Sunday, March 31, 2019

காதல் ஊர்வலம் இங்கே... கன்னி மாதுளம் எங்கே?! - பாட்டு புத்தகம்

வெயிலில் அலைஞ்சு திரிஞ்சு வேர்க்க, விறுவிறுக்க சுத்திக்கிட்டிருக்கும்போது வேப்பமர/பூவரச நிழலோ கிடைச்சா எப்படி இருக்கும்?! அப்படிதான் இருக்கும் இந்த பாட்டு...  டி.ஆர் படங்களில் பிரம்மாண்டமான செட் எப்படி முக்கியமா இருக்குமோ அந்தமாதிரி பாட்டும் சூப்பரா இருக்கும். அவர் படங்களுக்கு மட்டுமில்லாம இன்னும் சிலரது படத்துக்கும் இசை அமைச்சிருக்கார். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கு. பூக்களை பறிக்காதீர்ன்ற படத்துக்குன் இவர்தான் இசை. படம் சூப்பர் ஹிட். நல்ல கதை, இசைன்னு இருக்கும்போது படம் ஹிட்டடிக்காம போகுமா?!

கமல் - ஸ்ரீதேவி,  விஜயகாந்த்- ராதிகா, ரஜினி-ஸ்ரீதேவி, கார்த்திக்-ரேவதிலாம் நிஜ ஜோடின்னு நினைச்சுக்கிட்டிருந்த காலக்கட்டம். இந்த வரிசையில் சுரேஷ்-நதியா ஜோடியும் ஒன்னு.  அத்தனை பொருத்தம் ரெண்டு பேருக்கும். இத்தனைக்கும் நதியா, சுரேஷைவிட குள்ளம்தான். ஆனாலும் நல்லா இருக்கும்...  குறைஞ்ச பட்ஜெட்ல எடுத்த படம். காதல் படங்களா வந்த காலக்கட்டத்தில் எடுத்தப்படம்..  சுரேஷ் டான்ஸ்ல பிச்சு உதறுவார். நல்ல நடிகர்தான் ஆனா தெலுங்கு கரையோரம் ஒதுங்கிட்டார். நதியா பத்தி சொல்லவே வேணாம் அவங்க டிரஸ்சென்ஸ் யாருக்குமே வராது. மாடர்ன் ட்ரெஸ் போட்டு பெரிய பொட்டு வச்சு வருவாங்க ஆனாலும் அவங்களுக்கு மேட்ச் ஆகும்.  நதியா பொட்டு, நதியா வளையல், நதியா கொண்டைன்னு பொண்ணுங்க பைத்தியம் பிடிச்சு அலைஞ்ச காலக்கட்டம் 1980 டூ 1990.. 

எஸ்.பி.பியும், சித்ராவும் இந்த பாட்டை ரசிச்சு பாடி இருப்பாங்க.  பாடல் முழுக்க எஸ்.பி.பியின் குறும்புத்தனமான எள்ளல் சிரிப்போடு கூடிய தொனி பாடல் முழுக்க வரும். ஆனா, இந்த பாட்டு கார்த்திக்குக்கு கிடைச்சிருந்தா பாட்டோட ஹிட் கிராஃப் எகிறி இருக்கும். ஒரு டூயட் பாட்டை துளிகூட ஆபாசமில்லாம எடுத்திருப்பாங்க.
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆஆ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்
கவியெனும் நதியிலே
குதிக்கிறேன் குளிக்கிறேன்
மரகத வீணையுன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
வாழையிலைபோல நீ ஜொலிக்கிறாய்
தாழை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

ஆஹஹாஆஆஹஹஹா

காதலி அருகிலே
இருப்பதே ஆனந்தம்
காதலன் மடியிலே
கிடப்பதே பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா
புத்தகத்துள் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆஆ
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே...

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ஆர். ராஜேந்தர்,
பாடல் எழுதியவர்: டி.ஆர்.ராஜேந்தர்
பாடியது: எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்; சுரேஷ், நதியா

படம்: பூக்களை பறிக்காதீர்,
இசை: டி.ராஜேந்தர்(பாடலுக்கு மட்டும்)
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்: சுரேஷ், நதியா

நன்றியுடன்,
ராஜி


Saturday, March 30, 2019

தர்பூசணி எங்காவது பறக்குமா?! இங்க பறக்குதே!!

