இறைவன் ஒருவனே! ஆனால் அவனை அடையும் வழிகள் பல உண்டு. அவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து, பௌத்தம், சீக்கியம்... என பல்வேறு பெயர் கொண்ட பாதைகள் இருக்குன்னு பெரியவங்க சொல்வாங்க.
Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts
Friday, April 03, 2020
Friday, March 27, 2020
மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்
ஆணுக்கு பெண் சளைத்தவலல்ல! என்பதை ஆன்மீகத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கு. பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்றைக்கு நாம பார்க்கப்போறது ஒரு பெண் சித்தரை பற்றி... ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி. இவரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இருக்கு..
Friday, March 13, 2020
அருட்குரு ஸ்ரீதேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்- பாண்டிச்சேரி சித்தர்கள்.
கடந்த வாரம் ஸ்ரீசிவசடையப்பர் கோவிலில் ஜீவசமாதியான சடைதாயாரம்மாவின் ஜீவசமாதி கோவிலை பற்றி பார்த்தோம். இந்தவராம் நாம
பார்க்கபோறது தேங்காய் சுவாமி சித்தர். என்ன பெயரே அதிசயமா இருக்கே என நினைத்து, தேங்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதிக்கு போகும் வழியைk கேட்டு சித்தரை தரிசிக்க
பயணமானோம். வழியெங்கும் ஒரே போக்குவரத்து நெரிசல். போதாக்குறைக்கு ரயில்வேகேட்டைவேற கிராஸ் பண்ணி போகணும். நாங்க போனபோது ட்ரெய்னுக்காக
கேட் போட்டு வச்சிருந்தாங்க. போக்குவரத்து நின்னுட்டதால் கூட்டம் அதிகமா சேர ஆரம்பிச்சுது. ஒருவழியா
அடிச்சுப்பிடிச்சு சித்தர் ஜீவசமாதி கோவிலுக்கு போய்ட்டோம். இதுதான் கோவிலின்
நுழைவாயில். இங்கு வரிசையாக தூண்களில் சித்தர்களின் உருவங்களை அழகாக
வடிவமைத்துள்ளனர். அவர்களை தரிசனம் செய்துவிட்டு தேங்காய் சுவாமி சித்தரை தரிசிக்க சென்றோம். மிக எளிமையாக கட்டப்பட்டுள்ளது இந்த சித்தர் ஜீவசமாதி.
தேங்காய் சித்தரின் ஜீவசமாதிக்கு செல்லும்
பாதைதான் அரக்கப்பரக்க ஆட்களும் வண்டி .வாகனங்களுமாய் ஓடிக்கிட்டு இருந்துச்சே
தவிர, அந்த சாலையில் உள்ள நிகழ்வுகளுக்கும், அவ்விடத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லாமல் சித்தர் சமாதி அமைதியாக
காட்சியளித்தது. இங்குள்ள தூண்களில் எல்லா சித்தர்களின் உருவங்களும்,அவர்களின்
பெயரோடு சேர்த்து சுதை உருவமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாங்க போன நேரம் கூட்டம்
குறைவா இருந்ததால் அமைதியாக சித்தரின் சமாதியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம்
செய்ய முடிந்தது. அப்ப, நமக்கு இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு தோன்றுவதை இங்கு
வந்து தியானம் செய்பவர்கள் இயல்பாகவே உணரலாம்.
சரி யார் இந்த தேங்காய் சித்தர் என அவரைப்பற்றிய விவரங்களை தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தால் அங்கிருக்கும் எவருக்கும் சரியான விவரங்கள் ஏதும் தெரியலை. சுவற்றில் இருக்கும் சித்தர்களின் படங்களுக்கு கீழ் அவர்களின் விவரம் இருக்கும்போது இந்த சுவாமிகளின் பிறப்பிடம், குடும்பம், வயது என எதும் தெரியலியே எப்படின்னு யோசிக்க, இங்கிருக்கும் சித்தர்களைவிட முந்திய வரலாறு கொண்டவராக ஸ்வாமிகள்
இருந்திருப்பார் என நினைச்சுக்கிட்டோம்.
யாருக்கும் சரியான விவரம் தெரியலைன்னாலும் சுவாமிகள் பாண்டிச்சேரியில் இருக்கும் முதுகுளம்ன்ற ஊரில் இருந்துதான் இங்க வந்ததாக சொல்றாங்க. அதன்பிறகு மணவெளி கிராமத்திற்கு அருகிலுள்ள தண்டுகரை மேடுன்ற இடத்தில், முதலில் சிறு குடிசை அமைத்து அதில்தான் வசித்து வந்தாராம். சுவாமிகளின் அருமையை தெரிந்துகொண்ட சிலர் அவரைத் தேடிவந்து தரிசனம் செய்தனராம். சுவாமிகள் எப்பொழுதும் அந்த குடிசையில் பரம்பொருளை நோக்கி தீவிரமான ஆத்மதியானத்திலேயே இருப்பாராம்.
