Monday, January 04, 2016

உங்க வீட்டு கல்யாணத்துலயும் இப்படி செய்யலாமே! - ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! ராஜி மூத்தார் பொண்ணு  கல்யாணத்துக்கு போய் வந்தியே! கல்யாணம் நல்லா நடந்துச்சா?! 
எல்லாம் நல்லா நடந்துச்சு மாமா! எல்லோரையும் நல்லா கவனிச்சாங்க. சாப்பாடுலாம் சூப்பர். அந்த கல்யாணத்துல ஒரு நல்ல விசயம் நடந்துச்சு மாமா!
என்னது அது?! உன் ஃப்ரெண்ட் இருக்குற இடத்துல நல்லதுலாம் கூட நடக்குதா?! 
சொந்தக்காரங்க எல்லோருக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுக்கும்போதே துணிலாம் கொடுத்துட்டாங்க. கல்யாணத்து முதல்நாள், முதல்லியே எல்லோரும் மண்டபத்துக்கு போயிட்டோம். அப்போ, ராஜியோட மூத்தார் சில புது துணிகளை கொண்டு வந்திருந்தாங்க. அதான் உங்களுக்குலாம் ட்ரெஸ் கொடுத்துட்டாங்களே! இதுலாம் யாருக்குன்னு கேட்டேன்.

இங்க மண்டபத்துல கூட்டுற, பாத்திரம் கழுவும் பெண்கள், மண்டபத்து வாட்ச்மேன்னு எல்லோருக்கும்தான்  அந்த துணி. நாம பட்டு கட்டிக்கிட்டு, நகை போட்டு வரும்போது அவங்க பழைய சேலைல இருந்தால் அவங்க மனசு ஏங்கும்ல.  அதுமட்டுமில்லாம, மணமேடையில சடங்கு செய்யும் பெண் ஃபோட்டோவுல கிழிசல் சேலை கட்டிக்கிட்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?! அதுக்குதான் இந்த ஏற்பாடுன்னு சொன்னா. இதும் யோசிக்குற  மாதிரிதான் இருந்துச்சு. 
ம்ம்ம் இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு புள்ள!.

மாமா! இப்போ டிவி பொட்டில கோவிலுக்கு போறதுக்கு இப்படிலாம் ட்ரெஸ் பண்ணனும்ன்னு சொல்றாங்களே! 
அதுலாம் சரிதான் புள்ள. அந்த காலத்துல கோவிலுக்கு போகும்போது ஆண்கள் வேட்டி கட்டி போகனும், கூடவே, மேல் சட்டை இல்லாம வெத்து மார்போடும், பெண்கள் சேலை கட்டி, தங்கம், வெள்ளி நகைலாம் போட்டுக்கிட்டு போகனும்ன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு காரணம் பூமியின் பாசிட்டிவ் காந்த அலைகள் நிறைய பாயும் இடங்களான மலைகள், கடலோரம், காடுகளில்தான் கோவில் கட்டி வெச்சிருக்காங்க. ரொம்ப ரொம்ப பாசிட்டிவ் அலைகள் இருக்கும் இடங்களில்தான் கோவில் கருவறையை கட்டி வச்சாங்க. கருவறையில் இருக்கும் மூல விக்கிரகத்தின் அடியில் மந்திரங்கள்னால உருவேற்றப்பட்ட செப்புனால செஞ்ச எந்திரங்களை புதைச்சு வெச்சுருக்காங்க.
பூமியில் இருக்கும் பாசிட்டிவ் காந்த அதிர்வுகளை அந்த செப்பு தகடு கிரகிச்சு சுற்றுபுறத்துக்கு பரப்புது. அந்த அதிர்வுகள்லாம் காத்தோடு போகக் கூடாதுன்னுதான் மூலஸ்தானத்து சுவத்துல ஜன்னல்களை வைக்கல நம் முன்னோர்கள். 
மூலஸ்தானத்துல சுத்தும் பாசிட்டிவ் காந்த அலைகளை பக்தர்கள் முழுசா உள்வாங்கிக்கனும்னுதான் ஆண்கள் சட்டை போடக்கூடாதுன்னு சொன்னாங்க. பெண்களால் அப்படி வர முடியாது. அதனாலதான் கோவிலுக்கு போகும்போது நகை போட்டு போகனும்ன்னு சொல்லி இருக்காங்க. தங்கத்தோடு செம்பு சேர்த்து செஞ்சு வச்சிருக்கும் அந்த நகைகள்தான் பெண்கள் உடம்புல அந்த பாசிட்டிவ் காந்த அதிர்வுகளை கடத்துது. 

ஸ்ஸ்ஸ்ஸ்  அபா! இம்புட்டு விசயமிருக்கா  மாமா. மூஞ்சி புக்குல பார்த்த இந்த படத்தை ரசிச்சேன். நீயும், நானும் இதுப்போலதான் இருக்கனும் மாமா!ரொம்ப பேசிட்டோம். எனக்கு வாட்ஸ் அப்ல இந்த மெசேஜ் வந்துச்சு. நானும் எப்படிலாமோ யோசிச்சு பார்த்துட்டேன் மாமா. ஆனாலும், விடை தெரில நீங்க சொல்லுங்களேன். 
என்கிட்ட கேட்காத. நீதான் உன் சகோலாம் புத்திசாலின்னு சொல்லுவியே! அவங்க சொல்லுறாங்களான்னு பார்க்குறேன்.
ரொம்ப சமாளிக்காதீக மாமா. உங்களுக்கு மேல் மாடி காலின்னு ஐ நோ. நான் போய் சமைக்குறேன்.

சமைக்க போறியாடி?! 
ஆமாடி ராஜி! வா! வா! நீ எப்போ வந்தே!
அதுலாம் அப்புறம். சமைக்கப்போறேன்னு சொன்னேல இரு இரு. வெண்டைக்காய், சௌசௌலாம் வெட்டும் போது கைலாம் கொழ கொழன்னு இருக்குன்னு சொல்லுவேல. அதுக்கு என்ன செய்யனும்ன்னு தெரியுமா?!’தெரியாதே மாமா!! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுடி..

இனி, வெண்டைக்காயை வெட்டி சமைக்காத. அப்படியே போட்டுடு. குளிர்காலத்துல தயிர் உறைய மாட்டேங்குதா?! இனி, தயிர் உறை குத்தாதே! சாம்பார்ல உப்பு அதிகமாகிட்டுதா?! கீழ கொட்டிடு. 

ம்ம்ம் அப்புறம் இவ்வளாவுதானா?! இன்னும் இருக்கா?!

உன் நாத்தனார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லு. வெங்காயம் நறுக்கும்போது கண்ணுல தண்ணி வருதா?! மாமியார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லு. ஏய் நில்லுடி! எங்க ஓடுறே!

21 comments:

 1. Replies
  1. வாங்க சகோ! ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. புத்தாண்டில் நல்ல தொடக்கம். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

   Delete
 2. அவள் நீக்கியது எந்த குச்சியை ?

  மாமா சரியாத்தானே சொல்றாரு, வெங்காயத்தை அவங்க அம்மாகிட்டே குடுத்து நறுக்க சொல்றாரு பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. பொண்டாட்டி மனம் கோணாம நடந்துக்குறாரு

   Delete
 3. போட்டோ அழகு.. பிள்ளைகள கேட்டதா சொல்லுங்க..
  எனக்கு மாமியாரும் இல்லை, நாத்தனாரும் இல்ல யார்க்கிட்ட வெட்ட சொல்லலாம்??ஒரு சின்ன டவுட்டிங்..

  ReplyDelete
  Replies
  1. மருமகள் இல்லன்னா மருமகன்கிட்ட கொடுங்க அபி!

   Delete
  2. வீட்டுகாரர் எதுக்கு இருக்கிறார்

   Delete
  3. பூண்டு உரிக்க..

   Delete
 4. பாவம் மண்டபத்தில வேலை பார்க்குறவங்க் ஆங்கு வருபவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகைகளை பார்த்து ஏங்கதான் செய்வார்கள் அதனால் அடுத்த தடவை உங்கள் மூத்தார் கல்யாணத்திற்கு செல்லும் போது கொஞ்சம் தங்க நகைகளையும் சேர்த்து எடுத்திட்டு போகஸ் சொல்லுங்க.. அப்படி எடுத்திட்டு போகும் போது எனக்கு தகவல் சொல்லி அனுப்புங்க அப்பதான் அந்த மண்டபத்தில நான் போய் வேலைக்கு போய் சேர முடியும்

  ReplyDelete
  Replies
  1. அடடா! அவங்க நல்ல ஐடியா சொன்னால் நீங்கள் இப்படில்லாம் சிந்திப்பீர்களா?

   Delete
  2. நல்லா கேளுங்க நிஷா! எப்ப பாரு சின்னப் புள்ளைத்தனமாவே பேசிக்கிட்டு.

   Delete
 5. கடைசி டிப்ஸ்தான் சூப்பரோ சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொன்னால் மொக்கைன்னு சொல்லுவாங்க. நீங்க சூப்பர்ன்னு சொல்றீக. நீங்கதான் நல்லவர்.

   Delete
 6. திருமணம் மற்றும் விசேச நாட்களில் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும்
  அன்றைய நாளில் உதவியாய் இருப்போருக்கும் சேர்த்து துணிகள் எடுப்பது எங்கள் வீட்டிலும் வழக்கம் தான்பா!

  எந்தக்குச்சியை தூக்கணும்னு யோசிக்கும் மூட்டில் நான் இல்லப்பா. அத்தனை பிசி. புதிய வருடத்தில் நான் போடும் முதல் பதிவே உங்களுக்கான பின்னூட்டம் தான். அத்தனை வேலைப்பழுவில் சிக்கிட்டேன்.
  மைண்ட் அவுட்டாக இருக்கின்றது!

  கோயிலுக்கான ஆடை விளக்கமும் அறிந்ததாயிருந்தாலும் இந்த நேரத்தில் பகிந்தது நச்!

  உங்களுக்கும் எனக்கு புதிய வருட நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இங்கதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்களா!? நன்றி...

   Delete
 7. ஐஞ்சுவை அவியல் அருமை! கல்யாண வீட்டுக்காரர்களின் கருணை சிறப்பு! கோயில் ஆடை விளக்கம் அருமை! நன்றி!

  ReplyDelete
 8. சிறப்பான செயல். உங்கள் மூத்தார் குடும்பத்தினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணா

   Delete
 9. பாசிட்டிவ் காந்த அலைகளை..பற்றிய தகவல் அருமை

  வெண்டைக்காயை வெட்டி சமைக்காத. அப்படியே போட்டுடு..,தயிர் உறை குத்தாதே! சாம்பார்ல உப்பு அதிகமாகிட்டுதா?! கீழ கொட்டிடு. ....

  ஐய்யோ ..சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. இந்த டிப்ஸ்லாம் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்களேன். ப்ளீஸ்

   Delete
 10. எல்லா குச்சியையும் எடுத்து விளக்குகள் ஏத்திட வேண்டியதுதான், யோசிக்க முடியாது :-)))

  ReplyDelete