நீங்க எத்தினியோ டெஸ்ட்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது, அது போலலாம் இல்லாம வேற மாதிரி டெஸ்ட். நான் சொல்லும் பழங்களிலிருந்து ஒண்ணு சொல்லுங்க நான் உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன். இதுல கண்கட்டு வித்தைலாம் ஏதுமில்லை. 100% கரெக்ட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க. கடைசில இந்த ஜோதிடம் உண்மைதான்னு நீங்களே ஒத்துக்குவீங்க.
இப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்க்கிட்டு இருக்கீங்க. அப்டி போகும்போது ஒரு ஆறு (six இல்ல ... நதி அல்லது ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை இருக்கு. அந்த குடிசைக்குள்ள நீங்க போறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டில் இருக்கு. வலது பக்கம் ஒரு டேபிள், அதை சுத்தி ஆறு சேர் போட்டிருக்கு. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் இருக்கு.
2) பலாப்பழம்
3) மாம்பழம்
4) கொய்யாப் பழம்
5) அன்னாசிப் பழம்
இப்போ மேட்டர் இன்னானா இந்த அஞ்சு பழத்துல நீங்க எந்த பழத்தை எடுத்துப்பீங்க? நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப தெரிஞ்சுடும்! அதனால ரொம்ப யோசிச்சு கவனமா பழத்தை தேர்ந்தெடுங்க.
எந்த பழம்? முடிவு பண்ணிட்டீங்களா?
மொதல்லயே சொல்லிகிறேன் இது 100% சரியா வொர்க் பண்ணும், ஜாக்கிரதையா, நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க...
ஓக்கே? யோசிங்க......
முடிவு பணணிட்டீங்களா?
அப்புறம் மாத்தக் கூடாது, சொல்லிட்டேன்...!
உங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுடும், நியாபகம் இருக்குல்ல?
எவ்ளோ நேரம்? ட்க்குனு முடிவு பண்ணுங்க (வேணுன்னா லிஸ்ட ஒரு தபா பாத்துக்கங்க).
ஆச்சா?
இப்போ...டெஸ்ட் ரிஸ்ல்ட்ட பாக்கலாமா?
...
...
...
விடைகள்:
1) நீங்க வாழைப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு வாழைப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.
2) நீங்க பலாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு பலாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.
3) நீங்க மாம்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு மாம்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.
4) நீங்க கொய்யாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.
5) நீங்க அன்னாசிப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு அன்னாசிப்ப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.
இன்னா 100% கரீட்டா இருந்திச்சா? அதான் நான் மொதல்லயே சொன்னேன்... நம்ப மாட்டேன்னுடீங்க.
டிஸ்கி: போன பதிவில் கேட்க்கப்பட்ட

டிஸ்கி: போன பதிவில் கேட்க்கப்பட்ட
யார் அந்த சீமாட்டி?
பட்டையை பட்டையை நீக்கி...,
பதினாறு பட்டையை நீக்கி...,
முத்துப்பட்டையை நீக்கி...,
முன்னால் வருவாள் சீமாட்டி...,
அவள் யார்? புதிருக்கான விடை: தாழம்பூ.
நன்றி: ஜோஸ்யம் சொல்றேன்னு மெயில் அனுப்பி கலாய்த்த தோழிக்கு.... 
