ஏய் ராஜி, இன்னிக்கு ஆஃபீசுல வேலை அதிகம். எனக்கு தலைவலியாய் இருக்கு. கொஞ்சம் சூடா டீ போட்டு தாயேன்.
ம்க்கும், இப்போதான் டிவி பார்க்க உக்காந்தேன்.அது பொறுக்காதே உங்களுக்கு. சீரியல்ல முக்கியமான கட்டம் . இப்போதான் டீ போட்டு தா, காஃபி போட்டுதான்னு நச்சரிப்பீங்களே
ஏம்மா, காலைல இருந்து டிவி பார்த்தது போதாதா? ஒரு டீ போட அஞ்சு நிமிசம் ஆகுமா? அதுக்கு போய் சளிச்சுக்குறே.
என்னாது, நான் காலைல இருந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கேனா?! ஏன் சொல்ல மாட்டீங்க, நீங்க போன பின் சமைலயல்கட்டை ஒழிச்சு, கிளின் பண்ணி, துணி துவைச்சு, நாளைக்கு டிஃபனுக்கு மாவரைச்சு...,
ஏய் போதும் நிப்பாட்டு. நீ மட்டும்தான் இந்த வேலைலாம் செய்யுறியா?
ஊருல இருக்குற அத்தனை பொண்ணுங்களும் செய்றாங்க.
ம்ம்ம் அடப்பாவி மனுசா, நீயே என் வேலைகளையும், தியாகத்தையும் புரிஞ்சுக்கலைன்னா எப்படி? எங்க வீட்டுல என்னைஒரு வேலை பார்க்க விடாம பூமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இங்க, துணி துவைச்சு போட்டு, சமைச்சு...
தே நிப்பாட்டு, ஆன்னா ஊன்னா இதே டயலாக்கை, இந்த பொம்பளைங்க எத்தனை நாளைக்குதான்டி சொல்லுவீங்க? எப்ப பாரு துணி துவச்சு போட்டேன். அப்பா, அம்மாவை விட்டு வந்தேன்னு கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்ட், நீங்க மட்டும்தான் தியாகம் செய்வீங்களா? நங்கலாம் செங்ஜ்சதே இல்லியா?
என்ன செஞ்சுட்டீங்க. நல்லா உங்க அப்பா, அம்மா, அண்ணான், தம்பிங்களொட இருக்கிறீங்க, நினைச்ச இடத்துக்கு போக முடியுது....
என்ன செஞ்சுட்டீங்க. நல்லா உங்க அப்பா, அம்மா, அண்ணான், தம்பிங்களொட இருக்கிறீங்க, நினைச்ச இடத்துக்கு போக முடியுது....
நிறுத்து, இப்போ ஆம்பிளைங்களை பத்தியும், அவனோட தியாகத்தை பத்தியும் நான் சொல்றேன்.இப்பவாவது கேட்டு தெரிஞ்சுக்கோ...
ஆம்பிளைன்னா யாரு தெரியுமா?
...
ஆம்பிளைன்னா யாரு தெரியுமா?
...
ஒரு ஆண் ன்றவன் இயற்கையோட படைப்புகளிலேயே மிக அழகானவன்.
அவன் தன்னோட விட்டுக்கொடுத்தலை ரொம்ப சின்ன வயசுலேயே செய்ய ஆரம்பிச்சுடுறான், பத்து வயசு வரை, அவன் தன்னோட சாக்லெட்டை தன் அக்கா, தங்கச்சிக்களுக்காக விட்டு குடுக்குறான்.
பதினெட்டு வயசுல தன் காதலை தன்னோட குடும்ப சூழ்நிலையை நினைச்சு
”தியாகம்” செய்றான். தன்னோட பொண்டாட்டி மற்றும் பசங்களும் நல்லா இருக்கனுமேன்னு, தன்னோட ”அன்பை,” நீண்ட நேரம் வேலை செய்றதால ”தியாகம்” செய்றான்.
அவன் தன்னோட பிள்ளைகளோட ”எதிர்காலத்தை” பேங்குல கடன் வாங்குறதால உருவாக்குறான். ஆனா, அதை பேங்குக்கு திருப்பிகட்டுறதுக்காக தன்னோட வாழ்நாள் முழுசுக்கும் கஷ்டப்படுறான். தான் கஷ்டப்படுறதால அவன் தன்னோட பொண்டாட்டியும் பசங்களும், பிற்காலத்துல தன்னை எந்தவித குறையும் சொல்லக் கூடாதுன்னு தன் இளமையை ”தியாகம்” செய்கிறான்.
