உருளைக்கிழங்கு.... இது எல்லாருக்கும் பிடித்தமானது. இந்த உருளையை பிடிக்காதுன்னு யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. உடலுக்கு ஆகாது ஆனாலும், கொஞ்சமா வைன்னு சொல்றவங்களைதான் பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கில் வறுவல், பொரியல், சிப்ஸ், பொடிமாஸ்,குருமான்னு சமைச்சு அசத்தலாம்.
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts
Tuesday, April 28, 2020
Tuesday, April 21, 2020
சிறுகீரை +துவரம்பருப்பு கூட்டு - கிச்சன் கார்னர்
தினமும் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்குறது உடலுக்கு நல்லது. சாம்பார், சூப், பொரியல், போண்டா, கூட்டு, வெரைட்டி சாதம்ன்னு கீரையிலும் விதம் விதமா சமைக்கலாம். என்ன கீரையை சுத்தம் செய்வதுதான் கொஞ்சம் கஷ்டம்தான். டிவி, சீரியல்லாம் வருவதற்குமுன், முன்னலாம் அம்மாவின் அம்மா/மாமியார், மாமியாரின் அம்மா/மாமியார்ன்னு வயசான பெரியவங்க யாராவது ஒருத்தங்க எல்லா வீட்டிலும் இருப்பாங்க. அவங்க காய்கறிகளை அறிவது, தானியங்களை நோன்ப, புடைக்க, இட்லிக்கு மாவரைக்கன்னு உக்காந்தபடியே வேலை செய்வாங்க. வீட்டு வேலைகள் முடித்தபின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எதாவதொரு வீட்டின்முன் உக்காந்து பேசுவாங்க. அப்ப கீரை சுத்தம் செய்றது. கிழிஞ்ச துணிகள் தைக்க, பூ கட்டுறது, தானியங்கள் சுத்தம் செய்வதுன்னு வேலைகள் பகிர்ந்து நடக்கும். உடல் உழைப்பு அதிகமா இருந்தாலும் பகிர்ந்து செஞ்சுக்கிட்டதால் அலுப்பு இல்லாமல் இருந்தது, இன்னிக்கு மிக்சி, கிரைண்டர், பாக்கெட் பண்ணப்பட்ட மளிகைப்பொருட்கள்ன்னு இருந்தாலும் அலுப்பாவே இருக்கு.
Tuesday, March 05, 2019
உடலுக்கு குளிர்ச்சியை தரும் வெந்தயக்கீரை சாம்பார் - கிச்சன் கார்னர்
பொங்கல் பண்டிகையின்போது நவதான்ய குழம்பும், கருணைக்கிழங்கு காரக்குழம்பு அத்தோடு வெந்தயக்கீரை சாம்பாரும் வைப்போம். டிசம்பர் , ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த கீரை கிடைக்கும். கண்ணுக்கு அகப்படும்போதெல்லாம் வாங்கி வந்து சமைப்பதுண்டு. மத்த நாளில் இந்த குழம்பை வச்சாலும் பொங்கல் அன்னிக்கு வச்ச ருசி வருவதில்லை. அதன் காரணம் என்னன்னு தெரில :-(
தேவையான பொருட்கள்..
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.மிளகாய் - காரத்துக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 10பல்
தக்காளி- 2
வெங்காயம் = 1சிறியது
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு/வடகம்
கீரையை நல்லா அலசிட்டு ஆய்ஞ்சுக்கனும்... துவரம்பருப்பை நல்லா வேகவிடனும்...
வெந்த பருப்பில் பூண்டு,, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்...
பச்சைமிளகாயை கீறி சேர்த்துக்கனும்., காரத்துக்கு தகுந்த மாதிரி சரிபாதியாய் காய்ந்த மிள்காயை சேர்த்துக்கலாம். சிலர் ப.மி சேர்க்காம மிளகாய்தூள் சேர்த்துப்பாங்க.
லேசா கொதிச்சதும் ஆய்ந்து வச்சிருக்கும் வெந்தயக்கீரையை சேர்த்துக்கனும்..
கீரை வெந்ததும் தேவையான அளவு உப்பும், புளியும் சேர்த்துக்கனும்.. சிலர் புளியை கரைச்சு சேர்ப்பாங்க. நான் அப்படியே சேர்த்துப்பேன்.
கல்சட்டியில் போட்டு நல்லா கடைஞ்சுக்கனும். வடகம் போட்டு தாளிச்சு கொட்டினால் செம வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.வீட்ல வடகம் இல்லாட்டி எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் பொடுசா நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொட்டினாலும் வாசம் செமயா இருக்கும்.
வெந்தயக்கீரை சாம்பார் ரெடி... நெய் சேர்த்து சாப்பிட்டா செமயா இருக்கும். வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்..
நன்றியுடன்,
ராஜி

நன்றியுடன்,
ராஜி
Monday, December 24, 2018
தன் உருவத்தை தானே வடிவமைச்ச ஆடலரசன் - ஐஞ்சுவை அவியல்
நேத்து ஆருத்ரா தரிசனம்ன்னு கோவிலுக்கு போனியே! நல்லா சாமி கும்பிட்டியா மாமா?!
ம்ம் நல்லபடியா தரிசனம் ஆச்சு. நீதான் வரலைன்னுட்டே...
உனக்கே எல்லா புண்ணியமும் கிடைக்கட்டும். எனக்கு வேணாம். அதான் டான்ஸ் ஆடுறதுன்னு சிவன் முடிவு பண்ணியாச்சுதுல்ல. அப்புறம் எதுக்கு பல போஸ்ல நின்னுக்கிட்டு இருக்கார்?வெவ்வேற போஸ்ல இருந்தா பார்க்க நல்லா இருக்கும். அதை விட்டு..
அடிப்பாவி! நடராஜர் உருவ அமைப்பு உனக்கு போரடிக்குதா?! அந்த உருவ அமைப்பை கொண்டு வர ஒரு சிற்பி எப்படி அல்லல்பட்டார்ன்னு தெரியுமா?! தன் உருவம் இப்படிதான் இருக்கனும்ன்னு சிவனே வந்து மாடலா நின்னிருக்கார்.
அப்படியா?! இதென்ன மாமா புதுக்கதை?!
சோழமன்னர் கண்டராதித்த சோழரும், சோழப்பிராட்டியான செம்பியன்மகாதேவியும் பல பழைய கோவில்களைலாம் புதிப்பிச்சிருக்கார், புதுசா நிறைய கோவில்களை கட்டியும் இருக்கார். அந்த வரிசையில் ஒரு பழைய கோவிலை புதுப்பிக்கும் ஆசை செம்பியன்மகாதேவிக்கு வந்திருக்கு. அக்கோவிலில் அழகான ஆறடி உயரமுள்ள நடராஜர் சிலையை கருவறையில் வைக்கனும்ன்னு செம்பியன்மகாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி சிற்பியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார். ராணியின் ஆணையின்படி சிற்பியுயும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி எதாவது ஒரு குறை சொல்லிக்கிட்டே ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு அவங்க மனசில் நினைச்ச மாதிரி சிலை உயரமாகவும் உயிரோட்டமாவும் இருக்கனும்ன்னு ஆணையிட்டு, நாட்களும் கடந்து போச்சுது.
பொறுமையை இழந்த ராணி, தன் மனசில் இருக்குற மாதிரியான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்துமுடிக்கனும். இல்லன்னா, தலை துண்டிக்கப்படும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. காலக்கெடு குறைய குறைய சிற்பிக்கு பதட்டம் அதிகரிச்சுதே தவிர சிலை வந்தபாடில்லை. கடவுளே! தனக்கேன் இந்த சோதனைன்னு இறைவனை வேண்டியபடி, அவர் கொதித்துக்கொண்டிருக்கும் பஞ்சலோக குழம்பை, தான் செய்துள்ள அச்சில் ஊற்றுபோது, ஒரு வயசான தம்பதிகள் வாசலில் வந்து நின்று, தாகம் தீர்க்க குடிக்க எதாவது கொடுக்கச்சொல்லி கேட்டாங்க. உயிர்போகும் டென்ஷன்ல இருந்த சிற்பி, தாகமா இருந்தால், இந்த உலோக குழம்பை குடிங்கன்னு கையிலிருந்த உலோகக்குழம்பை நீட்டி இருக்கார். அந்த தம்பதிகளும் யோசிக்காம அதை வாங்கி குடிச்சுட்டாங்க. வயசான தம்பதிக்கு என்னாகுமோன்னு சிற்பி திகைச்சு நிற்கும்போதே, அந்த வயசான ஆண் வலக்காலை ஊன்றி,இடக்காலை தூக்கி, நடனமுத்திரை காட்டியபடி நிற்க, வயதான பெண், அவரை வணங்கும் கோலத்தில் அருகில் இருக்க, மனித உருவம் மறைந்து ஆறடிக்கு உயிரோட்டமுள்ள சிலாரூபம் தோன்றியது. சரியாய் அந்தவேளையில் அங்குவந்த ராஜாவும், ராணியும் ரோமக்கால்கள், நகங்களுடன் ஆறடியிலிருந்த சிலாரூபத்தை கண்டு வியந்து, சிற்பியை பாராட்டினர். அங்கு நடந்தவற்றை சிற்பி கூற, ராஜாவால் இதை நம்பமுடியவில்லை. இது கற்பனைக்கதை என நினைத்து, கோபங்கொண்டு, சிற்பியை வெட்ட, து தன் வாளை ஓங்கினார் ராஜா. சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏற்ட்டது. தன் குற்றத்தை உணர்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய இங்குள்ள வைத்யநாத சுவாமிக்கு நாற்பத்திரண்டு நாட்கள் அபிஷேகமும் பிரார்த்தனையும் செய்யுமாறு கூறினார். அதேமாதிரி, ராஜாவும் இறைவனை வணங்க, தன் நோயை குணமாக்கிக்கொண்டார். இப்பவும் அந்த கோவிலுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவங்க வந்து வேண்டிக்கிட்டு குணமாகுறாங்க. தன் உருவம் இப்படி இருக்கனும்ன்னு வந்து சிவனே சிலையாய் உருமாறிய இடம் திருநல்லம்ன்ற ஊர். இது கும்பக்கோணத்துக்கு பக்கத்தில இருக்கு.
ஓ!அப்படியா மாமா!?
அதேமாதிரி ஒரு நடராஜர் சிலையை வடிக்க சிற்ப விதி இருக்கு. அது என்னன்னா, நடராஜருக்கு அபிஷேகம் செய்யும்போது, தண்ணி, பால், இளநீர், தயிர், தேன்ன்னு ஊற்றும்போது, தலையில் ஊற்றும்போது அது வழிந்து இடதுக்கை வழியாக இடதுகாலில் விழுந்து அங்கிருந்து பூமியை தொடனும். இப்படி அமைஞ்சிருந்தா அந்த சிற்பம் பரிபூரண சிற்பவிதிப்படி அமைஞ்ச நடராஜர் சிலை. இல்லன்னா பழுதானதுன்னு அதை வாங்காம விட்டுடலாம். கடையில் வாங்கும்போதே கொஞ்சம் பால், இல்ல தண்ணிய இடதுகையில் விட்டு பார்த்து வாங்கனும்...
சின்னவளுக்கு நூடுல்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது. மதிய நேரத்துலகூட இதை சாப்பிடுறா. பார்க்கவே எனக்கு பிடிக்கல. நம்ம ஊரு சாப்பாட்டை சாப்பிட்டால்தானே உடம்புக்கு நல்லது. இதையெல்லாம் எவன் கண்டுபிடிச்சானோ தெரியல மாமா.
நூடுல்ஸ்சின் தாயகம் சைனா. ஆனா, நூடுல்ஸ்ன்ற வார்த்தை லத்தீன் மொழிக்கு சொந்தம், நூடுல்ஸ்ன்னா முடிச்சுன்னு அர்த்தம். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கிண்ணம் ஒன்னு நூடுல்ஸ்சோடு சைனாவிலிருக்கும் சிங்ஹாய் மாகாணத்தில் 2002ல கிடைச்சிருக்கு. . லஜியாவில் இருக்கும் தொல்பொருள் ஆய்வு நடத்தும் இடத்தில் அங்கிருந்த படிவங்களுக்கு 3மீட்டருக்கடியில் ஒரு மண்பாண்டத்தில் நூடுல்ஸ் நிறைஞ்ச கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது. 4000 வருசத்துக்கு முந்தி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட இடம்தான் லஜியா. இதற்கு முன்னதாக, கி.பி. 25 மற்றும் 220-க்குள் சைனா கிழக்கு ஹான் வம்சாவளியினர் வாழ்ந்தபோது எழுதப்பட்ட புத்தகத்தில் நூடுல்ஸ் பற்றிய குறிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
தோல்வியை சந்தித்த தாய்வான்-ஜப்பானிய தொழிலதிபர் மொமொஃபுக்கு அண்டோ, ஜப்பானில் போருக்கு பின் மக்கள் பசியுடன் இருந்ததை பார்த்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு வழியை கண்டுபிடிக்க முனைந்தார். போதுமான அளவு உணவு இருந்தால்தான், உண்மையான அமைதி பிறக்கும் என்று அவர் நம்பினார். அதனால், ஒசாகாவில் தனது குடிசையின் பின்புறத்தில் ஒரு வருடம் ஓயாமல் உழைத்தார் அண்டோ. அப்போது அவர் கண்டுபிடித்ததுதான், உலகில் இப்ப பிரபலமாக இருக்கும் சிக்கன் ரேமன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். . 1958ஆம் ஆண்டு முதன்முதலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது. அப்பல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மாறி இன்றைய இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் நிலைக்கு வந்திருக்கு. . உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அமைப்பின் ஆய்வுப்படி, உலகெங்கிலும் தினத்துக்கு சுமார் 270 மில்லியன் மக்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுறாங்க. போனவருசம் மட்டும் உலகம் முழுக்க 100 பில்லியன் கிண்ணம் நூடுஸ்ஸ் சாப்பிட்டிருக்கோம். இதில் 38 பில்லியன் கப் சைனாவில் மட்டும் வித்திருக்கு. இந்த நூடுல்ஸ்க்குன்னே தனியா அருங்காட்சியகங்கள்லாம் இருக்கு. இங்க விதம்விதமான நூடுல்ஸ் சாப்பிட கிடைக்கும். சாப்பிட்டுக்கிட்டே, நூடுல்சின் வரலாறுகளையும், தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.
