Showing posts with label அருவருப்பான உணவு வகைகள். Show all posts
Showing posts with label அருவருப்பான உணவு வகைகள். Show all posts

Wednesday, November 22, 2017

குளவி பிஸ்கெட் வாங்கலியோ! குளவி பிஸ்கெட் - அருவருப்பான உணவுகள்



நம்ம ஊரில்  ஒருத்தர் கம்மங்கூழ்  விரும்பி குடிப்பார். ஆனா, அவரோட நண்பர், கைவிட்டு கரைக்குறதால, கூழை கண்டாலே குமட்டிக்கிட்டு இருப்பார். ஒருத்திக்கு சுட்ட கருவாடாவது இருக்கனும் சமையல்ல. ஆனா, அவளை கட்டிக்கிட்ட புண்ணியவானுக்கு நான் வெஜ்ன்னாலே அலர்ஜி. இந்த மாதிரி ஆளுக்காள், பிறந்து வளர்ந்த இடம், சூழலுக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்கள் வேறுபடும். ஆனா, நாம கனவில்கூட நினைச்சு பார்த்திராத உணவுகளை, அருவருப்பான உணவுகள்ன்னு இரண்டு பதிவில் பார்த்துக்கிட்டு வர்றோம். பார்க்காதவங்க ஓடிப்போய் பதிவு 1, பதிவு 2 னை ஓடிப்போய் பார்த்துட்டு வந்திடுங்க.  பார்த்துட்டு வந்தாச்சா?! வாங்க, இன்னிக்கு பதிவுக்கு போகலாம்....
ஷாங்காய் டின்னர்களில் பரிமாறப்படும் ஒரு வகை உணவு திகிலூட்டுவதா இருக்கு. இந்த உணவின் பெயர்  பிளட் கிளாம்ஸ்(Blood Clams). இதை சாப்பிட்ட 20 வினாடிகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நல்ல சுறுசுறுப்பை தருமாம். ஆனா, இந்த உணவால் ஹெபடைடிஸ் ஏ மற்றும், ஈ, டைபாய்ட், வயிற்றுப்போக்கை உண்டாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை விரைவில் தூண்டி உயிருக்கே சில சமயம் உலை வைத்துவிடும். உடலுக்கு மிகவும் முடியாதவர்களும், திரில்க்கு அலையும் சிலரும் இந்த உணவை உண்கின்றனர். இந்த உணவை தின்று கடந்த வருடம் மட்டும் 3 லட்சம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியதோடு 31 பேரும் இறந்தனர். இதைஅ சாப்பிட்டால் ஹெபடைடிஸ் நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு 15 % சதவீதம் அதிகமாகுமாம். பெரும்பாலும் இதை உண்பவர்கள் பெரும்பாலும் எதுக்கும் தயாரானா நிலையில் இருக்க வேண்டுமாம்.   


கால்விரல்  காக்டெய்ல்,
புளிப்பு சுவையாக்கப்பட்ட மனிதனி கால்விரலை எடுத்து அதை ஆல்கஹாலுடன் சேர்த்து குடிப்பது ஒரு சிலரின் ரசனை.  மனநோயாளிகளும், சைக்கோக்களும்தான் இப்படி குடிப்பாங்கன்னு நினைக்குறேன். ஆரோக்கியமான மனநிலையில் உள்ள மனிதன் எவன் இப்படி குடிப்பான்?!  ஊறுகாய் பதத்துக்கு மாற்றப்பட்ட கால்விரலை கிளாசில் போட்டு குடிக்குறாங்க,  இந்த பழக்கம் 1973 ஆம் ஆண்டில், கேப்டன் டிக் ஸ்டீவன்சன் என்பவன் சில பையன்களின் கால்கட்டைவிரல்களை ஜார்களில் அடைத்து, நிலவொளியில் வைத்து,  சிலகாலம் கழிந்தபின், மதுவில் வைத்து குடிப்பானாம். இப்படித்தான் இந்த பழக்கம் வந்ததாம். இந்த புளிப்பு சுவையூட்டப்பட்ட கால் விரல்பகுதி மதுபான பழக்கம் 1920களிலிருந்தே இருக்கிறதென  அவரது குறிப்பில் இருக்கிறதாம்.  "நீங்கள் வேகமாக குடிக்கலாம், நீங்கள் அதை மெதுவாக குடிக்கலாம், ஆனாலும், உங்கள் உதடுகளை பெருவிரலை முத்தமிடும்ன்னு வர்ணிக்கிறார். ஐயோ கேட்கவே பயமா இருக்குல்ல!