இவரைத் தேடிவரும் மக்களுக்கு குறைகளை தீர்த்து வைத்துள்ளார். அதேசமயம் சிலருக்கு அவர்களுடைய பிரச்சனையை அவர்கள் கையாலே தேங்காய் கொண்டு வரச்செய்து அதை உடைத்து சுவாமிகள் பார்க்கும்போது, அந்த தேங்காயில் சுவாமிகளின் கண்களுக்கு மட்டும் நீல நிறத்தில் எழுத்துக்கள் தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாராம். அதனாலேயே ”தேங்காய் சித்தர்”ன்ற பெயர் வந்ததா சொல்றாங்க. பில்லி சூன்யம் ஏவலால் பாதிக்கப்பட்டவங்க வந்தால், அவர்கள் கொண்டுவரும் தேங்காயை வைத்தே துஷ்ட சக்திகளை விரட்டி அடிப்பாராம். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வைத்து வணங்க எல்லா துயரமும் போய்விடுமாம். சிலருக்கு பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்து தீராத நோய்களை குணமாக்கியும் வந்தாராம்.
அப்படியே சில ஆண்டுகள் அங்கயே தங்கி இருந்து தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு பிரச்சனைகளை தீர்த்துவைத்தும், ஆத்ம சாதனையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் சுவாமிகள். ஒருநாள் வில்லியனூரில் ஒரு மரத்தடியில் தியான நிலையலிருந்தபடியே ஜீவ சம்தியாகிவிட்டாராம். அங்கேயே அவருக்கு சமாதி எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். அவர் ஜீவ சமாதியான வருடம், தேதி என எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரியவிலை. ஆரம்பத்தில் மிக எளிமையான முறையில் சமாதி எழுப்பி வழிபட்டுவந்துள்ளனர். நாட்கள் செல்லசெல்ல பக்தர்கள் கோவில் இப்ப இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்படியே சில ஆண்டுகள் அங்கயே தங்கி இருந்து தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு பிரச்சனைகளை தீர்த்துவைத்தும், ஆத்ம சாதனையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் சுவாமிகள். ஒருநாள் வில்லியனூரில் ஒரு மரத்தடியில் தியான நிலையலிருந்தபடியே ஜீவ சம்தியாகிவிட்டாராம். அங்கேயே அவருக்கு சமாதி எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். அவர் ஜீவ சமாதியான வருடம், தேதி என எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரியவிலை. ஆரம்பத்தில் மிக எளிமையான முறையில் சமாதி எழுப்பி வழிபட்டுவந்துள்ளனர். நாட்கள் செல்லசெல்ல பக்தர்கள் கோவில் இப்ப இருக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்றும் சுவாமிகளுக்கு தேங்காயை வைத்து வழிபட்டுவந்தால் தீராத பிரச்சனைகளும் தீரும்ன்ற நம்பிக்கை இங்குள்ளது. இவரது ஜீவசமாதிக்கு செல்ல,புதுச்சேரிபஸ்டாண்டில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் சென்றால் அங்கெ இருக்கும் வில்லியனுர் துணை மின் நிலையத்திற்கு எதிரில் இவரது ஜீவ சமாதி உள்ளது.
தேங்காய் சித்தரின் பதிவுக்காக இணையத்தில் தகவல்களை தேடும்போது ,வில்லியனூரில் எடுக்கப்பட்ட ஒரு பழமையான பிரெஞ்ச் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அந்த விடியோவும் இந்த சித்தர் பதிவுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்குமென்று நம்புகிறேன்.
இந்த சித்தர் சமாதி 2010-ம் ஆண்டு ஒரு சிறிய வழிபாட்டு ஸ்தலமாகவே இருந்தது.வருடங்கள் செல்ல,செல்ல சித்தரின் பெருமை உலகுக்கு தெரிய,அவரது அருளாசிகளை போல் அவரது ஜீவ சமாதியும் பெரியதாக கட்டப்பட்டு,வழிபாடுகளும் சிறப்பாக கொண்டாட படுகின்றன .இதோ தேங்காய் சித்தர் சமாதி 2010 ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
அடுத்த வாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
இந்த சித்தர் சமாதி 2010-ம் ஆண்டு ஒரு சிறிய வழிபாட்டு ஸ்தலமாகவே இருந்தது.வருடங்கள் செல்ல,செல்ல சித்தரின் பெருமை உலகுக்கு தெரிய,அவரது அருளாசிகளை போல் அவரது ஜீவ சமாதியும் பெரியதாக கட்டப்பட்டு,வழிபாடுகளும் சிறப்பாக கொண்டாட படுகின்றன .இதோ தேங்காய் சித்தர் சமாதி 2010 ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
அடுத்த வாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
நன்றியுடன்
ராஜி
Friday, February 07, 2020
ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் வசந்தநகர்-பாண்டிச்சேரி சித்தர் சமாதிகள்.
லாங்க்... லாங்க்... லாங்க.. அகோ.. சித்தானந்தர் ஜீவ சமாதிக்கு சென்று
தரிசித்து அவருடைய அருளாசிகளை பெற்றுவந்ததை பதிவா போட்டிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இந்த பதிவு...