பொதுவா சாப்பிடும்போது சத்தமா உறிஞ்சுவதும், சப்புக்கொட்டி சாப்பிடுறதும் அசிங்கமா பார்க்கப்படும். ஆனா, நூடுல்ஸ் சாப்பிடும்போது சத்தம் வரலாம். அப்படி சத்தம் வந்தா, நூடுல்ஸ் ருசியா இருக்குன்னு அர்த்தம். புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்களில் நீளமா இருக்கும் நூடுல்ஸ் கிடைச்சா நீண்ட ஆயுள் கிடைக்குமென்பது சீனர்களின் நம்பிக்கை. ஓக் மரக்கொட்டையிலிருந்து செய்யப்படும் ஒரு நூடுல்ஸ் வகை கொரியாவில் பிரபலம். ஓக் கொட்டையிலிருந்து செய்யப்படும் மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து அந்த மாவில்தான் நூடுல்ஸ் தயாரிக்கப்படும். சிவப்பு மற்றும் வெள்ளை ஓக் மரக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவுக்கென தனித்தனி ருசி உண்டு.
போதும் போதும்! அவ நூடுல்ஸ் சாப்பிடுறதைவிட நீ இப்படி பாடமெடுக்குறதுதான் இம்சையா இருக்கு. என்னைய ஆளைவிடு சாமி.. இப்படிலாம் லெந்த்த்தா பேசி போரடிக்கக்கூடாது. நச்சுன்னு இந்த படத்திலிருக்க மாதிரி சுருங்க சொல்லனும்.. ஒரு முட்டை உடைஞ்சு அற்பாயுசுல போயிடுச்சுன்னு மத்த முட்டைலாம் வருத்தப்படுதாம்.
சரி, இனிமே அப்படியே நடந்துக்கிறேன். இப்ப போய் சூடா ஒரு கப் நூடுல்ஸ் செஞ்சு கொண்டுவா..
நன்றியுடன்,
ராஜி
Monday, September 03, 2018
ஜெமினி கணேசனுக்கு சாம்பார்ன்னு ஏன் பேர் வந்துச்சு?! - ஐஞ்சுவை அவியல்
எழுந்து வா புள்ள! சாப்பிடலாம்.
என்ன மாமா சமைச்சு வச்சிருக்கே!?
சாதம், சாம்பார்,ரசம், பீன்ஸ்...,
சாம்பாரா?!
என்ன மாமா சமைச்சு வச்சிருக்கே!?
சாதம், சாம்பார்,ரசம், பீன்ஸ்...,
சாம்பாரா?!
என்ன சாம்பாரான்னு இழுக்குறே?! நம்ம ஊருக்கு சாம்பார் எப்படி வந்துச்சுன்னு தெரியுமா?! தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 காலத்தில் தான் சாம்பார் உருவானதாம். 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி எனப்படும் தால் மாதிரியான ஒருவகை உணவு சாஹூஜிக்குப் பிடிக்குமாம். அந்த ஆம்தியில் புளி சேர்க்கும் பழக்கமில்லை. சாஹூஜி விதம் விதமாய் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் அரண்மனையில் சாரு விலாச போஜன சாலை என ஒன்னு இருக்கு. அதுல வேலை செய்யும் சமையல் கலைஞர்களை இரண்டா பிரிச்சு, முதல் ஆறு மாசம் ஒரு பிரிவினருக்கு லீவும், பணமும் கொடுத்து அனுப்புவாராம். அந்த பணத்தை கொண்டு ஊர் பயணம் செஞ்சு புதுப்புது சமையலை கத்துக்கிட்டு வந்து அடுத்த ஆறுமாசத்துக்கு சமைக்கனும். அடுத்த பிரிவு ஊர் பயணம் கிளம்பும்.
ஒருமுறை, துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களுடன் புளி சேர்த்து சமைச்சிருக்காங்க. அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா. ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்து. அதன்பிறகு சாம்போஜியை கவுரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி தால் எனப் பொருள்படும் வகையில், சாம்பார் என பேர் வைக்கும் அளவுக்கு பிடித்து போனதுன்னு ஒரு கதை சொல்றாங்க. இதுலயே இன்னொரு கதை உண்டு. ஆத்மியில் கோகம் புளின்னு ஒன்னு சேர்த்து சமைப்பாங்களாம். ஒருநாள் கோகம் புளி கிடைக்காம போக, நம்ம ஊரு புளியை சேர்த்ததாகவும், அந்த டேஸ்ட் சாஹூஜிக்கு அந்த ருசி பிடிச்சு போயிட்டுதுன்னு சொல்றாங்க. ஆனா, மராட்டியர்கள் தாலில் புளி சேர்ப்பதில்லை. காய்கறியும் சேர்ப்பதில்லைன்னு எல்லாருக்குமே தெரியும். பருப்பு , தக்காளி, வெங்காயம் மட்டுமே ஆத்மிக்கும், சாம்பாருக்கு பொது.
ஆனா, 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பாஸ்திரம்ன்ற இரண்டு நூல்களில் குறிப்புகள் இருக்காம்.இந்த இரண்டு புத்தகமும் உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாத்தையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கு. பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன. சரபேந்திர பாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகை பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது.
சம்பாரம்ன்னு பொருளாம். மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, சுக்கு இன்னும் பிற வாசனைப்பொருட்களை அரைத்து சாம்பாரில்சேர்ப்பது வழக்கம், அதனால்தான் சாம்பார் என்று பெயர் வந்ததாக சொல்றாங்க. . சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தஞ்சைவாழ் மராட்டிய மன்னர்கள் காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்துள்ளதை தமிழக கல்வெட்டு 1530 C.E சொல்லுது. “அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha[2]) என்பதே அந்த கல்வெட்டின் சாராம்சம். "கறியமுது பல சம்பாரம்"- பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல்ன்னு இதுக்கு பொருள். "நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"- அதாவது நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு சொல்லுது
மாராட்டியர்கள் இவர்கள் ஆட்சியின் கீழ் தஞ்சை 1675 காலத்தில்தான் வந்தது. அப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுன்னு ஏத்துக்க முடியாதுல்ல. மாராட்டிய மாநிலத்தில் வெறும் பருப்பை மட்டுமே வேகவைத்து தால்’ன்னு சாப்பிடும் பழக்கமே இன்னிக்கு வரை இருக்கு. தமிழில் சாம்புன்னா குறைத்தல், அரைத்தல்ன்னு பொருள். அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள்ன்னும் பொருள்படும். தெலுங்கில் `ஹூலி’ (Huli)ன்னா புளி சேர்க்கப்பட்ட சாம்பார்.
தென்னிந்திய உணவுகளில் சாம்பாருக்கு முக்கிய இடமுண்டு. கர்நாடகா சாம்பாருக்கு மசாலாவை அரைச்சு பேஸ்ட் மாதிரி சேர்ப்பாங்க. நம்ம ஊரு சாம்பாருக்கு, மசாலாவை பொடியாக்கி போடுவோம். நம்ம ஊரில் சாம்பார், புளிக்குழம்பு(காரக்குழம்பு) ரசம், மோர்ன்னு சாப்பிடுவோம். கர்நாடகாவில் ரசத்துக்கு அப்புறம்தான் சாம்பார். கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய்ன்னு இருந்த சாம்பார், இப்ப சிக்கன் சாம்பார், மீன் சாம்பார்ன்னு சின்ன சின்ன மாறுதல்களோடு வர ஆரம்பிச்சுட்டுது. நான் சொன்னா நம்பமாட்டே. செய்முறையை சிக்கன் சாம்பார், மீன் சாம்பார் போய் பார்த்துக்க.
ஒரு கப் சாம்பாரில் 308 கலோரி இருக்காம் உள்ளன. பொட்டாசியம் 265 மி.கி., கொழுப்பு 9 கி, பொட்டாசியம் 265 மி.கி. நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 3 கிராம், புரோட்டீன் 15 கிராம், சோடியம் 14 மி.கி இருக்கு. அதோடு இரும்புச்சத்தும் வைட்டமின் சியும் இருக்கு. சாம்பார் செய்ய தேவையான முக்கிய மூலப்பொருளான துவரம் பருப்பு அதிக புரோட்டீன் கொண்டது. பாசிப்பருப்புலயும் சாம்பார் செய்யலாம். இத்தோடு சிறிது பச்சைப்பட்டாணியை சேர்த்துக்கிட்டா சத்துக்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும். நார்ச்சத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நம் உடல்நலத்தை மேம்படுத்தும். சாம்பாரில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைச் சேர்த்து சமைக்கலாம். அது செரிமானம் சீராக நடைப்பெற உதவும். கார்போஹைட்ரேட் குறைவுன்றதால, இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கும். எனவே, சர்க்கரைநோய் உள்ளவங்கக்கூட சாப்பிடலாம். ஆனா சாதத்தோடு சாப்பிடாம, இட்லி, தோசையோடு சேர்த்துக்கலாம்.
ஏன் மாமா சாம்பாருக்கு என்ன காய் போடனும்?! ஒருசிலர் அவரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ், கேரட், பூசணிக்காய்ன்னு எல்லா காயையும் போட்டு சாம்பார் வைக்குறாங்களே! அது சரியா?!
எந்த காயையும் சேர்த்துக்கலாம். ஆனா, ஒருசிலர் ஊர் நாட்டான் மாதிரி கைக்கு கிடைச்ச காய்லாம் போட்டு சாம்பார் வைப்பாங்க. அப்படி வைக்காம , எதாவது ஒரு காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைக்குறது நல்லது. ஏன்னா, ஒவ்வொரு காய்க்குன்னு தனி குணமுண்டு, பூசணி,கேரட் இனிக்கும். பாவக்காய் கசக்கும். வெண்டைக்காய், சேனைக்கிழங்குலாம் பிசுபிசுப்பு கொடுக்கும். முள்ளங்கி, முருங்கைக்காய்லாம் வாசம் கொடுக்கும். எல்லா காய்களையும் சேர்க்கும்போது அந்த தனித்துவத்தை இழக்குறோம். சாம்பாரில் சேர்க்கப்படும் புளி, உப்புலாம் அளவோடு இருக்கனும். அதுதான் முக்கியம். அதிகமா புளி சேர்த்தா, அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படுவது, பித்தப்பைகளில் கற்கள் உருவாவது, நாளங்களில் சுருக்கம்லாம் உண்டாகும். அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அதேமாதிரி சாம்பாரை வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டா நல்லது. ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டா அது புட் அலர்ஜி, வயிற்று புண்ணை உண்டாக்கும். அதேமாதிரி சாம்பார் பொடியை வீட்டிலேயே ரெடி பண்ணிக்கனும். கடையில் விக்கும் பாக்கெட் மசாலாவை சேர்க்க வேணாம்.
பெரும்பாலும், இட்லிக்கென செய்யப்படும் சாம்பாரில் புளி சேர்க்கமாட்டாங்க. சாம்பார் தண்ணியாகிட்டுதுன்னா கொஞ்சம் கடலைமாவு, அரிசி மாவினை கரைச்சு சேர்த்து கொதிக்க வச்சா சாம்பார் சரியான பதத்துக்கு வந்திரும். துவரம்பருப்பு சரியா வேகாம சாம்பார் தண்ணியாகிட்டுதுன்னா, துவரம்பருப்பை பொடி செய்து சாம்பாரில் போட்டு கொதிக்க வச்சா சரியாகிடும். புளிப்பு அதிகமானால் வெங்காயத்தை பொடியா நறுக்கி ப.மிளகாய் அல்லது காய்ஞ்ச மிளாய் கிள்ளி எண்ணெயில் வதக்கி சேர்த்துக்கிட்டா புளிச்சுவை குறைஞ்சிடும். இல்லன்னா, கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கிட்டாலும் இந்த பிரச்சனை சரியாகிடும். பருப்பு சீக்கிரம் வேக, பருப்போடு மஞ்சப்பொடி, நல்ல எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்துக்கலாம். தேங்காய் துண்டு சேர்ப்பதும் உண்டு. அரிசி கழுவிய இரண்டாவது மூணாவது தண்ணியில் சாம்பார் வச்சா நல்லா ருசியா இருக்கும். முருங்கைக்காய் சீசனில் முருங்கக்காயை துண்டு துண்டா வெட்டி, வேக வச்சி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை மட்டும் எடுத்து வடை மாதிரி தட்டி வெயிலில் காய வச்சி பொடி செஞ்சு சாம்பாரில் சேர்த்துக்கிட்டா சாம்பார் மணக்கும். பருப்பு வேக வைக்கும்போதே கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்துக்கிட்டாலும் சாம்பார் வாசமா இருக்கு.
போதும், சாம்பார் பத்தி பேசிப்பேசி பசிக்குது. சாப்பிடலாம் வா.
சாம்பார் பத்தி தெள்ளத்தெளிவா புரிஞ்சுது. இன்னும் ஒரே ஒரு டவுட் இருக்கு. அதைமட்டும் க்ளியர் பண்ணிடு மாமா.