நாலு வெங்காயத்தை ஒரே தினுசுல கட் பண்ணவே துப்பில்ல. இதுல, நான் எங்க இதுலாம் செய்ய?! பார்த்து ரசிக்குறதோடு நிறுத்திக்கனும். அதான் கிட்னிக்கு நல்லது...
பூ பூத்தபின்தான் காய் காய்த்து, கனியாகும். இங்க கனி பூவாகி இருக்கு...

メロンを彫りました。
இன்னொரு பூ..
Beija flor melancia 🍉
தர்பூசணி எங்காவது பறக்குமா?! இங்க பறக்குதே!!
Melon barbeque
அடுப்புல தர்பூசணிய பார்த்திருக்கோம். தர்பூசணியே அடுப்பாய் இப்பதான் பார்க்குறோம்.

வெள்ளரி பழத்துல பூ..
Have it, love it
புருசன் பொண்டாட்டின்னாலே சண்டைதான். அதுக்கு பூண்டு கப்பிள்சும் விதிவிலக்கல்ல போல!
Fruit+Art+Carving | Fruit Art carvings
எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. மொமண்ட்..
I'd wear that. Clever Conceptual Photographs of Fruits and Vegetables
இலையாடை...
+33 The Good, The Bad And Baby Shower Food For Boy Appetizers Snacks Party Ideas 26 - mswhomesolutions.com
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதுக்கேத்த மாதிரி உணவினை அலங்கரிக்குறது இப்ப பேஷன். நம்மூரில் தொட்டில்ல போடுறது, பேர் சூட்டுறது மாதிரி வெளிநாடுகளில் பேபி ஷவர்ன்னு புதுசா பொறந்த குழந்தைக்கான நிகழ்ச்சி நடத்துவாங்க.  அதுல முட்டையை இப்படி அலங்கரிச்சு வச்சிருக்காங்க.
With Tu B’shvat just around the corner, here’s a fun idea the whole family can help prepare in honor of Tu B’shvat. With minimal preparation, you can create an original and eye catching centerpiece. Supplies: One large bag of Grapes Toothpicks 6 inch green styrofoam ball Bunch of Leaves – joined together at the botto
திராட்சை ஜாடி..

பக்கம் பக்கமா படிக்குற இம்சையை கொடுக்கலியே! 

நன்றியுடன்,
ராஜி

Friday, March 29, 2019

வித்தியாசமான தெய்வ அலங்காரங்கள்

சமீபத்துல முகநூலில் பங்குனி உத்தரத்தன்று  முருகன் புல்லட் வாகனத்துல ஹெல்மெட்டோடு பவனி வந்தார்ன்னு வைரல் ஆச்சு.  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னாலும், ஆனா, விதம்விதமா அலங்காரத்தை கண்டு ரசிப்பேன். அதன்படி இணையத்துல கண்டு ரசித்த தெய்வ அலங்காரங்கள் சில..

தலைக்கவசம் அவசியம்ன்னு உணர்த்தும் முருகன்...

பால்கோவாவினால் அலங்கரித்த சிவன்...

உக்கிரமான நந்தி பகவான்...  சங்கு அமைப்பில் மலர் அலங்கார வாகனத்தில் அம்மன்..
சேலைக்கு மயங்காத பொண்ணுண்டா?! அம்மனும் விதிவிலக்கல்ல...

கொலுசினால் அலங்கரித்த அம்மன்...
 வளையல் அலங்கார வாகனத்தில் அம்மன்
வளையல் அலங்காரத்தில் அம்மன்... வெண்ணெய் அலங்காரத்தில் நந்தி...
சாக்லேட் அலங்காரத்தில் அம்மன்...