மேலும், இதுபத்தின சுவாரசியமான கதை ஒன்று இருக்கு...  லிங்கன், லூயி மற்றும் ஓட்டோன்ற மூன்று சகோதரர்கள்,  இவர்கள் மில்லர் கிரீக் என்னும் இடத்திற்கு செல்லும்போது தடைவிதிக்கப்பட்ட ஆபத்தான பனிச்சரிவுகளை கொண்ட அலஸ்காவின்  பனிப்பிரதேசத்திற்குள் தவறுதலாக  நுழைந்துவிட்டனர். அங்கே கடுமையான பனிப்பொழிவு. லூயி தன்னுடைய காலை தவறுதலாய் பனியினுள் வைத்துவிட்டார்.  நீண்ட நேரம் போராடி தனது காலை வெளியில் எடுத்துவிட்டார்.  பின்னர் தன்னுடைய அறைக்கு திரும்பி வந்து தனது கால்களைப் பார்க்கும்போது கால் மரத்துப்போய் கட்டையாகி இருந்தது. உன் கால்விரல் அழுகிப்போய் உள்ளது. அது உன் உயிருக்கு ஆபத்தாய் முடியும். அதனை தவிர்க்க்க உன் கால்விரலை வெட்டிவிட வேண்டுமென கூறி லூயியின் கால்விரலை வெட்டி, அங்கிருக்கும் பரண்மேல் வீசிவிட்டார். காலங்கள் உருண்டோடி, 40 வருடங்கள் கடந்தபின்  அந்த இடத்திற்கு கேப்டன் டிக் ஸ்டீவென்சன் என்பவர் குடிவந்து, பரணிலிருந்த அந்த கால்விரலை கண்டெடுத்திருக்கிறார். அது மக்கிப்போய் புளிப்பு சுவையுடன் இருந்ததாம். அதை மதுவுடன் சேர்த்து குடிக்க தொடங்கினார். அப்படிதான் இந்த பழக்கம் வந்ததாம்!!!!!
பழம்தின்னும் வவ்வால் சூப் 
இது முழுக்க முழுக்க கைகளால் சாகசம் செய்யும் ஒருவகை உணவு. பழம் தின்னும் வவ்வால்களை நன்றாக கழுகி, அதை கொதிக்கவைத்த வெஜிடபிள் சூப் அல்லது தேங்காய்ப்பாலில் முழுவதுமாக வேக வைத்து சாப்பிடும்  முறையாகும். இந்தவகை உணவை சாப்பிடுபவர்கள் அதன் கண்கள் மூளை, குடல்ன்னு எல்லாத்தையும் சாப்பிடுவாங்களாம். ஆனா, இந்த எலும்பு, நகம் மட்டும் திங்க முடியாம தப்பிச்சுடுமாம்.. 
 
 ஜிங்  லீட்-Jing Leed   (Grasshoppers) – தாய்லாந்து 
பூச்சிகள் இனம், வெட்டுக்கிளின்னு எது கிடைச்சாலும் அதை பிடிச்சு ஒரு முறை சுத்தம் செய்து கழுவி,   சோயா சாஸ் மற்றும் தாய் வெள்ளை மிளகு தூள் ஒரு சிட்டிகை, சிறிது வெங்காயம், கொத்தமல்லி விதை பவுடர் மற்றும் பூண்டு  சேர்த்து செய்யப்படும் ஒரு வகை உணவு இது.இதனை சூடாகவோ இல்ல கூலாகவோ நம்ம விருப்பப்படி சாப்பிடலாம்.   இந்த உணவு செய்யவும் சில கண்டிஷன் இருக்கு.   தேயிலை செடிகளில் இருக்கும் பூச்சிகள்,  இறந்த   பூச்சிகளை சமைக்கக் கூடாது. சமைக்க ஆரம்பிக்கும்போது  பூச்சிகள் புதுசாவும்,  உசுரோடவும் இருக்கனுமாம். (என்ன கெரகம்டா இது?! எப்படியும் கொல்லத்தானே போறோம்?! அது செத்துப்போன பூச்சியா இருந்தால்தான் என்னவாம்?!)  இந்த பூச்சிகள்  1.25 "- 1.5" நீளமானதாகவும், 3.5 கிராம் அளவிலும் இருக்கனும். அதில்  14 முதல் 28 கிராம்  புரோட்டீன் உள்ளது பெண்களுக்கு...  30 முதல் 60 சதவிகிதம் வரை ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.  ஆண்களுக்கு  தினசரி 25 முதல் 50 சதவிகிதம் வரை தேவைப்படுகிறது. இது இதய நோயிலிருந்து நம்மை காப்பாத்துதாம் இதில் அதிகப்படியான இரும்பு சத்துக்களும் இருக்காம்.

