Monday, December 04, 2017

முன் ஜென்மத்துல என்னவா இருந்தோம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?! - ஐஞ்சுவை அவியல்

போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ! உங்கக்கிட்டலாம் மாட்டிக்கிட்டு இம்சைப்படுறேன். எதாவது வழியிருந்தா, நான் எப்படி இருந்தேன்னு பார்க்கனும்.


காஞ்சி பெரியவாக்கிட்ட, ஒரு பக்தர்  நான் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தேன், என்னவாக இருந்தேன் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?ன்னு கேட்டாராம்.  ,அதுக்கு முன் ஜென்மங்களைப் பற்றி விசாரிக்கும்முன் இப்போது உமக்கு இருக்கும் ஜென்மம் உண்மையா? இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே! நம் எல்லாரிடமும் உள்ள குறை என்னவென்றால், கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம்?! எதிர்காலத்தில் எப்படி இருப்போம் என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்படுறோம்.  ஆனா,  கடந்த காலத்தைப் பற்றியோ, வரப்போவதைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. நிகழ்வது தெரியும். நேற்றும், நாளையும் இன்றைய தினத்தைப் பொறுத்தே இருக்கு.  நேற்றை, அப்போது இன்று என்றே அழைத்தோம். நாளையும் இன்று என்றே நாளைக்குச் சொல்வோம். ஆக,  இறந்தக்காலமும், எதிர்காலமும் இல்லை. நிகழ்காலத்தின் உண்மை இயற்கையை, நிரந்தர, சாஸ்வதமான இருப்பைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நிகழ்காலத்தைப் பொறுத்தே, சென்றகாலம், வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் நிகழ்கின்றபோது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும், நிகழ்காலம் என்ற ஒன்றே இம்மூன்றும். அதனால,  இறந்தக்கால, வருங்கால ஆராய்ச்சிகள் செய்வது, ஒன்று என்ற முதல் எண்ணை விட்டுவிட்டு  எண்ண முயல்வது போல்தான்ன்னு பதில் சொல்றார். அதனால, போன ஜென்மத்துல எப்படி இருந்தேன்னு  ஆராய்ச்சிய விட்டுட்டு உருப்படுற வழியபாரு. 

சரி சரி, ரொம்ப அட்வைஸ் பண்ணாதீங்க..  வெயில்ல சுத்தி சுத்தி கறுத்து போய்ட்டேன்.அதுக்கு ஒரு வழி சொல்லு மாமா..


சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, காய்ஞ்சதும் கழுவினா, நாளடைவில் முகம் சிகப்பாகும். தக்காளியை நல்லா மசிச்சு அதுல எலுமிச்சை சாறு கலந்து கை,கால்ன்னு பூசிக்கிட்டு வந்தாலும் சீக்கிரத்துல சிகப்பாகிடுவே.  முகத்தை கழுவினப்பின் கொஞ்சம் பால் எடுத்து முகத்தில் பூசி கொஞ்சநேரம் கழிச்சு கழுவிவர  முகம் பிரைட்டா மாறும். இதேமாதிரி, வெயில்ல கறுத்த நிறம் மாற இளநீரை பூசிக்கிட்டாலும் நிறம் மாறும்.  சீரகம் , முள்ளங்கியை தனித்தனியா தண்ணீரில் கொதிக்க வச்சு அந்த தண்ணில முகம் கழுவினாலும் முகம் பிரகாசமா மாறும்.  புதினாச்சாறு, எலுமிச்சைச்சாறை சம அளவு எடுத்து கலந்து பூசிவந்தாலும் முகம் சிகப்பாகும். அண்ணாசி, தர்பூசணி, பப்பாளி பழச்சாறுகளை பூசி வந்தாலும் வெயிலால் கருத்த சருமம் சிகப்பாகும்.  இதுலாம் போட்டு பாரு. பழைய மாதிரி சிகப்பாகிடுவே. சரி சிகப்பாகி என்ன பண்ணப்போறீங்க மேடம்..

சினிமாவுக்கு போவேன்... இப்பதான் ரோபோ 2.0 வரப்போகுதில்ல. அதுக்கு போவேன். 

சரி, இந்தியாவில் சினிமா தியேட்டர்ல காமிச்ச இடம் எதுன்னு தெரியுமா?!

தெரியாது மாமா.. 

இந்தியாவில் முதன் முதலில் திரைப்படம் காமிச்ச இடம் பம்பாய் வாட்சன் ஹோட்டல் (1896 ஜூலை 7) . நீதான் ஷோபா, சேர்ல துணி போட்டு வைக்குறேன்னு பார்த்தா, எல்லா பொம்பளைங்களும் அப்படிதான் போல! இந்த படத்தை பாரு.
நீங்க ரொம்ப புத்திசாலிதான். ஒத்துக்குறேன். சரி  நான் கேட்கும் விடுகதைக்கு மட்டும் பதில் சொல்லுங்க பார்ப்போம்..  ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க... ஸ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடலும் தூங்க, ஒருவள் மட்டும் தூங்காமல் விழித்திருப்பாள். யார் அவள்?!
விடையை யோசிச்சு வைங்க. நான் வேலைலாம் முடிச்சுட்டு வரேன்...


நன்றியுடன்,
 ராஜி

17 comments:

  1. அவியலை ரசித்தேன். எப்படி சிவப்பாவது எனும் ரகசியத்தை முதலிலேயே சொல்லி இருந்தால் சிவாஜி ரஜினிக்கு சொல்லி இருப்பேன்!!!

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் சிவப்பா பொறந்து, வெயில், தூசில கறுத்த சருமத்துக்கு... பிறப்பிலயே கருப்பா பொறந்தவங்களுக்கில்ல. எங்காளுகூடதான் சந்தனம், தக்காளி, முட்டை.........ன்னு ட்ரை பண்ணாரு. அதுக்காக வண்ணமாவா ஆயிட்டாரு

      Delete
  2. இதோ சந்தனம் வாங்க கடைக்கு புறப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு... அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்ன போறீங்கன்னு சொல்லுங்க

      Delete
  3. ரசித்தேன் சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. துவைத்த துணியையும் போடுவாங்க ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. துவைத்த துணிகள் மட்டும்தான் போடுவேன்

      Delete
  6. ஜென்மத்தைப் பற்றிப் படித்தபோது சைவ சித்தாந்தத்தில் பேசப்படுகிற மூன்றுவகையான வினைகள் நினைவிற்கு வந்தன.

    ReplyDelete
    Replies
    1. அதை எங்களுக்கு சொல்லலாமேப்பா

      Delete
  7. எதுக்கு சிவப்பாகணும் சிவப்பு என்றால் தக்காளி நிறமா

    ReplyDelete
    Replies
    1. தக்காளி நிறமல்லப்பா.

      Delete
  8. Raji ma, Asaiyaa vanthen. janmam kadaiththeRa. hahahahaha.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். இங்கயே கடைந்தேற முடியாமதான் இருக்கேனாக்கும்

      Delete
  9. உருப்படுற வழியை பார்க்கிறேன்.
    துவைத்த துணியை போட்டு மடித்து வைப்பேன்.

    ReplyDelete
  10. அவியல் நல்லாருக்கு சகோதரி/ராஜி..

    கீதா: அட நானும் இப்படித்தான் சேர்ல துவைத்த துணிகளைப் போட்டு மடிச்சு வைச்சுட்டு அப்புறம் ஷெல்ஃபுக்கு மாத்துவேன்...

    ReplyDelete