சித்தானந்தரை தரிசித்து வந்தபின், சரி எங்கேயாவது சாப்பிடலாம் என்று
நினைத்தபோது எங்களுடன் வந்த வழிகாட்டி அண்ணா சொன்னார் பக்கத்துலதான் ஒரு சித்தர்
சமாதி இருக்கு நடைசாத்துறதுக்கு முன்னாடியே போய் தரிசித்து வந்துவிடலாம்
என்றார். சித்தருடைய ஜீவசமாதியை காணும் ஆவலில் பசி மறந்ததுன்னு சொன்னா நம்பனும். கூடவந்தவங்கலாம் சமாதிக்கு போகனும்ன்னு முடிவெடுத்ததால் நானும் அந்த முடிவுக்கு திணிக்கப்பட்டேன். அவரை
தரிசிக்கும் ஆவலில்!! முத்தியால்பேட்டையில் உள்ள வசந்த்நகரில் இருக்கும் திருவள்ளுவர்
சாலையை நோக்கி சென்றோம். அங்க ஒரு வீதியில் நிறைய மூட்டைகள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இந்த இடம்தான் வேதநாதரின் ஜீவ சமாதி கோவில். அங்க போனதும் நம்மை வரவேற்பது ஸ்ரீலஸ்ரீ
குரு வேலாயுத ஈஸ்வர் ஆலயம் என்ற அறிவுப்பு பலகை. உடனே பயபக்தியோடு அவருடைய
ஜீவசமாதியை தரிசிக்கும் ஆவலில் கோவிலுக்கு சென்றோம்.அங்கே மதியம் வேளை என்பதால்
குறைவான அளவே ஆட்கள் இருந்தனர்.
வேதாந்த சித்தரின் ஜீவ சமாதி கோவிலுக்குள்
நுழைந்ததுமே ஒரு அமைதியை நம்மால் உணரமுடிந்தது. உள்புறம் அத்தனை சித்தர்களின் படங்களையும் வரைந்தவர்கள், வெளிப்புறம் வெறும் தூய வெள்ளை நிற சுண்ணாம்பை மட்டும்
அடித்து வைத்துள்ளனர்.சரி எப்படியோ மேலும் ஒரு சித்தரை தரிசித்த புண்ணியத்தில் அந்த
சித்தரை பற்றி எவரிடம் கேட்கலாம் என்றாலும்,அவரைப்பற்றிய சரியான குறிப்புகள்
யாருக்கும் தெரியவில்லை. இந்த வேதாந்த சுவாமிகள் 1892 -ம் ஆண்டு தோன்றியவர். இவரின் உண்மை
பெயர் தாண்டவராயன் என்பன மட்டுமே பொதுத்தகவலாக இருந்தது. சரி எப்படியாவது
இவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொண்டே சித்தரை
தரிசித்துக்கொண்டிருந்தேன்.அப்ப, ஒரு வயதான அம்மா அங்க நெய்தீபம் ஏற்றி கொண்டிருந்தார். சரி, அவரிடம்
சென்று விவரங்கள் கேட்கலாம் என்று அவர் அருகே பவ்யமாக!! நின்றுகொண்டேன்.
விளக்குலாம் ஏத்திட்டு அந்தம்மா
பொமையாக ஒரு இடத்தில உட்கார்ந்து வேதானந்த சுவாமிகளை பற்றி சொல்ல
ஆரம்பித்தார். வேதானந்த சுவாமிகள் 1892
- ம் ஆண்டு திருமருகல் என்னும் ஊரில்
பிறந்தாராம். இவரது இயற்பெயர் தாண்டவராயன். தனது 12 -ம் வயதில் பரம்பொருளின்பால்
ஈர்க்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு
கால்நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒவ்வொரு தலங்களுக்கு சென்று தரிசித்துவரும்
வேளையில் ஒருமுறை விராலிமலைக்கு சென்றபோது இராசகிரி என்னும் பெரியவர் ஒருவரை சந்திக்கும்
பாக்கியத்தை பெற்றார். அவரிடம் சீடராக சேர்ந்து திருவாசகம் ,தேவாரம், பட்டினத்தார்
பாடல்கள், பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள் போன்ற பலவற்றையும் கற்றார். எல்லாம் தெளிவுற
கற்று முடிந்தவுடன் தன் தீர்த்த யாத்திரையை தொடந்தார்.
அப்பொழுது சிதம்பரம் மௌனசாமிகளை சந்திக்க
நேர்ந்தது. அவரிடம் நிறைய ஆன்மீக பாடங்களை கற்றுக்கொண்டார். சிதம்பரம் மௌன சுவாமிகள்
இவரது திறமையை கண்டு வியந்து பாராட்டி வேலாயுதம் என்ற பட்டத்தை சூட்டினாராம்.
பின்னர் திருவாடுதுறை வெள்ளியம்பல தம்பிரானிடம் பிரவுலிங்கலீலை, சிவஞானபோதம்
முதலிய சித்தாந்த பாடங்களை தெளிவுற
பயின்றார். அதன்பிறகும் தலயாத்திரையை தொடர்ந்துகொன்டு இருந்தார். அப்பொழுது சாக்கோட்டை
ஸ்ரீலஸ்ரீவீரஞான தேசிகரிடம் பல ஞான நூல்களை கற்றுக்கொண்டார். மேலும் தனது
திருத்தல யாத்திரையை தொடர்ந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையில் விவேகானந்தரை
சந்திக்கும் பாக்கியத்தை பெற்றார். அரவிந்தருக்கு அரூபமாக உபதேசம் செய்த எல்லாம்
உணர்ந்தவரான விவேகானந்தர் வேதாந்த சுவாமிகளை அவர் செய்யவேண்டிய சில கடமைகளை
உணர்த்தினார். விவேகானந்தரின் சந்திப்பு வேதாந்த சுவாமிகளை இல்லற வாழ்க்கைக்கு
திருப்பியது.
