Friday, June 21, 2019

தல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி


பெரிய மகளுக்கு நிச்சயதார்த்தம், சின்னவளுக்கு காலேஜ் வேட்டைன்னு அலைஞ்சு திரிஞ்சதால பிளாக் பக்கம் வரமுடில.  என் உயிர், ஹாபி, எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு டயலாக்லாம் விடுவே. பொண்ணுங்க பிசில என்னைய மறந்துட்டே பார்த்தியான்னு பிளாக் கோவிச்சுக்கும் முன்னாடி  வந்துடனும்ன்னு இதோ வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன். இன்றைய பதிவில் நாம பார்க்கப்போறது,  காளிகேசம், காளிகோவில். கன்யாக்குமரி பற்றிய எழுதிய பதிவுகளில் இந்த கோவிலை பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். மறந்துபோனது நியாபகம் வந்தது.கூடவே ஸ்ரீகாளி அம்மனின் அருளும் இருக்கவே இந்த கோவிலைப்பற்றி எழுத முடிந்தது.. நகர்க்கோயில் வடசேரியிலிருந்து பாலமோர் ரோடு வழியாக செல்லும் பாதையில் சுமார் 30 கி.மீ தொலைவில் இருக்கிறது கீரிப்பாறை, அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காளிகேசம் காளிகோவில் அம்மன்கோவில்.
வாங்க! கோவிலுக்குள் போகலாம் .முதலில் இங்கு செல்வதென்றால் கீரிப்பாறை வனத்துறை அலுவலக செக்போஸ்டில் டிக்கெட் வாங்கி, நம்மோட வண்டியை அவங்க சோதனை செய்தபின்னே உள்ள விடுறாங்க. மதுபாட்டில்கள், தீப்பெட்டி, பிளாஸ்டிக் மாதிரியான சில பொருட்களை நாம கொண்டு போக தடை விதிக்கிறாங்க. வாகனத்துக்கு மட்டும் நுழைவு கட்டணமில்லை. நாம் எத்தனை பேர் செல்கிறோமோ அத்தனை பேருக்கும் நுழைவு கட்டணம் வாங்குறாங்க. சிலசமயம் கூட்டமாக செல்ல அறிவுறுத்துகிறார்கள். முன்னலாம் ‘குடி’மக்களின் தொந்தரவும், காட்டுயானைகள் எப்பொழுது வேண்டுமானாலும் ரோட்டில் நடமாடும் என்பதாலும் முடிஞ்சவரை கூட்டமாய் போகச்சொல்றாங்க. .ஏன்னா இப்ப கோவில் இருக்கும் இந்த இடம் யானைகள் இருக்கிற வனப்பகுதியா இருந்ததாம். இப்பயும் இந்த பகுதிகளில் ஓரிரு யானைகள் இருக்கு. அவை உணவு, தண்ணீர் வேண்டி இந்த பக்கமா போகும்ன்னுதான் இந்த அட்வைஸ். ஒருவழியாக சோதனை எல்லாம் முடிந்து எங்கள் வாகனத்தை அனுமதித்தனர்.

ரோட்டின் இருபக்கங்களிலும் மலைகள், சாலைகளை மறைத்து நிற்கும் மரங்கள், காட்டுச்செடிகள், கொடிகள்ன்னு என பார்ப்பதற்கே கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது. இங்க கோடைக்காலங்களில் கோவிலுக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னான்னா,எப்பொழுதும் காட்டுவிலங்குகள்கிட்ட கவனமாக இருக்கணும். கீரிப்பாறை, மாறாமலை, வெள்ளாம்பி போன்ற சுற்றுவட்டார இடங்களில் நிறைய மலைவாழ் மக்கள் இருக்கிறாங்க. இவங்களை காணிக்கராங்கன்னு இங்க சொல்றாங்க, இங்க, வாழை, கிராம்பு ஏலக்காய் ,நல்லமிளகு எல்லாம் பயிர்செய்யுறாங்க ,இவங்ககிட்ட இந்த பொருட்களைவாங்கினா ரொம்ப சுத்தமா இருக்கு.கீரிப்பாறைக்கு மேலே நிறைய எஸ்டேட்கள் இருக்கு,அங்கே கிராம்பு பறிச்சு காயவெச்சு மூட்டை மூட்டையா மலைமேலிருந்து கீழே எடுத்துக்கிட்டு வந்து விக்கிறாங்க. மேலும் இந்த இடத்தை சுத்தி ரப்பர் மரங்கள் நிறைய இருக்கு. ரப்பர் பால் எடுக்கிறதுதான் அவங்க முக்கியமான தொழிலா இருக்கு.
அதெல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டே போகும்போது ரொம்ப கவனமா போகணும் ஏன்னா இப்ப கோடைகாலம்கிறதுனால ஓடை எல்லாம் வறண்டு போய் இருக்கு. அதனால யானை, கரடி போன்ற காட்டு மிருகங்கள் தற்போது தண்ணீர் தேடியும், உணவிற்காகவும் மக்கள் நடமாட்டம் இருக்கிற இந்த ரோட்டுக்கு வர ஆரம்பிக்கும்.இயற்கை எழிலை ரசிக்கிறவங்க சுற்றுப்புறங்களிலும் கொஞ்சம் கவனமாய் இருப்பது அவசியம்.

