* அம்மனுக்கு, பெருமாளுக்கு, பாதாள பைரவிக்குன்னு நேர்ந்துக்கிட்டு அடிக்கடி உண்ணாவிரதமிருக்குறவங்களை ஹோட்டலில் வேலைக்கு வச்சா ஹோட்டல் முதலாளிக்கு நல்ல லாபம்!!
*ரேஷன் கடையில் வேலை பார்க்குறவங்களை எல்லா ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல், காலேஜ்ல குழாய் மெக்கானிக்காக போட்டா நீரை வேஸ்டாக்காம, மண்ணெண்ணெய் போல லிட்டர் கணக்கில் மிச்சப்படுத்தி தருவாங்க!!
* கணக்குக் காட்டாத பைனான்ஸ் கம்பெனி ஆளுங்களை ஓட்டப்பந்தயத்துல சேர்த்துவிட்டா கண்டிப்பா ஒலிம்பிக்கில கோல்ட் மெடல் கிடைக்கும்!!
* மல்லிகைப்பூ வியாபாரிகளை, ஹோட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் காலேஜ் கேண்டீன்ல வேலைக்கு சேர்த்தா காய்ஞ்சுப் போன இட்லியைக் கூட மல்லிகைப்பூ போல பரிமாறி வியாபாரத்தைப் பெருக்கலாம்!!
* போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வெச்சா இன்னும் நிறைய ஆடு, கோழி, மாடு, மீன்லாம் சாகும், அதனால லாபம் கொட்டும்!!
* கிரிக்கெட்டுல பாலை போட்டோமா எதிரியை அவுட் ஆக்குனமான்னு இல்லாம பந்தை உருட்டுறவகளை ஹாக்கி அணியில சேர்க்கலாம்!!
* என்ன சொல்லியும் திருந்தாம அதிகமா சிகரெட் பிடிக்குறவங்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணத்துல வேலைக்கு சேர்க்கரெக்கமெண்டேஷன் பண்ணலாம்.
* குடிச்சுட்டு கண்டபடி உளர்றவங்களை வயல்ல குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைக்கு பதிலா நிக்க வைக்கலாம் (ஆனா, அதுக்கு முன்னாடி வயல்வெளிலாம் எங்கிருக்குன்னு கண்டுப்பிடிக்கனும்..)!!.
* காரணமே இல்லாம அடுத்தவங்க மேல ”வள்.., வள்”ன்னு கோபப்படுபவர்களை ஜூவுல காட்சிப்பொருளாக வெச்சா.., இப்போ இருக்குற பசங்க, குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்ன்னு ஒத்துக்குவாங்க!!
*மத்தவங்க காசை ஆட்டையப்போட்டு வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்களை, ரயில்மறியல் போராட்டத்துல படுக்கவைத்து நூதனமாக தண்டவாளத்துக்கு ஆப்பு வைக்கலாம்!!
* குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்களை டிரைவர் வேலைக்கு வெச்சா, அவங்க குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கு!! கூடவே அவங்க வாரிசுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்பிருக்கு!!
*பிட்பாக்கெட்ஆசாமிங்களை காலேஜ், ஹாஸ்பிட்டல்,ஸ்கூல்ல வாட்ச்மேனாபோட்டா, மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாம ஒரு ரூபா கூட வெளி கேட் தாண்டி போகாது!!
* உடம்பு நல்லா இருந்தும் கண் தெரியலை, காது கேக்கலைன்னு பொய் சொல்லி பிச்சை எடுக்குறவங்களை வச்சு படம் எடுத்தா ஆஸ்கார் நிச்சயம்!!
*குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்ன்னு மிரட்டினா நதிநீர் பிரச்சனையே வராது!!
டிஸ்கி: முகநூல்ல இருந்து சுட்டு பட்டி, டிங்கரிங்க் பார்த்தது.., இப்படி சொல்லாமயே இருப்பேன். ஆனா, கடைசி டிப்சுக்காகதான் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம்!!
