Tuesday, October 09, 2018

காலிஃபிளவர் 65 - கிச்சன் கார்னர்

காலிஃபிளவருக்கு தமிழ்ல பூக்கோசுன்னு பேரு.   பசிபிக் பெருங்கடல் பகுதி அருகே உள்ள நாடுகளில்தான் இந்த  பூக்கோசு உருவானது.   அமெரிக்காவில் அரிசோனாகலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இது நல்லா விளையுது.  கிடைக்கும்போதெல்லாம் காலிஃபிளவர் சாப்பிட்டா உடலுக்கு ரொம்ப நல்லது, ஏன்னா, 100கிராம் பூக்கோசை சாப்பிட்டா 33கிராம் அளவில்தான் கலோரி கிடைக்குது, அதனால் தினத்துக்கு 200கிராம் பூக்கோசு சாப்பிடலாம். இந்த அளவு பூக்கோசு செய்யப்படும் பதார்த்தினை பொருத்தது. சீசன் ஆரம்பிக்கும்போது இதை சாப்பிட ஆரம்பிச்சா, சீசன் முடியும்முன் பர்ஸ் கரைஞ்சிடும், ஆனா ஒல்லியா இருக்கவுங்க குண்டாகிடுவாங்க.  இதுல, மாவுச்சத்தும், அதிகளவு புரதமும், தாது உப்புகளும் இருக்குறதால குண்டா இருக்கவுங்க அளவோடுதான் சாப்பிடனும். அதேமாதிரி வாத நோய் இருக்கவுங்களும் இதை தொடக்கூடாது.

இதை குழந்தைகளுக்கு தினமும் சூப்பா கொடுத்தா இதிலிருக்கும் இரும்பு சத்து, குழந்தைகளின் உடலிலிருக்கும் திசுக்கள், நகம், முடி வளர  முடி வளர உதவுது. இதிலிருக்கும், கந்தகம்சுண்ணாம்புபாஸ்பரஸ்புரதம்மாவுச்சத்து லாம் குந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர உதவுது, அதேமாதிரி ரத்தவிருத்தி, சிக்ஸ் பேக் வைக்க விரும்பும் பெரியவங்களுக்கு இது வரப்பிரசாதம்.  கைகால் மூட்டுவலிக்கும், நோய் எதிர்ப்பு சதி அதிகரிக்கவும் இதிலிருக்கும் வைட்டமின் சி உதவுது.   இது மூலநோய், நாக்கு வறட்சி, தோல்வறட்சி, தலைவலி, சளித்தொல்லையை போக்கும். வைட்டமின் ஏ இருக்குறதால கண் பார்வைக்கு நல்லது.  உடல் பளப்பளப்பு வேணுங்குறவங்களும் இதை சாப்பிடலாம்.  பாஸ்பரஸ் சத்து இருக்குறதால மந்த புத்திக்காரங்களுக்கு நல்லது. 

காலிஃபிளவர் பூ கொத்து கொத்தாய் பல பிரிவுகள் இருக்கும். இந்த பிளவுகளுக்கிடையில் புழுக்கள் இருக்கும். அதனால், ஒவ்வொரு பிளவையும் நல்லா பார்த்து நறுக்கி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்த சுடுதண்ணில கழுவி சமைக்கனும்.இதிலிருக்கும் நார்ச்சத்து உடலிலிருக்கும் கழிவுப்பொருட்களை வெளியேத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாது. ரத்த ஓட்டத்தில் பித்தநீரும், கொழுப்பும் சேர்வதை நார்ச்சத்து தடுத்துடும். அதனால் எல்லாவிதமான இதயநோய்களும் வராம தடுக்கும்.  இந்தளவுக்கு நல்லது செய்யும் காலிஃபிளவரில் பக்கோடா செஞ்சு சாப்பிடலாம். வாங்க.  இம்புட்டு சொல்லிட்டு எண்ணெயில செஞ்ச காளிஃபிளவர் நல்லதாம்மான்னு கேட்டா, எப்பவாவது சாப்பிட்டா ஒன்னும் ஆகாதுன்னு பதில் சொல்வேன்.

தேவையான பொருட்கள்...
காலிஃபிளவர்
மைதா மாவு
அரிசி மாவு
கார்ன் ஃப்ளவர் 
உப்பு
கரம் மசாலா
இஞ்சி பூண்டு விழுது
தனி மிளகாய் தூள்
சிகப்பு கலர்
எண்ணெய்
காலிஃபிளவரை  பொடிசா இல்லாம மீடியம் சைசுல சுத்தம் செய்து கழுவி சுத்தம் செய்துக்கனும்.


அகலமான பாத்திரத்தில்  மைதா மாவு எடுத்துக்கனும்.

