சனி, மார்ச் 10, 2012

நீ மட்டுமே........,


அவ்வளவு, அழகாய் தெரியும்
பட்டாம் பூச்சியை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

அலையலையாய் வந்து
என் மனதை அள்ளி செல்லும்
கடல் அலையை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

காலைபொழுதில், காம்பில் பால்குடிக்கும்,
இளங்கன்றின் அன்பை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

உடம்பிலுள்ள நாடி, நரம்பெல்லாம்
மெய்சிலிக்க வைக்கும், மழைத்துளி சாரலை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

சத்தமில்ல ஓவியகாரி, அவள்
இரவு நேர அழகிய இராணி, அந்த நிலவை கூட,
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

கண்ணீரும் கரைதொடும்,
மரணம் வரும் நேரத்திலும் பார்த்து
ரசித்துகொண்டே இருக்க தோன்றும்,
அந்த மொட்டு,மழலை குழந்தையின்
சிரிப்பை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

காதலியொரித்திக்காக கட்டிய
கல்லறை சின்னமான, தினமும், பலர்
வந்துசெல்லும், அந்த தாஜ்மஹாலை கூட,
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

உயிரில்லா ஒன்றில் வண்ணம் தீட்டி,
கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்,
உயிர் வண்ண ஓவியத்தை கூட..
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

எனக்கு உயிர்தரும், உருவமில்லா
அந்த மெல்லிசை தென்றலை கூட
அணுவணுவாய் ரசித்ததில்லை !
ஏன் உன்னை மட்டும் ..

சொல் அன்பே !
சொல், இன்னும் ஏன் மௌனம்,
ஏன், எதற்கு,? உன்னை மட்டும் ரசிக்க !!
புரியாத புதிராய் !
தெரியாத விடையாய் !

யாரும், பார்க்க முடியாத பொக்கிஷத்தை, 
உனக்கு காட்டுகிறேன்,
அன்பே கண்ணாடி முன்பு நின்று
பார் !

ஆம்  நன்றாக பார் ..
என் உயிரின் அழகிய
உருவம் நீதான் .. நீ மட்டும் தான் …
 

25 கருத்துகள்:

 1. யாரும், பார்க்க முடியாத பொக்கிஷத்தை,
  உனக்கு காட்டுகிறேன்,அன்பே
  கண்ணாடி முன்பு நின்றுபார் !
  ஆம் நன்றாக பார் ..என் உயிரின் அழகிய
  உருவம் நீதான் .. நீ மட்டும் தான் …\//
  நல்ல கவிதை..
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. //சொல் அன்பே !
  சொல், இன்னும் ஏன் மௌனம்,
  ஏன், எதற்கு,? உன்னை மட்டும் ரசிக்க !!
  புரியாத புதிராய் !
  தெரியாத விடையாய் !//


  நல்லாவே யோசிக்கிறிங்க...கவிதை.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சுய ரசனைக் கவிதை இனிமையாக உள்ளது. கவிதைக்கும், சிந்தனைக்கும் வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. ரசிப்பையே ரசிக்க
  விழைந்ததனால்
  வந்த அழகிய
  விழைவுக் கவிதை

  பதிலளிநீக்கு
 5. உயிரின் அழகிய உருவம்... இந்த முத்தாய்ப்பு கவிதையை வெகு அழகாக்கி விட்டது. அருமை.

  பதிலளிநீக்கு
 6. உலகில் உள்ள ரசனையானவைகள் எல்லாம்......பிரியமானவர்களின் அழகு ரசனையற்றவையாக செய்துவிடுகிறது....
  உண்மைதான் நல்ல கவிதை....

  பதிலளிநீக்கு
 7. >>யாரும், பார்க்க முடியாத பொக்கிஷத்தை,
  உனக்கு காட்டுகிறேன்,அன்பே
  கண்ணாடி முன்பு நின்றுபார் !

  அண்ணன் வீட்ல கண்ணாடியே இல்லையாம், வாட் டூ டூ> ஹி ஹி

  பதிலளிநீக்கு
 8. அருமை அருமை
  மிக லேசாகத் துவங்கி மிக அழகாக அடுக்கிக் கொண்டே செல்லுகையில்
  அதற்கேற்றார்போல இறுதிவரி இருக்கவேண்டுமே
  அது எப்படி இருந்தால் சரியாக இருக்கும் என நான்
  இறுதிவரியை படிக்காது மூளையைக் கசக்கிப் பார்த்தேன்
  ஏதேதோ வந்தது.தங்கள் வரி மிக மிக அற்புதம்
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. //சத்தமில்ல ஓவியகாரி, அவள்
  இரவு நேர அழகிய இராணி, அந்த நிலவை கூட,
  அணுவணுவாய் ரசித்ததில்லை !
  ஏன் உன்னை மட்டும் .

  //

  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 10. கதை, கவிதை, கட்டுரைன்னு ஒண்ணையும் விடறதில்லை. நீங்கதாங்க உண்மையிலேயே THE VERSATILE BLOGGER! கலக்குறிங்க சிஸ்டர்!

  பதிலளிநீக்கு
 11. ///ஏன் உன்னை மட்டும் ..///

  ///யாரும், பார்க்க முடியாத பொக்கிஷத்தை,
  உனக்கு காட்டுகிறேன்,
  அன்பே கண்ணாடி முன்பு நின்று
  பார் !ஆம் நன்றாக பார் ..
  என் உயிரின் அழகிய
  உருவம் நீதான் .. நீ மட்டும் தான் …///

  அக்கோவ் அண்ணம் ரொம சமத்து அவருக்கு இப்படி ஒரு இளிச்சவாய் பொண்ணு கிடைச்சதும் எப்படி அவளை புகழ்ந்து செலவில்லாமல் ஏமாற்றி இருக்கிறார். ஹீ...ஹீ

  என்ன அவரு அப்படியெல்லாம் சமத்து இல்லைன்னு யாரோ சொல்வது என் காதில் விழுந்தது. அது உண்மையென்றால் அண்ணனை கண்டாக்டரிடம் செக்கப்புக்கு கூட்டி போகவும்

  பதிலளிநீக்கு
 12. என்ன சகோதரி இந்த அழகான கவிதையை காதலர் தினத்தன்று பதிவு செய்து இருந்தால் ஒரு கிஃப்ட் வாங்குற செலவு மிச்சம் ஆகிருக்கும்ல. இதையே நான் எழுதியதாக சொல்லி செலவை குறைத்து இருப்பேன். ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 13. சகோதரி முடிந்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுங்கள். முடிந்தால் அதை ப்ரிண்ட செய்து வெள்ளைகாரிக்கு கொடுத்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. அழகான முதாய்ப்போடு ஒரு கவிதை ராஜி.மனம் அடுக்கிக்கொண்டே போன உணர்வு வரிகள் அழகு !

  பதிலளிநீக்கு
 15. வேறெதையும் ரசிக்க முடியாதுதான்!அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 16. காதலின் உச்ச அன்பு என்பது இதுதானோ?அருமை யாவுமே வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. என் உயிரின் அழகிய
  உருவம் நீதான் .. நீ மட்டும் தான் …

  பட்டாம்பூச்சியாய் சிறகடிப்பது கவிதை!

  பதிலளிநீக்கு
 18. புதுவகை கவிதை-நல்
  பொக்கிஷக் கவிதை
  இதுவரை இல்லா-எடுத்து
  எவருமே சொல்லா
  மதுவென மயக்க-என்
  மனமது வியக்க
  எதுவென வினவின்-நான்
  இயம்புவேன் இதுவென

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு