Monday, June 05, 2017

உங்களுக்கு ஆறறிவுதானா?! - ஐஞ்சுவை அவியல்

இந்தாங்க மாமா பிரசாதம் எடுத்துக்கோங்க. 
"Kerala Saree", India's One Of The Amazing Treditional Dress...... Do You Want To More About Kerala Saree ?...... Read http://blog.techietailor.com/…/kerala-saree-a-classical-to…/  VIsit http://www.techietailor.com/:
என்ன புள்ள விசேசம்?! ஒன்னுமில்ல மாமா. சும்மாதான் கோவிலுக்கு போனேன்.  பக்கத்து வீட்டுல கூப்பிட்டாங்கன்னு போனேன். வழில உங்க அக்கா பொண்ணை பார்த்தேன். அவ தன் வீட்டுக்கு கூப்பிட்டா நான் போகல. நீங்க ஒரு எட்டு போய் என்னான்னு கேட்டுட்டு வாங்க. 

ம்ம்ம். சிவன் கோவிலுக்கு போனா கோவில்ல உக்காந்து எழுந்து வரனும். ஏன்னா, சிவன் நமக்கு பாதுகாப்பா தன்னோட பூதகணங்களை அனுப்புறார்.  அதனால, அவருக்கு நன்றி சொல்ல கோவில்ல உக்காந்து சிவன்கிட்ட எஸ்கார்ட்சை அனுப்புறதுக்கு நன்றின்னு சொல்லி வரனும். இதே விஷ்ணு, நம்மோடு நம்ம வீட்டுக்கு லட்சுமியை அனுப்புறார். அதனால, எங்கயும் தங்காம நேரா வீட்டுக்கு வரனும். அப்பதான் லட்சுமி நம்மோடு நம் வீட்டுக்கு வருவான்றது ஐதீகம். 

உங்களுக்கு அறிவு ஜாஸ்திங்க.  அதான் எல்லா விசயங்களும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. அதுலாம் ஒன்னுமில்ல. எல்லாரையும் போல எனக்கும் ஆறறிவுதான். 

ஆறறிவுன்னு சொல்றாங்களே அப்படின்னா என்னங்க?!

 தன்னை சுத்தி நடக்குற நிகழ்வுகளை உடலால மட்டுமே உணர்வதுலாம் ஓரறிவுல வரும். புல், பூண்டு, மரம்லாம் இந்த லிஸ்ட்ல வரும். நம்ம கோவத்தை, அன்பை இதுங்களால உணர முடியுமே தவிர எதிர் ரியாக்‌ஷன் காட்ட முடியாது. உடல் மற்றும் நாக்கால உணர்ந்தால் ஈரறிவு ஜீவன்கள். மீன் போன்ற நீர்வாழ் உயிரனங்கள் இந்த கேட்டகிரில வரும்.  உடல், நாக்கு, மூக்குல உணர்ந்தால் அவை மூவறிவு கொண்ட ஜீவன். எறும்பு, கரையான், அட்டை மாதிரியானது இந்த லிஸ்ட். உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்ந்தால் அவை நான்கறிவு லிஸ்ட்ல வரும். பூச்சி இனங்கள் இதுல சேரும். உடல், நாக்கு, மூக்கு, கண், காது கொண்டு தன்னை சுத்தி நடக்குறதை புரிஞ்சுக்குறதுலாம் ஐந்தறிவு லிஸ்ட்ல வரும். ஆடு, மாடு, சிங்க, புலி, யானை...லாம் இந்த லிஸ்ட்ல. உடல், நாக்கு, மூக்கு, கண், காது மற்றும் மூளை கொண்டு உணர்ந்தால் ஆறறிவு கேட்டகிரி. அது மனுசங்கன்னு சொல்லிக்கிட்டாலும் உன்னை மாதிரியான மூளையை யூஸ் பண்ணாம வச்சிருக்குறவங்களாம் இதுல சேர்த்தி கிடையாது. 