என்ன டவுட்டு?! கேளு
ஒன்னும்னில்ல. பழைய நடிக காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு சாம்பார்ன்னு இன்னொரு பட்டப்பேரு இருக்கே!! அவருக்கு அந்த பேர் எதுக்கு வந்ததுன்னு சொல்லு...
இப்படி ஜல்லியடிச்சுக்கிட்டே இருந்தால் நீயெல்லாம் எங்கிருந்து உருப்படப்போறே?!
உன்னாக்கூட சேர்ந்தப்பொறவு உருப்படுற நிலைலாம் ஏற்படுமா மாமா?!
நன்றியுடன்,
ராஜி
Tuesday, July 10, 2018
ரவா பொங்கல் - கிச்சன் கார்னர்
திடீர்ன்னு யாராவது விருந்தாளிங்க வந்துட்டா, சட்டுன்னு சமைக்க ரவையதான் எடுப்போம். ரவையில் உப்புமா, கிச்சடி, கேசரி, பாயாசம்ன்னு அஞ்சு நிமிசத்துல செஞ்சு அசத்தலாம். அது என்னமோ தெரில, பொண்டாட்டிய பிடிக்காத மாதிரி எல்லா ஆம்பிளைகளுக்கும் உப்புமா பிடிக்க மாட்டேங்குது. பொண்டாட்டி புத்தி சொன்னா அது நல்லதாவே இருந்தாலும் எந்த ஆம்பிளைக்கு பிடிக்குது?! அதுமாதிரிதான் ரவையில் நிறைய சத்துகள் இருக்கு. ஆனாலும் இந்த ஆம்பிளைகளுக்கு பிடிக்க மாட்டேங்குது..
ரவை கோதுமை, அரிசி, மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகுது. சன்னம், கொஞ்சம் நடுத்தரம்ன்னு இரண்டு வகையா இது தயாராகுது. ரவைக்கு இங்கிலீஷ்ல செமொலினா(Semolina). செமோலினான்ற வார்த்தைக்கு தவிடுன்னு அர்த்தம். வட இந்தியாவிலும், பாகிஸ்தான், நேபாளில் சுஜி(sujee)ன்னு சொல்றாங்க.
ரவை பெரும்பாலும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுது. கோதுமையை சுத்தம் செய்து, மேல இருக்கும் தவிட்டினை நீக்கி, உள்ளே உள்ள அரிசி பாகத்தை மாவாக்குவதில் இருந்துதான் மைதா, ரவா, ஆட்டா ஆகிய மூன்று பொருட்கள் கிடைக்கின்றன. தவிட்டினை இயந்திரங்கள் மூலம் நீக்கும் போது மிகவும் முழுமையாக நீக்கிவிட முடியாது. பிரிக்க முடியாத தவிட்டின் மேல் பாகமும், உள்ளே உள்ள அரிசி பாகமும் இணைந்த பகுதியை அரைத்துக் கிடைப்பது ஆட்டா. உள்ளே உள்ள பாகத்தை பல சுழற்சி முறைகளில் மாவாக்கி சுத்தம் செய்றாங்க. அப்படி செய்யும்போது சற்று பருமன் அதிகமாக உடைக்கப்பட்ட பகுதி ரவையாக பிரித்து எடுக்கப்படுது. மீதமுள்ளவை மீண்டும் நன்கு அரைக்கப்பட்டு மைதாவாகுது.
புரோட்டின்(Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவை ரவையை விட மைதாவிலும், மைதாவை விட ஆட்டாவிலும் அதிகம். எல்லாமே கோதுமைதான். அது அரைத்து, மாவாக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும் விதத்தைப் பொறுத்து நிறைய வகைபடுத்தப்படுது. மைதாவிலேயே ஐந்து, ஆறு வகை மைதாக்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிரெட் செய்வதற்கு தனிரகம், பரோட்டாவிற்கு ஒரு ரகம், மேக்ரோன், சேமியாவிற்கு ஒரு ரகம்.. பல ரக மைதாக்கள் இருக்கு. உடல் இளைக்க நினைக்குறவங்களுக்கு ரவை, அதிலும் சம்பா ரவை ஆபத்பாந்தவன்.
ரவையில் மாவு சத்து அதிகமா இருக்கு. நார்ச்சத்து, புரதம், நீர்சத்து, வைட்டமின் ஏ, பி6, பி12, கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மங்கனீசுலாம் இருக்கு. இத்தனை சத்து இருக்கே! செய்வதுக்கும் சுலபம், மாமாவும் நல்லா இருக்கட்டுமேன்னு உப்புமா செஞ்சா சும்மா, காக்கா மூக்குல கொத்துற மாதிரி கொத்திக்கிட்டு போவாங்க. ஆனா, ரவாபொங்கல் செஞ்சா மட்டும் நல்லா இருக்குன்னு சாப்பிடுவாங்க. ரவையில், பணியாரம், கொழுக்கட்டை, தோசை, இட்லி, சோமாஸ், ரவா கட்லெட், தட்டைன்னு விதம் விதமா செய்யலாம்.
இன்னிக்கு ரவா பொங்கல் எப்படி செய்யுறதுன்னு பார்ப்போம்..
ரவை -1 பங்கு
பை.பருப்பு - 1/2 பங்கு
முந்திரி
இஞ்சி
மிளகு
எண்ணெய்
நெய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
உப்பு.
பைத்தம்பருப்பை லேசா உப்பு சேர்த்து குழைய வேகவிடுங்க. முந்திரியை உடைச்சு நெய்யில் வறுத்துக்கோங்க. மிச்சமிருக்கும் நெய்யில் ரவையை லேசா வறுத்துக்கோங்க. சிவக்கனும்ன்னு அவசியமில்ல. இஞ்சிய தோல்சீவி நசுக்கி வச்சுக்கோங்க.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊத்தி காய்ஞ்சதும், மிளகு, சீரகம் போட்டு பொரிய விடனும்.
அடுத்து முந்திரி போட்டு சிவக்க விடனும்..அடுத்து இஞ்சியை போட்டு சிவக்க விடுங்க..
அடுத்து கறிவேப்பிலை போட்டு பொரிஞ்சதும் தேவையான அளவு தண்ணி ஊத்துங்க... ஒரு டம்ப்ளர் ரவைக்கு 11/2 டம்ப்ளர் தண்ணி சேர்த்தா பொங்கல் குழைவா வரும். தேவையான உப்பு சேருங்க.
அடுத்து நல்லா குழைவா வேக வச்சிருக்கும் பைத்தம்பருப்பை சேருங்க..
எல்லாம் நல்லா கொதிச்சதும் வறுத்த ரவையை சேர்த்து கட்டித்தட்டாம கிளறுங்க.
கொஞ்சம் பெருங்காயப்பொடி சேர்த்து, சிம்ல வச்சிட்டு மூடிவிடுங்க. நல்லா குமுங்கட்டும்..
