இப்ப எல்லாம் ஜூஸ் குடிக்கிறது ,மருத்துவத்திற்காகவும் பேஷன்- -னாகவும் போய்டுச்சு,ஆனாஒரு சிலருக்கு பழங்களாக கூட சாப்பிட நேரமில்லாமல், ஜூஸாக குடிப்பதையே விரும்புகின்றனர். உண்மையில் நார்சத்து அதிகம் இருக்கும் பழங்களை அதன் இயல்பு நிலையில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.அவைகளை ஜூஸ்ஸாக குடிக்கும் போது,அந்த நார்சத்து எல்லாம் குறைந்து விடும். அதிக வேலை செய்பவர்கள்,விளையாடுபவர்கள், மலை ஏறுபவர்கள்,மட்டுமே ஜூஸாக குடிப்பது நல்லது ஏன்னா,அது அவர்களுக்கு தண்ணீர் இழப்பை சமன் செய்யும். மற்றபடி இருப்பவர்கள் பழமாக சாப்பிடுவது நலம்..இல்லை சிலருக்கு ஜூஸ்களாக குடிப்பதே பிடிக்கும் என்றால் அந்த ஜூஸ்களை குடிப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை நம்முடைய ஆரோக்கியம் பகுதியில் இன்று பார்க்கலாம்.
பொதுவாக கொளுத்தும் வெயிலில், கோடை வெம்மையை தணிக்கபெரும்பாலும் மக்கள் நாடுவது தெருவோர கடைகளையும், மோர் ,பழச்சாறு மற்றும் கூழ் போன்றவற்றை விற்கும் திடீர் கடைகளை நோக்கித்தான்.இதன் மூலம் இவர்களது தாகம் உடனடியாக தணிந்துவிடும், ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஆனால்,அதன் பின்னனியில் நமக்கு கிடைப்பது,ஆபத்து தான் பொதுவாக வெயிலில் நீண்டநேரம் வைக்கப்படும் எல்லா விதமான உணவுகளிலும் கெட்டுப்போகும் தன்மை விரைவாக நடைபெறும்.அவைகளை அவர்கள் ஒப்புக்கு ஒரு கம்பிவலை மூலம் மூடிவைத்தாலும் ,அவைகளை பொதுவாகவே ஈக்கள் மொய்க்கும் தன்மை அதிகமாக இருக்க வாய்புகள் அதிகம் உண்டு.சிலர் பேப்பரால் மூடி வைத்தாலும்.பெரும்பான்மையான இடங்களில் திறந்தே இருக்கும்.
தள்ளுவண்டியில் ஜூஸ்,ஐஸ்கிரீம் ,லஸ்ஸி போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் அதிக விலை கொடுத்து கேன்வாட்டர் வாங்கி உபயோக படுத்துவது இல்லை.தெருக்குழாய் மற்றும் லாரிகளில் கொண்டுவரும் தண்ணீரையே உபயோக படுத்துவார்கள்.சிலர் தெருவோரம்இல்லை சாலை ஓரங்களில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் டாங்குகளில் இருக்கும் தண்ணீரை கூட பயன்படுத்துவார்கள்.அதுபோல ஜூஸ் பிழிய பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை ஒவ்வருமுறையும் கழுவ வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வது இல்லை.
இதேபோல் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ரோட்டு ஓர கடைகளில் இருக்கும் ஜூஸ் ,மற்றும் மிக்சட் புரூட் ஜூஸ் போன்றவை அவர்கள் காலையிலயே வெட்டி அதை ஒரு ஒரு கலனில் கலக்கி வைப்பார்கள்.பொதுவாக வெட்டப்பட்டு வெகுநேரமான பழங்களில் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உற்பத்தியாகிவிடும்.இதனால் தொற்று நோய்கள் வர கூட வாய்ப்புகள் அதிகம் .ஆகவே முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நலம்.
அதுபோல பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும். பொதுவாக பார்த்தோம்னா , எல்லா ஜூஸ் கடைகளிலும் ,ஜூஸ் அடிப்பதற்கு முன்பு பால் கலக்குவார்கள் .மேலும் எல்லா விதமான பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும். திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள் அவைகளில் இருக்கும் அமிலங்கள் பாலை திரிய வைத்துவிடும் தன்மை கொண்டவை ,அவை நம்முடைய வயிறுக்கு நல்லதல்ல.. மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமே தவிர மற்ற பழங்களுக்கு தேவை இல்லை .உதாரணமாக மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் பால்கலந்து குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது.
அதுபோல பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும். பொதுவாக பார்த்தோம்னா , எல்லா ஜூஸ் கடைகளிலும் ,ஜூஸ் அடிப்பதற்கு முன்பு பால் கலக்குவார்கள் .மேலும் எல்லா விதமான பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும். திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள் அவைகளில் இருக்கும் அமிலங்கள் பாலை திரிய வைத்துவிடும் தன்மை கொண்டவை ,அவை நம்முடைய வயிறுக்கு நல்லதல்ல.. மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமே தவிர மற்ற பழங்களுக்கு தேவை இல்லை .உதாரணமாக மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் பால்கலந்து குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது.
எந்த விதமான பழசாறுகளோ ,இல்லை காய்கறி போன்றவற்றில் சாறு தயாரிக்கும் போதோ ,அவைகளை நன்றாக கழுவி உபயோகிக்கவேண்டும். .ஏன்னா பழங்களை
தாக்குகிற பூச்சிகளை கொல்கிறதுக்கும்,தடுக்கிறதுக்கும்
.அடிக்கப்படுகிற மருந்து மற்றும் இரசாயனங்களும்,பழங்கள் பழக்க வைப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன கலவைகளும் ,அவற்றின் மேல் காணப்படுவதால் அவற்றை நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும்
.இல்லையெனில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறிவிடும் .
காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே
பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க
வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர்
ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்..பீட்ருட்
சாறு பச்சையாக குடிப்பதால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம்
.மேலும் எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் கலந்து,அதிகாலையில் வெறும் வயிற்றில்
சாப்பிடுவதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையவும் வாய்ப்புக்கள் அதிகம் .இப்படி ஒவ்வரு காய்கறியிலையும் ஒவ்வொரு வைகையான சத்துக்கள் உள்ளன அவைகள் யாவையும் இங்கே தொகுத்து
அளித்தால் நமது பதிவின் நீளம் அதிகரித்துவிடும்.இனி உலகில் உள்ளசில வினோதமான உணவு
பழக்கவழங்களை நமது ஆரோகியம் பகுதியில் அடுத்தவாரம் பார்க்கலாம். நன்றி.
அனைத்தும் குறிப்புகளும் பயனுள்ளவை...
ReplyDeleteநன்றி அண்ணா ...
Deleteபயனுள்ள பதிவு சகோதரியாரே
ReplyDeleteசில பொது பதிவுகள் ,நாம் பதிந்தாலும் ,சில சமயம் நம்மால் கூட எல்லா விஷயங்களையும் அவ்வுளவு எளிதில் மாற்ற முடியாது .நன்றி சகோ
Deleteமிகவும் அருமையான பதிவு! நல்ல பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி சகோ ..பதிவுகள் தொடரும் ...
Deleteசிறந்த உளநல வழிகாட்டல்
ReplyDeleteஆரோக்கியம் பதிவுகள் இனியும் தொடர்ந்து வரும் நன்றி
ReplyDelete