கிறார். ராமருடனேயே வாழ விரும்புகிறார். ஆனால், ராமரோ, சத்திரிய தர்மம், ராஜபரிபாலனம் செய்வதுதான். ஆக தொடர்ந்து மதுராவை  ஆள்வதே சரி. அதனைக் கடமையாகக் கொண்டு செயல்படு என அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு சத்ருக்ணன் பற்றிய தகவல் மீண்டும்  ராமர், தனக்குக் கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்து கொள்ளும்போதுதான் வருகிறது.  இதனை அறியும் சத்ருக்ணன், தன்னுடைய இரு மகன்களுக்கும் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, ராமனைத் தேடி வருகிறார். ராமன் சரயு நதியில் இறங்கி, மூழ்கும்போது, அவரைப் பின்பற்றி, சத்ருக்ணனும் மூழ்கிவிடுவதாக ராமாயணம் சொல்லுது. சத்ருக்ணன், மதுராவை நீண்ட நாள் ஆண்டார் எனவும் மதுராவில் சொல்லப்படுது. எது உண்மைன்னு சத்ருக்ணன் மட்டுமே அறிவார்.
 ராமாயணத்தில் சொற்ப இடங்களில் வந்தாலும் சகோதரர்கள்மீது அளவற்ற பாசம், நீதி நேர்மை, திறமை, வீரம்ன்னு சகல நல்ல குணத்துடன் வாழ்ந்த  சத்ருக்ணன் பேர் பரதன், லட்சுமணன் அளவுக்கு பேசப்படலைன்னாலும்  பாயம்மல் -திருச்சூர் (கேரளா), முனிக்கேஷ் - ( ரிஷிகேஷ் ரெடி) கன்ஸ்டிலா அருகில் - மதுரா - உத்தரப்பிரதேசம் என மூன்று இடத்தில் தனிக்கோவில் அமைத்து சத்ருக்ணனை வழிபடுகின்றனர்.

பேசப்படாத கதாபாத்திரத்துடன் மீண்டும் வருவேன்...
நன்றியுடன்,
ராஜி

Tuesday, January 29, 2019

சோலோ பூரியின் கதை - கிச்சன் கார்னர்

பூரியை விரும்பாத பிள்ளைங்க உண்டா?! நமக்குதான் எண்ணெய் விலை, ஆரோக்கியம், செரிமானம்ன்னு ஆயிரம் பிரச்சனைகள் கண்முன் நிழலாடும்.  தீபாவளி, பண்டிகைன்னு வருசத்துக்கு  நாலு இல்ல ஆறு நாட்களுக்கு மட்டுமே இட்லி, தோசை சாப்பிட்ட தலைமுறை நாம. பூரி, சப்பாத்திலாம் வருசத்துக்கு ஓரிரு முறைதான். அதனால் இட்லி, தோசை, பொங்கல்ன்னு தினத்துக்கு ஒரு தினுசா செஞ்சு போட்டு போரடிச்சு போச்சுது. காலை வேளையில் இட்லி, தோசைதான் பெரும்பான்மையான வீட்டில். பூரியும், பொங்கலும் வாரக்கடைசில்ன்னு டைம் டேபிள் போட்டு வச்சு சாப்பிடும் காலக்கட்டமிது.
Image may contain: food
அரக்கோணம் டூ திருத்தணிக்கு இடைப்பட்ட வழியில் ஒரு கிராமத்தில் இருந்த காலக்கட்டம்.  அரக்கோணத்துக்கு வரும்போதெல்லாம் ரயில்நிலையத்துக்கு அருகில் சாய்ராம்ன்னு ஒரு ஹோட்டலுக்கு அப்பா கூட்டி போவார். மாடியில் இருக்கும் ஹோட்டல் அது. எப்பயுமே சோலா பூரிதான் வாங்கி கொடுப்பார். சுடச்சுட ஆவிப்பறக்க பூரி வரும். என்ன இருந்தாலும்  பட்டிக்காடாச்சே! உடனே! டொப்புன்னு தட்ட பூரிக்குள் இருக்கும் சூடான ஆவி கையில் பட்டு கொப்புளம்லாம் எழும்பி இருக்கு. இப்பயும் எங்க போனாலும் மாலை நேரம்ன்னா சோலா பூரிதான். 

