பழமையின் முடிவையும், புதுமையின் ஆழம்பத்தினையும் கண்டு களித்த மத்திய வயதுடையவர்களின் நினைவுகளை கிளறி விடும் சிறு முயற்சியே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...
Saturday, June 27, 2020
Friday, June 26, 2020
அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.
லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும் சும்மா இருக்காது. பதிவாக்காக எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது. சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.
Thursday, June 25, 2020
க்ராஸ் கட் மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்
கொரோனா வந்தாலும் வந்தது, விடிஞ்ச பிறகு எழுந்து , எட்டு மணிக்கு காபி குடிச்சு, பத்து மணிக்கு டிபன் சாப்பிட்டு என வாழ்க்கை முறையே மாறிட்டுது... சோம்பேறித்தனம் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சிருக்கு. ஒரு வாரத்தில் முடிக்கும் 2 ரோல் ஒயர் கூடையை பின்னி முடிக்க ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. கூடை பின்னி ஒரு கைப்பிடியும் போட்டு வச்சு 21 நாள் ஆச்சு. பதிவு போடனுமேன்னுதான் இப்பயும் முடிச்சேன். இல்லன்னா, அதுவும் முடிச்சு இருக்க மாட்டேன்.
Wednesday, June 24, 2020
ராமனின் பெண்பால்தான் இந்த மணிமேகலை - வெளிச்சத்தின் பின்னே...
சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்ன்னு கேட்டா யாரை சொல்வீங்க? மாதவியிடமும், பிறகு எமனிடமும் கணவனை பறிகொடுத்த கண்ணகியையா?! தாசிக்குலத்தில் பிறந்து கற்பு நெறியோடு வாழ்ந்தாலும் சந்தேகம் கொண்ட கோவலனால் கைவிடப்பட்ட மாதவியையா?! ரெண்டு பெண்களோடும் வாழ்ந்து, பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டுண்ட கோவலனா?! அதிகாரிகளை நம்பி தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கி தப்பென்று தெரிந்தபின் உயிர் விட்ட பாண்டிய மன்னனா?! அல்லது கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட பாண்டிமாதேவியா?! இல்லை வாழ்வில் எந்த சுகமும் அனுபவிக்காத மணிமேகலையா?! சிலப்பதிகாரத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னா அது மணிமேகலைன்னுதான் நான் சொல்வேன்.
ஏன் மணிமேகலையை பாவப்பட்ட கதாபாத்திரம்ன்னு சொல்றேன்னு இன்றைய வெளிச்சத்தின் பின்னே... பகுதியில் பார்க்கலாம்..
Tuesday, June 23, 2020
சத்தான முட்டை+கேரட் பொரியல் -கிச்சன் கார்னர்
கேரட் பொரியலில் துவரம்பருப்போ அல்லது பை பருப்போ சேர்த்து கூட்டு செய்வோம். இல்லன்னா, தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்வோம். முட்டை போட்டு புதுவிதமான பொரியலும் செய்யலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ.. அயோடின், பாஸ்பரஸ், துத்தாநாகம் போன்ற சத்துகளும், கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ,சி,கே, பொட்டாசியம் மாதிரியான சத்துக்களும் சேர்ந்து நமக்கு அதிகப்படியான சத்துக்களை தரும்ன்னு சொல்லி குழந்தைகளை ஏமாத்தலாம்..
Subscribe to:
Posts (Atom)