அவன் என்னதான் ரொம்ப கஷ்டப்பட்டாலும், தன்னோட அம்மா,பொண்டாட்டி, முதலாளிகிட்ட திட்டு வாஙக வேண்டி இருக்கு. எல்லா அம்மாவும், பொண்டாட்டியும் முதாலாளியும் அவனை தங்களோட கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்கனும்ன்னு ரொம்ப முயற்சி பண்றாங்க.
கடைசியில மத்தவங்க சந்தோசத்துக்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அவன் வாழ்க்கை முடிஞ்சும் போறது.
அவன் தன்னோட விட்டுக்கொடுத்தலை ரொம்ப சின்ன வயசுலேயே செய்ய ஆரம்பிச்சுடுறான், பத்து வயசு வரை, அவன் தன்னோட சாக்லெட்டை தன் அக்கா, தங்கச்சிக்களுக்காக விட்டு குடுக்குறான்.
பதினெட்டு வயசுல தன் காதலை தன்னோட குடும்ப சூழ்நிலையை நினைச்சு
”தியாகம்” செய்றான். தன்னோட பொண்டாட்டி மற்றும் பசங்களும் நல்லா இருக்கனுமேன்னு, தன்னோட ”அன்பை,” நீண்ட நேரம் வேலை செய்றதால ”தியாகம்” செய்றான்.
அவன் தன்னோட பிள்ளைகளோட ”எதிர்காலத்தை” பேங்குல கடன் வாங்குறதால உருவாக்குறான். ஆனா, அதை பேங்குக்கு திருப்பிகட்டுறதுக்காக தன்னோட வாழ்நாள் முழுசுக்கும் கஷ்டப்படுறான். தான் கஷ்டப்படுறதால அவன் தன்னோட பொண்டாட்டியும் பசங்களும், பிற்காலத்துல தன்னை எந்தவித குறையும் சொல்லக் கூடாதுன்னு தன் இளமையை ”தியாகம்” செய்கிறான்.
அவன் என்னதான் ரொம்ப கஷ்டப்பட்டாலும், தன்னோட அம்மா,பொண்டாட்டி, முதலாளிகிட்ட திட்டு வாஙக வேண்டி இருக்கு. எல்லா அம்மாவும், பொண்டாட்டியும் முதாலாளியும் அவனை தங்களோட கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்கனும்ன்னு ரொம்ப முயற்சி பண்றாங்க.
கடைசியில மத்தவங்க சந்தோசத்துக்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அவன் வாழ்க்கை முடிஞ்சும் போறது.
பொம்பளைங்க உங்க வாழ்க்கையில வர்ற ஒவ்வொரு ஆணையும் மதியுங்க. அவன் உங்களுக்காக என்னனென்ன தியாகம்லாம் செஞ்சிருக்கான்னு , ஒருநாளும் நீங்க தெரிஞ்சுக்க முடியப்போறதில்லை. அதனால,
அவனுக்கு தேவைப்படும்போது உங்க கைகளை நீட்டுங்க.
அதுக்கு பதிலா, நீங்க அவனிடமிருந்து ரெண்டு மடங்காகஅன்பை பெறுவீங்க.
பொம்பளைங்கள போல எல்லா ஆம்பிளைகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசாபாசங்கள் உண்டு. ஆனா, அதெல்லாம் வெளிக்காட்டிக்குற மாதிரியான சூழலை இந்த சமூகம் பொம்பளைகளுக்கு குடுக்குற மாதிரி ஆம்பிளைகளுக்கு குடுப்பதில்லை.
பொம்பளைங்கள போல எல்லா ஆம்பிளைகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசாபாசங்கள் உண்டு. ஆனா, அதெல்லாம் வெளிக்காட்டிக்குற மாதிரியான சூழலை இந்த சமூகம் பொம்பளைகளுக்கு குடுக்குற மாதிரி ஆம்பிளைகளுக்கு குடுப்பதில்லை.
