Wednesday, November 15, 2017

இன்ன்ன்ன்ன்னாது, லார்வா புழுக்களை திம்பாங்களா?! - அருவருப்பான உணவுகள் 2

வித்தியாசமான சில உணவு வகைகளை போன வார பதிவில் பார்த்தோம்.  விட்டில் பூச்சி, கரப்பான் பூச்சிக்கே உவ்வேன்னு சொன்னவங்க இன்னிக்கு பதிவை  பார்த்துட்டு என்ன சொல்லப்போறீங்கன்னு பார்ப்போம். எதுக்கும் ஒரு பாலித்தீன் கவர் எடுத்து பக்கத்துல வச்சுக்கோங்கப்பா. அப்புறம் லேப்டாப்ல வாந்தி எடுத்துபாழாக்காதீங்க.   

முதல்ல  நாம பார்க்கப்போறது சனக்ஜி (San-nakji)ன்ற உணவு வகையை.... நம்ம ஊர்ல மீன்வாங்கி எலுமிச்சை, வினிகர்ன்னு போட்டு சுத்தம் செஞ்சு , மசாலாலாம் போட்டு சமைக்கும்போதே கெட்ட வாடை ஏழு வீட்டுக்கு மணந்து காட்டிக்கொடுக்கும்.  ஆனா இந்த வகை சனக்ஜி (San-nakji) உணவு  பச்சையான  குட்டி ஆக்டோபஸை சமைக்காமல் துண்டுகளாக்கி, அதன் மேல் எள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறப்படும் ஒருவகையான உணவாகும். உண்மையில் இந்தவகையான உணவுகள் அங்க  பூர்வ குடியாக இருந்த மக்கள் ஒரு கூர்மையான கத்தியால  ஆக்டோபஸ்சை துண்டு துண்டா வெட்டி, பச்சையா ஏதோ பிங்கர் சிப்ஸ் சாப்பிடுற மாதிரி விரும்பி சாப்பிடுவாங்க(உவ்வ்வ்வேக்) நமக்கு அதைப்பார்க்கும்போது அருவருப்பாகவும் அதிசயமாகவும் இருக்கும். அப்படி அருவருப்பு இல்லாதவங்க இதை சுவைக்க தென்கொரியா போகலாம்.. ஏன்னா, அங்கதான் இது கிடைக்கும்.


அடுத்து நாம பார்க்கபோ உணவு மெக்ஸிக்கோவில்  மிகவும் பிரபலமான எஸ்காமோல்ஸ் (Escamoles)ன்ற டிஷ். மத்திய மெக்ஸிக்கோ நாட்டின் பைன் மரங்களில் இருக்கும் ஒரு வகையான இளஞ்சிவப்பு நிற எறும்புகளின் முட்டைகள் அல்லது லார்வாக்களை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வெண்ணெய் இல்லன்னா  பாலடைக்கட்டிகளில் பொன்னிறமா வறுத்து பரிமாறப்படும் இந்தவகையான உணவுகளுக்கு அங்க ஏகப்பட்ட கிராக்கி .ஹக்ர்ல் (Hakarl) ஐஸ்லாந்துல கிடைக்கும் ஒருவித மீன் உணவு. மீன்னாலே கவுச்சி வாடை வீசும். இறந்து அழுகிய சுறாமீன் வாசம் எப்படி இருக்க்குன்னு யோசிச்சு பாருங்க. யோசிக்கும்போதே குமட்டுதா?! ஆனா, இதையே குறிப்பிட்ட நொதித்தல் முறையில் 4-5 மாசம் பதப்படுத்தி சாப்பிடுவாங்க. நாம் கருவாடு சாப்பிடுற மாதிரி..   ஐஸ்லாந்து நாட்டின் அழுகிய மீனின் உலர்ந்த துண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு.  தனிமைப்படுத்தப்பட்ட வட அட்லாண்டிக் பகுதியில் குடியேறிய  வைகிங் குடியேற்றக்காரர்களின் காலம் முதல் இந்த உணவுப்பழக்கம் இருந்து வந்தது இருக்கு. ஹக்ர்ல்அல்லது புதைத்து வைக்கப்பட்ட சுறாமீனின்  இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்ட துண்டுகளை உலரவைத்து இதுபோன்ற வகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பழக்கத்திலதான் ஐஸ்லாந்தின் அழுகிய சுறாமீன், திமிங்கலத்தின் இருந்து எடுக்கப்படும்  ஒருவையான உணவு இது.   அழுகிய பாலாடை கட்டியில் இருந்துவரும் நாற்றத்தை விட நூறு மடங்கு அதிகம் நாற்றம் கொண்டதா  இருக்குமாம். இந்த உணவை சாப்பிடும் தைரியம் ஜப்பான், நேப்பாளம், சைனாக்காரங்களுக்குதான் இருக்கும்ன்னு நினைக்குறேன். அவங்களுக்குதான் சப்பை மூக்கு. அதனால, நாத்தம் தெரியாதுன்னு நினைக்கேன்.  நம்மாலலாம் இப்படி ஒரு உணைவை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அப்புறம் எப்படி சாப்பிடுறதாம்?!

நூற்றாண்டுகளுக்கு முன்பே வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தில்  குடியேறிய மக்கள் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை,  அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட விஷத்தன்மை கொண்ட சுறாமீன்கள். மிகச்சிறிய அளவில் மட்டுமே உணவு கிடைக்கப்பட்ட நாட்களில் இந்த மீன்களின் இறைச்சி ஒன்றே நிறைய கிடைத்தன.அவற்றின் விஷத்தன்மையை போக்கி அவற்றை உணவாக உட்கொள்ள பயன்படுத்தப்பட்ட முறைதான் இது.  இந்த மீனின் சதைப்ப்பாதத்தை அழுகவைத்து, காயப்போட்டு பின்னர் உண்பது. இப்பொழுது     ஐஸ்லாந்தின் கூடாரம் போன்ற வீடுகள் எல்லாம் மாறிடுச்சுன்னாலும், அவர்களது பாரம்பரியம் மற்றும் உணவு பழக்கங்கள் இன்னும் மாறலை. 


வறுத்த மூளை சாண்ட்விச் Fried-brain sandwich ). அமெரிக்காவின் ஓஹியோ நதி பள்ளத்தாக்கில் இந்த வறுத்த மூளை சாண்ட்விச் கிடைக்கும்.  அதிலும் பன்றி அல்லது பசு கன்றுக்குட்டிகளின் மூளையை நன்கு வறுத்து சாண்ட்விச் செய்து பரிமாறப்படுமாம் வறுத்த-மூளை சாண்ட்விச் பொதுவாக பரிமாறப்படும் உணவு. இதில்லாம விதம் விதமா சமைச்சு பரிமாறப்படுது.  1880 களின் பிற்பகுதியில் செயின்ட் லூயிஸ் பரவலாக காணப்பட்ட உணவுகளில் இதுவும் ஒன்று. ஓஹியோ ஆற்றின் பள்ளத்தாக்கில்  வசிக்கும் மக்களின் முக்கிய உணவாக இது இருக்கு. இவானாஸ்வில்வில், இந்தியானாவில், இன்னும் பல "அம்மா மற்றும் பாப்" உணவகங்கள், குறிப்பாக ஹில்டப் இன், மற்றும் நகரின் வருடாந்தர வெஸ்ட் சைட் நைட் கிளப் வீழ்ச்சி விழாவில் இடம்பெறும் டிஷ் வகைகளில் இதுவும் முக்கியமான ஒரு டிஷ்சாகும். ஓஹியோ, கிளப்பில்தான் 1928 முதன்முதலா  மூளை சாண்ட்விச் பரிமாறப்பட்டதாம்.

காசு மர்சு (Casu Marzu) ன்ற இத்தாலி நாட்டு டிஷ்  செம்மறி ஆட்டின் பாலில் இருந்து  தயாரிக்கப்பட்ட சீஸை நன்கு அழுகச் செய்துஅதில் சிறு சிறு லார்வா புழுக்கள் வளர்ந்த நிலையில் அந்த சீசை உணவாக்கி கொடுக்குறாங்க.  நம்மூர்லயும் இப்படி ஒரு டிஷ் இருந்தா கொசுத்தொல்லையும் டெங்கு, மலேரியா தொல்லையும் இல்லாம இருக்குமோ!  சூட் மார்சு, சாட்ரிஷ் சீஸ்ன்ற இந்த பேருக்கு   "அழுகிய சீஸ்" ன்னு அர்த்தமாம். அதனால, நாகரீகமா காசு மர்சுன்னு பேராக்கி வச்சிருக்காங்க.  இந்த வகை உணவு இத்தாலி முழுவதும் பரவலாக காணப்படுகிறது . இந்த வகை உணவினால் நிறைய மரணம் நேர்ந்திருக்கு.  காசு மர்சு உணவு வகையில் நிறைய புழுக்கள் இடம் பெறுவதால் அப்படி நடந்திடுது.  இதில் இருக்கும் உயிருள்ள லார்வா புழுக்கள் வயிற்றுக்குள் போவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மாதிரியான உபாதைகள் நேரும்.  ஹாட் டாக்ஸ் என அழைக்கப்படும் அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு இந்த வகையான உணவினை தடை செய்ய சொல்லி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கு. 