அரிசி மாவு ஒரு ஸ்பூன் எடுத்துக்கனும்...

கார்ன் ஃப்ளவர் மாவு ஒரு ஸ்பூன் எடுத்துக்கனும்..  காலிஃபிளவர் 65 மொறுமொறுன்னு இருக்கவே கார்ன்ப்ளவர் மாவும், அரிசிமாவும் சேர்க்கிறோம்.

தனி மிளகாய்தூள் சேர்த்துக்கனும்.
கரம் மசாலா பொடி சேர்த்துக்கனும்.

தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கனும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கனும்.
சிகப்பு கலர் சேர்த்துக்கனும்.
எலுமிச்சை சாறு இல்லன்னா கெட்டி தயிர் சேர்த்துக்கனும். அந்த நேரத்துல எலுமிச்சை இல்லாததால் நான் தயிர் சேர்த்துக்கிட்டேன்.
கொஞ்சமா தண்ணி சேர்த்து  எல்லாத்தையும் கலந்துக்கனும். பின்னர் சுத்தம் செய்த காலிஃபிளவரை சேர்த்து கலந்துக்கனும்.  


ஒரு 10-15நிமிசம் ஊற விடனும். மாவுக்கலவை ரொம்ப தண்ணியாகிட்டா காலிஃபிளவர்ல ஒட்டாம பிரிஞ்சு வந்திடும்., ரொம்ப கெட்டியா இருந்தா மொறு மொறுன்னு வராது. பக்கோடா மாதிரி மெத்ன்னு இருக்கும். 

மிதமான சூட்டில் காய்ஞ்சிருக்கும் எண்ணெய்ல போட்டு பொரிச்செடுக்கனும்.
மொறுமொறுன்னு காலிஃபிளவர் 65 ரெடி. மாலை நேரத்து மழைக்கு இதமா காஃபிக்கு ஏத்த சரியான சைட் டிஷ் இது.

நன்றியுடன்,
ராஜி

13 comments:

  1. பஞ்சாபிகள் இதை தினமும் உபயோகிப்பார்கள் நான் அவர்களது சமையலை விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்குதான் ஒருவேளை சோறு பொங்கி போட ஆளில்லை.

      Delete
    2. ஏன்... மாமா என்ன செய்யிறாரு...?

      Delete
    3. உடன்பொறப்புகள்லாம் சரியா இருந்தா எனக்கு ஏன் இந்த கதி?! சட்டைய பிடிச்சு கேட்டால்தானே?!

      Delete
  2. அடடே... இப்பவே சாப்பிடணும் போல இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. மழைக்கால மாலை நேரத்துக்கு ஏத்தது

      Delete
  3. Replies
    1. நன்றி நன்றிண்ணே

      Delete
  4. சமையல் குறிப்பை அப்படியே காணொளியாக செய்து யூடியூபில் வெளியிடுங்கள்.

    வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா
    https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html
    #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. ஆசைதான். ஆனாப்பாருங்க, விடியோ எடுக்க இன்னொரு ஆள் வேணும். எங்க வீட்டில் யாரையாவது கூப்பிட்டா திட்டு விழும். பிளாக் எழுதுறதே வெட்டி வேலைன்னு சொல்லிக்கிட்டு இருக்குதுங்க.

      Delete
  5. படம் பார்த்ததும் சாப்பிட தோணுதே... அடடே... ஆச்சர்யக்குறி.

    ReplyDelete
  6. முக்கியமான விஷயத்தைப் பார்த்துட்டேன். காலிஃப்ளவரை குண்டா இருக்கறவங்க அதிகமா சாப்பிடக்கூடாதுன்னு.....

    காணொளிலாம் எடுக்காதீங்க. நிறைய பேருக்கு காணொளியும் எடுக்கத் தெரியலை (சமையல் செய்முறைக்கு). அதுல என்ன என்ன வேணும் என்பதுகூட போடறதில்லை. இன்று சில படங்கள் (கடைசி படமும்தான்) தெளிவா வரலை. நான் பொதுவா இரண்டு இரண்டு முறை படம் எடுப்பேன். சூடாக இருந்தால், ஊதிவிட்டு படம் எடுப்பேன். இல்லைனா, படம் தெளிவா இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. காலிஃப்ளவரை குண்டா இருக்கறவங்க அதிகமா சாப்பிடக்கூடாதுன்னு.....
      /////////
      இதுல எதாவது உள்குத்து இருக்கா சகோ?!

      யூட்யூப்ல பதிவு போடும் ஐடியாவே இல்ல சகோ. என் சமையல் நேரம்லாம் காலையும், இரவும்தான். ஒரே நேரத்தில் ரெண்டு மூணு சமையல் நடக்கும்போது படமெடுக்குறதால சரியா கவனிக்கல.

      Delete