Thursday, June 25, 2020

க்ராஸ் கட் மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்

கொரோனா வந்தாலும் வந்தது, விடிஞ்ச பிறகு எழுந்து , எட்டு மணிக்கு காபி குடிச்சு, பத்து மணிக்கு டிபன் சாப்பிட்டு என வாழ்க்கை முறையே மாறிட்டுது... சோம்பேறித்தனம் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சிருக்கு. ஒரு வாரத்தில்  முடிக்கும் 2 ரோல்  ஒயர் கூடையை பின்னி முடிக்க ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. கூடை பின்னி ஒரு கைப்பிடியும் போட்டு வச்சு  21 நாள் ஆச்சு. பதிவு போடனுமேன்னுதான் இப்பயும் முடிச்சேன். இல்லன்னா, அதுவும் முடிச்சு இருக்க மாட்டேன். 








ஒரு மாசத்துக்கும் மேல் இந்த சின்ன கூடையை பின்னிய என்னைய வாழ்த்தலாமே சகோ’ஸ்
நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. எப்படியோ வருமானம் வந்தால் சரிதான்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்....

    கேட்டீர்கள்.... அதனால் வாழ்த்தினோம்! :)

    கூடை நல்லா இருக்கு. தில்லிக்கு ஒரு பார்சல் அனுப்புங்களேன்!

    ReplyDelete
  3. விளிம்புகள் வளைவு வளைவாய் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
  4. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் என் அம்மாவும், அத்தையும் இதுபோன்று விதம்விதமாக பல வண்ணங்களில் செய்தவை நினைவிற்கு வந்தன. இதில் ஒரு சிறிய கட்டம் நான்கு மடிப்பினைக் கொண்டுள்ளது. அவர்கள் ஆறு கட்டம் போட்டும் பின்னியுள்ளார்கள். தற்போது நினைவுகளில் மட்டுமே.

    ReplyDelete
  5. கைப்பிடி பின்னல் கூட அழகு... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete