ஆகஸ்ட் 1 இந்த நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய விசயம் 3 இருக்கு. அது என்னன்னா 1. இன்னில இருந்து ஒரு வாரத்துக்கு தாய்ப்பால் வாரம் தொடங்குது. 2. சுதந்திர போராட்ட தியாகி லோகமான்யபால கங்காதர திலகர் அவரின் நினைவு நாள். 3 . இன்று உலக காகித தினம்.. இன்னிக்கு பதிவில் இந்த 3 டாப்பிக்கையும் சுருக்கமா பார்க்கலாமா?! இல்ல ஒரே நாளில்ல் 3 பதிவா போட்டுடலாமா?!ன்னு யோசிச்சதில் நீங்கலாம் பாவம்ன்னு தோணுச்சு. அதனால, தாய்ப்பால் பத்தி சனிக்கிழமையும் மத்த ரெண்டு டாபிக்கை பத்தியும் இன்னிக்கு பதிவில் பார்க்கலாம்... கொஞ்சம் சுருக்கமா கொடுக்க முயற்சி பண்றேன்.
'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) நினைவு தினம் இன்று. அவரை பத்தி சுருக்கமா பார்ப்போம். பால கங்காதர திலகர். 1856-ம் ஆண்டு ஜூலை 23ல் பிறந்தார். சிப்பாய் புரட்சின்ற முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர். அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிர்த்து வந்தார் . பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877-ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார். ஆனால் திடீரென்று கணித ஆசிரியராக முடிவுசெய்தார். பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கணிதத்தைக் கற்பித்தார். அதேநேரத்தில் விடுதலைக்காக போராடி சிறைச்சென்றவர்களுக்காக வாதாடி அவர்களை சிறை மீட்டார். சுதண்ட்
மேற்கத்திய கல்வி முறை இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக எண்ணினார். இந்தப் பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது. இந்தப் பள்ளியைத் திலகர் கல்லூரியாக உயர்த்தப் பாடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார். நல்ல கல்வியே சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டார் திலகர். கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் 'கேசரி' என்ற மராத்தி இதழையும், 'மராட்டா' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன. மேலும், தன் தோழர்களான அகர்கர், சமூக சீர்திருத்தவாதி விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் ஆகியோர் ஒத்துழைப்புடன் டெக்கான் எஜுகேஷன் சொஸைட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அநேகருக்கு ஆங்கில மொழியையும் முறையான கல்வியையும் கற்றுக்கொடுத்தார். 1890ல் இந்திய காங்கிரசில் சேர்ந்தார்.
நாடு முழுதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கத்தினை பரப்பவும், மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது. இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார். 1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறலை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் இல்லாத அந்த காலத்துலயே பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆதார் கார்டு, பஸ் பாஸ், ஃப்ளைட் டிக்கட், சினிமா டிக்கெட், பணம், சாமி படம் முதற்கொண்டு காரிய பத்திரிக்கை வரை எல்லாமே காகிதத்தால் ஆனது. காகிதத்தின் பயன்பாடு வருடத்துக்கு வருடம் 2% அதிகரிக்குது. தேவை இல்லாமலே வீணாக்கப்படுவதில் தண்ணீருக்கு அடுத்தபடியான இடம் காகிதத்துக்குண்டு. ஒவ்வொரு அலுவலக பணியாளர்களும் தினமும் 50ஷீட் பயன்படுத்துறாங்க. இப்படி காகிதத்தின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணம் கம்ப்யூட்டர் மயமானதும், நகலெடுக்கும் மெஷினின் பயன்பாடும் அதிகரிச்சதுதான். நாம பயன்படுத்தும் காகிதத்தைவிட பயன்படுத்தாமலேயே வீணாக்கும் காகிதம்தான் அதிகம். அப்படி ஒவ்வொரு நாளும் நாம வீணாக்கும் காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ. ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க 2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை. அப்படின்னா ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைச்சா, நல்லா வளர்ந்த 17 மரங்களோடு, 30,000 லிட்டர் தண்ணீரும், 3 பெட்ரூம் கொண்ட விட்டுக்கு ஆண்டு முழுக்க ஆகும் கரண்ட் செலவும் மிச்சமாவதோடு 95% காற்றும் மாசுபாடுவது குறையும்.
அதனால், காகிதப் பயன்பாட்டைக் கூடிய மட்டும் குறைக்கனும். முடிந்தவரை காகிதத்தை வீணாக்காமலிருப்பதும், பயன்படுத்திய காகிதத்தை மறுசுழற்சி செய்யவும் பழக்கப்படுத்திக்கனும். ஒரு நாளைக்கு ஒரு ஷீட் காகிதத்தை நாம சேமிச்சா, ஓர் ஆண்டுக்கு 40,000 மரங்களைக் காப்பாத்த முடியும். ஒவ்வொரு தேவைக்கும் புதிய காகிதத்தை எடுக்காம, எழுதி மிச்சமிருக்கும் பக்கத்தில் எழுத பழகனும். இது டிஜிட்டல் உலகம் எல்லாத்துக்குமே பிரிண்ட் அவுட் எடுப்பதற்கு பதிலா போன்ல ஆதார் கார்டு மாதிரியான விவரங்களை காட்டலாம். பிள்ளைகளின் நோட்டு புத்தகத்தில் மிச்சமிருக்கும் பக்கத்தை கிழிச்சு வச்சு வீட்டு கணக்கு மாதிரியான விசயங்களுக்கு பயன்படுத்தலாம். இப்படி எத்தனையோ விதத்தில் மிச்சப்படுத்தலாம்.
பதிவு நீண்டுக்கிட்டே போகுது. அதனால, காகிதம் உருவாகும் முறையை, அதன் வரலாற்றினை மற்றொரு பதிவில் விரிவா பார்க்கலாம். ஒரு காகிதத்திலும் ஒரு மரத்தை வீணாக்குறோம்ங்குறதை மனசுல வச்சுக்குவோம்ன்னு காகித தினமான இன்னிக்கு முடிவெடுத்து, மரங்களை காப்பாத்துவதோடு சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.
நன்றியுடன்,
ராஜி
காகிதவிசயம் பிரமிக்க வைக்கிறது சகோ.
ReplyDeleteகாகிதம் பற்றிய பதிவு பெர்ர்ர்ர்ருசா வரும்ண்ணே. அப்ப பிரமிச்சுக்கலாம்.
Deleteகாகிதம் - ஒவ்வொரு நாளும் எத்தனை வீணாக்குகிறோம்....
ReplyDeleteநல்ல பகிர்வு.
நிறைய வீணாகுதுண்ணே. முன்னலாம் விளம்பரத்துக்கு வரும் நோட்டீஸ் பின்னாலலாம் எழுதுவோம். இப்ப அப்படி இல்ல. ஏ4 சீட்டையே ரெண்டு வரிக்கு உபயோகிக்குதுங்க
Deleteசிந்திக்க வேண்டிய தகவல்கள் சகோதரி... தொடர்க...
ReplyDeleteதொடரும்ண்ணே
Deleteகாகிதப்பயன்பாடு வேண்டாம் என்று அலுவலகங்களைக் கணினி மயமாக்கினாலும், இந்த ஆடிட் மக்களுக்கு கணினியில் ஆபரேட் செய்யத் தெரியாததால் கணினி வேலை சரி, காகிதத்தில் ஒரு காபி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரபூர்வமாகச் சொல்லிக் கடுப்பேற்றுகிறார்கள். ரூல்ஸை கட்டித் தொங்கும் மடையர்கள்.
ReplyDeleteஆமாம் சகோ. இப்பலாம் எல்லாமே கைப்பேசி, ஆப்ன்னு ஆனப்பின்னும் ஏன் இப்படி பண்றாங்கன்னு புரில
Deleteபாலகங்காதர திலகர் அரிய தகவல்கள் ராஜி க்கா
ReplyDeleteகாகிதம் ...சிந்திக்க வேண்டும் ..
இப்போ பசங்க பள்ளியில் கூட செய்திகள் காகிதத்தில் இல்ல எல்லாம் APP மாயம் தான்..
அந்த வசதி எல்லா இடத்திலயும் இல்ல அனு.
Delete/தேசியவாத இயக்கத்தினை பரப்பவும், மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார்/ எதையும் மதத்தோடு சம்பந்தப் படுத்தினால் தான் நம்மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்து கொண்டவர்
ReplyDeleteநம் மக்களின் டிசைன் அப்பிடிப்பா. ரமணா படத்தில் வரும் வாசகமான செண்டிமெண்டல் இடியட்ஸ்ன்ற வார்த்தைக்கு பச்சக்குன்னு நம்மாளுங்க பொருந்தி போவாங்க
Deleteஇப்போது பேப்பர்லெஸ் என்று கூறி அறியாதவரையும்கஷ்டப்படுத்துகிறார்கள்
ReplyDeleteஅப்படி கஷ்டப்படுத்தியும் நிறைய காகிதம் வீணாகுதுப்பா. எல்லாமே கணினியில் பதிஞ்சுக்கலாம், ஆனாலும் அப்ளிகேஷனை பில் பண்ணு, இதை ஜெராக்ஸ் வை, அதை கொண்டு வான்னு இம்சை பண்ணுறாங்க
Delete