Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Sunday, November 12, 2017

ஒரே ஒரு ஊரில்... ஒரே ஒரு ராஜா.... - பாட்டு கேக்குறோமாம்

பொதுவா எனக்கு புதுப்பட பாடல்களை பிடிக்காது. ஆனா, பாகுபலில வரும் ஒரே ஒரு ஊரில்....  பாட்டு கேட்டதும் பிடிக்க ஆரம்பிச்சுது... எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்ச மயில் கழுத்து கலர் சேலைல  அழகான அனுஷ்கா... அவங்களுக்கு பொருத்தமான பிரபாஸ்.... ரெண்டு பேருக்கும் உயரம், நிறம் அத்தனை பொருத்தம். அவங்களுக்குள்   அழகான காதல் கெமிஸ்ட்ரி படம் முழுக்க இருக்கும்....  அவங்க  காதலுக்கு பஞ்ச பூதங்களே சாட்சின்னு சொல்றதுக்கு ஏத்த மாதிரி இந்த பாட்டுல காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்புன்னு அழகா காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.  எனக்கு பிடிச்ச பாட்டை நீங்களும் கேளுங்க.. பாருங்க.
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா   
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா

ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா


ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா?!

ஓரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவானா?!

வா என்று கட்டளையிட்டானா?!
முத்தத்தில் கை விலங்கிட்டானா?!
கைதாகினாள் தேவசேனா!!..சேனா...


நான நான நானா...
ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா

ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா?!

ஓரே ஓர் ஆற்றில்
ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவானா?!

என் நெஞ்சில் அம்பு எய்கிறானா?!
கண் இன்றி நானும் செல்கிறேனா?!
பேச்சின்றியே தேவசேனா... சேனா...

ஒரே ஒரு ஊரில்..
ஒரே ஒரு ராஜா...

நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா   
நானா நானா நானா நானா நானா   
நான நான நான நான நான நானா



படம் ; பாகுபலி 2
இசை : M. M. கீரவாணி
எழுதியவர்: மதன் கார்க்கி
நடிப்பு: பிரபாஸ், அனுஷ்கா
பாடியவர்கள்: மோஹனா, தீபு
பாடல் லிங்க்: https://www.youtube.com/watch?v=-PFTaQJhLTY
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி

Sunday, June 11, 2017

இவரா நடித்தார்ன்னு ஆச்சர்யப்பட வைத்த பாடல்கள்

சில பாடல்களை நாம விரும்பி கேப்போம். அது யார் நடிச்சது?! என்ன படம்?! எப்படி படமாக்கியிருக்காங்க?! யார் பாடினது?! இசை, எழுதினதுன்னு ஒரு தகவலும் தெரியாது. அடிக்கடி மனசுக்குள் கேக்கும்போது பாட்டு பத்திய கற்பனை பறக்கும். இவர் நடிச்சிருப்பாரா?! பாட்டு அப்படி இருக்குமான்னு.. என்னிக்காவது திடீர்ன்னு இந்த பாடலை பார்க்க நேரும்போது அட, இவரா நடிச்சிருக்காரு?!ன்னு ஆச்சர்யப்படுவோம். அப்படி ஆச்சர்யப்பட வைத்த பாடல்களின் லிங்க் சிலது.....


இந்த லிங்க்ல இருக்கும் பாட்டு செமயா இருக்கும். இரவு பயணங்களை அழகாக்குவதில் இந்த பாடலுக்கும் இடமுண்டு.. இப்பத்திய சூரியன் எஃப்.எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எஃப். எம்லலாம் இந்த பாட்டு அடிக்கடி ஒலிக்கும். ஆனா, யார் நடிச்சதுன்னு தெரியாது.  ரொம்ப நாள் வரை இந்த பாடல்ல மோகன் இல்லன்னா கார்த்திக்தான் நடிச்சிருப்பாங்கன்னு நினைச்சிருந்தேன்.  ஒரு வலைப்பூவில்தான் இந்த பாட்டுல விஜயகாந்த் நடிச்சிருக்கார்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்...
இதே விஜயகாந்த் நடிச்ச தூரத்து இடிமுழக்கம் படத்துல வரும் பாடலும் அப்படிதான். பாட்டு மனசை துள்ள செய்யும். கேக்கும்போதே மனசு குஷியாகும். அதே பாட்டு சோகமாவும் வரும்... அந்த பாட்டை படமா பார்த்தபின் இதுல விஜயகாந்தா நடிச்சிருக்கார்ன்னு ஆச்சர்யப்பட்டு நிக்கும்போதே அதே பாட்டோட சோக வர்ஷன்ல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் நடிச்சிருப்பார்...’

இது விஜயகாந்த் நடிச்சதோட லிங்க்
இது பீலி சிவம் நடிச்ச பாட்டோட லிங்க்
மீண்டும் ஒரு காதல் கதைன்னு பிரதாப் போத்தனும், ராதிகாவும் நடிச்ச படம். பார்க்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுமை அவசியம். அந்த படத்துல அட்டகாசமான பாட்டு... இவரை போட்டு சொதப்பிட்டாங்களேன்னு வருத்தப்பட வச்ச பாட்டு.. அதிகாலை நேரமே...
வில்லன் நடிகர்  சரண்ராஜ்  நடிச்ச நான் சொல்வதே சட்டம் படத்துலயும் அட்டகாசமான பாட்டு... அதிகாலை கனவில் உன்னை பார்த்தேன்... பாட்டோட லிங்க்
கிராமத்து அத்தியாயம் படத்துல ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குதுன்னு மனசை துள்ளாட்டம் போட வைக்கும் பாட்டு. பாட்டை எப்ப கேட்டாலும் புது குஷி பிறக்கும். பாட்டும் இசையும்  செமயா இருக்கும். ஆனா யார் நடிச்சதுன்னு தெரியாது..  
எச்சில் இரவுகள்ன்ற படத்துல பூமீது வீசும் பூங்காற்றே.. என்மேல் வீசக்கூடாதா?! பாட்டும் ஹிட்டடிச்சிருக்க வேண்டிய பாட்டு..  ஏனோ ஹிட்டடிக்கல...
இனி சினிமா பதிவுகளும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி.