Saturday, September 23, 2017

இந்திரன் மனைவி இந்திராணியும், சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணியும் ஒருவரா?!


நவராத்திரியின் மூன்றாவது நாளில் வணங்க வேண்டிய தெய்வம் இந்திராணி.  இவள் இந்திரனின் சக்தியாகும். இந்திரனின் மனைவியான இந்திராணியும், இவளும் வேறு. இவள் நித்யகன்னி. இந்திரன் மனைவி தெய்வானை, சித்திரகுப்தன், ஜெயந்தனின் தாய்.   இவளுக்கு மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் பெயருண்டு. சீதைக்கு நிகரான அழகும் குணமும் கொண்டவள். இவள்தான் தேவலோகத்தை ஆட்சி செய்பவள்.  நவரத்தின கற்கள் பதித்த க்ரீடம் அணிந்தவள். வஜ்ராயுதத்தை தாங்கியவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திகாசுரனை அழித்தவள். ஆயிரம் கண்ணுடையவள். சப்த கன்னிகளில் ஆறாவது சக்தியாகும். 


வேலை கிடைக்க, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இழந்த பதவி திரும்ப பெற வேண்டுபவர்கள் இவளை வழிப்பட  கைமேல் பலன் கிடைக்கும். மரிக்கொழுந்து, சம்பங்கி மலர்களின் பிரியை. யம பயம் போக்குபவள், திருமண வரம் தருபவளும்கூட. 


சப்த கன்னியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று வணங்கி சிவனின் அருளாசி பெற்றனர். அவ்வாறு, இந்திராணி சிவனை வழிப்பட்ட தலம் நாகப்பட்டினம் அருகில் தருமபுரம், அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் ஆலயம்.  ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க முயன்ற குற்றத்திற்காக சாபத்திற்கு ஆளான எமன், இத்தலத்தில் சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றதாய் கூறப்படுது. தருமராஜாவும் இக்கோவிலில் சிவனை வணங்கி சிவனின் அருள் பெற்றுள்ளார். இங்கு துர்க்கை 18 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரன் சாபம் நீங்க வழிப்பட்ட தலத்தில் இதுவும் ஒன்று. அனைத்து விதமான கலைகளும் கைவர சந்திரனின் அருள் மிக முக்கியம். அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த எம்பெருமான் இங்கு சந்திரமௌலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். 


இந்திராணிக்கு தாழமங்கை என்றொரு பெயருண்டு. அவள் இங்கு தங்கி சிவனை பூஜித்ததாலேயே இந்த கோவிலுக்கு தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுது. 

இந்திராணியின் மூல மந்திரம்...
ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;வஜ்ரஹஸ்தாயை தீமஹி;தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1472564

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. #இந்திரன் மனைவி இந்திராணியும், சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணியும் ஒருவரா?!#
    எனக்கு எந்த இந்திராணியையும் தெரியாது :)

    ReplyDelete
    Replies
    1. இந்திராணி முகர்ஜியாவது தெரியுமாண்ணே?!

      Delete
  2. இந்திராணி என்கிற பெயரில் இருவர் உண்டு என்பதையே இன்றுதான் அறிந்தேன்! தாழமங்கை. பெயர் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தாழமங்கை பெயரை நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அது அம்மன் பெயர்ன்னு எனக்கு இப்பதான் தெரியும்

      Delete
  3. அய்யம்பேட்டை அருகே தாழமங்கை என்றொரு தலம், சப்தமங்கைத்தலங்களில் ஒன்று, உள்ளது. அதில் மூலவராக லிங்கத்திருமேனியைத்தான் காணமுடியும். அடுத்த முறை செல்லும்போது இந்திராணி கண்ணோட்டத்தில் காண்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யம்பேட்டையே எனக்கு தெரிஞ்சு எங்க ஊர் பக்கம் ஒன்னு இருக்கு. இன்னொன்னு காஞ்சிபுரம் பக்கமிருக்குப்பா

      Delete
  4. புதிய தகவல் கேள்விப்பட்டதில்லை

    ReplyDelete
    Replies
    1. கற்றது கைம்மண் அளவுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்கப்பா

      Delete
  5. போட்டாச்சி 8

    ReplyDelete
  6. ’இந்திரர்கள் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லை’ - இது கலைஞர் மு.கருணாநிதி, அரசு அதிகாரிகள் குறித்து அடிக்கடி சொல்லும் வாசகம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வாசகத்தை நான் கேட்டதில்லைண்ணே!

      Delete
  7. த.ம.7 - தமிழ்மணம் வாக்கை போட்டு விட்டு, கருத்துரை எழுதும்போது புலவர் அய்யாவின் 8 ஆவது வாக்கு. ஒரு தகவலுக்காக.

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா ‘போட்டாச்சி 8’ என்றதும், அது த.ம.8 என்று தவறாக நினைத்து விட்டேன்.

      Delete
    2. த.ம ஓட்டு எண்ணிக்கை நான் பார்க்குறதில்ல. ஆனா, எட்டு இல்ல. ஏழுன்னுதான் இருக்கு. த.ம ஓட்டுல என்னமோ பிரச்சனை இருக்கு போல

      Delete
  8. ஆயிரம் கண்ணுடையவள் இந்திரனுக்கே ஒரு சாபத்தால் ஆயிரம் கண்கள் பெற்றான் என்று படித்த நினைவு /
    வேலை கிடைக்க, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இழந்த பதவி திரும்ப பெற வேண்டுபவர்கள் இவளை வழிப்பட கைமேல் பலன் கிடைக்கும். / இந்த மாதிரி வழிகள் இர்ந்தால் யாருமே வேலை இல்லாமல் கசஹ்டப்படக் கூடாதே / என் கருத்துகள் எப்படி ஏற்றுக் கொள்ளப் படுகின்றன என்பதை அறிய மீண்டும் பதிவுக்கு வரும் வழக்கம் உண்டு

    ReplyDelete