திங்கள், மே 27, 2013

இறைவனுக்கு பலி கொடுப்பது இறைவனுக்கு விருப்பமா? - ஐஞ்சுவை அவியல்

ஆன்மீகம்...,                                           


 பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

குட்டீஸ் கார்னர்: 
                    

எங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தேன்.  நான் போனதிலிருந்து ஃப்ரெண்டோட,  2 வயது மகன், நான் போனதிலிருந்து  என்னை “பெரியம்மா, பெரியம்மா”ன்னு விடாம் சுத்திக்கிட்டு இருந்தான். அவன் பொம்மைகளை காட்டுறதும், அவங்கஅம்மா சமைச்சு தர்றதை என்கிட்ட கொண்டு வந்து கொடுக்குறதும்ன்னு ரொம்ப ஒட்டிக்கிட்டான். அவன் பேர் ”வெற்றிமாறன்”.

ஒரு மதியான வேளை...,  என் ஜூஸ் கலந்து, எல்லாரும் சாப்பிடலாம்ன்னு முடிவு பண்ணி சாத்துக்குடில ஜூஸ் போட்டேன். ஐஸ் கலந்ததால  வெற்றிக்கு பாதி கிளாஸும் , எங்களுக்கும் முழு கிளாசும் ஊத்தி  குடிக்க ஆரம்பிச்சோம். அவன் முதல்ல குடிச்சுட்டான். இன்னும் வேணும்ன்னு கேட்டு ”தூயா” கிளாசை அடம்பிடிச்சு வாங்கிக்கிட்டான். என்னன்னமோ சொல்லியும் திருப்பி கொடுக்கலை. வீடு ஃபுல்லா ஓடி கீழ கொட்ட ஆரம்பிச்சுட்டான்..,

நான் பிரமாதமா ஐடியா பண்றதா எல்லாரையும் ஏளனமா ஒரு பார்வை பார்த்துட்டு,  அவனோடு கூடவே போய்,   ”வெற்றி” இங்க வா, இங்க பாரு பெரியம்மாக்கு கம்மியா இருக்கு பாரு, எனக்கு கொஞ்சம் ஊத்துன்னு சொன்னேன்.., கிட்ட வந்தவன், என் கிளாசையும், அவன் கிளாசையும் சில விநாடி உத்துப்பார்த்தவன் என் கிளாசுல அதிகமா இருக்குறதை புரிஞ்சுக்கிட்டு இதை கேட்டு அழ ஆரம்பிச்சு எனக்கு பல்ப் குடுத்து அசடு வழிய வச்சுட்டான் . 

டிப்ஸ்.., டிப்ஸ்...,

                           


பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும். 

 பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

 சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.

 சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

புதிர்...,

ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள்.., அவர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள்(inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3வது சகோ்தரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். அப்படின்னா, ஒவ்வொருவரதும் உயரங்கள் என்ன?

ஜோக்ஸ்...,
                                   

அப்பா: மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
மகன்: ஐந்து கேள்விப்பா
அப்பா: நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
மகன்: முதல் மூணும் கடைசி இரண்டும்
அப்பா:???!!!!!
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com

ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com
ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...

மூலம் : http://edu.tamilclone.com

26 கருத்துகள்:

 1. அவியல் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை பாராடியமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிப்பா!

   நீக்கு
 2. அக்கா வந்துட்டாங்க...! வந்துட்டாங்க...!!

  அனைத்தும் அருமை...

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சகோதரி......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி சகோ! அதென்ன சந்தடி சாக்குல என்னை அக்காவாக்கிட்டீங்க?! நான் என் தம்பியையெல்லாம் எப்படி கூப்பிடுவ்வேன் தெரியுமா?! ஜாக்கிரதை சகோ!

   நீக்கு
 3. இறைவனுக்காக உயிர்பலி கொடுப்பது எவ்வளவு தப்பென்று
  அழகாய் உணரும்வண்ணம் உள்ளது பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நான் புத்தகத்துல படிச்சதுமா தங்கச்சி! யாராவது சிலர் மாறினால் நல்லது தானேம்மா!

   நீக்கு
 4. பதில்கள்
  1. அவியலை சுவைத்தைமைக்கு நன்றி தோழி

   நீக்கு
 5. முதல் சகோதரர் = 72 அங்குலம்.
  இரண்டாவது சகோதரர் = 74 அங்குலம்.
  மூன்றாவது சகோதரர் = 76 அங்குலம்.
  நான்காவது சகோதரர் = 82 அங்குலம்.

  சராசரி: (72+74+76+82) % 4 = 76 அங்குலம்.

  சரியா சகோதரி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் சகோ! என் சார்பா அண்ணிக்கிட்ட சொல்லி உங்க முதுகுல தட்ட சொல்லுங்க

   நீக்கு
 6. புத்திசாலிப் பையன் பொழைச்சுக்குவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் பொழைச்சு நல்லப்படியா வந்தால் சந்தோஷப்படுற முதல் ஆள் நாந்தான் சகோ!

   நீக்கு
 7. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பகிர்வு.....

  அனைத்துமே அருமை சகோ..... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா சகோ! வீடு கட்டுற பிசில இங்க வர முடியலை.., இனி தொடர்ந்து வருவேன்..,

   நீக்கு
 8. ரொம்பநாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க போல...

  அனைத்து சுவைகளையும் ரசித்தேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா சகோ! இனி தொடர்ந்து வருவேன். கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

   நீக்கு
 9. அஞ்சுவை அமுது !..
  ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.
  பதிலை தனபாலன் ஸார் சொல்லிட்டார்.. அதனால ஹிஹி.. நான் ட்ரை பண்ணல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நொண்டி சாக்குலாம் வேணாம் ஒருவேளை தன்பாலன் அண்ணா தவறா சொல்லி இருந்தா?!

   நீக்கு
 10. Anmiga kathai arumai. Samayal kurippu sirappu. Vetriyidam vangiya bulb interesting. After a long gap thangai samaitha aviyalil kooduthal suvai.

  பதிலளிநீக்கு
 11. சுவையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. பல்பு வாங்குறது நம்ம குடும்பத்துக்கு புதுசா என்ன ஹி ஹி....! பரம்பர பரம்பரையா வாங்குவோம்ல.

  பதிலளிநீக்கு
 13. "ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?" - இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  குயவர் வழிபடும் சாமி நிச்சயமாக மிருகங்களை சாப்பிடும் சாமியாகத்தான் இருக்கும். அவன் என்ன இந்துக்களின் கடவுள்களையா கும்பிட போறான், இல்ல அங்க தான் போய் கிடா வெட்ட முடியுமா?
  குயவர் மற்றும் பலர் வழிபடும் சாமிகளை படைத்த சாமி என்று சொல்ல மாட்டார்கள், காக்கும் சாமி என்று தான் சொல்வார்கள். அந்த சாமிகளெல்லாம் அவர்களுக்கு முன் வாழ்ந்த அவர்களின் முன்னோர்கள். அங்கு ஆடு/கோழிகளை வெட்டுவது அவர்கள் முன்னோர்களுக்கு செய்யும் காரியம்.
  அதுவும் இந்த கடையில் குயவர் செய்யும் பானையுடன் கடவுளை ஒப்பிடுவது, அந்த பானையை கேலி செய்வதற்கு சமம்.
  இந்த கதையை தவிர மற்றது எல்லாம் அருமை.

  நன்றி.

  பதிலளிநீக்கு