வியாழன், ஜூலை 19, 2012

மலர்களே! மலருங்கள்...., பாசப்பைங்கிளியை வாழ்த்த வாருங்கள்

 எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோர்...,

வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் மருத்துவரை நாட, அவரின் தவறான கணிப்பில் குழந்தை இறந்துவிட்டது. ஸ்கேன் செய்து பார்த்துட்டு  ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதை கேட்டு அலறி அடிச்சுக்கிட்டு...,

பெரிய ஆஸ்பிட்டலுக்கு செல்ல, குழந்தை பூரண நலம். கடைசி சில நாட்கள் குழந்தையின் அசைவு தாய்க்கு அதிகம் தெரியாதென்று வயிற்றில் பால் வார்க்க....,

 பதினெட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில், துணியில் சுற்றப்பட்ட பொற்குவியலென கையில் வாங்கினேன்.பிரசவ வலி சிறிதும் இன்றி, ”என் மகளை”

                         

அன்றைய தினத்தை தவிர,  அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா.

என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள்...

நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ.                                              

என் பெரிய பொண்ணு தூயா, படிப்புல, பேச்சுல, நடத்தைலன்னு படு சுட்டி. அவ,  ரெண்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த போது ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா.

அவக்கிட்ட, ஒரு இங்கிலிஷ் வார்த்தை சொல்லி அதுக்கு மீனிங்க் கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டா.

அடுத்து சின்ன, சின்னதான வாக்கியம் சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிக்கிட்டே வந்தா..., அந்த நேரம் பார்த்து என் ஃப்ரெண்ட் வந்தாங்க. அவங்க  எதிர்க்க பெருமை பீத்திக்கனும்ன்னு  "I AM READING WELL"க்கு மீனிங்க் சொல்லுன்னு கேட்டேன்....

”நான் கிணத்துக்குள்ள இருந்து படிக்குறேன்”ன்னு சொல்லி குண்டை தூக்கி போட்டா.  ஏண்டி, தப்பா  சொல்றே? மீனிங்க் தப்பா வருதேன்னு கேட்டா..., READINGன்னா படிக்குறது, WELLன்னா கிணறு. ஒண்ணா சேர்த்தா, கிணத்துக்குள்ளிருந்து படிக்குறதுன்னு சொல்லி என்னை அசடு வழிய வெச்சா.
 
                                   நிலவுக்கும், தமிழுக்குமான
ஒரு ஒற்றுமை “தூய்மை”..,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்

நிலைகொண்ட உனக்கு 
யோசித்து...,பெயரிட்டான்...,
உன் மாமன்  அப்பெயரினை,
”தூயா”வென.

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!
என்னைத் தாயாக்கிய பெண்ணே,

நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!
கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

சமையலை  கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும்,
குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல்
பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும்
குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

கல்வியிலே சிறப்புற்று
பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்வாய்!

'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுவேனடி, பெண்ணே,
உன்னால் பேரின்பம்!

இத்தனையும் செய்துமுடிக்கப் போகும் நீ
போனால் போகிறதென்று?!
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய்
வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான்,
பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினெட்டாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
"பதினாறு" பேறும்
தவறாமல் சேரட்டுமமெஎன்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி! டிஸ்கி: இந்த கவிதையை கீத மஞ்சரியிடமிருந்து சுட்டுக்கிட்டேன். பர்த்டே அதுவுமா அவ போடுற ஆட்டத்தை பார்க்க இங்க போங்க
  

36 கருத்துகள்:

 1. பர்த்டே ஜோக் -

  என் பொண்ணுக்கு ஆடி வந்தா 18 வயசு ஆகுது

  அப்போ ஆடாம வந்தா?

  பதிலளிநீக்கு
 2. என் அன்புக்குரிய மருமகளுக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அறிவிற் குறைவின்றி, பாசத்திலும் கடலாய் இருக்கும் மகளுக்காக நீ தந்த கவிதை அருமையம்மா. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. >>அவளின் ஒரே பார்வையில், என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள்..

