Showing posts with label மொபைல். Show all posts
Showing posts with label மொபைல். Show all posts

Monday, June 12, 2017

விளக்கேற்ற அவசியம் பெண்தான் வேணுமா?! - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! மணி ஆறாகிட்டுது பாரு. இன்னும் விளக்கேத்தலையா?!  
ஒரு நாளைக்கு விளக்கேத்தலைன்னா ஒன்னும் குடி முழுகிடாது. கொஞ்சம் அமைதியா இருங்க..

அப்படிலாம் சொல்லக்கூடாது புள்ள. வீட்டுக்கு விளக்கேத்துறது வெளிச்சத்துக்காக மட்டுமில்ல. லட்சுமி கடாட்சத்தை வரவைக்கவும்தான் விளக்கேத்துது. காலையும் மாலையும் விளக்கேத்தி இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டு வேலையை தொடரும்போது மனசுக்கு ஒருவித உற்சாகம் பிறக்கும். உத்வேகமும் பிறக்கும்.     எல்லா இறைவனையும் அக்னியில் வரவைக்க முடியும். அதனாலதான் முனிவர்கள் யாகம், ஹோமம் வளர்த்தி இறைவனை வழிப்பட்டனர்.  அதையேதான் அன்றாட வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி எளிமையா விளக்கேத்துறதுன்னு கொண்டு வந்திருக்காங்க. இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. காஸ்மிக் பவர்ன்னு சொல்ற பிரபஞ்ச சக்தியை பெற்றுத்தரும் ஆண்டனா மாதிரி விளக்கு செயல்படுது.
விளக்கின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். அதனால, விளக்கேற்றுவதால் முப்பெரும்தேவியரின் அருளை பெறலாம்.    தினமும் விளக்கேற்றி வழிப்படும் வீட்டில் தெய்வபலம் பெருகும், தீயசக்திகள், தீயவினைகள், திருஷ்டிகள் அண்டாது. வெள்ளிக்கிழமைகளில் வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அவ்விளக்கை வீட்டுக்குள் கொண்டு வரும்போது கூடவே மகாலட்சுமி வருவதாய் சொல்லப்படுது. காலை, மாலைன்னு விளக்கேத்துறது எல்லா நலனையும் நமக்கு கிடைக்கும். ஏற்றிய விளக்கு எண்ணெய் இல்லாமல் தீர்ந்து தானாய் அணையக்கூடாது. பூவினைக்கொண்டு விளக்கின் திரியை எண்ணெயில் இழுத்து அணைக்க வேண்டும். பூ இல்லன்னா ஊதுவத்தி குச்சி கொண்டும் அணைக்கலாம்.
கைகளை வீசியும், வாயால் ஊதியும் விளக்கை அணைக்கக்கூடாது, விளக்குன்னு இல்ல மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, கற்பூரம்ன்னு எதையும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது, இதுக்கு காரணம் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயமாகிய பஞ்சபூதங்களை நாம் வணங்குகின்றோம். அதனால ஒன்றைக்கொண்டு மற்றொன்றை அணைக்கக்கூடாது. விளக்கேற்றுவதையும், குளிர்விப்பதையும் பெண்கள்தான் செய்யனும். ஆண்கள் செய்யக்கூடாது.  காரணம் முப்பெரும் தேவியர்கள் வாசம் செய்யும் திருவிளக்கானது அவர்களின் உடலுக்கு ஒப்பானது. அதை ஆண்கள் தொடலாமோ?! அதான் காரணம். அப்ப கோவில்ல சிலைக்கு ஆண்கள் பூஜை, அபிஷேகம்லாம் செய்றாங்களேன்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்கக்கூடாது. 
விளக்கேத்துறதுல இத்தனை விசயமிருக்கா?! இனி இரண்டு வேளையும் சாமி விளக்கேத்துறேன்.   என் போன் தண்ணில விழுந்துடுச்சு மாமா. கடையில் கொண்டு போய் கொடுத்துட்டு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வர்றீகளா?!  

