”பிரியாணி” சுமார் பத்து ஆண்டுகளுக்கு முந்தி வரை பணக்கார உணவுப்பண்டத்தில் முதலிடத்தில் இருந்துச்சு. ஆனா, இன்னிக்கு பிரியாணி மாதிரியான ஈசியா செய்யக்கூடிய, ஈசியா கிடைக்கக்கூடிய உணவுன்னு வேறெதும் இல்ல. இன்னிக்கு வாரத்தில் ஒருநாள் பிரியாணி செஞ்சுடுறாங்க. வெளில இருந்தும் கிடைச்சுடுது. வடை, பாயாசம், கூட்டு, பொரியல், அவியலோடு பாரம்பரிய உணவுதான் கிடைக்க மாட்டேங்குது. அதில்லாம குறைஞ்சது 45 ரூபா இல்லாம சாப்பாடு கிடைக்காது. ஆனா 25ரூபாய்க்கு குஸ்கா கிடைச்சுடுது. பிரியாணின்ற பேர்ல பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலையோடு தக்காளி சோறையும், புளிச்சோறையும் பசங்க விரும்பி சாப்பிடுறாங்க.
கொஞ்சம் லேட்டா எழுந்திருந்தாலோ இல்ல ஒரே ஒருத்தருக்கு சமைச்சு டப்பா கட்டனும்ன்னாலோ ஆபத்பாந்தவனாய் கைக்கொடுப்பது இந்த பிரியாணி வகைகள்தான். எல்லா பொருளும் இருந்தால் அரை மணிநேரத்துல ரெடியாகிடும். சிக்கன், மட்டன், மீன், வெஜிடபிள், பன்னீர்ன்னு விதம்விதமா பிரியாணி இருக்கு. இன்னிக்கு காளான்ல ஈசியா செய்யக்கூடிய பிரியாணிய பார்ப்போம்..
தேவையான பொருட்கள்
காளான்
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினா
சீரக சம்பா அரிசி
தயிர்
எலுமிச்சை பழம்
உப்பு
எண்ணெய்
பட்டை
லவங்கம்
ஏலக்காய்
பிரியாணி இலை
வெங்காயம், தக்காளியை கழுவி நீளம் நீளமா வெட்டிக்கனும். ப.மிளகாய கீறிக்கனும். காளானை சுத்தம் பண்ணி நீளம் நீளமாய் வெட்டிக்கனும். அடுப்பில் குக்கரை வச்சு சூடேத்திக்கனும்..
தேவையான அளவு எண்ணெய் ஊத்தி, சூடானதும் பட்டை லவங்கத்தை போட்டு சிவக்க விடனும்.
அடுத்து ப.மிளகாயை போட்டுக்கனும்.
வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்... உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வெங்காயம் வதங்கிடும். புதினா சேர்த்துக்கிடனும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கனும்...தக்காளி சேர்த்து நல்லா வதக்கிக்கனும்...
காளான் சேர்த்து நல்லா வதக்கிக்கனும். காளான் லேசா தண்ணி விடும்..
மிளகாய் தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கனும். தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கனும். தேவையான உப்பு சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடனும். குக்கரில் சமைப்பதுன்னா ஒரு டம்பளர் அரிசிக்கு 1 1/2 டம்ப்ளர் தண்ணி சேர்த்துக்கனும். பாத்திரம்ன்னா ஒரு டம்ப்ளர் அரிசிக்கு 2 டம்ப்ளர் தண்ணி சேர்த்துக்கனும்.
தண்ணி கொதிச்சதும் அரிசியை கழுவி சேர்த்துக்கனும். குக்கர்ன்னா ஒரு விசில் வரவிட்டு சிம்ல அஞ்சு நிமிசம் வச்சுக்கனும். பாத்திரம்ன்னா அரிசி நல்லா கொதிக்கும் வரை விட்டு நல்லா மூடி மேல கனமான பாத்திரத்தை வச்சிடனும்.
அஞ்சு நிமிசம் கழிச்சு அடுப்பை அணைச்சுட்டு, கொஞ்சம் சூடு ஆறினதும் கரண்டியால் மெல்ல கிளறி விடனும். உதிர் உதிரா காளான் பிரியாணி தயார்.
பிரியாணிக்கு அரிசி ரொம்ப நேரம் ஊற விடக்கூடாது. அரிசியை உலையில் போட்டுட்டு அடிக்கடி கிளறி விடக்கூடாது.
குருமா, சிக்கன் மட்டன், இறால் கிரேவியோடு பச்சடியோடு சாப்பிட நல்லா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி
ReplyDeleteகாளான் பிரியாணி மிக நன்றாக வந்திருக்கிறது
டிபன் கட்டிக் கொண்டு போவதற்கு பிரியாணி ஈஸியாக இருக்கும் நம்ம பாரம்பரிய சமையல் என்றால் சாம்பார் கூடு பொரியல் என்றால் பிரச்சனைதான் எல்லாம் தனித் தனி டப்பாவில் கட்டி சென்றால்தான் சாப்பிட முடியும்
ReplyDeleteம்ம் அதேதான். வெரைட்டி ரைசா கொடும்மான்னுதான் பிள்ளைங்க கேக்குது. இப்பலாம் வாரம் ஒருநாள் கீரை, மத்த நாளில் சாம்பார், காரக்குழம்போடு சாதம் கொண்டு வரனும்ன்னு ஸ்கூல்ல ஆர்டர்
Deleteகாளான் போட்டு கறி மட்டும் செய்திருக்கிறேன்! ஆரணிப் பக்கம் வந்தால் உங்கள் வீட்டுக்கு வந்து இதைச் சாப்பிடறேன்...!!
ReplyDeleteகண்டிப்பா வாங்க. என்ன வேணுமோ அதைலாம் சமைச்சு தரேன்
Deleteஆகா
ReplyDeleteஅருமை
நன்றி
சாப்பிடாமலேயே அருமையா?!
Deleteஆசையை தூண்டுகிறது காளான் பிரியாணி.
ReplyDeleteஇதென்ன பிரமாதமா?! அரை மணி நேரத்தில் செஞ்சுடலாம். ஈசிதான்
Deleteகாளான் பிரியாணி.... பார்க்க நல்லாதான் இருக்கு. செய்யும் யோசனை இல்லை.
ReplyDeleteஸ்ரீராம் நீங்க போகும்போது சொல்லுங்க, நானு வந்துடறேன்! :)
தாரளமா வாங்க. வரும்போது அண்ணியையும், ரோஷிணியையும் கூட்டி வாங்க. ஆனா, என் சமையலில் வெங்காயமும் பூண்டும் அதிகமா இருக்கும். உங்க வசதி எப்படி?!
DeleteIf you do cook in Aluminum or Indalium, please avoid...as it not good for health. Thick ever-silvervessels with copper bottom is a good choice. 'Thin' ever-silver vessels are not fit for cooking!
ReplyDeleteஎவர் சில்வர்ல சமைச்சா கவனமா இருக்கனும். இல்லன்னா அடிபிடிச்சுடும். என்னவோ தெரில அது எனக்கு செட் ஆகல.
Deleteஇனி பழகிக்குறேன். சரி இது ஆடி மாசம். ஆடி சீராய் எவர்சில்வர் குக்கர் செட் ஒன்னை அனுப்பி வைக்கவும்.
இப்படி செய்வதால் தான் விலையும் ஏறுகிறதோ...?
ReplyDeleteஇருக்கும் இருக்கும்
Delete