அதனால, ஆம்பிளைகளோட உணர்வுகளையும், அவன் தியாகத்தையும் மதியுங்க. மதிக்கலைன்னாலும் பரவாயில்ல. போட்டு மிதிக்காதீங்க. போட்டு மிதிச்சீங்கன்ன்னாகுடும்பத்தோட அமைதி போய்டும்.
ஆம்பிளையும் சரி, பொம்பளையும் சரி, தன் குடும்பத்துக்காக நிறைய தியாகங்கள் செய்றாங்க. என்ன? பொம்பளைங்க செய்யுற தியாகம் வெளிவருது. ஆம்பிளைங்களோட தியாகம் குடத்திலிட்ட தீபம் போல் வெளி வராமலே போகுது அவ்வளவுதான். புரிஞ்சுதா ராஜி?!
ம்ம்ம்ம் புரிஞ்சுதுங்க. நீங்க போய் முகம்லாம் கழுவிக்கிட்டு வரதுக்குள்ள சூடா டீ போட்டு கொண்டு வரேன்.
டிஸ்கி: திருமணத்துக்கு இலவசமா குடுக்குற புக்குல ஆண்களோட தியாகங்கள்ன்னு இந்த கருத்துக்கள் இருந்துச்சு. அதை பட்டி, டிங்கரிங்கலாம் பார்த்து பதிவா தேத்தியாச்சு.
///////
ReplyDeleteஒரு ஆண் ன்றவன் இயற்கையோட படைப்புகளிலேயே மிக அழகானவன்.
//////////
எல்லா பதிவிலும் என்னப்பத்தி எழுதறதே உங்களுக்கு வேலையாபோச்சி...!
மன்னிச்சேன் போங்க...
தோ பார்ரா, இப்படி ஒரு நினைப்பு இருக்கா?! நினைப்புதான் பொழப்பை கெட்க்கும்ன்னு ஒரு பழமொழி இருக்கு சகோ
Deleteஇது நினைப்பு அல்ல....
Deleteநிஜம்...
////
ReplyDeleteஆம்பிளையும் சரி, பொம்பளையும் சரி, தன் குடும்பத்துக்காக நிறைய தியாகங்கள் செய்றாங்க. என்ன? பொம்பளைங்க செய்யுற தியாகம் வெளிவருது. ஆம்பிளைங்களோட தியாகம் குடத்திலிட்ட தீபம் போல் வெளி வராமலே போகுது அவ்வளவுதான்
//////////
ஒவ்வொறு ஆண்களின் மனதிலும் புழுங்கும்
உண்மையான வார்த்தைகள்...
ம் ம் ம் அதை புரிஞ்சுக்கிட்டுதானே பதிவா போட்டுட்டேன். ஹேப்பியா?
Deleteபதிவு போட்டா மட்டும் போதாதுங்க...
Deleteவீட்ட ஆத்துகாரக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க.. அதிகமா வீட்டு வேளையெல்லாம் வைக்காதீங்க...
ஒரு மாற்றத்துக்கு நீங்களும் கொஞ்சம் வேலைகள் இருந்தா செய்யலாம் தப்பில்ல...
அப்புறம் சமையல் அறை எங்கிருக்கு தெரியுங்களா...
அதெல்லாம் தெரிஞ்சுக்குறதுக்காகவா என்னை ஒரு அப்பாவி புள்ளக்கு கட்டி குடுத்திருக்காங்க. இதுக்குட தெரியலை உங்களுக்கு? போங்க சகோ போங்க.
Delete/////
ReplyDeleteதிருமணத்துக்கு இலவசமா குடுக்குற புக்குல ஆண்களோட தியாகங்கள்ன்னு இந்த கருத்துக்கள் இருந்துச்சு. அதை பட்டி, டிங்கரிங்கலாம் பார்த்து பதிவா தேத்தியாச்சு.
///////
ரைட்டு...
இப்ப நீங்களும் இந்த வேளையை ஆரம்பிச்சிட்டிங்களா..!
ஹலோ மிஸ்டர் சௌந்தர் நானும் இப்போ பிரபல பதிவர்ப்பா
Deleteஇது எப்போலேந்து? சொல்லவே இல்ல?
Deleteபிரபல பதிவர் ராஜி அக்காவுக்கு ஒரு "o" போடுங்க...
Deleteதேங்க்ஸ்
Deleteஆண்கள் பெண்கள் இருவருமே விட்டுக் கொடுத்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும. ஆனாலும் ஆண்களின் பக்கம் நின்னு தங்கச்சி பேசறப்ப கேக்கறதுக்கு ரொம்பவே சந்தோஷமாத்தான் இருக்கு. இதையே வீட்டுக்கு வந்து கொஞ்சம் சத்தமா அண்ணிட்ட சொல்லும்மா... ஹி... ஹி...
ReplyDeleteஅண்ணிக்கிட்ட கண்டிப்பா சொல்றேன், ஆனா, நீங்களும் அண்ணிக்கிட்ட சமர்த்தா இருக்கனும்ண்ணா
Deleteமனத்தால் ஓன்று சேர்ந்தாலே போதும்...
ReplyDeleteஅப்படித் தான் சேர்த்து (திருமணங்கள்) வைக்கவும் வேண்டும்...
/// பட்டி, டிங்கரிங்கலாம் பார்த்து பதிவா தேத்தியாச்சு... ///
அடிக்கடி இப்படி செய்யுங்க... (கொஞ்சம் பிழைகளை சரி செய்து இருக்கலாமே...)
ஓ எனக்கு சரியா தெரிஞ்சுது அதனால் அப்படியே பதிவா போட்டுட்டேன். மறுபடியும் படிச்சு பார்த்து திருத்துறேன்.
Delete//என்னதான் ரொம்ப கஷ்டப்பட்டாலும், தன்னோட அம்மா,பொண்டாட்டி, முதலாளிகிட்ட திட்டு வாஙக வேண்டி இருக்கு. எல்லா அம்மாவும், பொண்டாட்டியும் முதாலாளியும் அவனை தங்களோட கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்கனும்ன்னு ரொம்ப முயற்சி பண்றாங்க.//
ReplyDeleteமுடியல ! வலிக்குது ! அழுதுடுவேன் !
ஹா ஹா அங்கயும் இந்த நிலைமைதானா?!
Deleteஇப்படி ஆண்களை பாராட்டி எழுதினா உங்களை கிண்டல் பண்றதை விட்டுடுவோம்னு நினைக்காதீங்க. அதெல்லாம் அது பாட்டுக்கு போய் கிட்டே இருக்கும்;
ReplyDeleteஆக, நீங்க அதிகமா சீரியல் பார்ப்பதுக்கும், வீட்டு காரருக்கு காபி போட்டு தராததுக்கும் பஞ்சாயத்தில் வந்து Fine கட்டிட்டு போங்க
வூட்டுக்காரருக்கே பயப்படுறதில்லை. பஞ்சாயத்துக்குதானா பயப்பட்டுடப்போறேன். என்னை பத்தி இன்னும் சரியா புரிஞ்சுக்கலை சகோ. ஹையோ ஹையோ.
Deleteபொம்பளைங்கள போல எல்லா ஆம்பிளைகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசாபாசங்கள் உண்டு. ஆனா, அதெல்லாம் வெளிக்காட்டிக்குற மாதிரியான சூழலை இந்த சமூகம் பொம்பளைகளுக்கு குடுக்குற மாதிரி ஆம்பிளைகளுக்கு குடுப்பதில்லை.
ReplyDeleteபொம்பளைங்க செய்யுற தியாகம் வெளிவருது. ஆம்பிளைங்களோட தியாகம் குடத்திலிட்ட தீபம் போல் வெளி வராமலே போகுது
correct
நன்றிங்க
Deleteஅச்சச்சோ எனக்கு தான் அடி பட்டுதுன்னு பார்த்தா இங்க என்ன அக்காவுக்குமா ?
ReplyDeleteநல்லதானே இருந்தாங்க இந்த பதிவர் சந்திப்பில் கூட பார்த்து பேசினேனே.
பதிவர் சந்திப்புல உங்க கணவரை சந்திச்சப்பிந்தான் அவர் எவ்வளவு பெரிய தியாகம்லாம் செஞ்சு இருக்கார்ன்னு புரிஞ்சுக்கிட்டு இந்த போஸ்ட் போட்டேன். தங்கச்சி
Deleteரொம்ப நன்றிங்க
ReplyDeleteகொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்துதான்
இந்தப் பின்னூட்டம் போடறேன்
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றிங்க ஐயா
Deleteரைட்டு.
ReplyDeleteரைட்டுக்கு தேங்க்ஸ்
Deleteபுரிதலுக்கு நன்றி! :) :)
ReplyDeleteநன்றியை ஏற்றுக்கொண்டேன் தம்பி
Deleteஆண்களை பற்றி உயர்வான கருத்துக்களை உங்கள் பாணியில் சொன்ன விதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
கருத்துரைக்கு நன்றிங்க
Deleteஆண்களை பற்றிய உயர்வான கருத்துக்களை உங்கள் பாணியில் சொல்லிய விதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
அருமை.
ReplyDelete//அவனுக்கு தேவைப்படும்போது உங்க கைகளை நீட்டுங்க.
அதுக்கு பதிலா, நீங்க அவனிடமிருந்து ரெண்டு மடங்காகஅன்பை பெறுவீங்க// உண்மை தான்.
உண்மையை நாங்க எப்பவும் உரக்க சொல்வோம்ல
Deleteஹலோ ராஜிம்மா உங்களுக்கு நிறைய சகோ இருக்கிறதுனாலதான் இதை உங்களால் புரிந்து கொண்டு பதிவாக இடமுடிகிறது. சகோக்களின் தியாகங்களை பபுரிந்து அதை வெளிப்படையாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்களாஇ பெற்று கொண்டேன் சகோ
Delete//அவனுக்கு தேவைப்படும்போது உங்க கைகளை நீட்டுங்க.
ReplyDeleteஅதுக்கு பதிலா, நீங்க அவனிடமிருந்து ரெண்டு மடங்காகஅன்பை பெறுவீங்க.
மெய்யான வரிகள் அக்கா..
கவிதையால் கொல்வது, தத்துவத்தால் கொல்வதுன்னு பல டெக்னிக் வெச்சிருக்கீங்க போல
ReplyDeleteஆஹா ஆண்களின் புலம்பலை நீங்க தைரியமா புலம்பிட்டீங்க போல
ReplyDeleteஆயிரம் சொன்னாலும் ஆணை விட பெண் ஒரு படி மேல்; அந்த ஆணை சுமப்பது ஒரு பெண் தானே!
ReplyDeleteஅடியாத்தி ஆம்பிளைங்க இவ்வளவு தியாகம் செய்யிராங்களா... :0 இன்னகிகுத்தான் எனக்குத் தெரிஞ்சதே.... என்னோட அறிவுக் கண்ண திறந்திட்டீங்க.. இனிமே பெண்கள் தங்களோட தியாகம் பற்றி கதைக்க மாட்டாங்க என்கிட்ட......
ReplyDelete:)
//திருமணத்துக்கு இலவசமா குடுக்குற புக்குல ஆண்களோட தியாகங்கள்ன்னு இந்த கருத்துக்கள் இருந்துச்சு. அதை பட்டி, டிங்கரிங்கலாம் பார்த்து பதிவா தேத்தியாச்சு. //
ReplyDeleteதேத்தினாலும் நல்ல பதிவு தான்..... ஏதோ பாவப்பட்டவங்கள பத்தி புரிஞ்சா சரி... :))
ஆம்பிளைங்க சார்பில ராஜி அக்காவுக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்க
ReplyDeleteஓஓஓ ஓ......
நல்ல கருத்துகளை அருமையா தொகுத்து கொடுத்திருக்கீங்க, இதெல்லாம் சீரியஸா எழுதினதுதானே, காமெடி எதுவும் பண்ணலயே?
ReplyDelete***
//அவனுக்கு தேவைப்படும்போது உங்க கைகளை நீட்டுங்க.
அதுக்கு பதிலா, நீங்க அவனிடமிருந்து ரெண்டு மடங்காகஅன்பை பெறுவீங்க.//
மிகவும் உண்மை, வாழ்த்துகள், நன்றி!
//ம்ம்ம்ம் புரிஞ்சுதுங்க. நீங்க போய் முகம்லாம் கழுவிக்கிட்டு வரதுக்குள்ள சூடா டீ போட்டு கொண்டு வரேன்.//
ReplyDeleteஎப்படியோ புரிஞ்சுகிட்டா சரிதான்..நன்றி அக்கா