வியாழன், செப்டம்பர் 15, 2011

வைரச்சுரங்கமே மகளாய்....,

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை....
இதோ ... மீண்டும் மறு ஒளிபரப்பு
பஞ்சுப்பொதியில் சுற்றி, கீழ்க்காணும் மலரின் நிறத்திலிருந்த வைரச்சுரங்கமாம் என் இளைய மகள் "இனியா"வை கைகளில் அள்ளிய திருநாள் இன்று.
                                                  

தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் அவளுக்கு.
அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.
பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.
அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?
அம்மா மூஞ்சியப் பார்த்தே. என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டே.
போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.
கிர்ர்ர்ர் டமால்

 
    


எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:
ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,
நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா.

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"
அவ்வ்வ்வ்வ்வ்வ்

 

குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்

    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...

    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....

    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..

    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...

    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..

    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,

    வாழ்க நீ பல்லாண்டு...

 

Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper
Happy birthday My Baby..,   

21 கருத்துகள்:

 1. >>அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?


  அம்மா மூஞ்சியப் பார்த்தே.

  ஹி ஹி புரிஞ்சிடுச்சு..

  பதிலளிநீக்கு
 2. >?>>>>செத்துவிடலாம் என்று தோன்றிய
  அவ நம்பிக்கையின் நிழலுக்கு
  உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
  ஒளிக் கீற்று..

  ஒரு டியூப் லைட் பிரைட் லைட் ஆனதே! அடடே!! ஆச்சரியக்குறி!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 3. நாளை உங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மல்லிகாவுக்கு பிறந்த நாளாமே? ஒரு போஸ்ட் போடவும்.

  பை த பை மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகாவுக்கு சாரி மல்லிகைக்கு மணம் உண்டு என்று சொன்ன அறிஞர் அண்ணாவுக்கும் இன்று தான் பிறந்த நாள்

  உங்கள் மகள் உங்களைப்போல் தத்தியாக இல்லாமல் புத்தியாக வளர வாழ வாழ்த்துக்கள். ஹி ஹி

  பை கேப்ல கெடாவெட்டுவோர் சங்கம்

  பதிலளிநீக்கு
 4. தங்களின் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. உங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.அழகான நினைவுகளுடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள உங்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. அழகிய இனியா'வுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. மனசை தொட்ட கவிதை வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 11. உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 12. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் செல்லத்துக்கு எங்கள் வாழ்த்துக்களும்...
  வளமுடன் நலமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 15. சிறந்த ரசிக்கும்படியான பதிவு..! O..N..E one எனக்கு கூடிய தெரியுது.. உங்களுக்கு தெரியவேயில்லையா? அச்சச்சோ..!

  பதிலளிநீக்கு
 16. ஒவ்வொன்றையும் கூறிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது..! வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு