செவ்வாய், செப்டம்பர் 15, 2015

பதினேழு வயதினிலே ...பர்த் டே ஸ்பெஷல்

பண்பான பதினேழில்
அடியெடுத்து வைக்கும்
என் அருமை மகளே!!  
பல்லாண்டு நீ வாழ்க!

பெரியோர்களின் ஆசியுடன் தரும்
அறிவுரையை மதித்து, நடந்து
இன்று முதல் தொடங்கு
உன் ஏற்றமிகு வாழ்வை......,

பாச வலையில் எங்களை 
சிறைப்படுத்திக் கொண்டவளே!
சாதனை பல குவித்து
நீ வாழும் வகைக் கண்டு
பூரிக்க அன்பான கூட்டம் உண்டு.

அழகில் மயிலாய்,
நடையில் அன்னமாய்,
பண்பில் பாட்டியையும்,
குணத்தில் பாட்டனையும் கொண்டு...

நல்லவை கொண்டு, தீயதை தள்ளி...
மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
வாழ்வின் எல்லா உயரங்களுக்கும்
 நீ செல்ல நீ ஏறும் படிக்கட்டாய்   நானிருப்பேன்...,
எந்நாளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    வாழ்க நீ பல்லாண்டு...

17 கருத்துகள்:

 1. பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு

 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம 2

  பதிலளிநீக்கு
 4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!.சொல்லிடுங்க ராஜி அக்கா.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. அன்பு வாழ்த்துகள் அம்ம. உங்கள் மக்ளிடம் சொல்லுங்கள் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. காணாமல் போன கனவு....

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
  156 http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html
  157 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Tamil-Writers-Festival-2015-3.html
  158 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Blog-Tips-1-3.html
  159 http://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Tamil-Writers-Festival-2015-Contest-4.html

  பதிலளிநீக்கு
 9. என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்க .

  பதிலளிநீக்கு
 10. உங்கள் மகளுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  நலமா அக்கா?

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள், பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜி. மகளை ஏற்றிவிடும் படிக்கட்டுகளாய் தாயிருப்பேன் என்னும் வரிகளில் தெரியும் நம்பிக்கை நிச்சயம் அவளை உச்சத்தில் அமர்த்தும்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம் அறம் இணையதளம்

  ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

  உதவிக்கு பயன்படுத்து லிங்க்

  பதிலளிநீக்கு
 15. சென்னைக்கு வந்தால் வரவும் ராஜி. இனியாவைப் பார்க்க ஆசை.

  பதிலளிநீக்கு