பொதுவா எல்லாருக்கும் பொறந்த நாள் வருசத்துல  ஒருமுறைதான் வரும்.   ஆனா எனக்கு மட்டும் ரெண்டு முறை வரும்.  இங்க்லீஷ் தேதிப்படி  வாக்கப்பட்ட  வீட்டிலும், இணையம், நட்புகளும் கொண்டாடுவாங்க. ஆனா, அப்பா, அம்மா மட்டும் தமிழ் தேதிப்படிதான் கொண்டாடுவாங்க.  கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு பொறந்ததால முதல் வருஷ பொறந்த நாளை ரொம்பவே விமர்சையா  கொண்டாடினதா சொல்வாங்க.  அப்பவே மைக் செட் , சீரியல் பல்பு கட்டி, ஊருக்கே சாப்பாடு போட்டதா சொல்வாங்க. 
வருசா வருசமும் அப்படி கொண்டாட முடியலைன்னாலும்  புது துணியும், சாக்லேட் மட்டும் ஒவ்வொரு வருசமும் வந்திடும். கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து வந்தால் பிறந்தநாள் கொண்டாட்டம் பினிஷ். அது திருமணத்தின் வரை மட்டுமே.  பிள்ளைங்க பிறந்தபின், பிறந்த நாள் கொண்டாட்டம் வெறும் பிரியாணியோடும், 100ரூபாயோடும்  முடிஞ்சுடும். ஆனா, இந்த வருஷம் என்ன நினைச்சங்களோ தெரியலை. புடவை ஒன்னு எடுத்து கொடுத்தாங்க . புடவை + 100 ரூபாயும் அம்மா வீட்டு சீதனமாய் ....... இந்த வருஷம் பொண்ணுங்களும் ஆளுக்கொரு சேலை எடுத்து கொடுத்து அசத்திட்டாங்க.

 பெரிய பொண்ணு கொடுத்தது

 இது சின்னவங்க கிஃப்ட் ....

பர்த் டே கொண்டாட்டத்துல பதிவு எழுத முடில. அதான்  சாமி படங்களை சுட்டு பதிவு  தேத்தியாச்சு..
பிளாக்கிலும், முகநூலிலும், போனிலும்  வாழ்த்து சொன்ன, சொல்ல மறந்தவங்களுக்கும்,  இதுக்குலாம் பொறந்த நாள் வாழ்த்து சொல்லனுமான்னு சொல்லாம விட்டவங்களுக்கும் நன்றியோ நன்றி.

நன்றியுடன்,
ராஜி Thursday, March 28, 2019

உல்லன் தோரணம் - கைவண்ணம்


இந்த வாரம் புடுங்குன ஆணி, இந்த உல்லன் தோரணம்..... தெரிஞ்சவங்க ஒருத்தங்க வாசல் தோரணம் கேட்டாங்க... அவங்களுக்காக பின்னியது...


யூட்யூப்ல மஞ்சள், பச்சை காம்பினேஷன்  நல்லா இருந்துச்சு.. உடனே வாங்கி வந்து செஞ்சாச்சு. 
Related image
உல்லன் பூ செய்றதுக்குன்னே இதுப்போல இருக்கு. அதுல பூக்கள் செஞ்சுக்கிட்டேன். 
 பூக்கள் ரெடி
 பட்டியும் ரெடி...
 பூக்களை எப்படி வச்சு கட்டினா நல்லா இருக்கும்ன்னு டிஸ்கஷன் ஓடி மூணு பிரிவா கட்டலாம்ன்னு கமிட்டில முடிவாச்சுது..
பின்னுறதைவிட பூக்களை கட்டுறதுதான் கஷ்டமா இருந்துச்சு..

 அப்பாடா! ஒரு வழியா பூக்களை கட்டியாச்சு!!
பொட்டில்லாத நெற்றி மாதிரி குஞ்சலம் இல்லாம தோரணம் அழகா இல்லாத மாதிரி ஒரு ஃபீல். அதனால், குஞ்சலமும் வச்சாச்சு.. 200 ரூபா சொல்லி இருக்கேன்.
நல்லா இருக்குதா மக்களே!?

