Thursday, September 15, 2011

வைரச்சுரங்கமே மகளாய்....,

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்,ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை,அனுபவித்திருக்கிறேன் பலமுறை....
இதோ ... மீண்டும் மறு ஒளிபரப்பு
பஞ்சுப்பொதியில் சுற்றி, கீழ்க்காணும் மலரின் நிறத்திலிருந்த வைரச்சுரங்கமாம் என் இளைய மகள் "இனியா"வை கைகளில் அள்ளிய திருநாள் இன்று.
                                                  

தூங்கும் முன் கதை கேட்கும் பழக்கம் அவளுக்கு.
அம்மா நான் பொறந்த கதையை சொல்லும்மா.
பன்னீர் ரோஜா கலர், கருப்பு கோலிக்குண்டு கண்ணு,தந்தத்தால செஞ்ச மாதிரி கைக்கால், கிண்கிணி நாதம் போல உன் அழுகை.
அம்மா நான் அழுதேனாம்மா? எப்போ அழுகை நிப்பாட்டினேன்?
அம்மா மூஞ்சியப் பார்த்தே. என் அம்மா நீ இருக்க நான் ஏன் அழுகனும்னு நீ அழுகையை நிப்பாட்டிட்டே.
போம்மா, அப்போ நான் குட்டி பாப்பாதானே எனக்குதான் அப்போ ஒண்ணும் தெரியாதே. நீ குளோசப்ல உன் மூஞ்சியக் காட்டி இருப்பே. நான் பயந்துப் போய் அழுகையை நிப்பாட்டிட்டேன்.
கிர்ர்ர்ர் டமால்

 
    


எல்.கே.ஜி ல சேர்த்த இரண்டாம் நாள்:
ஸ்கூல் விட்டு ஓடிவந்து, ஒரு நோட்டைக் காட்டி இது என்னன்னு கேட்டா?
அவள் நீட்டிய பக்கம் பார்த்த போது..,
நெடுக்குவாக்குல சின்ன சின்ன கோடுகளை நெருக்கமா வரைந்திருந்தா.

என்னம்மா! மழை படம் வரைஞ்சிருக்கியா?
ஐயோ! அம்மா! உனக்கு ஒண்ணுமே தெரியலை, இது மழை இல்லம்மா, ONE.
எங்கே சொல்லு பார்க்கலாம்   O,   N,  E  " ONE"
அவ்வ்வ்வ்வ்வ்வ்

 

குட்டி தேவதைக்கு ஒரு கவிதை:

    உயிர் வலி கண்ட அந்த
    பத்து மணி நேரப் போராட்டம்

    நெஞ்சுக் கூட்டுக்குள் யாரோ
    கை வைத்து அழுத்தியது போன்ற ஒரு வேதனை

    செத்துவிடலாம் என்று தோன்றிய
    அவ நம்பிக்கையின் நிழலுக்கு
    உன் முகம் பார்க்கப் போகும் துடிப்பு ஒன்றே
    ஒளிக் கீற்று..

    உன் அழுகை சத்தம் கேட்ட முதல் நொடி
    பட்ட துன்பமெல்லாம் பட்டென பறந்துப் போக...

    மகளென்னும் தேவதையாய் என் எதிரில் நீ....

    என் பெண்மையை நான் உணர்ந்த இரண்டாவது சந்தர்ப்பம்..

    மன்னித்தலையும்,விட்டுக் கொடுத்தலையும்
    எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசான் நீ..

    எனக்குள் புதைந்துப் போன என் குழந்தைத்தனத்தை
    மீட்டெடுத்த புதையல் நீ...

    என் வாழ்வின் சூர்யோதயம் நீ..

    மனித நேயமும்,உண்மையும்,நெஞ்சுறுதியும் கொண்டு
    வாழ்வின் எல்லா உயரங்களுக்கும் நீ செல்ல
    நீ ஏறும் படிக்கட்டாய்
    நானிருப்பேன்...,

    வாழ்க நீ பல்லாண்டு...