இந்த மாதிரி உணவுகளை எங்கிட்டாவது பார்க்க நேர்ந்தால், பார்த்துட்டு பக்கத்துல நின்னு செல்பி எடுத்து ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணிட்டு, நம்ம ஊர் சாப்பாடான சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைன்னு  போய்க்கிட்டே இருக்கனும்.  இல்லன்னா.... ஊஊஊஊஊஊஊஊ சங்குதான்.... அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் அருவருப்பான உணவை பார்க்கலாம்... பார்க்க மட்டும்தான்....

அலைப்பேசியில் ஓட்டளிக்க
க்ளிக் ஹியர்....

நன்றியுடன்,
ராஜி. 
(உமட்ட்ட்டிக்கிட்டே)

19 comments:

 1. அடியாத்தி பயமாவுல இருக்கு..... வ்வே.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ண்ணே. பதிவெழுதி முடிக்குறதுக்குள்ள உமட்டிட்டுது. சாப்பிடும்போதெல்லாம் இதே நினைவு

   Delete
 2. பிடிக்கவில்லை எனில் விட்டு விடுங்கள். அவ்வே உவ்வே என்று சாப்பிடுபவர்களை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள். ( நானும் சுத்த் சைவ குடுபம்பத்தினன் தான்)

  ReplyDelete
  Replies
  1. yes you are right bro

   Delete
  2. மன்னிச்சுடுங்க இனி சொல்லல.

   Delete
 3. அருமையான உணவு வகைகள்...அவரவர் நாட்டுக்கு/ஊருக்கு ஏற்றாற் போல் உணவுப் பழக்க வழக்கம் இருக்கிறது....சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவும்..... நன்றி பகிர்வுக்கு.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ண்ணே/ நம்ம ஊர் வெயிலுக்கு கூழ், களி, கஞ்சி.. இதுமாதிரிதான் அங்கயும்

   Delete
 4. ராஜி நான் படிக்கலையாப்பா படிக்கலை பன்ச் மட்டும்

  ReplyDelete
  Replies
  1. ஓகெப்பா. படம் பார்த்தே டரியல் ஆகிட்டீங்களா?!

   Delete
 5. சுவாரஸ்யம்தான். ஆனால் வீடியோ பார்க்கும் தைரியம் வரவில்லை!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கே இப்படின்னா அடுத்த வார பதிவுகளை பார்த்தால் என்னாவீங்களோ?!

   Delete
 6. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இப்படி நிறைய உணவுகள். எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதுண்டு!

  அவர்களுக்குப் பிடித்திருக்கிறது சாப்பிட்டு போகட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. நான் அவங்களை எதும் சொல்லலண்ணே. சாப்பிட்டு போகட்டும்.

   Delete
 7. நாம் இப்படிப் பழகிவிட்டோம். அவர்கள் அப்படிப் பழகிவிட்டார்கள். குறை சொல்லக்கூடாது என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் குறை சொல்லலப்பா. சும்மா பகிர்ந்துக்குறேன்

   Delete
 8. உலகின் சில பொஅகுதிகளில் நடப்பன ஊர்வன பறப்பன நீந்துவன என்று ஒன்றையும் விட்டு வைப்பதில்லை போல

  ReplyDelete
  Replies
  1. அப்படிதான்ப்பா.. பறக்குறதுல ஃப்ளைட்டு, மிதக்குறதுல கப்பலு, ஓடுறதுல பஸ்சு தவிர மிச்சம்லாம் சாப்பிடுவேன்ற வார்த்தை இவங்களுக்குதான் பொருந்தும்போல

   Delete
 9. நம்மூரிலும் இப்படிச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்தான். பரவாயில்லை அவர்களது உணவு. அவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். நானும் சரி என் மகனும் சரி, இப்படிச் சாப்பிடுபவர்களுடன் அமர்ந்தும் எங்கள் சைவ உணவை சாப்பிட்டுருக்கிறோம்.

  கீதா

  ReplyDelete