Showing posts with label நேசம். Show all posts
Showing posts with label நேசம். Show all posts

Monday, July 22, 2013

திறக்காத காட்டுக்குள்ளே...,

           
 உன்னோடு கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையாடுவதற்காக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே பாடலை
ஒன்றுக்கு பத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுதாவது
உனக்கு தெரிகிறதா ?

இல்லை ...,
அவை எல்லாம்
ஆள்நடமாட்டமில்லாத காட்டில்
கொட்டும் அருவியை போல்
பயனற்றதாய் போய்விட்டதா?

Monday, September 06, 2010

நேசம்

உன்னை-நான்
நேசிக்கும் அளவு
என்னை-நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை-வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை நீ நேசிக்க மாட்டாயா?