திரும்பவும் ஊருக்கு வந்த தன் முறைப்பெண்ணான
தன்னுடைய அக்கா மகளையே திருமணம் செய்துகொண்டார். இறைவனையுடைய பாதங்களை அடைய
அருள்மட்டும் போதும். ஆனால் இல்லற வாழ்க்கைக்கு பொருள் வேண்டாமா?! அப்பொழுதான்
பிரஞ்சுகாரர்கள் ஆண்ட பாண்டிச்சேரிக்கு வியாபாரம் செய்து பொருளீட்ட புதுவைக்கு
வந்தார். என்ன அற்புதம் எல்லா சித்தர்களையும் ஒருசேர சங்கமிக்கவைக்கும் இடம்
புனிதமான புதுஸ்சேரியாகத்தான் இருந்திருக்கிறது.
அவர் புதுவை நேரு வீதியில் கைலி(லுங்கி) கடை
ஆரம்பித்தார். இவரது கடை சாமியார் கடை என்றே அழைக்கப்பட்டது. இல்லறவாழ்கையில்
அவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும்,ஒரு பெண்குழந்தையும் பிறந்தன. சிலகாலம் கழித்து இவரது துணைவியார்
இயற்கை எய்தினார்.அவரது மனைவியரின் மறைவிற்கு பிறகு சுவாமிகள் முழுநேர ஆன்மீக
வாழ்வில் ஈடுபடலானார். துறவறம் பூண்டு மக்களுக்கு வேதபாடங்களை சொல்லிக்கொடுத்தார்.
வேதங்களை பற்றி சொற்பழிவாற்றினார். மக்கள் இவரது பாடங்களை படிக்கவும் இவரது
சொற்பொழிவை கேட்கவும் ஆவலாக கூடினர்.
இதனால் மக்கள் இவரை வேதாந்த சுவாமிகள் என்றும், வேதாநந்த சுவாமிகள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில்
இவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்கள் உதவியுடன் மேலும் பல வேதபாட சொற்பொழிவுகளை
பல இடங்களில் நடத்தினார். இப்படியே நாட்கள் பல சென்றன,வருடங்களும் ஓடியது. இறைவனின் விருப்பம் இவர் புதுவையில் ஜீவன்
முக்தியடைய வேண்டும் என்பதே..
இந்த சமயத்தில்தான், தான் பிறந்த ஊரான
திருமருகலில் இருக்கும் சிவபரம்பொருளின் கோவிலில் கும்பாபிஷேகம் என்று
கேள்விப்பட்டார். திருமருகல் இறைவனை காண ஆசைப்பட்டார். அப்பொழுதே இறைவன் அவரை
தன்னுள் அழைத்துக்கொள்ளும் எண்ணத்தை உள்ளத்துள் உணர்த்தினார். ஆனாலும் அவருக்கு
திருமருகல் சிவனை காணும் ஆவல் குறையவில்லை. உடனே பாண்டிச்சேரியில் இருந்து இரயில்
ஏறிவிட்டார். இறைவனின் விருப்பத்தை மீறி கும்பாபிஷேக காட்சியை காணும் ஆவலில்
மாயவரம் வரை இரயிலில் வந்துவிட்டார் .அப்பொழுதே சுவாமிகளின் உடல்நிலை மோசமடைந்ததது.
இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தியத்தின்
விளைவே இது என உணர்ந்தார். வேதனந்த சுவாமிகள் உடனே புதுவைக்கு திரும்பினார். பின்னர் புதுவைக்கு வந்ததும் உடல் தன்னிலை மறந்து சுவாமிகள் 17
-09 - 1962 ம் வருடம் பகல் 3 :௦௦ மணியளவில் பூதவுடலை துறந்து இறைவனுடன் ஐக்கியமானார் என்று அந்த
மூதாட்டி வேதானந்தரின் வாழ்க்கை குறிப்பை சொல்லி முடித்தார்.சித்தரின் பெருமைகளை
கேட்டறிந்து கோவிலை சுற்றி வலம்வர ஆரம்பித்தேன்.
அப்பொழுது குருதண்டபாணி சுவாமிகள் என்று ஒரு
ஜீவசமாதி இருந்தது, சரி அதைப்பற்றி கேட்கலாம் என்று அந்த
வயதான அம்மா அங்கிருந்து சென்றுவிட்டார். சரி அடுத்தமுறை வரும்பழுது கட்டாயம்
குறித்துவைத்து பதிவில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்த சில
புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். அதிலும் இந்த தண்டபாணி சுவாமிகள் போட்டோ
இருந்தது. கூடவே ஸ்ரீசாது கங்காதரன் சுவாமிகள் என்றும் ஒரு போட்டோ இருந்தது இவர்களை
பற்றிய குறிப்புகளை தெரிந்துகொள்ள முடியவில்லை.சரி, குருஅருளும் திருவருளும்
கூடிவந்தால் அடுத்தமுறை வரும்போது தெரிந்துகொள்ளலாம் என்று ஜீவ சமாதியை
வலம்வந்தேன்.