ம்க்கும் . இப்படிலாம் ப்ரூடா விட்டு என்னை கிண்டலடிக்குறதே உங்க பொழப்பா போச்சு.

 அடியே இதை நான் சொல்லல. தொல்காப்பியத்துலயே வந்திருக்கு. 

அப்படியே தொல்காப்பியத்துல பல்வலிக்கு என்ன மருந்துன்னு சொல்லி இருக்குதுன்னு பாருங்க. என் ஃப்ரெண்ட் ராஜி பல்வலின்னு அவஸ்தை பட்டுக்கிட்டிருக்கா...

இதுக்கு எதுக்கு தொல்காப்பியத்துக்கு போகனும்?! கிராம்பு எண்ணெயை பஞ்சில தொட்டு வலிக்குற பல்மேல வைக்கலாம். இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், நரம்புகளை மரத்து போக செய்யும் பொருளும் சேர்ந்து அப்போதைக்கு வலியை குறைக்கும். பூண்டு, கிராம்பு, உப்பு சேர்த்து தூளாக்கி வலியிருக்கும் இடத்துல வைக்கலாம். இதனால, அங்கிருக்கும் கிருமிகளின் வீரியத்தை குறைக்க முடியும். பல்வலி லேசா இருக்கும்போதே வெங்காயத்தை மென்னு திங்கலாம்.  அதேமாதிரி இளம் கொய்யா இலைகளையும் மெல்லலாம். மிளகு, உப்பை சம அளவு எடுத்து பசை மாதிரியாக்கி பாதிக்கப்பட்ட பல்லின்மீது தடவலாம். இதுலாம் வலியை அப்போதைக்கு குறைக்குமே தவிர போக்காது. நல்ல பல் டாக்டரை பார்க்க சொல்லு. இதுக்குதான் சாப்பிட்டதும் வாயை கொப்பளிக்கனும். தினமும் ரெண்டு வேளை பல் தேய்க்கனும்ங்குறது சோம்பேறித்தனப்பட்டா இப்படிதான் அவஸ்தைப்படனும்..

ம்ம்ம் அவ படுற அவஸ்தையை நான் பார்த்துட்டேன் மாமா. இனி நான் உசாரா இருப்பேன். சினிமாவுல வரும் சீன் மாதிரியே நம்ம வேலூர் மாவட்டத்து திருப்பூர்ல தாலி கட்டுற நேரத்துல அண்ணனை தள்ளிவிட்டுட்டு தம்பி கல்யாணப்பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான் ஒருத்தன். 

 ம்ஹூம், ஏன் என்னாச்சு?! 

திருப்பத்தூரை சேர்ந்த ஒருத்தருக்கு . ராஜேஷ், ரஞ்சித், வினோத்ன்னு மூணு ஆம்பிளை பசங்க..  ரஞ்சித்ன்ற பையனுக்கும், காளீஸ்வரின்ற பொண்ணுக்கும் கல்யாணம் நிச்சயமாகி, அந்த ஊர் கோவில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்காங்க. மணமகன் தாலியை கையிலெடுத்து தாலி கட்ட போகும்போது அவன் தம்பி வினோத் அண்ணனை தள்ளிவிட்டு அவனே காளீஸ்வரி கழுத்துல தாலி கட்டியிருக்கான். எல்லாரும் பிடிச்சு ஏன் இப்படி செஞ்சே..ன்னு கேட்ட்துக்கு பொண்ணு பார்க்க போகும்போது காளீஸ்வரி தன்னை பார்த்து சிரிச்சதாகவும்,அன்னிலிருந்து ரெண்டு பேரும் காதலிக்குறதா சொல்லி எல்லாரையும் திக்குமுக்காட வச்சு காளீஸ்வரிய கூட்டிக்கிட்டு தான் வேலை செய்யுற ஊருக்கு போய்ட்டான். அண்ணன்காரன் மாலைலாம் கழட்டி வீசிட்டு பித்து பிடிச்ச மாதிரி ஊரை சுத்துறதா பேப்பர்ல போட்டிருக்கான்.