ரவா பொங்கல் ரெடி. தொட்டுக்க தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெல்லம், சர்க்கரை நல்லா இருக்கும். எதுமே இல்லன்னாலும் ரவா பொங்கல் சாப்பிட நல்லா இருக்கும். ஒருசிலர் இஞ்சியோடு சேர்த்து ப.மிளகாய் சேர்ப்பாங்க. எனக்கு அது வாசனை பிடிக்குறதில்ல. அதனால சேர்ப்பதில்லை.
பச்சரிசி ஊற வச்சு மெஷின்ல கொடுத்து கொரகொரப்பா அரைச்சுக்கிட்டு வந்து சலிச்சு மாவு தனியா, ரவை தனியா பிரிச்செடுத்தும் உப்புமா செய்வாங்க. அதும் செம டேஸ்டா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி.
Tuesday, May 22, 2018
கொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்
இப்ப கொத்தவரைங்காய் சீசன் ஆரம்பிச்சிட்டுது. கொத்தவரங்காயில் உசிலி, கூட்டு, வத்தல், புளிக்குழம்புன்னு செய்யலாம். எங்க ஊர் பக்கம் வேர்க்கடலை பருப்பு பொடி போட்டு செய்யும் பொரியல் சுவையாவும் வித்தியாசகாவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்..
கொத்தவரங்க்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
கடுகு
கடலைபருப்பு
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
புளி(தேவைப்பட்டால்)
கொத்தவரங்காயை பொடிபொடியாய் நறுக்கி உப்பு போட்டு வேக வச்சு தண்ணிய வடிச்சுடனும். கொத்தவரங்காயை நறுக்க வெசனப்பட்டா, பிடிக்காத புருசன், இல்லன்னா நாத்தனார், மாமியார், மாமனார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லுங்க.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்கவிட்டு, வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்குங்க.
பொடியா நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்க.
உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வெங்காயம் தக்காளி வெந்துடும்...
மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்குங்க.
கொஞ்சமா தண்ணி சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிக்க விடனும். புளி தண்ணி தேவைப்பட்டா இந்த நேரத்தில் சேர்த்துக்கலாம்.
தண்ணி சுண்டி வரும் நேரத்தில் வடிகட்டி வச்சிருக்கும் கொத்தவரங்காயை கொட்டி வதக்கவும்.
தண்ணி நல்லா சுண்டியதும் பொடி செஞ்சிருக்கும் வேர்கடலை பொடியை சேர்த்து, சுருள கிளறிக்கனும்.
கொத்தவரங்காய் பொரியல் ரெடி. வேர்கடலையோடு எண்ணெயில் வறுத்தெடுத்த காய்ந்த மிளகாயை சேர்த்து பொடி செஞ்சும் போடலாம். முன்னலாம் அம்மில வச்சு பொடிக்கும்போது கடைசியா பூண்டு போட்டு நசுக்கி அம்மா சேர்ப்பாங்க. வாசமாவும் இருக்கும்.
கொத்தவரங்காய்க்கு சீனி அவரைக்காய்ன்னும் பேரு. இதன் காய்கள் செடியில் கொத்து கொத்தாகக் காய்க்குறதால இதுக்கு கொத்தவரங்காய்ன்னு பேர் வந்தாம். இது தீவனப்பயிராவும் பயன்படுது. இதில் நார்சத்து, புரதம், போலிக் ஆசிட்ன்னு இருக்கு. . இதை ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட்டா ஜீரணக்கோளாறு ஏற்படும்.
நன்றியுடன்,
ராஜி
Monday, March 05, 2018
கொத்தமல்லி சாதம் - கிச்சன் கார்னர்
சமைக்குறது ஒரு இம்சைன்னா பள்ளி, கல்லூரி செல்லும் பசங்களுக்கு சமைக்குறது படு இம்சை. சாம்பார், காரக்குழம்பு, பொரியல்ன்னு விதம் விதமா ஆரோக்கியமா சமைச்சு கொடுத்தாலும் மூணு நாலு டப்பாக்கள் திறந்து பிசைஞ்சு சாப்பிட சோம்பேறித்தனம். டைமும் இருக்காது. அதேநேரம் தேங்காய் சாதம், புளி சாதம், புலாவ், மாதிரி வெரைட்டி சாதம்ன்னா ஸ்பூன்ல அள்ளிக்கொட்டிக்கிட்டு போய் வேலைய பார்க்கும். அதுகளுக்கு ருசியா சமைச்சு கொடுக்க நினைக்கும் அதேநேரத்தில் அதுங்க ஆரோக்கியத்தையும் மனசுல வச்சு சமைக்க வேண்டி இருக்கு.
இப்ப கொத்தமல்லி சீசன். பத்து ரூபாய்க்கு பெரிய கட்டு கொடுப்பாங்க. கொ.மல்லி சட்னி, துவையல்ன்னு செய்யும் அதேநேரம் கொத்தமல்லி சாதம் செஞ்சு கொடுத்தா பசங்க சந்தோசப்படும். அதுங்க ஆரோக்கியம் கெடாதுன்னு நமக்கும் ஒரு சந்தோசம். இது செய்ய ரொம்ப ஈசியும்கூட...
தேவையான பொருட்கள்...
உப்பு போட்டு உதிர் உதிரா வடிச்ச சாதம்..
வாடாத கொத்தமல்லி
பச்சை மிளகாய்
உரித்த பூண்டு பற்கள்.
இஞ்சி
பெல்லாரி வெங்காயம்,
காய்ந்த மிளகாய்
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
வேர்கடலை
எண்ணெய்
உப்பு..
கொத்தமல்லிய வேர் நீக்கி மண் போக சிலமுறை அலசி தண்ணிய வடிச்சுக்கோங்க. அத்தோடு ப.மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு கொரகொரப்பா அரைச்சுக்கோங்க. வெங்காயத்தை சுத்தம் செஞ்சு நீளவாக்கில் அரிஞ்சுக்கனும்.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிஞ்சதும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை போட்டு சிவக்க விடனும். காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கோங்க.
எல்லாம் சிவந்ததும் அரிஞ்சு வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.
வெங்காயம் நல்லா வதங்கினதும் அரைச்சு வச்சிருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்துக்கோங்க.
தேவையான உப்பை சேர்த்து கிளறி விடுங்க....
கொத்தமல்லி விழுது பச்சை வாசனை போனதும் ஆற வச்சிருக்கும் சாதத்தை சேர்த்து கிளறிக்கனும். தேவைப்பட்டா எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.
சிறு செடி வகையை சேர்ந்த இந்த கொத்தமல்லி சமையலுக்கு மணமூட்ட பயன்பட்டாலும் சிறந்த மூலிகையாவும் செயல்படுது. இது அதிகபட்சம் 50செமீ வளரும். இந்தியா முழுக்க பரவலா பயிரிடப்பட்டாலும், கொத்தமல்லியை கண்டுபிடிச்சது இஸ்ரேலில்தான். இது கிட்டத்தட்ட 8000 வருசமா பயன்படுத்தப்படுது. தண்டு, இலை, வேர், விதைன்னு பயன்படுத்துவாங்க. விதைக்கு மல்லி விதை, தனியான்னு பேரு. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கு. கொத்தமல்லி, மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும். சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதை அதிகம் உண்பதால் மந்தத்தன்மை உண்டாக்கும். கொத்தமல்லியை, சட்னி, துவையல், தொக்கு, ஜூஸ்ன்னு உள்ளுக்குள் சாப்பிடுற மாதிரி கொத்தமல்லி சாற்றை அழகுக்காக மேல்பூச்சாகவும் பூசுறாங்க.