சுவாமிகள் வேத பாடங்கள் உபதேசம் மற்றும்
சொற்பொழிவு நடத்திய செட்டி தெருவில் உள்ள கொசியதே புரோகரசீத் அருகில் உள்ள ஒரு
வீட்டில்தான் அந்த இடம் இப்பொழுது அரவிந்தர் வீதியில் கல்விக் கூடமாக இயங்குகிறது
என்பது மட்டும் அங்கிருந்த ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். அரவிந்தர் சமாதிக்கு முதலிலியே சென்றுவிட்டதால் கவனிக்கவில்லை. சரி அடுத்தமுறை வரும் போது அங்கும் சென்று குரு அருளையும் பெற்றுவிடவேண்டும் என்று வேதாந்த சுவாமிகள் ஜீவ சமாதியில் இருந்து கிளம்பினோம்.
மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
நன்றிடன்
ராஜி
Friday, August 16, 2019
தொள்ளைக்காது சித்தர் - பாண்டிச்சேரி சித்தர்கள்
இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையில் கடவுளுக்கு எப்படி முக்கியத்துவம் உண்டோ அதே அளவுக்கு அவரை நம்பி வழிப்படும் அடியார்களுக்கும் உண்டு. இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாய் செய்த தியாகங்கள், இறையின்பால் பாடிய பாடல்கள், இறைவனின் மகிமைகளை நாடு முழுக்க பரப்பியதால் அடியவர்களை சைவ, வைணவ முறைப்படி நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அழைப்பர். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்ன்னு சினிமா பாட்டே இருக்கு. அதுப்படி, மனிதனாய் பிறந்தவர் தான் வாழ்ந்த வாழ்க்கை, அவரால் பிறர் அடைந்த நன்மைகள், அவர்தம் இயற்கையோடு இழைந்த வாழ்க்கை, இயற்கை அளித்த கொடைகளை கொண்டு அவர்கள் நிகழ்த்திய சித்து லீலைகளை பொறுத்து இறைவனின் அடியார்களை சித்தர்கள் என வகைப்படுத்துவர். இறைவழிப்பாட்டோடு சித்தர்கள் வழிபாடு இப்ப பரவலாய் நடத்தபடுது. இனிவரும் வாரங்களில் நாம சித்தர்களின் ஜீவ சமாதிகளை பார்க்கலாம். சித்தர்கள் வழிபாடு தமிழகம் முழுக்க இருந்தாலும், பாண்டிச்சேரியை சுற்றி எண்ணிலடங்கா சித்தர்கள் ஜீவசமாதிகள் இருக்கின்றன. ”தண்ணீரில்” தாராளமாக சூழப்பட்டிருக்கும் பாண்டிச்சேரி கடலில் மூழ்காமல் காப்பது இந்த சித்தர்களின் சமாதிகளே என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
பண்டையக்காலங்களில் வேதபுரி, வேதபுரம், அகத்தீஸ்வரம், ஞான பூமி ,சித்தர்கள் பூமி, பாண்டிச்சேரி, புதுச்சேரி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் புதுச்சேரி நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம் ஏன்னா எவ்வளவு வேகமா நாம போகிறோமோ அவ்வுளவு வேகமா சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கலாம். எந்த ஒரு காரியத்தை தொடங்குவது என்றாலும் விநாயக பெருமானை வணங்கிவிட்டே தொடரவேண்டும் என்பதற்க்காக எங்கள் குழு முதலில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டோம். இந்த கோவிலுக்கு ஏன் மணக்குள விநாயகர்ன்ற பெயர் வந்ததுன்னா கடலுக்கு அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என முதலில் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி மணக்குள விநாயகர் என அழைக்கப்படுகிறார்ன்னு சொல்றாங்க. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்னயே இந்த கோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கி இருக்கும் இந்தக்கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்றுதான் அழைக்கப்பட்டதாம். அப்ப இருந்த மக்கள் இவரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றே அழைத்தார்களாம். பல பிரசித்தி பெற்ற தனி விநாயகர் ஆலயங்களில் இந்த மணக்குள விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயம் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்னாலேயே அதாவது 1666ம் ஆண்டுக்கு முன்னாலாயே இந்த கோவில் இருக்குன்னு சொல்லப்படுது .