நன்றியுடன்,
ராஜி

Wednesday, March 27, 2019

கணவனின் அன்பை பெறாத பானுமதியின் நிலை - வெளிச்சத்தின் பின்னே


துரியோதனன்  பற்றியும், அவனது தம்பிமார்கள் பற்றி தெரிந்த அளவுக்கு  அவனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரியாது.  கர்ணன் படத்தின்மூலமாக அவன் மனைவி பானுமதின்னும், யாரையுமே நம்பாத துரியோதனன் தன் மனைவிமீது அபார நம்பிக்கை வைத்திருந்தான். அதுக்கு உதாரணமா ஒருநாள் கர்ணனும், பானுமதியும் தனித்து தாயம் விளையாடி கொண்டிருக்கும்போது, துரியோதனன் அங்கு வர அவனை கண்டதும் மரியாதை நிமித்தமாய் பானுமதி எழுந்துக்கொள்ள, தோல்வி பயத்தில் எழுந்துக்கொள்வதாய் தவறாய் நினைத்து எங்கே ஓடுகின்றாய் என அவளது முந்தானையை பிடித்து கர்ணன் இழுக்க, சேலையிள் கோர்க்கப்பட்டிருந்த முத்துக்கள் சிதறி ஓடியது. முத்துக்கள் சிதறியபின்தான் அங்கு துரியோதனன் நின்றுக்கொண்டிருப்பதை கர்ணன் கண்டு, எங்கே துரியோதனன் தவறாய் நினைத்துவிடுவானோ என கர்ணன், பானுமதி இருவரும் விக்கித்து நிற்க,  சிந்திய முத்துக்களை எடுக்கவோ?! கோர்க்கவோ?! என ஒற்றை வார்த்தையில் இருவரையும் தவறாய் நினைக்காததை துரியோதனன் உணர்த்தி விடுவான். இந்த காட்சி படத்துல வரும்போது நட்பின்மீதும், மனைவிமீதும் எத்தனை பாசம்?! அன்பு?! புரிதல் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை வரும்ன்னு சிலாகித்தோம். புரிதல் இருந்தால்தான் நட்பு மலரும். ஆனா, இருவேறு சூழலில், பழக்கவழக்கத்தில் வளர்ந்து ஒன்று சேர்ந்த  கணவன், மனைவிக்குள் புரிதல், அன்பு வருவது அவ்வளவு சுலபமல்ல.   அந்த மாதிரி புரிதல் வர பானுமதி ரொம்பவே மெனக்கெட்டாள். அந்த கதையினைதான் இன்னிக்கு வெளிச்சத்தின் பின்னே பகுதியில் பார்க்கப்போறோம்.

துரியோதனன் - பானுமதி திருமணம் காதல் திருமணம். காதலுக்கு உதவியது கர்ணன் பானுமதி கலிங்க நாட்டை ஆண்ட சித்ரங்கதனின்  மகள்.  பானுமதி பருவ வயதை எட்டியவுடன்  சுயம்வரத்துக்கு ஏற்பாடு  செய்தனர். இளவரசனாக முடிசூட்டப்பட்டிருந்த துரியோதனன் சகுனியின் அறிவுரையின்படி பானுமதியின் சுயம்வரத்தில் கலந்துக்கொள்ள தன் நண்பன் கர்ணனுடன் சென்றான். அந்த சுயம்வரத்தில் சிசுபாலன், ஜராசந்தன், பிக்ஷமகன், வக்ரன் போன்ற மாவீரர்களும் கலந்துக்கொண்டனர்.
Image result for சுயம்வரம்
சித்ரங்கதன் ஏற்பாடு செய்திருந்த சுயம்வர விதிகளின்படி இளவரசர்கள் அனைவரும் வரிசையாக நிற்க, அரங்கத்திற்குள் வந்த பானுமதியின் அழகினை கண்டு அனைவரும் அதிசயித்து நின்றனர். ஒவ்வொருவரையும் பானுமதிக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தனர்.  ஒவ்வொருவராக  பார்த்து வந்த பானுமதி துரியோதனனை கண்டதும், சட்டென அவனின் எதிர்திசையில் திரும்பி கொண்டாள். இந்த நிராகரிப்பு துரியோதனனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. பானுமதி தன்னை  நிராகரித்ததை துரியோதனனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், கோபமடைந்த துரியோதனன் பானுமதியை கடத்தி செல்ல முடிவெடுத்தான். இதனை தன் நண்பன் கர்ணனிடம் கூற,  நண்பனின் சொல்லை தட்டி பழக்கமில்லாத கர்ணன் அதற்கு ஒப்புக்கொண்டு,  இருவரும் அங்கிருந்த மற்ற இளவரசர்களுடன் போர் புரிய தொடங்கினர். சிசுபாலன், ஜராசந்தன் மாதிரியான பெரிய ஜாம்பவான்களால்கூட கர்ணன் மற்றும் துரியோதனனின் வீரத்தின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் திணறினர்.
подудлил Решил вернуть старую версию некоторых семейных событий, которую в свое время отменил. Просто она многое упрощает Свадьба Саввих и Махинды Была устроена их родителями и лаавантой, когд... — Родной юрт