அடுத்த கிச்சன் கார்னர்ல ஈசியான ஒரு ரெசிப்பி எப்படி செய்யலாம்ன்னு பார்க்கலாம்.....
நன்றியுடன்,
ராஜி.
Saturday, January 06, 2018
உன் சமையலறையில் நான் உப்பா?! சர்க்கரையா?!
மண்ணுமில்லாம, விதையுமில்லாம விளைஞ்சு வருவது எது?! இந்த கேள்விக்கு ரொம்ப விவரம் தெரிஞ்ச பெருசுங்களும், மெத்த படிச்சவங்களும்தான் பதில் சொல்வாங்க. என்னைய மாதிரி ஆளுங்களுக்குலாம் பதில் தெரியாது. அப்புறம் எப்படி இந்த பதிவுன்னு நினைக்காதீங்க, முன்ன இந்த கேள்விக்கு பதில் தெரியாது. ஆனா இப்ப அந்த கேள்விக்கு பதில் தெரியும். அந்த கேள்விக்கான பதில் உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லா பண்டம் குப்பையிலேன்ற பழமொழிக்குலாம் சொந்தக்காரரான உப்பு தான் . உப்புக்கு லவனம்ன்னும் இன்னொரு பேர் இருக்கு.
உப்பு உலகம் முழுக்க பரவலா பயன்படுத்தப்படுது. இருந்தாலும், தமிழர் வாழ்வில் உப்பு சுவைக்காக மட்டுமில்லாம ஆன்மீக விசயமாவும் பயன்படுது. உப்பு விளையும் இடத்துக்கு பேரு உப்பளம். உப்பை விற்குறவங்களுக்கு பேரு உமணர்கள்ன்னு சங்க இலக்கியத்தில் சொல்லி இருக்கு. நெல்லின் நேரே வெண் கல் உப்பு என சோழர்காலத்தில் நெல் விளையும் இடமும், உப்பளமும் அருகருகே இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம இரண்டின் மதிப்பும் சரிசமமா இருந்துச்சாம். உப்பு விளைச்சலை தங்கள் நேரடி கண்காணிப்பின்கீழ் சோழ, பாண்டிய அரசர்கள் வச்சிருந்தாங்களாம். பெரிய பெரிய உப்பளங்களுக்கு அரசர்கள் பெயர் சூட்டுவது அந்நாளில் வழக்கமா இருந்திருக்கு, அப்படி உருவான பேர்தான் பேரளம், கோவளம்.
உப்புல சௌவர்ச்கலம், சைந்தவம், விடம், ஔபிதம், சமுத்திரம் என மொத்தம் 5 வகை இருக்கு. இந்த ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து மொத்தம் 15 விதமான உப்பா மாற்றி பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஐந்து வகை உப்புகளும் கடல், ஏரி, பாறை மற்றும் மலைகள்ல கிடைக்குது. அதுலயும் கடல்லதான் உப்பு அதிகமா கிடைக்குது.
பாம்பூ சால்ட்.. மூங்கிலுக்குள் உப்பை வைத்து, தீயிலிட்டு உருகும்போது மண்ணிலிருந்து தாதுக்களை உரிஞ்சு வரும் உப்புக்கு பேரு பாம்பூ சால்ட். இந்த வகை சால்ட் அசாமில் பிரசித்தம்.
கடல் நீரில் உப்புச்சத்து மிக அதிகமா இருக்கு. கடல் நீரில் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பை கொண்டிருக்கு. இதன் உவர்ப்பு சுவை 3.5 %. கடல்நீரை ஆவியாக்கி அதன்மூலம் பெறப்படும் உப்புதான் அதிகளவில் பயன்படுத்தப்படுது. வயல்களைப்போல பாத்திக்கட்டப்பட்ட இடத்தில் கடல்நீரை நிரப்பி காய விடுவார்கள். கடல்நீர் வெயிலின் வெப்பத்தால் நீராவியாகிடும். நிலத்தில் உப்பு படிவுகள் படியும். இந்த உப்பு படிவுகளை எடுத்து சேகரித்து, சுத்தம் செய்து உப்பாக்கி நம் கைகளில் கிடைக்கும்படி செய்றாங்க. கல் உப்பை பயன்படுத்துவது நல்லது. தூள் உப்பை பயன்படுத்தும் சூழல் வந்தாலும் கல் உப்பை பொடித்து பயன்படுத்துவது நல்லது. கடல்நீரிலிருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடிச்சவங்க ஜெர்மானியர்கள்.
நம்ம உடம்பு சரிவர இயங்க தினத்துக்கு 10கிராம் உப்பு போதும். ஆனா, நாம அதைவிட அதிகமாதான் யூஸ் பண்றோம். சென்னை மாதிரியான வெப்பமயமான இடங்களில் வசிப்போருக்கு அதிகப்படியான வியர்வை வரும்.அதன்மூலம் உப்பு சத்து அதிகம் வெளியேறும். அவர்கள் இந்தளவுக்கு உப்பு எடுத்துக்கலாம். இதுவே குளிர் பிரதேசங்களில் வசிப்போர் இந்தளவுக்கு உப்பு எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏன்னா, அவங்களுக்கு வியர்வை அதிகம் வராது. உப்பு நம்மோட ரத்த அழுத்தத்தோடு தொடர்பு கொண்டிருப்பதால அடிக்கடி உப்பின் அளவை பரிசோதிக்கனும். நாம சாப்பிடும் சாப்பாட்டிலிருக்கும் சத்துக்களை உறிஞ்சவும், கழிவுகளை வெளியேற்றவும் பொட்டாசியம், சோடியம்ன்ற உப்புதான் உதவுது. இது ரெண்டும் சரியில்லைன்னா நம்ப உடம்பு பல பிரச்சனைகளை சந்திக்கும். அயோடின் பற்றாக்குறையால் நாம் பாதிக்காம இருக்க, எதுல சேர்க்கலாம்ன்னு யோசிக்கும்போது சர்க்கரையும், உப்பும்தான் முடிவாச்சு. அதிகளவு சர்க்கரை சேர்ப்பது ஆபத்து, அதே நேரம் ஏழைகளால் தினசரி சர்க்கரை சேர்த்துக்க முடியாது., ஆனா உப்பு எல்லாராலும் பயன்படுத்த முடியும். அதனால உப்பில் அயோடின் சேர்க்க முடிவாகி சேர்க்கப்பட்டது.
உப்பு சத்து நம்ப உடம்புல அதிகரிச்சா ரத்த அழுத்தம் அதிகமாகும், சிறுநீரக, இதய சம்பந்தமான நோய் வரும். உடல் திசுக்கள் அதிகளவு தண்ணீரை உறிஞ்சுக்கொள்ளும். ஒருவேளை, உப்பு சத்து குறைவா இருந்தா, லோ பிபி வரும். உடல் திசுக்களின் வலு குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். உப்பு பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டோம். இனி ஆன்மீக காரணங்களை பார்க்கலாம்.
நீரில் தோன்றி நீரிலேயே கரைந்து போகும் இந்த உப்பு நம்ம ஆன்மாவுக்கு ஒப்பானது. கடலே பரமாத்மா. அதனாலதான் உப்பை சமுத்திரமணி, நீர்ப்படிகம், கடல் தங்கம், பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், வருண புஷ்பம், சமுத்திரக்கனி, ஜலமாணிக்கம்ன்னுலாம் சொல்றாங்க. சைவ சமயத்தில் ஸ்பரிச தீட்சைன்னு ஒன்னு இருக்கு. அதாவது குரு, தன் சிஷ்யனின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்ப குரு, சிஷ்யர் ஆகிய இருவர் உடலின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம். உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்குது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம் நம்பிக்கை.
கடவுளை உணர்த்தும் பொருட்களில் உப்பு முதன்மையானது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைய ஆரம்பித்தபோது முதல்ல வந்தது உப்புதான். சங்கும், முத்துவும் உண்டாக காரணி இந்த உப்புதான். பாரபட்சமின்றி எல்லா கடவுளுக்கும் படைக்கப்படுவது உப்பு மட்டுமே. கடல்ல இருந்து தோன்றியதால் மகாலட்சுமிக்கு இணையானது இந்த உப்பு. அதனாலதான் வீடுகளில் உப்பை மிதிக்காதன்னும், விளக்கு வச்ச பிறகு உப்பை கடன், இரவலா கொடுக்ககூடாதுன்னும் சொல்றது. வீட்டுக்கு வரும் புது மருமகளை வீட்டில் விளக்கேற்றியபின் அடுப்படுங்கரையிலிருக்கும் உப்பு ஜாடியை தொட்டு வணங்க சொல்வது இன்றளவும் எங்க ஊர்பக்கம் நடக்குது. உப்பு பானைல வச்சு பணத்தை கடன் கொடுத்தால் கண்டிப்பா திரும்ப வரும்ங்குறதும் ஒரு சாரார் நம்பிக்கை. உப்பை எந்த நாளிலும் கடன் கேட்கவோ கொடுக்கவோ கூடாது. அப்படி கொடுத்தா, மகாலட்சுமி நம்மை விட்டு போய்டுவள்ன்னு ஒரு நம்பிக்கை. முன்னலாம் உப்பை விக்க மாட்டாங்களாம். பண்டமாத்து முறைலதான் வாங்கிப்பாங்களாம். உப்பை மண்பானை இல்லன்னா பீங்கான் ஜாடியில் போட்டு வைக்குறதுதான் நல்லது. இப்பதான் பிளாஸ்டிக் ஜார் வந்திட்டுது. அதும் உப்பினால் காலப்போக்கில் அரிச்சுடும். அப்படி உப்பு வைக்கும் மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' ன்னு பேர் உண்டு.
முன்னலாம் நம்ப பாட்டிங்க, அம்மாக்கள் செவ்வாய், வியாழன், ஞாயிறு மாலைல உப்பு, மிளகாய், அடுப்புக்கரி, தெருமண் கொண்டு திருஷ்டி சுத்தி போட்டு தெருவில் கொளுத்துவாங்க. அதேமாதிரி வீட்டுக்கு திருஷ்டி, துர்சக்திகளின் தொல்லை இருந்தா, உப்பு நீரை பாத்திரத்தில் இட்டு, வீட்டின் நடு மையத்தில் மூன்று நாட்கள் வச்சிருந்து கால்படாத இடத்தில் ஊத்துவதும் நம்ப பாட்டி காலத்து முறை. உப்பு துர்சக்திகளையும், கெட்ட அதிர்வுகளையும் விரட்டும் சக்தி கொண்டது. பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணி ஊத்துவது மாதிரி உப்பு தண்ணி ஊத்தும் பழக்கம் முன்னலாம் இருந்துச்சாம். இப்பதான் அது இதுன்னு காரணம் காட்டி உப்பு தண்ணி ஊத்துறதில்ல.
எதிரிகள் அடங்கி போக உப்பால் கணபதி செய்து வழிபடுவது வழக்கம், நேர்த்திகடனாக கோவில்களில் உப்பும் மிளகும் பலிபீடத்தில் சாத்துவது பொதுவான நடைமுறை. இதனால் எதிரிகளினால் வரும் தொல்லைகள் ஒழியும் என்பது இன்னொரு நம்பிக்கை. இதுமாதிரி உப்பும் மிளகும் சாத்துவது அம்மன் கோவில்களில்தான் பெரும்பாலும் நடக்கும். பித்ருக்கள் வழிப்பாட்டின்போது உப்பில்லாம சமைச்சு படைப்பது வழக்கம். ஏன்னா, நம்மீது இருக்கும் பாசத்தால் நம்கூடவே இருக்க வரும் அவங்களுக்கு உப்பில்லாத சாப்பாட்டை போட்டா அதனால வெறுத்து போயி மீண்டும் இறைவனின் பாதங்களில் சேர்வாங்கன்றது ஒரு நம்பிக்கை. பித்ரு தர்ப்பணம்லாம் கடற்கரையில் செய்வதெல்லாம் உடலும் மனசும் மேம்படயனும்ன்னுதான். அன்றைய தினம் கொடுக்கப்படும் பிண்டத்தில் சாதமும் எள்ளும் மட்டுமே இருக்கும். உப்பு இருக்காது. உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டு முறையில் ஒன்று.
அதிகாலையில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைக்கனும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போடனும். அப்படி செய்தால் வாழ்வின் துயரங்கள் நீங்கும். வடமாநிலங்களில் உப்பைக்கொண்டு செய்யப்படும் பூஜைகள் அதிகம். லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெறுகின்றது. `ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று மந்திரம் சொல்லிக்கொண்டு, கையில் உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று ஒன்றுண்டு. அதேமாதிரி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு விருந்தின்போது உப்பைதான் முதல்ல வைப்பாங்க. உப்பு, அன்னம், நெய் இவற்றை கைகளால் பரிமாறக்கூடாது.
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துங்குறது உப்பின் சுவைக்கு மட்டுமில்ல பதிவுக்கும்தான். உப்பை பத்தி சொல்ல இன்னும் இருந்தாலும்.. இத்தோடு நிப்பாட்டிக்குறேன்.
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)


















