சமைக்க ஆரம்பிச்சபின் அதேமாதிரி பூரி செய்ய முயன்று பலமுறை தோத்து போய் நின்னிருக்கேன். ஒரு பத்து வருசத்துக்கு முந்திதான் அந்த மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரி ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.  ஆனா, சோலோ பூரி சோலா பூரி ஆன கதையை அதுக்கு பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது பூரின்னு கேட்டா ஒரு தட்டில் ரெண்டு பூரி, கிழங்கு கொடுப்பது வழக்கம். ரெண்டு பூரிக்கான மாவை திரட்டி ஒரே பூரியா சுட்டு கொடுக்குற பூரியை சோலோ(solo) பூரின்னு சொல்வாங்க.Soloன்னா ஒன்னுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! அந்த சோலோ பூரிதான் சோலா பூரியாகி இப்ப சோழா பூரியாகி நிக்குது. அது என்னடா சோழா பூரின்னா ல வுக்கும், ழ வுக்கும் வித்தியாசம் தெரியாம சொல்றாங்கன்னும், சோழர்கால கண்டுபிடிப்பும்ன்னு கலர்கலரா ரீல் விடுறாங்க. அடேய்களா! உங்க தமிழ், வரலாறு அறிவில் தீய வைக்க! 

கடையில் இருக்க மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரியும் அதுக்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவின் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்..
பூரிக்கு...
மைதா
கோதுமை மாவு
ரவை
உப்பு
எண்ணெய்,
சர்க்கரை ஒரு துளி

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு....
உருளைக்கிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
சீரகம்,
மஞ்சப்பொடி,
கடுகு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு

ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கா பங்கு மைதா, கால் பங்கு கோதுமை, 10% ரவை, கொஞ்சம் சர்க்கரை, உப்பு, எண்ணெய் சேர்த்து நல்லா கலந்து விட்டு தண்ணி சேர்த்து பிசைஞ்சுக்கனும். ரொம்ப கெட்டியா இல்லாம பிசைஞ்சுக்கனும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு அரை மணி நேரம்வரை ஊற விடனும். 

உருளைக்கிழங்கை கழுவி ரெண்டா, நாலா வெட்டி மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து வேகவிடனும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கனும். ப.மிளகாயை கீறி வச்சுக்கனும்,  தக்காளியை பொடிசா வெட்டிக்கனும்..


அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் காய்ந்ததும், கடுகு சீரகம் போட்டு பொரிய விடனும்.
பொரிஞ்சதும் கடலை பருப்பை போட்டு சிவக்க விடனும்..
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்  போட்டுக்கனும். மறக்காம போடுங்க. நான் ப.மிளகாய் போட மறந்துட்டேன்.
வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும். உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வதங்கிடும்.
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்..
கொஞ்சமா இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கனும்...
தக்காளி சேர்த்து நல்லா வதக்கனும்..
தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்..
வெந்து மசிச்சு வச்சிருக்கும் உருளையை சேர்த்துக்கனும்.

கறிவேப்பிலை கொத்தமல்லியை போட்டுக்கனும்.. கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கிட்டா உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
வாணலில தேவையான அளவுக்கு எண்ணெய் சேர்த்து காய வச்சு மாவை மீண்டுமொருமுறை பிசைஞ்சு பிடிச்ச அளவுக்கு வட்டவடிவில் தேய்ச்சு எண்ணெயில் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு எடுத்தா பூரி ரெடி. 
மாவை ஒரே தடிமனில் தேய்ச்சா பூரி நல்லா எழும்பி வரும். இல்லன்னா எழும்பாது. தேய்க்க வராதவங்களுக்கு இப்ப பூரி அமுக்குறதுன்னு மார்க்கெட்ல வந்திருக்கு. அதிலும் நல்லா வருது. மாவை கெட்டியா பிசையாம, ஒரே தடிமனில் மாவை அழுத்தி சுட்டா பூரி எழும்பும். சோலோ பூரி செய்யனும்ன்னா அதிக்கப்படியான எண்ணெய் வேணும். அதனால் சாதா பூரிதான் எப்பயும். :-( மாவு பிசையும்போது கொஞ்சூண்டு தயிரும், ஆப்பசோடாவும் சேர்த்துக்கிட்டா ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி சோலோ பூரி கிடைக்கும்.


