ஏய் ராஜி, இன்னிக்கு ஆஃபீசுல வேலை அதிகம். எனக்கு தலைவலியாய் இருக்கு. கொஞ்சம் சூடா டீ போட்டு தாயேன்.
ம்க்கும், இப்போதான் டிவி பார்க்க உக்காந்தேன்.அது பொறுக்காதே உங்களுக்கு. சீரியல்ல முக்கியமான கட்டம் . இப்போதான் டீ போட்டு தா, காஃபி போட்டுதான்னு நச்சரிப்பீங்களே
ஏம்மா, காலைல இருந்து டிவி பார்த்தது போதாதா? ஒரு டீ போட அஞ்சு நிமிசம் ஆகுமா? அதுக்கு போய் சளிச்சுக்குறே.
என்னாது, நான் காலைல இருந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கேனா?! ஏன் சொல்ல மாட்டீங்க, நீங்க போன பின் சமைலயல்கட்டை ஒழிச்சு, கிளின் பண்ணி, துணி துவைச்சு, நாளைக்கு டிஃபனுக்கு மாவரைச்சு...,
ஏய் போதும் நிப்பாட்டு. நீ மட்டும்தான் இந்த வேலைலாம் செய்யுறியா?
ஊருல இருக்குற அத்தனை பொண்ணுங்களும் செய்றாங்க.
ம்ம்ம் அடப்பாவி மனுசா, நீயே என் வேலைகளையும், தியாகத்தையும் புரிஞ்சுக்கலைன்னா எப்படி? எங்க வீட்டுல என்னைஒரு வேலை பார்க்க விடாம பூமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இங்க, துணி துவைச்சு போட்டு, சமைச்சு...
தே நிப்பாட்டு, ஆன்னா ஊன்னா இதே டயலாக்கை, இந்த பொம்பளைங்க எத்தனை நாளைக்குதான்டி சொல்லுவீங்க? எப்ப பாரு துணி துவச்சு போட்டேன். அப்பா, அம்மாவை விட்டு வந்தேன்னு கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்ட், நீங்க மட்டும்தான் தியாகம் செய்வீங்களா? நங்கலாம் செங்ஜ்சதே இல்லியா?
என்ன செஞ்சுட்டீங்க. நல்லா உங்க அப்பா, அம்மா, அண்ணான், தம்பிங்களொட இருக்கிறீங்க, நினைச்ச இடத்துக்கு போக முடியுது....
என்ன செஞ்சுட்டீங்க. நல்லா உங்க அப்பா, அம்மா, அண்ணான், தம்பிங்களொட இருக்கிறீங்க, நினைச்ச இடத்துக்கு போக முடியுது....
நிறுத்து, இப்போ ஆம்பிளைங்களை பத்தியும், அவனோட தியாகத்தை பத்தியும் நான் சொல்றேன்.இப்பவாவது கேட்டு தெரிஞ்சுக்கோ...
ஆம்பிளைன்னா யாரு தெரியுமா?
...
ஆம்பிளைன்னா யாரு தெரியுமா?
...
ஒரு ஆண் ன்றவன் இயற்கையோட படைப்புகளிலேயே மிக அழகானவன்.
அவன் தன்னோட விட்டுக்கொடுத்தலை ரொம்ப சின்ன வயசுலேயே செய்ய ஆரம்பிச்சுடுறான், பத்து வயசு வரை, அவன் தன்னோட சாக்லெட்டை தன் அக்கா, தங்கச்சிக்களுக்காக விட்டு குடுக்குறான்.
பதினெட்டு வயசுல தன் காதலை தன்னோட குடும்ப சூழ்நிலையை நினைச்சு
”தியாகம்” செய்றான். தன்னோட பொண்டாட்டி மற்றும் பசங்களும் நல்லா இருக்கனுமேன்னு, தன்னோட ”அன்பை,” நீண்ட நேரம் வேலை செய்றதால ”தியாகம்” செய்றான்.
அவன் தன்னோட பிள்ளைகளோட ”எதிர்காலத்தை” பேங்குல கடன் வாங்குறதால உருவாக்குறான். ஆனா, அதை பேங்குக்கு திருப்பிகட்டுறதுக்காக தன்னோட வாழ்நாள் முழுசுக்கும் கஷ்டப்படுறான். தான் கஷ்டப்படுறதால அவன் தன்னோட பொண்டாட்டியும் பசங்களும், பிற்காலத்துல தன்னை எந்தவித குறையும் சொல்லக் கூடாதுன்னு தன் இளமையை ”தியாகம்” செய்கிறான்.
அவன் என்னதான் ரொம்ப கஷ்டப்பட்டாலும், தன்னோட அம்மா,பொண்டாட்டி, முதலாளிகிட்ட திட்டு வாஙக வேண்டி இருக்கு. எல்லா அம்மாவும், பொண்டாட்டியும் முதாலாளியும் அவனை தங்களோட கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்கனும்ன்னு ரொம்ப முயற்சி பண்றாங்க.
கடைசியில மத்தவங்க சந்தோசத்துக்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அவன் வாழ்க்கை முடிஞ்சும் போறது.

பொம்பளைங்க உங்க வாழ்க்கையில வர்ற ஒவ்வொரு ஆணையும் மதியுங்க. அவன் உங்களுக்காக என்னனென்ன தியாகம்லாம் செஞ்சிருக்கான்னு , ஒருநாளும் நீங்க தெரிஞ்சுக்க முடியப்போறதில்லை. அதனால,
அவனுக்கு தேவைப்படும்போது உங்க கைகளை நீட்டுங்க.
அதுக்கு பதிலா, நீங்க அவனிடமிருந்து ரெண்டு மடங்காகஅன்பை பெறுவீங்க.
பொம்பளைங்கள போல எல்லா ஆம்பிளைகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசாபாசங்கள் உண்டு. ஆனா, அதெல்லாம் வெளிக்காட்டிக்குற மாதிரியான சூழலை இந்த சமூகம் பொம்பளைகளுக்கு குடுக்குற மாதிரி ஆம்பிளைகளுக்கு குடுப்பதில்லை.
பொம்பளைங்கள போல எல்லா ஆம்பிளைகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசாபாசங்கள் உண்டு. ஆனா, அதெல்லாம் வெளிக்காட்டிக்குற மாதிரியான சூழலை இந்த சமூகம் பொம்பளைகளுக்கு குடுக்குற மாதிரி ஆம்பிளைகளுக்கு குடுப்பதில்லை.
அதனால, ஆம்பிளைகளோட உணர்வுகளையும், அவன் தியாகத்தையும் மதியுங்க. மதிக்கலைன்னாலும் பரவாயில்ல. போட்டு மிதிக்காதீங்க. போட்டு மிதிச்சீங்கன்ன்னாகுடும்பத்தோட அமைதி போய்டும்.
ஆம்பிளையும் சரி, பொம்பளையும் சரி, தன் குடும்பத்துக்காக நிறைய தியாகங்கள் செய்றாங்க. என்ன? பொம்பளைங்க செய்யுற தியாகம் வெளிவருது. ஆம்பிளைங்களோட தியாகம் குடத்திலிட்ட தீபம் போல் வெளி வராமலே போகுது அவ்வளவுதான். புரிஞ்சுதா ராஜி?!
ம்ம்ம்ம் புரிஞ்சுதுங்க. நீங்க போய் முகம்லாம் கழுவிக்கிட்டு வரதுக்குள்ள சூடா டீ போட்டு கொண்டு வரேன்.
டிஸ்கி: திருமணத்துக்கு இலவசமா குடுக்குற புக்குல ஆண்களோட தியாகங்கள்ன்னு இந்த கருத்துக்கள் இருந்துச்சு. அதை பட்டி, டிங்கரிங்கலாம் பார்த்து பதிவா தேத்தியாச்சு.