குளவி பிஸ்கேட்ஸ்  -ஜப்பான்
நம்மூர்ல பேக்கரில லைட் வெளிச்சத்துக்கு ஈ, வண்டு, விட்டில்பூச்சின்னு வரும். அது சிலசமயம் தவறி, நாம வாங்கும் பண்டத்துல வந்திடுச்சுன்னா கடைக்காரனை உண்டு இல்லன்னு பண்ணிடுவோம். ஆனா, ஜப்பான்ல, குளவியை சேர்த்து பிஸ்கெட் பண்ணுறாங்களாம். பொதுவா, நம்மூர் பிஸ்கட்டுல நிலக்கடலை, பாதாம், முந்திரிப்பருப்புதான்  சேர்ப்பாங்க. வெளிநாட்டில், சாக்லேட் க்யூப் சேர்ப்பாங்க. ஆனா, இந்த வபாய் உணவில் குளவிகளை பிடித்து சேர்த்து சாக்லேட், பிஸ்கட்டை தயார் செய்து,  இதை  அவங்க,விரும்பி சாப்பிடுவதோடு. நாம அருவருப்பா அதை பார்த்தா,  அதை சாப்பிட  கொடுத்து வச்சிருக்கனும்ன்னு கமெண்ட் வேற! சாமி நான் கொடுத்து வைக்காதவளே இருக்கேன் :-)

அடுத்து நாம பார்க்கபோறது Jing Leed (Grasshoppers) – Thailand ஜிங் -லீட் .  இது சிப்ஸ் வகையை சார்ந்த நொறுக்குத்தீனி, உங்களுக்கு வேணும்னா உடனே புக் பண்ணிடுங்க ஏன்னா இதுக்கு அவ்வுளவு டிமாண்ட் தாய்லாந்துல.... நம்ம ஊரு உருளைக்கிழங்கு, பலாப்பழ, வாழைப்பழ, ஆளிவல்லிக்கிழங்கு சிப்ஸ் போல பூச்சிகளை வறுத்து, சுவைக்கு உப்பு, மிளகுப்பொடி தூவி பரிமாறுறாங்க. இது மாலை நேரத்து உணவாம்!

இத்தோடு இந்த டாப்பிக் பதிவை முடிச்சுக்கலாம்ன்னு இருக்கேன். முடிஞ்சா இன்னொரு முறை இந்த டாப்பிக்ல பதிவு வரும். இப்ப நான் பிச்சுக்குறேன்,


நன்றியுடன்,
ராஜி

Wednesday, November 15, 2017

இன்ன்ன்ன்ன்னாது, லார்வா புழுக்களை திம்பாங்களா?! - அருவருப்பான உணவுகள் 2

வித்தியாசமான சில உணவு வகைகளை போன வார பதிவில் பார்த்தோம்.  விட்டில் பூச்சி, கரப்பான் பூச்சிக்கே உவ்வேன்னு சொன்னவங்க இன்னிக்கு பதிவை  பார்த்துட்டு என்ன சொல்லப்போறீங்கன்னு பார்ப்போம். எதுக்கும் ஒரு பாலித்தீன் கவர் எடுத்து பக்கத்துல வச்சுக்கோங்கப்பா. அப்புறம் லேப்டாப்ல வாந்தி எடுத்துபாழாக்காதீங்க.   