மொபைல் தண்ணில விழுந்திட்டாலோ இல்ல மழையில நனைஞ்சுட்டாலோ போனை முதல்ல ஆஃப் பண்ணனும். இல்லன்னா உள்ளுக்குள் ஷார்ட் சர்க்யூட் ஆகி வெடிக்க வாய்ப்புண்டு.  ஒருசில மொபைல் கம்பெனி போன்ல பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதில் வெள்ளை கலர்ல  வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். நீரில் மூழ்கும்போது இது சிவப்பு கலராகிடும். இத பார்த்துக்கூட மொபைல்ல தண்ணி இறங்கியிருக்கான்னு பார்த்து தெரிஞ்சுக்கலாம்.  ,மொபைலை ஆஃப் பண்ணதும் மொபைல் கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரிகார்டுன்னு அத்தனையையும் கழட்டி சுத்தமான துணியால தொடைச்சு ஈரத்தை எடுக்கனும்.
சிம்ல தண்ணி புகாது அதனால அதை வேற மொபைல்ல யூஸ் பண்ணிக்கலாம் அப்பதா சிம்ல இருக்கும் காண்டாக்ட், மெசேஜ்லாம் டெலிட் ஆகாம பார்த்துக்க முடியும்.   மொபைல்ல இருக்கும் தண்ணிய வெளில எடுக்குறேன்னு மொபைல குலுக்க கூடாது. இதனால டிஸ்ப்ளேவுக்குள்ளும் தண்ணி போக வாய்ப்பிருக்கு. தண்ணி உறியுற காட்டன் துணியால தொடைச்சா போதும்.  இப்படி தொடைச்சுட்டு வெயில் இல்ல காத்து படும்படி மொபைலையும், அதோட எல்லா ஸ்பார்ட்சையும் உலர  
வைக்கனும்.  காய வைக்குறேன்னு ஹேர் ட்ரையர், அடுப்புக்கிட்டன்னு கொண்டு போகக்கூடாது.  அரிசி டப்பாவுல மொபைலை போட்டு இறுக்கமா கொஞ்ச நேரத்துக்கு மூடி வைங்க. அரிசி மொபைல இருக்கும் தண்ணியை இழுத்துடும். அப்புறம் சுத்தமா துடைச்சுட்டு  எல்லா ஸ்பார்ட்டையும் பூட்டி பாருங்க. மொபைல் ஆன் ஆகிடும். அப்படியும் ஆகலைன்னா சினிமாவுல வரும் டாக்டர் சொல்லுற மாதிரி எதும் நம்ம கையில் இல்லன்னு மேல விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட்டுக்கிட்டு சர்வீஸ் செண்டருக்கு கொண்டு போய் கொடுக்கனும்..
சரி, சரி ரெண்டு மார்க் கேள்விக்கு பத்து மார்க் அளவுக்கு பேசி சாவடிக்காதீங்க. இந்தாங்க இந்த மொபைலை நீங்க சொன்ன மாதிரி கழட்டி அரிசி பானைல  வைங்க..

ஏண்டி ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி வேலை வாங்குவியா?!

ம்க்கும் ஒரு பேச்சுக்கு சொன்னேன், ரெண்டு பேச்சுக்கு சொன்னேன்ற கதைலாம் இங்கிட்டு நடக்காது. வெற்றி கொடி கட்டு படத்துல பார்த்தீபன் ஜஸ்ட் லைக் தட்டுன்னு சொல்லிட்டு போன விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோட், துபாய்ன்ற அட்ரசையே நம்மாளுங்க கண்டுப்பிடுச்சிருக்காங்க . இந்த படத்தை பாருங்க...

அடப்பாவிகளா!  இனி சும்மானாச்சுக்கும் கூட எதும் சொல்ல முடியாது போலிருக்கே.  சும்மா ஒப்புக்குலாம் சொல்லக்கூடாது. சொன்னா சொன்ன சொல்லை காப்பத்தனும் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் போல. 

அவர் என்ன பண்ணாரு?!
கரகாட்டக்காரன் படத்துல ஊரு விட்டு ஊரு வந்துன்னு ஒரு பாட்டு வரும். ராமராஜனை கிண்டல் செஞ்சு கவுண்டமணி பாடுற மாதிரியும், அவருக்கு ராமராஜன் மாதிரி சொல்லுற மாதிரியும் வரும் பாட்டு இது.  கவுண்டமணிக்காக பாட மலேசியா வாசுதேவனை செலக்ட் பண்ணியாச்சு. ராமராஜனுக்காக குரல் கொடுக்க எஸ்.பி.பி, மனோன்னு எத்தனை பேரை யோசிச்சாலும் ஜோடிக்குரலா செட்டாகல. அதனால, ஒரு பேச்சுக்கு கங்கை அமரன்கிட்ட , மலேசியா வாசுதேவன்க சொன்னாராம்... ஏய்யா பேசாம நானே ரெண்டு குரல்லயும் பாடிர்றேனே! பேமெண்ட் அதிகமா கிடைக்கும்ன்னு கிண்டலடிக்க, உன்னால முடியுமான்னு பேசி ரெண்டு விதமா மலேசியா வாசுதேவன் பாடி பட்டி தொட்டிலாம் ஒலிச்ச பாட்டுதான் ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் செய்யாதீகன்ற பாட்டு.... 

தெரிஞ்சுக்கிட்டேன்... நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு பார்ப்போம்.. மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்?! நீ யோசிச்சிக்கிட்டே இரு. நான் மொபைல் என்னாச்சுன்னு பார்க்குறேன்..