இந்த கோவிலின் வெளிப்புற சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அதைத்தாண்டி கோவிலுக்குள் நுழையும்முன் நம்மை அங்கிருக்கும் ஒரு விநாயகர் வரவேற்கிறார். கோவிலின் உட்பகுதி அழகாக சுத்தமாக வைத்துள்ளனர். மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி பிரஞ்சு கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த விநாயகரை பலமுறை பிரஞ்சு அரசு இதனை அகற்ற முற்பட்டனர். அதற்குப்பிறகு வந்த பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கு இடையூறாக இருந்த இந்த கோவிலை பலமுறை இடிப்பதற்கு முயற்சி செய்தனராம். ஆனா, பக்தர்களின் முயற்சியாலும் ,உள்ளூர் மக்களின் முயற்சியாலும் பலமுறை இக்கோவில் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாம். அதனால் ஆத்திரமடைந்த பிரஞ்சு அரசு இந்த கோவிலுக்கு திருவிழா நடத்த தடைவிடுத்தனர். கொஞ்சகாலம் திருவிழாக்கள் ஏதுமின்றி இக்கோவில் இருந்ததாம். அதன்பிறகு வந்த பிரஞ்சு கவர்னர் டூப்லேவின் முயற்சியால் விநாயகருக்கு மீண்டும் திருவிழா எடுக்கப்பட்டதாம்.
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னனா, தனிக்கோவில் கொண்டுள்ள விநாயகர் சன்னதியில் தங்கத்தாலான மூலவர் கோபுரம் இருப்பது இந்த தலத்தில்தான் என சொல்லப்படுகிறது. அதேப்போல இங்குதான் விநாயகருக்கு சித்தி, புத்தி என்னும் மனைவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் மூலவருக்கு அருகில் இருக்கும் சிறிய குழியில் இருந்து வற்றாமல் நீர் வந்துகொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு என்னன்னா இங்க ஜீவசமாதியாக இருக்கும் தொள்ளைக்காது சித்தர்தான் தினம் தினம் விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்கள் இவரையும் தரிசிக்க தவறுவதில்லை. ஸ்ரீதொள்ளைக்காது சித்தரின் ஜீவசமாதி அவர் வணங்கிய மணக்குள விநாயகர் கோவிலுக்கு உள்ளேயே அமைந்து உள்ளது. இந்த சமாதி கோவில் கருவறைக்கு பின்புறத்தில் உள்ளது.
இந்த தொள்ளைக்காது சுவாமிகளின், இயற்பெயர் என்ன?! தாய் தந்தையர் யார் எப்பொழுது பிறந்தார்?! எங்கிருந்து வந்தார் என்பதுயாருக்கும் தெரியாது. ஆனால் எப்போதும் புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில்தான் அமர்ந்திருப்பாராம். இவருக்கு சிறிய வயதாக இருக்கும்போதே தந்தை தவறிவிட்டாராம். இளவயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு அதில் விருப்பம் இல்லாமல் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக்கொண்டே சித்தபிரமை பிடித்தவர்போல நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன்தான் தந்நிலை அடைந்தாராம். பின்னர், அங்கிருந்த முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று, அங்கேயே தங்கி இடைவிடாது அம்மனை வேண்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனம் கிடைத்தவுடன் ஞானமோன நிலைக்கு சென்று யாவற்றையும் உணர்ந்தார்.. அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அன்றிலிருந்து வாய் பேசா ஊமையானார். உடனே அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டுவிட்டு பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது. சுவாமிகள் எங்கிருக்கிறார்?! என்ன செய்கிறார்?! என்பதை மக்களால் கண்டுக்கொள்ள இயலவில்லை. ஆனால், யார், என்ன துன்பம் என்று சுவாமிகளை தேடி வந்து முறையிட்டாலும் அவர்களின் துன்பம் பறந்தோடியது. நோயாளிகள், துன்பத்தில் தவிப்போரது பிரார்த்தனைகள் சுவாமிகள் தரிசனத்திலேயே ஈடேறியது. சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத்தொடங்கியது. வேறு சிலரோ சுவாமிகள் முகத்தில் பலநாள் மீசை தாடியோடு அழுக்கடைந்த வேஷ்டியுடன்- பார்க்க ஒரு ஆண்டியைபோல் இருந்ததினால்-மக்கள் அவரை ”ஆண்டி” என்று அழைத்தார்கள்.அவரின் முரட்டுத்தனமான செய்கையை கண்ட மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று அழைத்து வந்தனர். என்றும் காலப்போக்கில் அவர் தங்கியிருந்த ஊர் அவர் பெயரைக்கொண்டே “முரட்டாண்டி சாவடி” எனவும், ”முரட்டாண்டி” எனவும் வழங்கப்படலாயிற்று என்றும் சொல்கின்ற்னர்
அந்த காலத்தில் சுவாமிகளின் பெயர் காரணத்தினால் முரட்டாண்டி சாவடி என்று அழைக்கப்படுவதை பிரஞ்சு அதிகாரிகள் அப்படி அழைப்பதை தடைசெய்தனர். காரணம், ஒரு ஆண்டியின் பெயரால் ஒரு கிராமம் இருப்பதா, என பொறாமைகொண்டு அப்பொழுதைய கவர்னரான துய்ப்ளேக்ஸ், ”துய்ப்ளேக்ஸ் பேட்டை” “என்ற பெயரை அக்கிராமத்திற்கு நிறுவினார். மேலும், ”முரட்டாண்டி சாவடி”-என்று சொல்லுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா செய்தனர்.இதனைக் கண்ட மக்கள் பிரஞ்சு அதிகாரியிடம் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.
முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக்கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய சுவாமிகளுக்கு அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள், தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.தொள்ளைக்காது சித்தர்.
