செவ்வாய், ஜூன் 21, 2011

"யாராவது காப்பாற்றுங்களேன் "தூக்கத்தில் கனவு அன்று ..,
கனவில் தூக்கம் இன்று ..,

 தேடலே தொழிலாகி..,
வலைத் தளங்களானது
வாழ்க்கை ..,
ஒவ்வொரு நாளும்
வெவேறு தேடல்கள்.

மறைச்சொல்லை
மறக்கிறோம்
முடமாகிறது தொடக்கம்...,
தொடக்கூடாததைத்
தொடுகிறோம்
குப்பையாகிறது  கோப்பு.     

விரல் நுனிகளில் வைரஸ்
புற்றாகிறது  பூக்கள்..,
அடுத்த கிரகம் தேடி
அலைகிறோம்
"ஆண்டி வைரஸ்" தேடி  

விஞ்ஞான  எல்லையை
எட்டிக் கொண்டே
பயணிக்கிறது அறிவு...,
அறிவைக் குட்டிக் கொண்டே
பயணிக்கிறது விஞ்ஞானம்.

குடம் தேனாய்
விஞ்ஞானம் கண்டோம்,
குடத்துக்குள்ளேயே
வீழ்ந்தோம்
  
"யாராவது காப்பாற்றுங்களேன் "  
   

23 கருத்துகள்:

 1. நல்ல கவிதை..

  ஆனா நீங்க இப்படி எல்லாம்
  எழுத வாய்ப்பில்லையே.. எந்த
  Site-ல சுட்டீங்க..?

  பதிலளிநீக்கு
 2. வெங்கட் கூறியது...

  நல்ல கவிதை..

  ஆனா நீங்க இப்படி எல்லாம்
  எழுத வாய்ப்பில்லையே.. எந்த
  Site-ல சுட்டீங்க..?
  >>>
  நிச்சயமாய் உங்க Siteல் இல்ல சார்.

  பதிலளிநீக்கு
 3. வெங்கட் கூறியது...

  நல்ல கவிதை..

  ஆனா நீங்க இப்படி எல்லாம்
  எழுத வாய்ப்பில்லையே.. எந்த
  Site-ல சுட்டீங்க..?

  அவங்களும் உங்களை மாதிரி தான் எஸ் எம் எஸ் ல இருந்து சுட்டாங்க. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 4. >>விஞ்ஞான எல்லையை
  எட்டிக் கொண்டே
  பயணிக்கிறது அறிவு...,
  அறிவைக் குட்டிக் கொண்டே
  பயணிக்கிறது விஞ்ஞானம்.

  கலக்கல் வரிகள்

  பதிலளிநீக்கு
 5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  வெங்கட் கூறியது...

  நல்ல கவிதை..

  ஆனா நீங்க இப்படி எல்லாம்
  எழுத வாய்ப்பில்லையே.. எந்த
  Site-ல சுட்டீங்க..?

  அவங்களும் உங்களை மாதிரி தான் எஸ் எம் எஸ் ல இருந்து சுட்டாங்க. ஹா ஹா
  >>>
  இதென்ன வஞ்சப்புகழ்ச்சி அணியா?

  பதிலளிநீக்கு
 6. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

  ""யாராவது காப்பாற்றுங்களேன்
  >>>>
  நீங்க உங்க பிளாக்க படிச்சீங்களா?

  பதிலளிநீக்கு
 7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >>விஞ்ஞான எல்லையை
  எட்டிக் கொண்டே
  பயணிக்கிறது அறிவு...,
  அறிவைக் குட்டிக் கொண்டே
  பயணிக்கிறது விஞ்ஞானம்.