ஐயோ பாவம். ஏன் இப்படி யோசிக்காம செய்யுறானுங்கன்னே புரில. 

அவங்க யோசிக்குறது இருக்கட்டும். நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க.  இருபத்தி நான்கை எத்தனை முறை நாலால் கழிக்க முடியும்?!

இவரு யோசிச்சிக்கிட்டே இருக்கட்டும். நீங்க தமிழ்மணத்துல ஒட்டு போட்டுட்டு, விடை சொல்லிட்டு கிளம்புங்க. நாளைக்கு கிச்சன் கார்னர்ல சுண்டைக்காய் சாம்பார் செய்யுறது தெரிஞ்சுக்க வாங்க. 
Mrunmai deshpande:
நன்றியுடன் 
ராஜி. 

23 comments:

  1. இதை படிச்ச பிறகு நமக்கு ஏழு அறிழவு அப்படினு தேவகோட்டையில பேசிக்கிறது உண்மைதான்னு தெளிஞ்சுக்கிட்டேன்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்காவது தெளிஞ்சீங்களே!! அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கோங்க.

      Delete
  2. TM 3 //இருபத்தி நான்கை எத்தனை முறை நாலால் கழிக்க முடியும்?!//

    ஒரு முறைதான் அதன் பிறகு அது 20 ஆகிவிடுமே

    ReplyDelete
    Replies
    1. அண்ணிக்கிட்ட கேட்டு சொன்னீங்களா?! ஏன்னா, பூரிக்கட்டைல அடிவாங்கி அடிவாங்கி மூளை மரத்து போயிருக்குமே

      Delete
  3. என் இல்லாள் செய்யும் சுண்டைக்காய் சாம்பார் நல்லாவே இருக்காது. சீக்கிரம் எழுதுங்க. படிக்கக் கொடுக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் செய்யுறது நல்லா இருக்கும்ன்னு நம்புற உங்க வெள்ளந்தி மனசை என்ன சொல்லுறதுப்பா?!

      Delete
  4. அவியல் சுவை நன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  5. ஐஞ்சுவை அவியல் நன்றாகவே இருக்கிறது. 24 4 ஆல் ஒரு முறைதான் கழிக்க முடியும்...

    ஒரு சிறிய டவுட்டு..தப்பா எடுத்துக்காதீங்க...சிவனும், விஷ்ணுவும் இருக்கும் கோயிலுக்குச் சென்றால்??!!!

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. சிவன் இருக்கும் பிரகாரத்தை முதலில் சுற்றி வந்து உக்கார்ந்து எழுந்து, அப்புறம் விஷ்ணு ஆலயத்தை சுத்தி வாங்க. ஐடியா எப்படிங்க கீதா, துளசி?!

      விடை சரி.

      Delete
    2. ஹை சூப்பர்!!! நல்ல ஐடியா ராஜி சகோ/ ராஜி...

      Delete
  6. ஆறறிவுன்னு சொல்லிக்கிட்டு ,இப்படி உக்கார்ந்து எழுந்து வருவதுதான் எனக்கு ஒப்பலே :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலை உள்ளிடுக...அது கடவுள் நம்பிக்கை இருக்கறவங்களுக்கான டிப்ஸ்

      Delete
  7. பயனுள்ள அருமையானப்பதிவு
    குறிப்பாக அறிவு குறித்த விளக்கமும்
    கோவில் குறித்த விளக்கமும்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிலை உள்ளிடுக...வருகைக்கும் கருத்துக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றிப்பா

      Delete
  8. ஐஞ்சுவை அவியல் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  9. pala 24 irutha epdiga kalikerathu?

    ReplyDelete
    Replies
    1. இப்படிலாம் எடக்கு மடக்கா கேட்டா எப்படி?! எனக்கு கேள்வி கேக்கதான் தெரியும். பதில் சொல்ல தெரியாது சகோ

      Delete
  10. மகுடத்துக்கான வோட்டு என்னோடது.

    ReplyDelete