பிள்ளைகளை சாப்பிட வைக்கவும், பாக்சுல போட்டு அனுப்பவும் குட்டி குட்டியா பானிப்பூரி மாதிரி சுட்டு, இப்ப வீட்டுக்கு வரும்போது குட்டி பூரி வேணும்ன்னு வளர்ந்துட்டாலும் கேட்டு வாங்கி சாப்பிடுதுங்க.  அதேமாதிரி சுட்டு கொடுக்க சொல்லுதுங்க.  அம்மாக்களுக்கு மட்டுமே எப்பயும் ரிட்டைர்மெண்ட் கிடையாது போல! 

நன்றியுடன்,
ராஜி

Monday, January 28, 2019

வாழ தெரியலியா?! ஐஞ்சுவை அவியல்

பிளாஸ்டிக் ஒழிப்புன்னு வந்தாலும் வந்தது வாழைஇலை கிடைக்குறது குதிரைக்கொம்பா இருக்கு மாமா. ஒரெயொரு வாழை இலை மூணு ரூபான்னு சொல்றாங்க.

உனக்குதான் இலை தைக்க தெரியுமே புள்ள! நீயே தைக்க வேண்டியதுதானே?! வீட்டுக்கும் யூஸ் ஆகும். அக்கம்பக்கம் கேட்டா கொடுத்தால் பைசாவும் வருமில்ல!

ம்ம்ம் இலை தைக்க தெரியும் மாமா. ஆனா, இப்பலாம் யாரு இந்த தையல் இலையை யூஸ் பண்ணுறாங்க?! அதிலிருக்கும் குச்சி தொண்டையில் சிக்கிக்கும்ன்னு இதை வாங்கமாட்டேங்குறாங்க தெரியுமா?!
வாழை இலை விருந்து
நம்ம தமிழ் கலாச்சாரத்தில் விருந்து உபசரிப்பென்பது மிகமுக்கியமானது. நாம தினமும் பயன்படுத்தும்  தட்டையே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பரிமாறுவது சிலருக்கு சங்கடத்தை தரும். பணப்புழக்கம் குறைச்சலா இருந்த காலக்கட்டத்தில் எல்லார் வீடுகளிலும் எல்லாருக்கும் சாப்பிட தட்டிருக்காது. குழந்தைகளுக்கு தட்டுகளில் பரிமாறிட்டு பெரியவங்க இலைகளில் சாப்பிடுவாங்க. 

முன்னலாம், தோட்டத்துல வாழைமரங்கள் இருக்கும். ஊருக்கு நாலு ஆலமரம் இருக்கும். அந்த இலைகளை பறிச்சு காயவச்சு அந்த இலைகளை வச்சு தச்சும், மந்தாரை இலைகளை தைச்சும் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க.  அதனால் வீட்டுக்கு வர்றவங்களுக்கு டக்குன்னு இலைகளில் பரிமாறினாங்க. சுத்தமானது, பயன்படுத்த எளிது, சீக்கிரத்துல மக்கி மீண்டும் உரமாகும். இப்படிப்பட்ட இலைகளில் சாப்பிடுறது உடலுக்கு ஆரோக்கியமும்கூட.. 

வாழை இலையில் சாப்பிடுவது ஆரோக்கியம்ன்னு தெரியும். மத்த இலைகளில் சாப்பிட்டாலும்கூடவா ஆரோக்கியத்துக்கு நல்லதா?! என்ன சொல்றே மாமா?!
No photo description available.