அங்கிருந்து மணற்குளத்து பிள்ளையாரை வழிபட, தினமும் இரு வேளையும் செல்ல சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் இருந்தது .பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் ஸ்வாமிகளுக்கு மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம். பின், முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார். பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார். காலங்கள் சென்றன. ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்று அழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.
பிரெஞ்சு மக்கள் இவரை வணங்க ஆரம்பித்து உபசரிப்பு தரிசனம் என்ற பெயரில் இவரை சந்திக்க முயன்றனர். இதனால் அவர் கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பி அருகிலிருந்த மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு சென்றார். அடர்ந்த தோப்பு மணற்கேணி அருகில் ஒரு பிள்ளையார் கோவில் இதுவே அவருக்கு மனதில் அமைதியை தோற்றுவித்தது. இவர் சித்து வேலைகள் தொடர்ந்ததால் எப்போது எங்கு இருப்பார் என்று சரியாக யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாது. காலங்கள் சென்றன. இறைவனின் அழைப்பை அறிந்தார். மணற்குளத்து பிள்ளையார் அருகிலேயே தான் சமாதியாக விருப்பம் கொண்டார். தன் எண்ணத்தை பிள்ளையார் கோவில் அருகில் வசித்து வந்த மீனவ மக்களிடம் தெரிவித்தார்.அவர் வேண்டுகோளின்படி அவர் மறைவிற்குபின் அவருடைய உடல் பிள்ளையாருக்கு அருகிலேயே மணற் குளத்தங்கரையில் அப்பகுதி மீனவர்களால் கரும காரியங்கள் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டது. அந்த ஆண்டி தொள்ளைக்காது சித்தரால் தான் அருள்மிகு ஸ்ரீமணக்குள விநாயகர் ஆலயம் இன்று புதுவையிலேயே மிகச் சிறந்த ஆலயமாக திகழ்கிறது.
சுவாமிகளை, முழுவதுமாக நம்புவோர்க்கும் உள்ளன்போடு தியானிப்போருக்கும் சித்தரின் பரிபூரண அருள் கிடைப்பதை இங்கு வந்து தரிசனம் செய்பவர்கள் கண்ணார காண்கிறார்கள். இந்த கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னன்னா , பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த பாரதியார் இந்த ஸ்தல விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் மேலுமொரு சிறப்பு.பாண்டிச்சேரி பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது. இந்த மணக்குள விநாயகர் ஆலயம் .மீண்டும் ஒரு சித்தர் சமாதியில் இருந்து அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்
ராஜி
Friday, May 02, 2014
திருமலை நம்பியின் நின்ற கோலம். திருக்குறுங்குடி-புண்ணியம்தேடி
போன வாரம் திருக்குறுங்குடிஅழகிய நம்பிராயர் கோவிலில் தரிசனம் முடிச்சாச்சு! இனி, மலைக்கோவிலில் இருக்கும் திருமலை
நம்பியை தரிசிக்கச் செல்லலாம்.... அதுக்குமுன்
கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி இருக்கு. அதுல அதிகபட்சமா 8 பேர் வரை பயணம்
செல்லலாம். ஏன்னா, மலைமேல் ஏறி செல்ல எடை குறைவாக இருந்தால் நலம். தனி ஒரு ஆளாக
போனாலும் சரி இல்ல 8 பேர் கொண்ட
கும்பலாக இருந்தாலும் சரி 800 ருபாய்
வசூலிக்கிறாங்க. சிலபேர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதை வழியே நடந்தே மலைநம்பிகோவிலுக்கு செல்றாங்க. கீழ்கோவிலில் இருந்து மலையடிவாரம் வரை செல்ல 80 ரூபாய் வசூலிக்கிறாங்க கீழ்கோவிலிருந்து மலையடிவாரம் சுமார் 6
கிமீ தொலைவு இருக்கும்.
இதுதான்
கோவிலுக்குச் செல்லும் மலையடிவார செக் போஸ்ட். வனத்துறை கட்டுப்பாட்டுல இந்த இடம் இருக்கு. இங்கே கோவிலுக்கு செல்வதற்கு நுழைவு கட்டணம் இல்ல. ஆனா பக்தர்கள் அல்லாதவர்கள்
அருவியில் குளிப்பதற்க்கு கட்டணம் வசூலிக்கிறாங்க. அதுப்போல டிஜிட்டல் கேமேராவிற்கு 25
ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சரி, இனி நாம
மலைக்கு செல்லலாம். செக் போஸ்ட் கேட்லயே வனவிலங்குகள் பத்தின எச்சரிக்கை அறிவிப்பு
வச்சு இருகிறாங்க. இங்கே புலிகள் இருக்கிறதாம் ஆனா அவை மலையின் உச்சியில் தான்
இருக்கும். கீழே வருவது இல்லை(புலியைவிட கொடிய மிருகமான மனிதர்களைக் கண்டு அதற்கு அச்சமோ!!??).