 

Let the God decorate each
golden ray of the sun reaching you
with wishes of success, happiness and prosperity 4 you
wish you a super duper
Happy birthday My Baby..,







   

Wednesday, September 14, 2011

அன்பிற்கினியவர்களுக்கு வாழ்த்து...,


 அம்மாவின் முகத்தை பார்த்தே,  அம்மா மனதில் இருப்பதை அப்பா புரிந்து கொள்வார்.அப்பா வாய்விட்டு சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகவே செய்து பழக்கப்பட்ட‌ அம்மா! ஆனாலும், இதுவரை தவறியும்  அப்பாவுக்கு பிடிக்காததை,  அம்மா செய்ததாக சரித்திரமில்லை. அற்ப விஷயத்துக்காக பனிப்போர் நடந்து ரெண்டுப் பேரும் பேசாமலிருப்பாங்க. அப்போ எனக்கு கிடைக்கும் அன்பு, பாராட்டு, எல்லாம் அடடா! அந்த சில நிமிடங்கள் சொர்க்கம். வேணுமின்னே அடுத்தவங்களை வெறுப்பேத்த, ராஜி போல தோசை ஊத்தவும், காஃபி போடவும் யாரால முடியும்ன்னு அப்பாவும், ஷாப்பிங்க் போனால், ராஜியோடதான் போகனும் பொறுமையா எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் வாங்குவான்னு அம்மாவும் பெருமை பேசுவாங்க.

ஆகா! இன்ன்னிக்கு நமக்கு கிடைச்சதுடா லக்கி பிரைஸ்ன்னு அந்த சண்டையில குளிர் காயலாம்ன்னு நினைச்சுக்கிட்டு உள்ள போனால்,எனக்கே தெரியாம ரெண்டு பேரும் சமாதான உடன் படிக்கைக்கு வந்து என்னை, திட்டி திக்கு முக்காட வைப்பாங்க.

தோசை ஊத்துறாளாம் தோசை, பேப்பராட்டம் மெல்லிசா,  கருக வச்சி, காஃபில‌ சர்க்கரையை கொட்டி..., உன்னை யாரு சமையலுக்குலாம் போக சொன்னதுன்னு அப்பாவும்(அந்த கருகிப்போன தோசையே ஏழெட்டு உள்ள போயி, இன்னும் ஜீரணம் கூட ஆகாம இருக்கு அதுக்குள்ள இந்த பேச்சு).

காய்கறி வாங்கி வர சொல்லி அனுப்பினேங்க. இங்க பாருங்க, காய்ஞ்சுப்போன கத்தரிக்காய், முத்திப்போன முள்ளங்கி, வாடிப்போன வெண்டைக்காயெல்லாம் வாங்கி வந்திருக்கான்னு  சொல்லுவாங்க( அப்போ அந்த காய்கறிலாம் நாங்க பாட்டுக்கு எங்க உறவினர்களுடன் மார்க்கெட்டுல இருந்திருப்போம். இங்க கூட்டிட்டு வந்தியே உனக்கிது தேவைதான்னு கேலி செய்ற மாதிரியே இருக்கும்.)

எனக்கு பாராட்டு கிடைக்கனும்ங்குறதுக்காகவே அவங்க சண்டைப் போட்டுக்கிடனும்னு சாமியை வேண்டிக்கிட்ட நாட்கள்   உண்டு. அது விவரம் தெரியாத நாட்கள். ஆனால், இப்போதோ நிலைமை வேறு. முப்பத்தேழு ஆண்டுகள் கடந்தப் பின்னும் மாறாத காதலோடு இருக்கும் அவங்களை பார்த்து சற்று பொறாமை கூட படுவதுண்டு. அப்பேற்பட்ட இளஞ்சோடிகளுக்கு இன்று திருமண நாள். அவர்களை வாழ்த்த வயதில்லை. எனவே, வணங்கி அவர்கள் பாதங்களில் என் வாழ்த்துக்களை ஒரு கவிதையில் சமர்ப்பிக்கிறேன்.
                                                               

இணைந்தே இல்லறத்தின் இலக்கணம் வென்ற
இரு மனங்களின் இன்ப உலா இன்று
இங்கண்
இதயம் மலர வாழ்த்துப் பூக்கள் வெற்றித் தம்பதியர்களுக்கு
இக்கவிதை மலர்கள் சமர்ப்பணம்...,

 


மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....

இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!

இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க வேண்டுமென
அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே வாழ்த்துகின்றேன்!!!!!
வாழ்க நீவிர் பல்லாண்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி: கடல்கள் பல கடந்து நியூசிலாந்த் பறவையாய் மாறிப்போன‌  தோழி மாலதிக்கும் இன்றுதான் "பிறந்த நாள்". என்ன தவறு நான் செய்தாலும், கண்டித்து, தண்டிக்காமல் மன்னிக்கும் தாயுள்ளம் கொண்டவள்.


தோழி, உன்னை கண்டு தழுவி பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்னால் இயலவில்லை. துக்கம் தொண்டையை முட்டுகிறது. இருக்காதா பின்னெ ஒரு "டிரீட் போச்சே" அவ்வ்வ்வ்வ்வ்.


இப்படி எகனை மொகனையா சிந்திக்குறதே நமக்கு வாடிக்கைதானே,

"சாரி" என்பதற்கு பதில்  "எல்லாம் உன்னாலேதான் லூசே"ன்னும்,
வெற்றிக்கு வாழ்த்துவதற்கு பதில்  "டிரீட் எப்போ" என்றும்,
வீட்டு விசேஷத்துக்கு வான்னு சொல்லாம, "ரொம்ப அலட்டிக்காம வந்து சேரு. இல்லாட்டி கொன்னேப்புடுவேன்"ன்னும்
" Get well soon" ன்னு  சொல்லாம, "ஓவர் சீன் போட்டா, இப்படித்தன் கடவுள் ஆப்பு வைப்பார்ன்னும் சொல்லும் பிரஸ்கபதிகளாச்சே நாம.

இந்த பிரிவிற்காக கலங்குவோம். ம்ஹும், டிரீட்டுக்குதான் கலங்குவோம். பார்சலயாவது அனுப்பு உன் டிரீட்டை.
Wish You Many More Happy Returns Of The Day My Dear Friend

ரெண்டாவது டிஸ்கி: என் வாழ்வில் முக்கியமான‌ தினம் நாளைக்கு(என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்). அதுக்கும் பதிவு உண்டு நாளைக்கும் அவசியம் வந்துடுங்க.


 


Tuesday, August 30, 2011

வெற்றி நிச்சயம் எனக்கே..., அதுல உனக்கென்ன சந்தேகம்?

என் நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் சில  புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது  கூடவே என் இளைய மகள் இனியாவும் பார்த்து கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் எதாவது அதற்கு பொருந்துமாறு கமெண்டிக் கொண்டிருந்தாள். அப்புகைப்படமும், அவள் கமெண்டும் சேர்ந்து, இந்த பதிவு...,  


 
(குளிருது.., குளிருது....,)


(ஹலோ, ஐயாம் கமிங் ஃப்ரம் சைனா.)

 
(நிலவில் முதல் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் நாந்தானுங்கோ ) 
    (வெற்றி நிச்சயம் எனக்கே...,)

 (தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா.., நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...,)
 
(hai, Mcdonald Welcomes U ) 
(பல்லவா! என்னை வெல்லவா!..,)
 
(பூந்தோட்ட காவல்காரன்..)
 
(கல்யாண  சீசன் இது.  ஓசி சாப்பாடு சாப்பிட்டு,  சாப்பிட்டு நான் இப்படி ஆகிட்டேன். அவ்வவ்வ்வ்வ். ..,)
 
(ராஜியோட பதிவிலலாம்  என் போட்டோ  வருதே! அதுக்கு பதிலா  நான் தூக்குலே தொங்கிடுறேன்...,)


 (ஷ் ஷ் அப்பாடா. தொடர்ந்து ரெண்டு நாள் லீவ்  வருது ! ரெண்டு நாள் நிம்மதியா ரெஸ்ட்  எடுக்கலாம்) 


(மாப்பு..., வச்சுட்டான்யா ஆப்பு..,)
  (டேய்  யாருடா அது?அங்க திருட்டு தம்மடிக்குறது?)