தமிழ்மணம் ஓட்டு பட்டை தெரியாதவங்களுக்காக.....
Annam Kuthuvilakku coated in 24 Karat Gold:
நன்றியுடன்,
ராஜி.

Monday, April 17, 2017

தீரன் சின்னமலை - ஐஞ்சூவை அவியல்

என்ன புள்ள! உம்முன்னு உக்காந்திட்டிருக்கே?!

ரொம்ப நாளாச்சு மாமா நாம உக்காந்து கதைப்பேசி... என்னாச்சு நமக்குள்ள.. இப்பலாம் உனக்கு எம்மேல ஆசையே இல்ல. அப்பிடி ஊர்கதை பேச  மனசு ஏங்குது. அதான். 

அதுவா புள்ள. ஆண்ட்ராய்டு போன் வாங்குனாலும் வாங்குனேன். இந்த மூஞ்சிபுக்கை ஓப்பன் பண்ணதுல அங்கனயே உக்காந்துட்டேன். அப்புறம்  கொஞ்சம் கோவில் குளம்ன்னு போய் வந்தேன். அதான் உன்கிட்ட பேசமுடில. இனி பேசலாம்.

கவனிச்சேன் மாமா. நீ கோவில் குளம்ன்னு சுத்தினதுல எங்க சாமியாரா போயி என்னை மறந்திடுவியோன்னு நினைச்சேன்.  சரி ஸ்மார்ட் போன் வாங்குனியே! அதை எப்படி பத்திரமா பார்த்துக்கனும்ன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது புள்ள. உனக்கு தெரியுமா?! 


சரி நான் சொல்றேன். கேட்டுக்கோ.  மொபைலை வாங்கினதும்  *#06#ன்ற நம்பரை அழுத்தி அது சொல்லும் ஒரு நம்பரை  (International Mobile Equipment Identity no ) டைரில குறிச்சு வச்சுக்கனும்.  மொபைலோட கேரண்டிக்கும், மொபைல் தொலைஞ்சி போய்ட்டாலோ இந்த நம்பர் யூஸ் ஆகும். தொடர்பு எல்லைக்கு வெளியே போய்ட்டா மொபைலை ஆஃப் பண்ணுறது நல்லது. இல்லன்னா பேட்டரி வேஸ்ட்டாகும்.   மொபைல்  லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD)ஐ லேசா தொட்டா போதும். ரொம்ப அழுத்தினா நாளடைவில் ஸ்க்ரீன் பாழாகிடும். மொபைலோடு சில்லறை காசு, வண்டிச்சாவி மாதிரியான பொருட்களை வைக்காதீங்க. ஸ்க்ரீன்ல கீறல் விழும். மொபைலுக்குண்டான பவுச் இல்லன்னா போம் கவர்ல போட்டு வைங்க.  போனில் சிக்னல் குறைவா இருக்கும்போது ரேடியேஷன் அதிகமா இருக்கும். கூடவே பேட்டரியும் அதிகம் செலவாகும். அதனால, சிக்னல் குறைவா இருக்கும்போது பேசுறதை குறைச்சுக்கோங்க.  

ஆத்தாடி இம்புட்டு விசயம் இருக்கா?!

இன்னும் இருக்கு மாமா. சொல்லவா?!

வேணாம்டி.  இதுவே நினைவில் வச்சுக்க முடியாது. இன்னிக்கு யாரோட பொறந்தநாள்ன்னு தெரியுமா?! 

ம்ம்ம் பாய்ஸ், அரண்மனை 2 படத்துலன் நடிச்ச சித்தார்த்தோட பொறந்த நாள். அப்புறம் நம்ம ஸ்பையோட பிறந்த நாள். 
உன் தம்பியோட பொறந்த நாளையும், சினிமாக்காரன் பொறந்தநாளையும் நினைவு வச்சுக்கிட்ட உனக்கு  விடுதலை போருக்கு முதன்முதலாய் வித்திட்ட தீரன் சின்னமலையோட பிறந்தநாளை தெரியலியே!.  தீரன் சின்னமலையோட பேரு தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டர். அப்பா பேரு ரத்னசாமி கவுண்டர், அம்மா பேரு பெரியாத்தா. 1756 ஏப்ரல் மாசம் 17 ந்தேதி ஈரோடு சென்னிமலைல பாளையக்காரர் பரம்பரைல  பிறந்தார்.  சின்ன வயசுலயே மல்யுத்தம், தடி வரிசை, வாள், வேல் போர்ப்பயிற்சி, சிலம்பாட்டம் மாதிரியான் வீரவிளையாட்டுகளை சிவந்தாரையர் என்பவரிடம் கற்று தேர்ந்தார். மைசூர் அரச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த கொங்குநாட்டின் வரிப்பணம் சங்கக்கிரி வழியாக மைசூர் அரண்மனைக்கு சென்றது. வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ’சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி வரிப்பணத்தை  அபகரித்து ஏழை மக்களுக்கு கொடுத்தார்.  அன்றுமுதல் தீர்த்தகிரி சின்னமலையானார்.