முதல்ல  நாம பார்க்கப்போறது சனக்ஜி (San-nakji)ன்ற உணவு வகையை.... நம்ம ஊர்ல மீன்வாங்கி எலுமிச்சை, வினிகர்ன்னு போட்டு சுத்தம் செஞ்சு , மசாலாலாம் போட்டு சமைக்கும்போதே கெட்ட வாடை ஏழு வீட்டுக்கு மணந்து காட்டிக்கொடுக்கும்.  ஆனா இந்த வகை சனக்ஜி (San-nakji) உணவு  பச்சையான  குட்டி ஆக்டோபஸை சமைக்காமல் துண்டுகளாக்கி, அதன் மேல் எள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறப்படும் ஒருவகையான உணவாகும். உண்மையில் இந்தவகையான உணவுகள் அங்க  பூர்வ குடியாக இருந்த மக்கள் ஒரு கூர்மையான கத்தியால  ஆக்டோபஸ்சை துண்டு துண்டா வெட்டி, பச்சையா ஏதோ பிங்கர் சிப்ஸ் சாப்பிடுற மாதிரி விரும்பி சாப்பிடுவாங்க(உவ்வ்வ்வேக்) நமக்கு அதைப்பார்க்கும்போது அருவருப்பாகவும் அதிசயமாகவும் இருக்கும். அப்படி அருவருப்பு இல்லாதவங்க இதை சுவைக்க தென்கொரியா போகலாம்.. ஏன்னா, அங்கதான் இது கிடைக்கும்.


அடுத்து நாம பார்க்கபோ உணவு மெக்ஸிக்கோவில்  மிகவும் பிரபலமான எஸ்காமோல்ஸ் (Escamoles)ன்ற டிஷ். மத்திய மெக்ஸிக்கோ நாட்டின் பைன் மரங்களில் இருக்கும் ஒரு வகையான இளஞ்சிவப்பு நிற எறும்புகளின் முட்டைகள் அல்லது லார்வாக்களை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வெண்ணெய் இல்லன்னா  பாலடைக்கட்டிகளில் பொன்னிறமா வறுத்து பரிமாறப்படும் இந்தவகையான உணவுகளுக்கு அங்க ஏகப்பட்ட கிராக்கி .



ஹக்ர்ல் (Hakarl) ஐஸ்லாந்துல கிடைக்கும் ஒருவித மீன் உணவு. மீன்னாலே கவுச்சி வாடை வீசும். இறந்து அழுகிய சுறாமீன் வாசம் எப்படி இருக்க்குன்னு யோசிச்சு பாருங்க. யோசிக்கும்போதே குமட்டுதா?! ஆனா, இதையே குறிப்பிட்ட நொதித்தல் முறையில் 4-5 மாசம் பதப்படுத்தி சாப்பிடுவாங்க. நாம் கருவாடு சாப்பிடுற மாதிரி..   ஐஸ்லாந்து நாட்டின் அழுகிய மீனின் உலர்ந்த துண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு.  தனிமைப்படுத்தப்பட்ட வட அட்லாண்டிக் பகுதியில் குடியேறிய  வைகிங் குடியேற்றக்காரர்களின் காலம் முதல் இந்த உணவுப்பழக்கம் இருந்து வந்தது இருக்கு. ஹக்ர்ல், அல்லது புதைத்து வைக்கப்பட்ட சுறாமீனின்  இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்ட துண்டுகளை உலரவைத்து இதுபோன்ற வகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பழக்கத்திலதான் ஐஸ்லாந்தின் அழுகிய சுறாமீன், திமிங்கலத்தின் இருந்து எடுக்கப்படும்  ஒருவையான உணவு இது.   அழுகிய பாலாடை கட்டியில் இருந்துவரும் நாற்றத்தை விட நூறு மடங்கு அதிகம் நாற்றம் கொண்டதா  இருக்குமாம். இந்த உணவை சாப்பிடும் தைரியம் ஜப்பான், நேப்பாளம், சைனாக்காரங்களுக்குதான் இருக்கும்ன்னு நினைக்குறேன். அவங்களுக்குதான் சப்பை மூக்கு. அதனால, நாத்தம் தெரியாதுன்னு நினைக்கேன்.  நம்மாலலாம் இப்படி ஒரு உணைவை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அப்புறம் எப்படி சாப்பிடுறதாம்?!

நூற்றாண்டுகளுக்கு முன்பே வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தில்  குடியேறிய மக்கள் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை,  அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட விஷத்தன்மை கொண்ட சுறாமீன்கள். மிகச்சிறிய அளவில் மட்டுமே உணவு கிடைக்கப்பட்ட நாட்களில் இந்த மீன்களின் இறைச்சி ஒன்றே நிறைய கிடைத்தன.அவற்றின் விஷத்தன்மையை போக்கி அவற்றை உணவாக உட்கொள்ள பயன்படுத்தப்பட்ட முறைதான் இது.  இந்த மீனின் சதைப்ப்பாதத்தை அழுகவைத்து, காயப்போட்டு பின்னர் உண்பது. இப்பொழுது     ஐஸ்லாந்தின் கூடாரம் போன்ற வீடுகள் எல்லாம் மாறிடுச்சுன்னாலும், அவர்களது பாரம்பரியம் மற்றும் உணவு பழக்கங்கள் இன்னும் மாறலை. 