(அய்யய்யோ! தெரியாம   ராஜி பதிவை படிச்சுட்டேனே! ஸ்பைடர் மேன் என்னை காப்பாத்து....., ஃப்ளீஸ் )




 ( கஸ்தூரில நம்ம   கஸ்தூரி படுற பாடு இருக்கே. பாவ‌ம்டி அவ .
ஆமாம்க்கா. எனக்கும் அவளை நினைச்சா.., அழுகையா வருது..,)



  ( ஒளியிலே தெரிவது தேவதையா? ..., உயிரிலே கலந்தது நீயில்லையா?) 


 (கண்கள் இரண்டால்.., உன் கண்கள் இரண்டால்...,)
 
    (கண்ணா! பன்னிங்கதான் கூட்டமா இருக்கும். சிங்கம், எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும்.)


 (நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ..,)
 
(குடி குடியை கெடுக்கும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்...  )
கழுதைப் பாலில் குளித்தால்.., கிளியோபாட்ரா போல அழகாயிடலாம்னு புக்ல படிச்சேன். அதான் இப்படி பாலில் குளிக்குறேன் ஹி ஹி..,)


Wednesday, August 24, 2011

கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..




நீ என்னை பிரிந்துவிட்டாய்
என்று தெரிந்த பின்னும்
உயிருடன் இருக்கிறேன் நான்..

உன்னுடன்தான் வாழ முடியவில்லை..
உன் நினைவுகளை சுமந்து கொண்டு வாழலாம் என்று..

பிரிவு,  சுமையாக இருந்தாலும்!..
அதுவும் சுகம்தான்..
சுமையை தந்தவன்  நீ என்பதால்..
உன்னுடன் எப்படி வாழலாம் என்று
கனா கண்டேன் அன்று..

அது முடியும் முன்னே முடிந்து போனது
காதல் கனா இன்று..

இறைவனின் சதியா?? - இல்லை
இது தான் விதியா??

விதியை மாற்றிட.. வழி தேடும் மதியா??
இறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா?

வாழ்வே கனவாகி போனதால்..
கனவாய் தொடர்கிறேன் வாழ்க்கையை..

Tuesday, August 02, 2011

பிரபல பதிவர்களின் கிடைத்தற்கரிய சிறு வயது புகைப்படம்



 விளையும் பயிர் முளையிலேயே தெரியும் னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அந்த பழமொழி  உண்மைன்னா நம்ம சகப் பதிவர்களெல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.


 
 இது யாருன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.    பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். தம்பி   சிரிப்பு போலீஸ் ரமேஷ்தான் இது.

  
 இதுகத்தி, அருவா, பிச்சுவாக்கத்தி, பிளேடுன்னு கமென்ட் போடுற சகோதரர்  
 நாஞ்சில் மனோதான் இது. 

 
வியட்நாம் போர், நான் இந்தியா பார்டர்ல இருந்துக்கிட்டு இந்தியாவிற்காக போரிட்டவன்  என பதிவுகளில் சொல்லும் விக்கியின் அகட விகடங்கள்!சகோதரர்  விக்கி அவர்கள் 
தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த சினிமா எடுக்கப் போறேன்னு  சொல்லி, ஒரு மொக்கைப் படம் கூட விடாமல் பார்த்து  விமர்சனம் போடும்
அட்ரா சக்கை சிபிசார்தான். 
 
சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!னு சொல்லி சொல்லியே, தான் வாங்குன பல்பையெல்லாம் பதிவா போட்டு நம்மளை சோகத்துல ஆழ்த்துற
 
கோகுலத்தில் சூரியன் வெங்கட் சார்தான் இது

(என்னடா வெங்கட் சார் போட்டோ காணோமேன்னு பார்க்குறீங்களா? அது ஒண்ணுமில்லை வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க?!  கண்ணுங்களுக்கு மட்டும்தான் தெரிவார்)