ஆமா புள்ள, வாழை இலைகளின் பயன் என்னன்னு முன்ன ஒரு பதிவில் பேசியாச்சு.  வாழை இலைக்கு ஈடாக வேங்கை இலையை சொல்லலாம்.  வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் வேங்கை இலைகளில் சாப்பிடுவதால் கிடைக்கும். No photo description available.
மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது' ன்னு  ஒரு சித்தமருத்துவப் பழமொழியே இருக்கு. ஏகப்பட்ட மருத்துவகுணங்களை கொண்டது இந்த மந்தாரை இலைகள். இதில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் இருக்கு. வாதநோய், கால்வலி, இதய படபடப்பு, தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், அஜீரணக்கோளாறுக்குலாம் அருமருந்தா பயன்படுது. மந்தாரைக்கு திருவாச்சின்னு இன்னொரு பேரு. மந்தாரை மலர்கள் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் இந்த இலையின்மீது அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Image result for மந்தாரை இலை
மந்தாரை இலைன்னா நாலைந்து இலைகள், பலா, ஆலமர இலைகள்ன்னா 10 இலைகளை  ஒன்றாக்கி , வட்டவடிவில் தட்டு மாதிரி ஈர்க்குச்சியால் இணைத்து இலையாக்கி சாப்பிட பயன்படுத்துவாங்க. முன்னலாம் மந்தாரை இலையில் சூடான பக்கோடா, ஜிலேபி மாதிரியான பண்டங்களை கட்டி அப்பா வாங்கி வரும்போது, இலைவாசனையோடு அந்த பண்டம் அம்புட்டு ருசிக்கும்.மந்தாரை இலை, வேங்கை இலை, ஆல இலை மட்டுமில்லாம மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை, பலாசு இலை, சுரை இலைகளைகூட நம் முன்னோர்கள் உணவருந்த பயன்படுத்தி இருக்காங்க. ஆல இலைகளில் சாப்பிட்டா ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்கும். பெண்களின் பிரச்சனைகளான வெள்ளைப்படுதல், சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.  பலா இலையில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. தாமரை இலையில் சாப்பிட்டா உடல் சூடு அதிகரிக்கும். இலையில் சாப்பிடுறது நல்லதுதான். ஆனா, எந்தெந்த இலையில் சாப்பிட்டா என்ன பலன்னு பார்த்து சாப்பிடனும். அதேப்போல நீத்தார் கடன் செய்யும்போதும், அமாவாசை மாதிரியான முன்னோர்களுக்கு படைக்கும்போதும் மந்தாரை இலையைதான் பயன்படுத்தனும்.

ம்ம்ம் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. இனி ஆல இலை மாதிரியான இலைகளை அவாய்ட் பண்ணிடுறேன்.  பிளாஸ்டிக் ஒழிக்குறதை பத்தி பேசிக்கிட்டிருக்கும்போது ஒரு படம் வாட்ஸ் அப்ல வந்துச்சு. இதை பாரேன். நாய் இறந்தபின் அதோட வயித்துல அது முழுங்குன பைகள் இருக்குறதா படம் சொல்லுது. இது ஃபேக் படம் மாதிரிதான் தெரியுது. இருந்தாலும் இதுமாதிரி நிஜத்துலயும் நிகழ வாய்ப்புண்டுதானே மாமா?! 
Image may contain: text
இனி பிளாஸ்டிக் கவரை தூக்கி போடும்முன் இது நினைவுக்கு வரனும் மாமா
No photo description available.

அதே வாட்ஸ் அப்ல வந்த படத்தை பாரு. வாழ தெரிலன்னு அடிக்கடி புலம்புவியே! இப்பவாவது வாழ தெரியுதான்னு பாரு புள்ள!...
யூட்யூப்ல எதோ தேடிக்கிட்டிருக்கும்போது இந்த பாட்டு சிக்கிச்சு. முருகன் இந்த பொண்ணுக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறாரு. 

ஆமா புள்ள! மாம்பழம் கிடைக்காமதான் பழனி மலைமேல உக்காந்திருக்கார். இந்த பாட்டை கேட்டா அமேசான் காட்டுக்குள் போய் ஒளிஞ்சுக்குவாரு போல!

