Tuesday, March 05, 2013

பொம்மை நினைவுகள்...,

 
 பொக்கிஷமாய் தனிமை வாய்த்தது,
 வயல்காட்டில் நமக்கு...

நான் பேசுவேன் என நீயும்!!
நீ பேசுவாய் என நானும்!!

நாம் பேசுவோம்///. என 
“சோளக்காட்டு பொம்மை”யும் பார்த்திருந்தோம்!!

அப்புறம், பேசிக் கொள்ளலாமென,
வெட்கத்தோடு நாம் வந்துவிட...

ஏமாற்றத்தோடும், ஏக்கத்தையும்
சுமந்துக் கொண்டு...,
 காவல் காத்துக் கொண்டிருக்கிறதாம் இன்னும்....

9 comments:

  1. சோலைக் காட்டுப் பொம்மை போல பேசாமல் சென்ற
    இரு மனங்களும் கூட அப்படித்தானோ!.. :) வாழ்த்துக்கள் தோழி மேலும் தொடரட்டும் இன்பக் கவிதை வரிகள் ...

    ReplyDelete
  2. பொம்மையும் பொருமிக்கொண்டிருக்கிறதோ சரிதான் nice

    ReplyDelete
  3. “சோளக்காட்டு பொம்மை” பார்த்திருந்தத்து ..
    அங்கே மௌனம் பேசியதே..!

    ReplyDelete
  4. பேச நேரமில்லையோ...? அதனால் சோலைக் காட்டுப் பொம்மை மௌனம்...

    ReplyDelete
  5. பொம்மையைச் சாட்சி வைத்து அவர்கள் பேசியிருக்க வேண்டும். மெளனம் பேசியதா, இல்லை... பொம்மையே வெறுத்துப் போய் பேசிடுச்சா?

    ReplyDelete
  6. மூன்று பொம்மைகள்!
    நன்று ராஜி

    ReplyDelete
  7. பொம்மை பாவம் - என நினைத்தாலும் - பொம்மை கேட்டுவிடுமோ என்ற நினைப்பில் பேசாமல் வந்து விட்டனர் போலும்!

    ReplyDelete
  8. பாவம் அந்த பொம்மை....!

    ReplyDelete
  9. பொம்மைக்கும் தண்ணி காட்டியது
    நீங்க தான் போல..

    ReplyDelete