அங்கிருந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து பானுமதியை அஸ்தினாபுர கோட்டைக்கு அழைத்து வந்தான் துரியோதனனன்.   துரியோதனனின் வீரத்தினை கண்கூடாய் கண்ட பானுமதி அவன்பால் காதல் கொண்டாள். பீஷ்மர் இந்த செயலை கண்டித்தார்.   கர்ணன் மீதான அவரின் வெறுப்பு அதிகமானது.  தாங்களும் தங்கள் தம்பி விசித்திரவீரியனுக்காக  அம்பை உட்பட மூன்று பெண்களை காசியிலிருந்து கடத்தி வந்தவர்தானே?!  என அவரின் வாயை அடைத்துவிட்டான். பானுமதி தன்னைப்போலவே சிவபக்தியில் சிறந்து விளங்குபவள் என அறிந்ததால் பானுமதியை காந்தாரிக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அனைவரின் பீஷ்மரின் சம்மதத்துடன் பானுமதியை மணந்தான் துரியோதனன்.
திருமணம் ஆனதே தவிர, பானுமதி, துரியோதனனுக்கு இடையில் ஒட்டுதலும், புரிதலும் இல்லாமலே காலம் கடந்தது. பானுமதி சுயம்வரத்தில் செய்த அவமதிப்பும்,  பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதிலுமே குறியாக இருந்ததால்,  மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனால் இயலவில்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், கணவனின்  அன்புக்காக பானுமதி ஏங்கினாள். எல்லா தெய்வங்களையும் வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்க  மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.
Hindu Lady - People Posters (Reprint on Paper - Unframed)


பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும்  முனிவர் தந்த வேரையும் அதில் சேர்த்து, துரியோதனின் வருகைக்காக பானுமதி காதலுடனும், காமத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அன்றைய இரவினை நல்பொழுதாக்க காத்திருந்தாள். அன்றைய தினம் பௌர்ணமி. இரவின் இரண்டாம் ஜாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்ததாலும், மனைவிமீது கொண்ட கோவத்தினாலும் ஆசையுடன் பானுமதி நீட்டிய பால் கிண்ணத்தை தட்டிவிட்டான்.
தூர விழுந்த கிண்ணத்திலிருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அந்த பக்கமாய்  சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ன்ற பாம்பு அந்தப் பாலை குடித்தது. தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதிமீது ஆசையும் நேசமும் பிறந்தது.

உடனே அவன் பானுமதி முன், தஷகன்  தோன்றி,  தன் காதலை வெளியிட்டான். இது முறையற்ற காமம் என பானுமதி வாதாடினாள். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்று தஷகன் வாதாடினான். பதிவிரதையான பானுமதி  இந்நிலைக்காக பதறினாள்; துடிதுடித்தாள். 

பானுமதியின் அவமதிப்புதான்  துரியோதனன் மனதை உறுத்தியதே தவிர, தன் மனைவியின் கற்புநெறிமீது எந்தவித சந்தேகமும் இல்லை.  தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்புமிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. ஆனாலும்,  பானுமதியின் உள்ளத்தினையும், துரியோதனின் தவிப்பினையும் உணர்ந்த அவன் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.


அதேநேரம், பானுமதியின் அன்பை இழக்கவும்  தஷகன் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனையை தஷகன் விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு தக்ஷகன் மறைந்தான் .

