Thursday, April 04, 2019

லஞ்ச் பேக் - கைவண்ணம்

பின்னாடி வீட்டில் இருக்கவுங்க  பள்ளிக்கு போகும் தன் பிள்ளைகள்  மதியம் சாப்பாடு கொண்டு போக  லஞ்ச் பேக் வேணும்ன்னு கேட்டாங்க.   அதனால் போன வாரம் முழுக்க 2 கூடைதான் பின்னினேன். 


பிள்ளைகளில் பொண்ணு 4வதும், பையன் 2வதும் படிக்குறாங்க.  ஒரு ரோலில் அளவுள்ள ரெண்டு  கூடை கேட்டாங்க. வெவ்வேறு கலர்ல, மாடல்ல ரெண்டு கூட போட்டு கொடுத்தாச்சு.
இது கிராஸ் கட் கூடை.... 
ஸ்கூலுக்கு போக ரெண்டு கூடையும் ரெடி..

நாந்தான் ஸ்கூலுக்கு படிச்சு நல்ல புத்திய வளர்த்துக்கல. இதுவாவது நல்ல புத்தியோடு பொழைச்சுக்கட்டும்...

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. அருமை சகோதரி... பாராட்டுகள்...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சும்மாப் பின்னிட்டீங்க. :)

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மாமாவை பின்னிய பழக்கம் கைக்கொடுக்குதுப்பா

      Delete
    2. //மாமாவை பின்னிய பழக்கம் கைக்கொடுக்குதுப்பா//

      அச்சா, பஹூத் அச்சா.

      அவரைப் பின்னிப் பெடலெடுப்பது எப்போதெல்லாம்?

      தங்களுக்குத் தலை வாரி பின்னி விடும் போதா? :)

      Delete
  5. கைப்பிடிகள் குட்டையாக இல்லாமல் நீளமாக அமைந்திருப்பது ப்ளஸ்.

    கைவண்ணம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. குட்டையான ஹாண்ட் பேக் இப்ப புழக்கத்தில் இருக்கே! அதை கண்டாலே எரிச்சல் வரும். அதை தொடவே மாட்டேன். அதனாலே வயர்கூடைக்கு நீளமான கைப்பிடி வைப்பேன்.

      இதையே தொழிலாய் வச்சிருக்கவுங்க வயரை மிச்சப்படுத்த குட்டையா கைப்பிடி வைக்குறங்க.

      Delete
  6. கூடைக்கு பக்கத்திலேயே... பா.ம.க. சின்னம் இருக்குதே தேர்தல் விளம்பரமா ?

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சாமி! புதுசா எதாவது கிளப்பி விட்டுடாதீர். அது மாம்பழம் இல்ல. ஆரஞ்ச்

      Delete
  7. அழகான கலர் காம்பினேஷன் ராஜி. சூப்பர் கூடைகள்! பாராட்டுக்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கூடை பின்னுறதைவிட அதுக்கு கலர் காம்பினேஷன் தேடுறதே பெரிய இம்சைப்பா

      Delete