வறுத்த மூளை சாண்ட்விச் Fried-brain sandwich ). அமெரிக்காவின் ஓஹியோ நதி பள்ளத்தாக்கில் இந்த வறுத்த மூளை சாண்ட்விச் கிடைக்கும்.  அதிலும் பன்றி அல்லது பசு கன்றுக்குட்டிகளின் மூளையை நன்கு வறுத்து சாண்ட்விச் செய்து பரிமாறப்படுமாம்.  வறுத்த-மூளை சாண்ட்விச் பொதுவாக பரிமாறப்படும் உணவு. இதில்லாம விதம் விதமா சமைச்சு பரிமாறப்படுது.  1880 களின் பிற்பகுதியில் செயின்ட் லூயிஸ் பரவலாக காணப்பட்ட உணவுகளில் இதுவும் ஒன்று. ஓஹியோ ஆற்றின் பள்ளத்தாக்கில்  வசிக்கும் மக்களின் முக்கிய உணவாக இது இருக்கு. இவானாஸ்வில்வில், இந்தியானாவில், இன்னும் பல "அம்மா மற்றும் பாப்" உணவகங்கள், குறிப்பாக ஹில்டப் இன், மற்றும் நகரின் வருடாந்தர வெஸ்ட் சைட் நைட் கிளப் வீழ்ச்சி விழாவில் இடம்பெறும் டிஷ் வகைகளில் இதுவும் முக்கியமான ஒரு டிஷ்சாகும். ஓஹியோ, கிளப்பில்தான் 1928 முதன்முதலா  மூளை சாண்ட்விச் பரிமாறப்பட்டதாம்.

காசு மர்சு (Casu Marzu) ன்ற இத்தாலி நாட்டு டிஷ்  செம்மறி ஆட்டின் பாலில் இருந்து  தயாரிக்கப்பட்ட சீஸை நன்கு அழுகச் செய்து, அதில் சிறு சிறு லார்வா புழுக்கள் வளர்ந்த நிலையில் அந்த சீசை உணவாக்கி கொடுக்குறாங்க.  நம்மூர்லயும் இப்படி ஒரு டிஷ் இருந்தா கொசுத்தொல்லையும் டெங்கு, மலேரியா தொல்லையும் இல்லாம இருக்குமோ!  சூட் மார்சு, சாட்ரிஷ் சீஸ்ன்ற இந்த பேருக்கு   "அழுகிய சீஸ்" ன்னு அர்த்தமாம். அதனால, நாகரீகமா காசு மர்சுன்னு பேராக்கி வச்சிருக்காங்க.  இந்த வகை உணவு இத்தாலி முழுவதும் பரவலாக காணப்படுகிறது . இந்த வகை உணவினால் நிறைய மரணம் நேர்ந்திருக்கு.  காசு மர்சு உணவு வகையில் நிறைய புழுக்கள் இடம் பெறுவதால் அப்படி நடந்திடுது.  இதில் இருக்கும் உயிருள்ள லார்வா புழுக்கள் வயிற்றுக்குள் போவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மாதிரியான உபாதைகள் நேரும்.  ஹாட் டாக்ஸ் என அழைக்கப்படும் அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு இந்த வகையான உணவினை தடை செய்ய சொல்லி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கு. 

இந்த மாதிரி உணவுகளை எங்கிட்டாவது பார்க்க நேர்ந்தால், பார்த்துட்டு பக்கத்துல நின்னு செல்பி எடுத்து ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணிட்டு, நம்ம ஊர் சாப்பாடான சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைன்னு  போய்க்கிட்டே இருக்கனும்.  இல்லன்னா.... ஊஊஊஊஊஊஊஊ சங்குதான்.... அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் அருவருப்பான உணவை பார்க்கலாம்... பார்க்க மட்டும்தான்....

அலைப்பேசியில் ஓட்டளிக்க
க்ளிக் ஹியர்....

நன்றியுடன்,
ராஜி. 
(உமட்ட்ட்டிக்கிட்டே)