அன்றிலிருந்து  பௌர்ணமிதோறும் தஷகனுக்கு  பாலூற்றி வணங்கி வந்தாள்.  பானுமதியோடு  துரியோதனனும் பயபக்தியோடு தஷகனை காண செல்வான்.  இந்த நிலைக்கு தானே காரணமென்பதை உணர்ந்த  துரியோதனன், அன்றிலிருந்து பானுமதிமீது அன்பு செலுத்த ஆரம்பித்தான்.  இருவருக்குள்ளும் புரிதலும் நெருக்கமும் அதிகமானது.
King and Queen

துரியோதனன் மற்றும் பானுமதியின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தைக்கு லட்சுமணா என்றும் ஆண் குழந்தைக்கு லட்சுமணகுமரன் என்றும் பெயர் வைத்தனர். துரியோதனனின் மகள் கிருஷ்ணரின் மகன் சம்பாவை திருமணம் செய்து கொண்டாள். மகன் லட்சுமணகுமாரன்  குருஷேத்திர போரில் அர்ஜுனனின் மகன் மாவீரன் அபிமன்யு கையால் கொல்லப்பட்டான். குருஷேத்திர போரில் துரியோதனன் வீழ்ந்ததும், அவனோடு பானுமதியும் இறக்கும்வரை பானுமதி-துரியோதனனுக்கு இடையிலான காதலும், நெருக்கமும், புரிதலும் தொடர்ந்தது..

எத்தனைதான் ஆஸ்தி, அந்தஸ்து, ராஜபோக வாழ்க்கை இருந்தாலும் கணவனின் அன்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலைன்னா என்னகதி நேருமென்பது பானுமதி கதையின்மூலமா தெரிஞ்சுக்கலாம்.. 

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

Tuesday, March 26, 2019

பச்சைய்பயறு குழிபணியாரம் - கிச்சன் கார்னர்

லீவில் சின்னது வீட்டில் இருக்கு. முன்னலாம் ஸ்வீட்ன்னா விடாது. எல்லாத்தையும் சாப்பிடும். குண்டா இருக்கேடின்னு பிள்ளைக கிண்டல் செஞ்சதால உடம்பை குறைக்கிறேன்னு எந்த திண்பண்டத்தையும் தொடுவதில்லை.  அதுக்கு ஏற்கனவே ஹீமோகுளோபின் அளவு குறைச்சல். இந்த லீவில் அதை சமப்படுத்தனும்ன்னு முடிவு பண்ணி இருக்குறதால இனி அடிக்கடி பாரம்பரிய உணவினை கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணி நேத்து பச்சை பயறுவில் குழிப்பணியாரம் செய்து கொடுத்தேன். 

இதுமாதிரியான பண்டத்தையெல்லாம் சாப்பிட அத்தனை யோசிக்கும். சும்மா நானும் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு ஏமாத்திடும். அதிலும்இது  கொஞ்சம் கருப்பா இருந்துச்சா மருந்தை முழுங்குற மாதிரி முழுங்கினா.

தேவையான பொருட்கள்...
பச்சை பயறு - 100கிராம்
வெல்லம் - ருசிக்கேற்ப
ஏலக்காய் - 2
உப்பு - கொஞ்சம்
எண்ணெய்
ஆப்ப சோடா - கொஞ்சம்

பச்சை பயறினை குறைஞ்சது 5 மணிநேரம் ஊற வைக்கனும்..

வெல்லத்தினை பொடி செஞ்சுக்கனும்.. கருப்பட்டியா இருந்தா நல்லது.  வெல்லம் வெள்ளை வெளேர்ன்னு வாங்குறதை தவிர்க்கலாம். வெல்லம் வெள்ளையாக அதிகமா சுண்ணாம்பு சேர்ப்பாங்க. 
ஊரின பச்சைப்பயிறினை கழுவி அதில் வெல்லம், ஏலக்காய், ரெண்டு கல் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சுக்கனும்.  மாவு ரொம்ப தண்ணியா இருக்கக்கூடாது. கொஞ்சூண்டு ஆப்பசோடா சேர்த்துக்கனும். 
பணியார கல்லை சூடாக்கி லேசா எண்ணெய் தடவி மாவை ஊத்தி, மூடி போட்டு வேக வைக்கனும்.
 ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மூடி இன்னும் சில நிமிடங்கள் வேக வைக்கனும்... 
ரெண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறலாம். சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். தேவைப்பட்டால் கொஞ்சம் பச்சரிசி மாவும் சேர்த்துக்கலாம், அரிசி மாவு  சேர்த்துக்கிட்டால் பணியாரம் மொறுமொறுன்னு இருக்கும். 

பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியும், வலுவும் கொடுக்கும். வெல்லத்துல இரும்பு சத்து இருக்கு. 

நன்றியுடன்,
ராஜி