The Sepoy Mutiny (1857) was a mistrust and cultural differences between the British and Indians led to violent conflict. Causes: 1. Increase of British power in India 2. A growing distrust of British 3. British disrespect of Indian religions and culture. Effects: End of the Mogul Empire, Beginning of direct British rule in India, and India nationalist movement:
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தபோது அதை தடுக்க விரும்பிய சின்னமலை, கேரளத்திலும் கொங்குநாட்டின் சேலம் பகுதியிலும் கிழக்கிந்திய கம்பெனி வேரூன்ற பெரும் தடையாய் இருந்தார்.  டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும்போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு பெரும் தலைவலியாய் இருந்தார்.
British Bush Fighting on the Cape Frontier:
திப்புசுல்தான் மறைவுக்கு பின், ஆட்களை தேர்ந்தெடுத்து சிவன்மலையில் வைத்து போர்பயிற்சி கொடுத்தார். 1801ல  ஈரோடிலும், 1802 ல ஓடாநிலையிலும், 1804 ல அறிச்சலூர்ல நடப்பெற்ற போர்களில் சின்னமலையே வென்றார்.  கள்ளிக்கோட்டையிலிருந்து பெரும் பீரங்கிப்படையோடு வந்த வெள்ளைக்காரங்களை எதிரித்து நின்றார். ஆனால், போரில் சின்னமலையால் ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்த சுபேதார் வேலப்பன்  சின்னமலையை தப்புவித்து பழனிமலைத்தொடரிலிருக்கும் கருமலைக்கு அனுப்பி வைத்தார்.  நேருக்கு நேர் நின்னு சின்னமலையை ஜெயிக்க முடியாத வெள்ளைக்காரர்கள்  சூழ்ச்சி செஞ்சு பிடிச்சு 1805 ஜூலை 31   சின்னமலையையும், அவரின் தம்பி, படைத்தலைவர்களையும் தூக்குல  போட்டாங்க.

ம்ம்ம் இத்தனை போராடி சுதந்தரம் வாங்கி என்ன பிரயோஜனம் மாமா?! ஊழல், பொய், களவுன்னு நாடு சீரழிஞ்சு போய் கெடக்குதே. 

ம்ம்ம் இந்தமாதிரியான கதையெல்லாம்  பசங்களுக்கு பெரியவங்க நாமதான் சொல்லி புரிய வைக்கனும். அதைவிட்டு எப்பப்பாரு சினிமா, சீரியல், மூஞ்சிப்புக்குன்னு அரட்டைல இருந்தா எப்பிடி புள்ள?!

என்னை மட்டம் தட்டுனது போதும்.  உனக்கு அறிவிருக்குன்னு ஒத்துக்குறேன். இப்ப நான் ஒரு கணக்கு கேக்குறேன். பதில் சொல்லு பார்ப்போம். 0 லிருந்து 9க்குள் ஒரு நம்பர் அதை எட்டு முறை மட்டும் யூஸ் செஞ்சு  கூட்டல் மட்டுமே செஞ்சு 250ன்னு விடை வரனும். எப்பிடின்னு சொல்லு பார்க்கலாம். 

இரு யோசிக்குறேன். அதுக்குள்ள இந்த மீம்சை பார்த்துக்கிட்டிரு. 

சின்ன வயசுல சப்போட்டாவுக்கும் உருளைக்கும் வித்தியாசம் தெரியாது மாமா. சரி.  கணக்குக்கான விடையை யோசிச்சீங்களா?! 

ம்ம்ம் கொஞ்சமிரு. யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்.  உனக்கு முடிக்கொட்டுதுன்னு சொன்னேல்ல. அதுக்கு வேப்பிலை 6, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து அரைச்சு  தலையில் பேக் போட்டு கொஞ்ச நேரம் ஊற வெச்சு அலசு. ஈறு, பேன், பொடுகுலாம் இல்லாம போறதோடு முடியும் உதிராது. அடிக்கடி இப்படி செய்ய முடியாதவங்க சீயக்காய்ல இதுலாம் போட்டும் அரைச்சு வச்சுக்கலாம். 

ஓ. ஆன்சரை சொல்லு மாமா. 

விடமாட்டியே!  222+22+2+2+2 = 250  இதான் ஆன்சர் சரியா?!

உனக்கு எல்லாமே தெரியுது மாமா. யு ஆர் பிரில்லியண்ட்..
..
மீண்டும் வேறு ஒரு பதிவில்  சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்.நன்றியுடன்,
.தேங்க் யூ....  தேங்க் யூ.