  கரிசலாங்கண்ணிக்கீரை மாதிரி கோபக்கரைசலாங்க்கன்னி?

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்...
  கவிதை அருமை...
  I AM READING WELL - ஹா... ஹா... ரசித்தேன்.

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  பதிலளிநீக்கு
 5. பதினாறு செல்வங்களும் நிறையப்பெற்று நீண்ட நாள் வாழ நெஞ்சாற வாழ்த்துகிறேன். வரிகள் சிறப்பு சகோ.

  பதிலளிநீக்கு
 6. இதோ நானும் வந்துட்டேன்..என்னோட வாழ்த்தையும் சொல்லிப் போடுங்க..

  பதிலளிநீக்கு
 7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்!!!!

  பதிலளிநீக்கு
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்ததின நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. தூயாவுக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. தூயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 16. அக்கா... ட்ரீட் வெறும் படத்துல இருக்குற கேக் மட்டும்தானா?

  பதிலளிநீக்கு
 17. அன்பு ராஜி,

  அந்தக் கவிதை என்னுடையது என்று குறிப்பிட்டதற்காகவா என் பதிவை நீக்கினீர்கள்? தவறாய் வேறெதுவும் குறிப்பிடவில்லையே.

  தூயாவுக்கான எனது வாழ்த்தை மட்டுமாவது பிரசுரித்திருக்கலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சொந்த சூழ்நிலை காரணமாக என்னால் உக்காந்து கவிதை யோசிக்குற அளவுக்கு இப்போதைக்கு என்னால முடியலை. அதனால, தோழி ஒருத்தி அனுப்பிய மெயிலில் இருந்து எடுத்து போட்டேன். அதனாலதான் லேபிளில் சுட்டப்பழம்ன்னு தெளிவா போட்டிருக்கேன். அது, எந்த தளம்ன்னு தெரியாததால, லிங்க் கொடுக்க முடியலை. உங்க பிளாக்குல வந்திருந்தது தெரிந்திருந்தால், தோழி உரிமையுடன் கேட்டு எடுத்திருப்பேன்.

   சுட்டதா?ன்னு கவிதையையும், கருத்தையும் பாப்பா நீக்கிட்டா. அது தப்பு விளக்கம் சொல்லிக்கலாம்ன்னு சொல்லி சரிபண்ணிட்டு உங்க கருத்துக்கும் பதில் சொல்கிறேன். இப்போ என் பதிவில் லிங்க் கொடுத்திருக்கேன். உங்க வாழ்த்து தூயாவிடம் சேர்ப்பித்தாச்சு.

   நீக்கு
  2. பிள்ளைகள் தாயிடம் ஒரு தோழியைப் போல் பழகுவது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தானே... இன்றைய பல பிள்ளைகள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதால் இது யாவருக்கும் பொருந்தும் வரிகள்தான். தூயாவை உங்கள் வாயிலாய் இக்கவிதை மூலம் வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்கிறேன். என் அன்பு வாழ்த்துக்கள் ராஜி.

   நீக்கு
 18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வு!

  பதிலளிநீக்கு
 19. தூயாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. உங்கள் அன்பு மகள் தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்....

  நட்புடன்

  வெங்கட்
  புது தில்லி.

  பதிலளிநீக்கு
 22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் செல்ல மகள் வாழ்வில்
  எல்லா நலனும் பெருகட்டும்....கவிதையுடன் மிக அழகாக வாழ்த்தினைப்
  பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 23. தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜி அக்கா... கவிதை சூப்பர்...

  பதிலளிநீக்கு
 24. பாசம் பொங்கும் பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 25. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

  ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
  http://www.YahooAds.in/publisher_join.php

  பதிலளிநீக்கு
 26. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

  ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
  http://www.YahooAds.in/publisher_join.php

  பதிலளிநீக்கு
 27. மிகவும் தாமதமாக வந்தாலும் எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 28. தாமதித்த ஆனால் மனம் நிறைந்த வாழ்த்துகள்,தூயாவுக்கு!
  என் ஆசிகள்

  பதிலளிநீக்கு