  கலக்கல் வரிகள்
  >>>>
  பாராட்டுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. அசத்தலான வரிகள்..
  அருமையான காவிதை..
  நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா6/22/2011 3:34 பிற்பகல்

  super raji... really nice

  பதிலளிநீக்கு
 10. நல்ல வேளை...ஜஸ்ட் எஸ்கேப்.... முதல் பத்தி படிச்சவுடனேயே நீன்ஃப்க கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கீங்கனு கண்டுபிடிச்சிட்டு...முழுசா படிக்காம ஓடிவந்துட்டேன்

  பதிலளிநீக்கு
 11. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  அசத்தலான வரிகள்..
  அருமையான காவிதை..
  நன்றி சகோ..
  >>>>
  பாராட்டுக்கு நன்றி சகோதரரே

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா கூறியது...

  super raji... really nice
  >>>
  Thanks.

  பதிலளிநீக்கு
 13. அருண் பிரசாத் கூறியது...

  நல்ல வேளை...ஜஸ்ட் எஸ்கேப்.... முதல் பத்தி படிச்சவுடனேயே நீன்ஃப்க கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கீங்கனு கண்டுபிடிச்சிட்டு...முழுசா படிக்காம ஓடிவந்துட்டேன்
  >>>.
  இந்த கவிதையெல்லாம் தமிழ்பாடப்புத்தகத்துல, செய்யுள்பகுதில வரும், உங்க மகளுக்கு சொல்லிக்குடுக்கும்போது, அடடா இது ராஜியின் கவிதயாச்சே, அப்பவே miss பண்ணிட்டமேனு வருத்தப்படப்போறீங்க பாருங்க.

  பதிலளிநீக்கு
 14. நல்ல கவிதை.ரசித்தேன்.
  கவியரசர் கண்ணதாசனைப்பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
  உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
  அன்போடு அழைக்கிறேன் சகோதரியே...

  பதிலளிநீக்கு
 15. உலக சினிமா ரசிகன் கூறியது...

  நல்ல கவிதை.ரசித்தேன்.
  கவியரசர் கண்ணதாசனைப்பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
  உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
  அன்போடு அழைக்கிறேன் சகோதரியே..
  >>
  கண்டிப்பாய் வருகிறேன். நன்றி சகோதரரே.

  பதிலளிநீக்கு
 16. கவிதை மிக அருமை, குறிப்பாக இந்த வரிகள்
  //விரல் நுனிகளில் வைரஸ்
  புற்றாகிறது பூக்கள்..//

  பதிலளிநீக்கு
 17. கவிதையாய் சொல்லி இருக்கீங்க நடைமுறையை ரசித்தேன் சகோ நன்றி!

  பதிலளிநீக்கு
 18. திருவாதிரை கூறியது...

  கவிதை மிக அருமை, குறிப்பாக இந்த வரிகள்
  //விரல் நுனிகளில் வைரஸ்
  புற்றாகிறது பூக்கள்../
  .>>>
  நன்றி

  பதிலளிநீக்கு
 19. விக்கியுலகம் கூறியது...

  கவிதையாய் சொல்லி இருக்கீங்க நடைமுறையை ரசித்தேன் சகோ நன்றி
  >>>
  நன்றி சகோதரா

  பதிலளிநீக்கு
 20. யாராலும் உங்களைக் காப்பாத்த முடியாது தாயி
  நீங்களா வெறுத்து ஒதுக்கினாத்தா உண்டு. இல்லையென்றா
  போற போக்கில என்னமாதிரி பல்லு விளக்காம சாப்புடுவீங்க
  தனியா நின்னு சிரிப்பீக,எரிஞ்சு எரிஞ்சு விளுவீக என்ன
  நா சொல்லுறது உங்களவிட அதிகமா இதால பாதிக்கப் பட்டவ நா.
  சொன்னாக் கேட்டுக்கோங்க அம்புட்டுத்தா!!..............

  பதிலளிநீக்கு
 21. நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..........

  பதிலளிநீக்கு
 22. தூக்கத்தில் கனவு அன்று ..,
  கனவில் தூக்கம் இன்று //

  தூக்கமே கனவாய் போனால் காப்பதெங்கே?

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு