Thursday, September 06, 2018

வையர் கூடை பின்னுதல் முன்னோட்டம் - கிராஃப்ட் கார்னர்



எங்க போனாலும் எனக்கு வயர்கூடை கையில் இருக்கனும். வீட்டிலிருப்பது பழசாகி நைந்து போய் எப்ப வேணும்ன்னாலும் உசுர் போகும் நிலையில் இருப்பதால் புதுசா ஒரு கூடை பின்ன வேண்டிய சூழல்..  இந்த வாரம் அந்த முயற்சியில்தான்.... இப்ப சும்மா ட்ரையல் படம்தான்.. அடுத்த வாரம் கூடை முழுசும் பின்னி விரிவா பதிவாக்கிடுவேன்.


கூடை பின்னும் வயர் 40ரூபாய்க்கு கலர் கலரா  கிடைக்குது. வயர்ல ஒரு பக்கம் பள்ளமாவும், இன்னொரு பக்கம் கொஞ்சம் மேடாவும் இருக்கும்.  வயர் பின்ன பழகுறவங்க சின்ன சின்ன துண்டுகளில் முதல்ல பழகிக்கனும். 

ஸ்டார் கூடை, நெல்லிக்காய், சிவன் கண், கிராஸ் லைன், பிஸ்கட் முடிச்சு, அடுக்கு மல்லி முடிச்சு, பூசணிக்காய் கூடை, பூஜைக்கூடை,  ட்யூப் வச்சதுன்னு விதம் விதமா கூடை பின்னலாம். 
ஒரு கட்டு வயர்ல செஞ்ச கூடை  100 ரூபா வரை விக்கலாம். அது பெரும்பாலும் பிள்ளைகளுக்கு மதிய சாப்பாடு கொண்டு போகத்தான் வாங்குறாங்க. 
மிச்சம் மீதி வயர்ல நிலைவாசப்படி தோரணம், சாமிக்கு மாலை, யானை, பூச்சாடின்னு செய்யலாம். 

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றா பிளாஸ்டிக் வயர் கூடையான்னு கேக்கக்கூடாது. தினத்துக்கு ஒரு கவரைவிட அஞ்சாறு வருசத்துக்கு ஒரு கூடைன்றதால பெருசா சுற்றுச்சூழல் மாசுப்படாது. 
தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் அவரும்முன் மாலை வேளையில் படிப்பு வேலைலாம் முடிச்சுட்டு, தெரு பெண்களோடு சேர்ந்து  இந்த  கூடை பின்னுவதை பார்த்திருக்கோம்.  ஆனா இப்பத்திய பசங்க ட்வி, மொபைல்ன்னு இருக்குதுங்க.
2000ம் ஆண்டு தொடக்கம் வரை எங்க போனாலும் கையில் பை ஒன்றை கொண்டு போவோம். மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பைக்கு அடிமையானதோடு சோம்பேறியாகவும் ஆகிட்டோம். கைகளில் பைகளை கொண்டு போவது கௌரவக்குறைச்சலா நினைக்க ஆரம்பிச்சுட்டோம்.  அப்பலாம் எல்லார் வீட்டிலும் இந்த மாதிரி கூடை இருந்துச்சு.  
அடுத்தடுத்த வாரத்தில் வயர் கூடை பின்னும் நுணுக்கத்தை  படத்தோடு சொல்றேன்., மத்தவங்களுக்காக இல்லாட்டியும் என் பசங்களும் தெரிஞ்சுக்கனும்ன்னுதான். ஏன்னா, என் பொண்ணுங்களுக்கே இதில் ஆர்வமில்லை:-(  பைசாவை கொடுத்து எதையும் வாங்கலாம்ன்னு நினைக்கும் தலைமுறை அவங்க. ஆனா, எத்தனை ரூபா கொடுத்தாலும் மனத்திருப்தியை வாங்கமுடியாது. அந்த மனத்திருப்தி சின்ன சின்ன செய்கை, மெனக்கெடலால்தான் கிடைக்கும்

நன்றியுடன்,
ராஜி


9 comments:

  1. அழகிய உபயோகமான கலை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நானும் இரண்டு கூடை பின்னியிருக்கேனாக்கும்...!

    ReplyDelete
  3. அழகான பயன் தரும் பொழுது போக்கும் அல்லவா? சின்ன வயதில் ஊரில் இருந்த போது என் அம்மா பனை ஓலைகளால் கூடை,பெட்டிகள்,தென்னோலைகளில் கூரை வேயப்பயனபடும் கிடுகுகள் பின்னி கண்டிருக்கின்றேன். நானும் ஆரம்ப நிலை பின்னல் கற்றீருந்தேன். இப்போது மொத்தமாக எதுவும் நினைவில் இல்லை. அதே போல் பனை ஓலை, தென்னோலைகளில் இப்படி பெட்டிகள் பின்னி விளையாடி இருக்கின்றோம்.

    ReplyDelete
  4. ஒயர் கூடை பின்னுவதையே சிறு தொழிலாகக் கொண்டு பிழைத்தவர்கள் ஏராளம்
    ஆனால் அது ஒரு காலம்

    ReplyDelete
  5. மனதை ஒரு மனப்படுத்த இது உதவும்

    ReplyDelete
  6. நானும் முன்பு நிறைய அம்மாவிடம் கற்றுக் கொண்டு பின்னி இருக்கிறேன்.
    ஆறுஇதழ் கூடை நெல்லிக்காய் கூடை பின்னி இருக்கிறேன். நாங்கு இதழ் இப்போது நீங்கள் பின்னி காட்டியது. பின்னி இருக்கிறேன். பூஜைகூடை பின்னிஇருக்கிறேன்.
    இப்போது நினைவு இருக்கா என்று பார்க்க ஆசையாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு கா..எனக்கும் தெரியாது..

    ReplyDelete
  8. எல்லோரும் ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் இதை ஞாபகபடுத்தி மீண்டும் வைரலாக ஆக்கி விட்டுவிடுவீங்க போல இருக்கே.... சரி சரி அடுத்த பதிவில் ஸ்டெப் ஸ்டெப்பாக படங்கள் இட்டு விளக்குங்கள்... வயதான காலத்தில் இதை செய்ய முயற்சிக்கிறேன்

    ReplyDelete