இயற்கைக்கு திரும்புறேன்னு நம்ம ஆளுங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே! தாங்க முடில. தூக்கி எறியும் கொட்டாங்கச்சியை சீவி 1365 ரூபாய்க்கு விக்குறாங்க.ரொம்ப நாள் கழிச்சு ஒரு கேள்வி கேக்குறேன். இதுக்கு பதில் சொல்லு மாமா!
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. 
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது
 இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. 
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். 
மொத்தத்தில் அழகிய பெயர்
அந்த பேரென்னன்னு சொல்லு மாமா!
நன்றியுடன்,
ராஜி

Sunday, January 27, 2019

உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே! - பாட்டு புத்தகம்

தர்மாத்முடு" ன்ற தெலுங்கு படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழ்ல ரீமேக் பண்ணலாம்ன்னு நினைச்சப்ப,  அந்த கதை தமிழுக்கு சரிப்படாதுன்னு  பலர் சொல்ல, . கதையில் பட்டி டிங்கரிங்க் பண்ணி ரஜினிகாந்த் ஹீரோ, ராதிகா ஹீரோயின், கார்த்திக்கை நெகடிவ் கதாபாத்திரத்துலயும் நடிக்க வச்சாங்க. படம் செம ஹிட். இன்னிக்கும் இந்த படம் எல்லார்க்குமே பிடிக்கும். 

இன்னிக்கு பதிவுல வரும் "உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..."ன்ற பாட்டை, முதல்ல இயக்குனர் வி.சி.குகநாதன் படத்துக்காக வைரமுத்து பாட்டை எழுத இளையராஜா இசையில் ரெடியாகி இருந்துச்சு. ஆனா, அந்த படத்தில் அந்த பாட்டை சேர்க்க முடில. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்திக்க நினைச்சு,  நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் வாங்கி இந்த பாட்டை பயன்படுத்தினாராம் கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப்பாட்டு இந்த படத்துக்காக உருவாக்குனாங்க.  நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இதுன்னு   "ஏ.வி.எம் 60 - சினிமா"ன்ற தனது நூலில்  தயாரிப்பாளர் சரவணன் சொல்லி இருக்கார்.

இந்த படத்துல ரஜினி ரொம்ப அழகா இருப்பார். ராதிகாவும் செம அழகா இருப்பாங்க.  80,90..களின் ஆட்களுக்கு மட்டுமில்ல இந்தகாலத்து பிள்ளைகளுக்கும் இந்த பாட்டு பிடிக்குது!!


உன்னைத்தானே
 தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே!!
உயிர் பூவெடுத்து 
ஒரு மாலையிட்டேன்!!
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்!!

உன்னைத்தானே......

மலரின் கதவொன்று திறக்கின்றதா?!
மௌனம் வெளியேற தவிக்கின்றதா?!
பெண்மை புதிதாக துடிக்கின்றதா?!
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா?!
முத்தம் கொடுத்தானே 
இதழ் முத்துக்குளித்தானே?!
இரவுகள் இதமானதா?!
கட்டிப்பிடித்தால்
 தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?!


என்னத்தானே 
தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே!!
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு!!
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு!!

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது!!
உறவே எனக்கின்று விலங்கானது!!
அடடா முந்தானை சிறையானது!!
இதுவே என் வாழ்வில் முறையானது.
பாறை ஒன்றின்மேலே
 ஒரு பூவாய் முளைத்தாயே!!
உறவுக்கு உயிர் தந்தாயே!
நானே எனக்கு நண்பன் இல்லையே!
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே!

என்னத்தானே...



அதேப்பாட்டு சோகமாய்...
என்னைத்தானே தஞ்சமென்று 
நம்பி வந்த மானே!
உயிர்பூவெடுத்து 
மாலையிட்டேன்...
விழிநீர் தெளித்து 
ஒரு கோலமிட்டேன்.. 
என்னைத்தானே?!
படம்: நல்லவனுக்கு நல்லவன்
நடிகர்கள்: ரஜினிகாந்த்,  ராதிகா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து

நன்றியுடன்,
ராஜி

Saturday, January 26, 2019

கிடைத்த சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள உருவான குடியரசு தினம்.

