Saturday, February 08, 2020

ஆனந்தம் விளையாடும் வீடு-கிராமத்து வாழ்க்கை

Image
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு இல்லன்னாலும் கேட்டது கிடைக்கும். உணவுக்கோ, உடைக்கோ பஞ்சமில்லை. ஸ்கூல் லீவ் நாளில்  வேப்பங்கொட்டையை பொறுக்கி கொண்டு வந்து வீட்டில் கொடுத்தால் அம்மா அதை காய வச்சு தெருவில் வரும் உப்பு  வண்டிக்காரர்கிட்ட  கொடுத்து உப்பாகவோ இல்ல மஞ்சள் தூளாகவோ அல்லது பணமாகவோ வாங்கி என் பங்குக்கு நாலணவோ இல்ல அம்பது பைசாவோ தருவாங்க.  இப்ப வீட்டு பின்னாடியே வேப்பமரம் இருக்கு. வேப்பங்கொட்டையை பொறுக்கி எடுத்து விக்க சங்கடமாவும் இருக்கு. வீட்டிலும் கேலி பேசுதுங்க. 



இப்பலாம் எட்டு, ஒன்பது மாச குழந்தைகளை வாக்கர்ன்னு ஒரு  வண்டில உக்கார வச்சிடுறாங்க. அது தப்புன்னு என்னோட எண்ணம். குழந்தை முதல்ல கவுத்துக்கனும், தவழனும், முட்டிப்போடனும், சுவரை பிடிச்சு நிக்கனும். விழுந்து வாரி நடக்கனும்.. இப்படி படிப்படியா முன்னேறனும். அதைவிட்டு வாக்கர்லாம் தேவையே இல்ல. அந்த காலத்துல குழந்தை நடக்க ஆரம்பிச்சதும் வீட்டில் நடைவண்டி தருவாங்க. அதை பிடிச்சுக்கிட்டு பாப்பா மெல்ல மெல்ல நடக்கும். கீழ விழுந்து பல் குத்தி ரத்தம்லாம் வரும். ஆனாலும், குழந்தைக்கு தன்னம்பிக்கை வளரும். பக்கத்து வீட்டு சின்ன புள்ளைக்கிட்ட நடைவண்டியை வாங்கி டபுள்ஸ்லாம் அடிச்சிருக்கேனாம். 

Image
வீடு தேடி வரும் சூப்பர் மார்க்கெட்,  டீ வடிகட்டி, மாவு ஜல்லடை, பாத்ரூம் மக், பொம்மை, பொட்டு,  ஹேர்ப்பின், சேஃப்டி பின்..ன்னு விதம்விதமா கிடைக்கும். இந்தமாதிரி வீடுதேடி வரும் வண்டிக்கார தாத்தாக்கிட்ட பொருள் மட்டும் வாங்காம சொந்த கதை, சோகக்கதைலாம் சொல்லி மோர் கொடுத்து, கல்யாண பத்திரிக்கை கொடுக்குமளவுக்கு நெருக்கமா வாந்ததுலாம் அந்த காலம்..
ஒருத்தர் இருமுவார். வெள்ளைக்கலர் புடவை உடுத்திய தேவதை பெண் இந்த பாக்கெட்டை கொடுக்கும். குடிச்சதுமே அவருக்கு இருமல் சரியாகிடும். நமக்கு இருமல் இருக்குதோ இல்லியோ, இருமல் சரியாகுதோ இல்லியோ ருசிக்காக இதை வாங்கி சாப்பிட்டதுலாம் அந்தக்காலம்!!
Image
இஞ்சினியர் மேப் போட்டு தந்ததில்லை. நாள் கிழமை பார்த்து அஸ்திவாரம் தோண்டலை, வாஸ்துப்படி வீடு கட்டலை. ஆனாலும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். இப்படி தென்னை ஓலைல, கோணிப்பைல, கிழிஞ்ச பாயில் கட்டிய வீடுஒன்னு வீட்டு பின்னாடி பிள்ளைகளுக்கென   வீட்டு பின்னாடி இருக்கும். எங்க வீட்டிலும் இருந்தது. உங்க வீட்டில்?!

கிராமத்து வாழ்க்கை தொடரும்..

நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. நிவாரண் 90 அப்படி பழைய பொருளாகி விட்டதா என்ன?  சைக்கிள் வியாபாரிகளை இந்தக் காலத்தில் நம்ப முடிவதில்லை.  நோட்டமிடுபவர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்!!!

    ReplyDelete
  2. இனிமையான நினைவுகள்... நிவாரண் 90 - எனக்கும் ஸ்ரீராம் மாதிரிதான் தோன்றியது! :) சைக்கிள் பொம்மை வியாபாரிகள் இப்பவும் உண்டு. தலைநகரில் கூட சிலரை இப்படி பார்த்திருக்கிறேன் - குறிப்பாக பழைய தில்லி பகுதிகளில்.

    ReplyDelete
  3. கோணிப்பை வீடு, கோவில்கூட இருந்தது.. நன்றி ஞாபக படுத்தியதற்க்கு. நல்ல பதிவு.

    ReplyDelete
  4. அந்தக் காலம் இனிமை. எங்கள் வீட்டில் பத்து நாள் திருவிழாவும் உண்டு. வீதிஉலாவும் உண்டு. :)

    ReplyDelete