காகாளிகோவிலுக்கு கோவிலுக்கு போகும்முன் இந்த பாலத்தை கடந்துதான் போகணும். நிறையபேர் இதுல இறங்கி போட்டோக்கள் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. மலையிலிருந்து பாறைகளின் வாழேயாக சலசலத்து, ஓடிவரும் இந்த ஆற்றை பார்த்தவுடன், ராஜாதி ராஜா படத்துல வரமாதிரி ,மலையாள கரையோரம் தமிழ் பாடும் அருவின்னு பாடத்தோணும்,அவ்வுளவு அழகு இந்த இடம்!!

ந்த பாலத்தை தாண்டி ஒரு சமப்பகுதி நிலப்பரப்பு இருக்கு. அதுவழியா நீரோடை ஓடிகிட்டே இருக்கு. மழைக்காலங்களில் நிறைய வெள்ளபெருக்கு இருப்பதினால் இந்த இடத்தை கடந்து செல்வது கடினமாக இருக்குமாம். இந்த பகுதிவழியா நீரோடை ஒன்று ஓடுகிறது. அதில் கால் நனைச்சு போறது மலையிலிருந்து வருகிற சில்ங்கிற குளுமையான தண்ணி மனசுக்கு இதமாக இருக்கு. ரொம்பநேரம் அங்க இருந்து குளிச்சுட்டு வர ஆசைதான். ஆனா, காட்டு யானைகள் சர்வ சாதாரணமா வரும்ன்னு பயம் காட்டினதால அந்த இடத்தைவிட்டு நகர்ந்துட்டோம்.

இம்மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறு இங்குள்ள மலை சரிவுகளில் விழுந்து, பலவிதமான மூலிகை செடிகளுக்கிடையே ஓடிவருவதால் இயற்கையாகவே மருத்துவ குணம் உள்ளதாக இருக்கு இந்த தண்ணீர். வானுயர்ந்த மரங்களும், பெரிய மலைகளும் , மலையேற்றுபவர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். சிலசமயம் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வத்தையும் இங்கே பார்க்கலாம் என்றும் சொல்றாங்க.


ருவழியா கோவிலுக்கு வந்துட்டோம். இயற்கை எழில்சூழ நீரோட்டத்தின் கரையிலே அழகே வடிவெடுத்து வந்ததுப்போல் காளியம்மை மற்றும் சிவன் கொலுவீற்று இருக்கிறார்கள். இங்க நடைதிறப்பு பற்றிய அறிவிப்பும் எழுதப்பட்டுருக்கு. நாங்கள் சென்ற நேரம் அங்க பூஜைகளை முடிந்து பெரும்பாலோனோர் திரும்பிக்கொண்டிருந்தனர். கோவிலை சுற்றிவந்து அம்மனை கும்பிட்டுவிட்டு, நீரோடையில் இறங்கி கால்களை நனைத்து அறிவிலிருந்து வரும் வெள்ளத்தை நன்றாக ரசித்து இயற்கை அழகை உள்வாங்கிக்கொண்டோம்.

நாங்கள் சென்ற நேரம் மதியம் எல்லோரும் பூஜை முடித்து சென்றுக்கொண்டிருந்தனர். அன்று அம்மனுக்கு ஏதோ விஷேச பூஜைபோல!! புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அழகாக காட்சியளித்தார்..

அருவியில் இறங்கி ஆசைதீர அங்கும் இங்கும் ஓடுவது சிறுவயது நியாபகத்தை நினைவூட்டியது. இப்ப கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருந்தது. இங்க நாங்கள் தவறவிட்டது, வட்டப்பாறை அருவியும், கீரிப்பாறை காட்டில் சுமார் 500 வருடங்களை கடந்த மரம் ஒன்றையும்தான் :-(

இந்த இடத்துக்கு காளிகேசம்ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னா, இங்க இருக்கும் மலையை காளியாய், அதில் உருவாகும் அருவியை காளிதேவியின் கூந்தல்ன்னும் உருவகப்படுத்தி இந்த இடத்துக்கு காளிகேசம்ன்னு பேர் உண்டானது. தலைமுடிக்கு கேசம்ன்னும் ஒரு பேர் உண்டுன்னு நம்மில் எல்லாருக்குமே தெரியும். இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீருற்றுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆறு பூதப்பாண்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அருவியாக பாய்கின்றது. இந்த அருவியில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்த அருவியின் அருகில் பல பாறைக்குன்றுகள் இருக்கு. அந்த பாறைக்குன்றுகளில்  சுற்றுலா பயணிகள் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த பாறைக்குன்றுகளுக்கு போட்டாணிக்குகைன்னும் பேரு. பாறை அறுத்த இந்த குகைகளில் ஒன்றில் பழங்குடி இன மக்கள் வசித்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாம். 

இயற்கை அன்னை வஞ்சனை இல்லாமல் அள்ளி கொடுத்ததால் ஐவகை நிலங்களும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருப்பதால் அருவிகளும், நதிகளும், மலைகளும், கடலும், வயல்வெளிகளும் என எங்கு பார்த்தாலும் அழகு மனசை கொள்ளைக்கொள்ளும்.  இம்மாவட்டத்தில் 14 வகையான காடுகள் இருக்காம்.  இப்படி ஒரு நிலப்பாங்கு கிடைத்தால் வனத்துறை எப்படி பாதுகாக்க வேண்டும்?! அதுக்குலாம் தமிழக மக்கள் கொடுத்து வைக்கலியே!! மூங்கில்களைக்கொண்டு வட்டப்பாறையில் ஒரு பூங்காவினை உருவாக்கி வைத்திருந்தனர். அதுவே அந்தப்பகுதி மக்களின் சுற்றுலா தலம். வட்டப்பாறை, கீரிப்பாறை காளிகேசம் காளிகோவில் என மக்கள் வந்துக்கொண்டிருந்தனர். அதுவும் 1992ம் ஆண்டு அடித்த மழையில் அந்த மூங்கில் பூங்காவும் அழிஞ்சு போச்சு. 

இங்கிருக்கும் காளி அம்மன் கோவில் வரலாறு யாருக்கும் தெரில. இந்த இடத்தை எல்லாரும் சுற்றுலா தலமாய்தான் பயன்படுத்துறாங்க. அசைவம் சமைச்சு சாப்பிட்டு வார இறுதி நாளை கொண்டாட வருபவர்களே இங்கு அதிகம். அப்படி சமைச்சு சாப்பிடுறவங்க கற்களை கொண்டு உருவாக்கிய  அடுப்பினை சரிவர அணைக்காம போய்டுறாங்க. இதனால் அங்கு தீப்பற்றி காட்டு மரங்கள், விலங்குகள் பாதிப்படையுது. இதன் காரணமாவும் இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுது.

கீரிப்பாறை காட்டில் சுமார் 500 வருடங்கள் கடந்த மரம் ஒன்று சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கக்கூடிய மரம். இந்த மரத்துக்கு அப்படி என்ன விசேசம்ன்னா?!  முற்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் நினைவாக தொல்காப்பியர் என இம்மரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம்தான்னு இப்பதான் எனக்கு தெரியும். நாகர்கோவிலிலிருந்து நேரடி பேருந்து காளிகேசத்துக்கு உண்டு.
நியாயமா இந்த பதிவு மௌனச்சாட்சிகளில் வந்திருக்க வேண்டியது. ஆனா, ஒரு கோவில் இருந்ததால் புண்ணியம் தேடி பகுதியில் வந்துடுச்சு. ராஜிக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க,

நன்றியுடன்,
ராஜி...

10 comments:

  1. என்னடா ஒரு வாரமா ராஜி க்கா பதிவு வரலே யே இன்னக்கி ஒரு தடவை இங்க வந்து கூட பார்த்தேன் ....

    சூப்பர் கா ...இருங்க படிச்சுட்டு வரேன் ...

    ReplyDelete
  2. பெரிய பாப்பா வுக்கு எனது வாழ்த்துக்கள் கா...அவர்களின் மண வாழ்வு நிறைவாக சிறப்பாக அமைய ..

    ReplyDelete
  3. அட என்ன ஒரு அழகான இடம் ...செழுமையா அழகா இருக்கு ...இங்க போகும் வாய்ப்பு இருக்குமா ன்னு தெரில ...ஆனாலும் பார்க்க தூண்டும் படங்களும் செய்திகளும் ..

    காளிகேசம் பெயர் காரணம் வெகு அருமை ..

    ReplyDelete
  4. அழகான இடம். வனஅழகு மிக அழகு. ஆயினும் ஆக்ரமிப்பாகவே மனதில் படுகிறது. பெண்ணுக்கு கோவைக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதா?

    ReplyDelete
  5. ஆஹா.... அருமையான இடமாகத் தெரிகிறது. உங்கள் மூலம் நானும் சுற்றி வந்தேன். இரண்டாவது காணொளி - சிறப்பு!

    உங்கள் மூத்த மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இளைய மகளுக்க்கு கல்லூரியில் இடம் கிடைத்து சிறப்பாக படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அழகான சூழலில் அருமையான கோயில். மகள்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. படங்களும் பகிர்வும் அருமை
    குளுமை

    ReplyDelete
  8. செய்தியும் படங்களும் அருமை

    ReplyDelete
  9. படங்களுடன் தலவரலாறு சிறப்பு.

    ReplyDelete
  10. மூத்த மகளுக்கு வாழ்த்துகள்.

    இளைய மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததா? அவரும் நல்ல முறையில் படித்து வெற்றி பெற்றிட வாழ்த்துகள்.

    படங்கள் அருமை. செய்திகளும்.

    துளசிதரன், கீதா

    ராஜி, ஆஹா எங்கூர் காளிகேசம் போனீங்களா...காளி கோயில் கீரிப்பாறை...ஹையோ செம இடம். நாங்க போயிருக்கோமே. ஆனா கோயில் போனதும் கூட டைம் பாஸ் மெயினாகப் போனது காளிகேசம் ல கீரிப்பறை ஏறும் இடத்தில் சம வெளியில் ஒரு இடத்தில் கேஸ்கேட் போல அருவி இருக்கும். நீங்கள் போட்டிருக்கும் படம் அந்த இடமும் வரும். அது மழைக்காலத்தில் போக மிக சிரமம். இப்போது ஆற்றின் போக்கும் கொஞ்சம் மாறியிருக்கலாம்தான்.

    நான் கேட்க நினைத்து வந்தேன் வாசிக்கும் போது வட்டப்பாறை போனீங்களா என்று. அருவியில் குளித்தீங்களா என்று அழகான சுனையும் இருக்கும். அருமையான இடம். ஆனால் நாங்கள் உள்ளே சென்றது எல்லாம் நடந்துதான். ஒரு குறிப்பிட்ட இடம் வரைதான் வண்டி போகும். வட்டப்பாறை மிஸ் பண்ணிட்டீங்க...அது போல காளிகேசத்துல கீரிப்பாறைக்கு ஏறும் போது பாலமோர் எஸ்டேட் போகும் வழியில் நதி வருமே அங்கு ஏறும் முன் தான் அந்த கேஸ்கேட் அருமையா இருக்கும்..

    நீங்கள் முதல்ல போட்டிருக்கும் படம் இருக்கிறதே சாலை இரு புறம் மரங்கள் அதுவழிதான் நடந்து செல்வோம்.

    அருமையான இடம் எனக்கு மீண்டும் என் பழைய நினைவுகள். மிக்க நன்றி ராஜி

    கீதா

    ReplyDelete