Image may contain: one or more people, people standing, sky, nature and outdoor
பாரதத்திருநாட்டை காலங்காலமாய் மன்னர்கள் ஆண்டுவந்தனர். மன்னர்களுக்குப்பின் அவர்களது வாரிசுகள் மன்னனார்கள்.  சிலர் நல்லாட்சி கொடுத்தனர். சிலர் கொடுங்கோலாட்சி புரிந்தனர். இன்னும் சிலரோ குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் நாட்டை ஆளத்தெரியாமல் ஆண்டனர். தங்களுக்குள் போட்டி, பொறாமையால் சிதறுண்டு கிடந்தனர். இவர்களுக்கிடையிலான இந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு முதலில் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் உட்பட அன்னியர்களின் படையெடுப்புக்கு இந்தியா ஆளாகி, விரைவில் அந்நியர் வசம் பழம்பெருமை வாய்ந்த இந்தியா அடிமைப்பட்டது.
பல்வேறு தியாகங்கள், சதிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், உயிரிழப்புகள்,  குழிபறிப்புகள் என பல கட்டங்களை கடந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்தர காற்றை சுவாசித்தது. மீண்டுமொருமுறை இதுப்போல இந்தியா அன்னியரின் கையில் அகப்பட்டுவிடக்கூடாதென அப்போதிருந்த இந்திய தலைவர்கள் ஒன்றுக்கூடி முடிவெடுத்து  வாரிசு உரிமையுள்ள மன்னராட்சி முறை கூடாதென நினைத்து, மக்கள் பங்குக்கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தீர்மானித்து,  இந்திய நாடு குடியரசாக இருந்தால்  மீண்டும் அன்னியர்வசம் அடிமைப்படாதென நினைத்து குடியரசு நாடென அறிவித்தனர்.
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு, மக்களாட்சி என்று அர்த்தம். தேர்தல்மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி  தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுன்னு அஞ்சாப்பு பாடத்துல படிச்சிருப்போம். அரசியல் அமைப்புச் சட்டம்ன்னா என்னன்னு  தெரியுமா? நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்(அந்த சட்டம் இப்ப அமலில் இருக்கான்னு கேட்டா தெரியாதுன்னுதான் சொல்வேன்). டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டமேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.   அதனால்தான் ஒருநாள் லீவும், ஆரஞ்ச் முட்டாயும் கிடைச்சுது. 
சுதந்திர தினத்தைவிட இந்தநாள்தான் முக்கியமானதுன்னு சொல்றாங்க. ஏன்னா, நம்ம விருப்பப்படி தலைவனை தேர்ந்தெடுக்கலாம். அந்த தலைவன் சரியில்லைன்னா அவரை நீக்கிட்டு இன்னொரு தலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் இருக்குறதால இந்த நாள் சுதந்திரதினத்தைவிட முக்கியமானதானதாய் இருக்கு. 
No photo description available.
பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய்நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் - இது 1928 ஜனவரி 26 ல் காந்தி கூறிய வாா்த்தை இது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடந்தக் காலகட்டத்தில் “1928 ஜனவரி 26 ம் நாளை இந்திய சுதந்திர நாள்” என்று காந்தி அறிவித்தார். அவர் அறிவித்தப்படி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த நாள் தான் இன்று குடியரசு  தினமாக போற்றப்படுகின்றது.
Image may contain: one or more people, sky, ocean and outdoor
பாடுப்பட்டு வாங்கின சுதந்திரத்தை தக்கவைக்க குடியரசு தினமாய் மாற்றிய நம் தலைவர்களின் தீர்க்கதரிசனத்தை போற்றும் விதமாய் நம் பொறுப்புகள், கடமைகளை உணர்ந்து குப்பைகளை அங்கங்க கொட்டாம, கண்ட இடத்தில் அசுத்தம் பண்ணாம, வாக்குரிமையை காசுக்காக விலை பேசாம, விடுமுறை கிடைச்சுதேன்னு வாக்குரிமையை செலுத்தாமலும் இருக்காம ஒழுங்கா வாக்குச்சாவடிக்கு போய் வாக்கு செலுத்தி, சரியான வருமான வரியை செலுத்தி, சாலைவிதி உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சகமனிதனின் உணர்வுகளை புரிந்து அவனுக்கான உரிமைகள் பெற வழிவிட்டு, அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி, பொங்க வேண்டிய இடத்தில் பொங்கி சிறந்த குடிமகனாய் வாழ்ந்து நம் தாய்திருநாட்டை  சிறந்த நாடாய் பாரினில் முன்னிறுத்துவோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி