ஸ்ஸ்ஸ்ஸ் அபா! வெளில வேலைக்குப் போய் வீட்டுக்குள் வந்தோமா! கசகசப்பு போக கொஞ்ச நேரம் காத்து வாங்க ஃபேனுக்கடியில நின்னோமான்னு இல்ல. ச்ச்சே எப்ப பார்த்தாலும் கரண்ட் கட்.
ஆமா மாமா! தினமும் 12 மணி நேரம் கரண்ட் கட்டாகுது. எப்ப கரண்ட் கட்டாகும்ன்னு பயந்து பயந்து மிக்சில அரைக்க வேண்டியதுலாம் முதல்லியே அரைச்சு வச்சுக்குறதா இருக்கு.இந்த கரண்ட் கட்னால எந்த எலக்ட்ரானிக் பொருள், எப்ப ரிப்பேர் ஆகி என்ன செலவு வைக்கும்ன்னு தெரியல. ம்ம்ம் சென்னைல பொறந்திருக்கலாம். நிம்மதியா இருந்திருக்கலாம்.
ரொம்ப அலுத்துக்காத! இன்னில இருந்து (2.12.2013) முதல் சென்னையிலயும் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்ன்னு மின்சார வாரியம் அறிவிச்சிருக்கு.
அப்படியா! மாலை ஆறு மணிக்கு முன்னயும், காலை ஆறு மணிக்கு பின்னயும் எரிய விடப்படும் தெரு விளக்குகள், கட்சிக் கூட்டம், மத விழாக்களுக்காக எரியவிடப்படும் அலங்கார விளக்குகள், பகலிலேயே தேவையில்லாம அரசு அலுவலகங்களில் எரிய விடப்படும் விளக்குகள்ன்னு இருக்குறதை அக்கறையா யாராவது அணைச்சா நல்லா இருக்கும்.
சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம்.
நீ சொல்றதுலாம் கூட சரியாதான் இருக்கு புள்ள. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.
ஆனா, எனக்கொரு டவுட் மாமா. கரண்ட் கட்டுக்கு காரணம்ன்னு நீதான், நீதான்னு இப்போ ஆள்றவங்களும், ஏற்கனவே ஆண்டவங்களும் அடிச்சுக்குறாங்களே! அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா!? அதுமில்லாம எதாவது ஒரு இடத்துல ரிப்பேர்ன்னு சொன்னா பரவாயில்ல. நெய்வேலி. மேட்டூர்ன்னு எங்கெல்லாம் கரண்ட் தயாரிக்குறாங்களோ அங்கெல்லாம் ஒரே நேரத்துலயா ரிப்பேர் வரும்!?
நீயும், நானும் பேசி என்ன பிரயோஜனம்!? யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குறியே! ராஜி வூட்டுக்கு எதிர்க்க செல்வின்னு ஒரு அக்கா இருக்காங்க. படிப்பறிவில்லாதவங்க. குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட அவங்க, தினமும் காலைல 4 மணிக்கு எழுந்து பஜாருக்கு போய் சில கடைகள் வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அதுக்கப்புறம் 2 வீடுகளில் வேலை செய்து, 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிச்சு சித்தாள் வேலை இல்லாட்டி அரிசி ஆலை வேலைக்கு போய் வருவாங்க.
மீண்டும் சாயந்தரம் 6 மணில இருந்து 3 வீட்டு வேலைக்குப் போய் வருவாங்க. இதுக்கிடையில் அவங்க வீட்டில் சமைச்சுன்னு ஓயாம ஓடி உழைக்குறங்க. இப்படி உழைச்சு 3 வீடு கட்டி இருக்காங்க. வேலை விட்டு வரும்போது ரோடு ஓரத்துல நாம எறியும் அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிமகன்கள் போடும் சரக்கு பாட்டில்கள், புத்தகம்ன்னு எல்லாத்தையும் எடுத்து வந்து காசாக்கி தன் ஒரே பையனை டிப்ளமோ மெக்கானிக் படிக்க வைக்குது.
ம்ம்ம் எனக்கும் தெரியும்ங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதுவரை யார்கிட்டயும் எதுக்காகவும் கையேந்தினதில்லைன்னு ராஜி சொல்லுவா.
அவங்களும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு நாம எல்லோரும் வேண்டிக்கலாம்!!
ராஜியோட பையன் அப்பு எட்டு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, அவனுக்கு கிஃப்டா வந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாலே அழுவான். முட்டிப் போட்டு நகர ஆரம்பிச்சதும் தெருக்கதவை திறந்தாலே தெருவுக்கு ஓட ஆரம்பிச்சுடுவான். அப்போ அவங்க வீட்டுக்கு எதிர்க்க பெரிய தரைக் கிணறு இருக்கும். அதனால, இடுப்புல கயிறுக் கட்டி சோஃபாவுல கட்டி வைக்க ஆரம்பிச்சா. அது தப்பு குழந்தை மனசு பாதிக்கும்ன்னு யாரோ சொன்னதால என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சா ராஜி.
அப்புறம் அவன் பார்த்து பயப்படும் டெடி பியர் பொம்மையை வாசப்படில வச்சு பார்த்தா. பயப்புள்ள அதுக்கப்புறம் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி டெடி பியர் பொம்மையைத் தாண்டி தெருவுக்கு ஓட ஆரம்பிக்கலியே! ராஜியும் நிம்மதியா இருந்தா.
புள்ளையை கயிறுல கட்டலாமா!? உன் ஃப்ரெண்டுக்கு அறிவே இல்லியா!?
என் ஃப்ரெண்டை பத்தி சொல்லாதீங்க. உங்களுக்கு அறிவிருக்கா!? அப்படி இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!
ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட 3 சாக்லேட் எம்ப்டி கவரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் தர்றாங்க. உங்ககிட்ட 15 ரூபாய் இருக்கு.அப்போ உங்களால எத்தனை சாக்லேட் வாங்க முடியும்?
விடைதானே!? சொல்றேன் அதுக்கு மின்னாடி ஒரு ஜோக் சொல்றேன். கேளு..,
மூன்றாம் வகுப்பு மாணவன் :டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .
ஆசிரியை :மறுநாள்.... உலகத்தின் எடை என்ன ன்னு யாருக்காவது பதில் தெரியுமா!?
யாருமே பதில் சொல்லலை!!
சிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல ....,
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா!?
ஆசிரியை :- ?????????????????

ஹா! ஹா! சிரிச்சுட்டேன். சாக்லேட் புதிருக்கு விடை சொல்லுங்க!!
விடைதானே!? இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.
ம்ம்ம் போங்க மாமா! போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும்!? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி!?
விடைதானே!? இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.
ம்ம்ம் போங்க மாமா! போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும்!? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி!?