Showing posts with label சம்பள நாள். Show all posts
Showing posts with label சம்பள நாள். Show all posts

Tuesday, April 10, 2012

சம்பள நாளில் கணவன்மார்கள் படும் பாடு...,

                                   

                                    
  (யோவ், இன்னிக்கு சம்பள நாள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கு மரியாதையா கார்டு எங்கே வச்சிருக்கேன்னு சொல்லு)


                                    


 (இப்போ எங்க வச்சிருக்கேன்னு சொல்ல போறியா இல்ல, பூரிக்கட்டையாலயே வாங்க போறியா?!  ஏய், விடுடி...,  கார்டை  உங்கிட்ட குடுத்தா நீ கண்டதையும் வாங்கி காசை கரியாக்குவே...,) 
                                     
                                        

(யோவ், நல்ல புள்ளையா நீயே காசு குடுத்தியானா உன் உடம்பு புண்ணாகுறது மிச்சமாகும். இல்லாட்டி கை போகுமோ? கால் போகுமோ?! நான் கியாரண்டி இல்ல....)
                                    
                                   

 (மயிலே! மயிலே!ன்னா இறகு போடாது. நாமதான் இறகை புடுங்கனும். உனக்குலாம் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா சரிப்பாடாது. வச்சு நாலு இழுப்பு இழுத்தாதான் சரிப்படுவே....)
                                                                
                                                   
( நீயே கார்டு குத்திருந்தா உடம்பை அனாவசியமா புண்ணாக்கிக்கிட்டு இருக்க வேணாமே?! இந்தா நூறு ருபா. கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல போய் கட்டு  போட்டுக்கிட்டு ஒரு குவார்ட்டரும், சிக்கன் பிரியாணியும் சாப்பிட்டு தூங்கு. நான் ஷாப்பிங்க் போய் வரேன். குட் பை ஹனி.இச்ச்ச்..)
                                    
டிஸ்கி: படங்களை இங்கிருந்துதான் சுட்டேன்..,