மத்தபடி வெயில் சாயும் மாலை வேளையில் எல்லா மிருகங்களும் நாம் போகும் பாதையில் நடமாட ஆரம்பிக்கும். அதனால 4 மணிக்குள்ளே திரும்பி வந்திடனும்ன்னு எச்சரிக்கை
பண்ணினார் வனத்துறை அதிகாரி. அதைவிட முக்கியமான விஷயம் என்னனா நாங்க சென்ற அன்று நாங்க போன அன்னிக்கு அதிகாலையில பெரிய சிறுத்தை ஒண்ணு இந்த கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் நடமாடியதாக
சொன்னதால உள்ளுக்குள் கொஞ்சம் பயம் வந்தது. அதனால, ஜீப்ல போனா பாதுகாப்பு. ஆனா
வனத்தை முழுமையாக ரசிக்க முடியாது நடந்து சென்றா கவனமாக செல்லுங்கள் என அந்த அதிகாரி சொன்னார். அதனால இறைவனின் மேலே பாரத்தை போட்டு நடந்தே மலை உச்சிக்கு சுமார் 4 கிமீ தூரத்தை கடந்து இயற்கையையும் ரசித்து, காட்டு மிருகங்கள் வந்தால் நான் ராஜி, நான் பிளாக்கரா இருக்கேன். உன்னைலாம் என் பதிவுல போடுறேன்னு சொல்லி தாஜா பண்ணிக்கலாம்ன்ற குருட்டு தைரியத்தில் நடந்தே செல்ல
முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.
பொதுவாக சித்தர்கள்
எல்லாம் சிவன்கோவில் மலைகளின் மேலேதான் இருப்பாங்க. ஆனா இங்கே ஆச்சர்யமாக பெருமாள்
கோவில் மலைமேலே சித்தர்கள் இருப்பது!! இங்கே சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கே பலர்
இங்கே வருவதுண்டாம். சிலருக்கு தரிசனமும் கிடைத்து
இருக்கிறதாம். இந்த நம்பி மலையில் இங்கே மலைமேலே இருக்கும் பெருமாள் அழகிய நம்பி
என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். அதனால இந்த மலையும் நம்பிமலை என
அழைக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் வனத்துறையின் செக் பாயிண்ட் இருக்கு. அதன்
வாசலின் இருபக்கமும் சித்தர்களான சிவாகியரும், யூகி முனிவரும் இட வலபக்கமாக
இருக்கிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு மலை பயணத்தை தொடங்கினோம்......
கரடு முரடான கற்கள்
நிறைந்த மலைப்பாதை. தண்ணீரெல்லாம் தெளிந்த நீரோடைப் போல அழகாக ஓடுகிறது. மரங்கள்
எல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது. புதியவகை பறவைகள், வால்நீண்ட குருவிகள் எல்லாம்
பறக்கும் விதம் வித்தியாசமாக இருந்தது. கேமரா ஆன் செய்வதற்குள் அது எங்கேயோ போய்
விட்டது!!!
மலைப்பாதையில் நடந்து
செல்வது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது. வழிநெடுக்க பறவைகளின் வித்தியாசமான
ஒலிகள், நீரோடையின் சப்தம், குரங்குகளின் குறுக்கு நெடுக்கு ஓட்டம் இதெல்லாம்
பார்த்துவிட்டு செல்வது இயற்கையோடு நம்மை ஒன்றிப்போக செய்தது.
இவ்வளவு கற்களும், தெளிவில்லாத வழிப்பாதையும் இருந்தாலும் ஆண்டுதோறும் இங்க வரும் பக்தர்களின்
எண்ணிக்கை அதிகமாம். ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்குமாம். அதேபோல் சனிக்கிழமைகளில் மலையடிவாரத்தில் இருந்தே நடந்து
செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாம்.
மொத்தம் 4 கிமீ தொலைவில் இப்பொழுது 2 கிமீ கடந்து வந்தாச்சு. இந்த வழியில் ஒரு பெரிய உடும்பு எங்களை கடந்து வேகமாக சென்று புதரில் மறைந்துக் கொண்டது. குரங்குகள் எல்லாம்
எங்க கைகளில் இருக்கும் பையில் ஏதாவது இருக்குமான்னு சுத்தி சுத்தி வந்தன. ஆனா, ஆச்சர்யப்படும் விதமா மரத்துக்கு மரம் தாவுற ஒரு உயிரினம் நம்ம கேமராவுக்குள்
சிக்கிவிட்டது.
குரங்குகளுடன்
ஒய்யாரமாய் கிளைகளுக்கு கிளை தாவி ஓடிக்கொண்டு இருந்தது. முதலில் அது ஒரு மரநாயோ என
நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு காட்டு அணில்ன்னு. நானும் இப்பதான் முதல்முறையா வித்தியாசமான இந்த காட்டு அணிலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லவேளை! அது
நாங்க படம் எடுக்ககும்வரை பக்கத்தில் குரங்காருடன் பொறுமையாக இருந்து எங்களுக்கு போஸ் தந்தது.
அதை ஜூம் பண்ணி
பார்க்கும் போது அடர்த்தியான கருமைநிற ரோமங்களுடன் அழகாக இருந்தது. நாங்க கோவிலுக்குப் போறோம்கிறதைவிட ஏதோ சுற்றுலா செல்வதைப்போல உணர்ந்தோம். இந்தக் கோடை வெயிலுக்கு
ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வதைவிட இதுமாதிரி இடங்களுக்கு செல்வது
பொழுதுபோக்கு சுற்றுலாவாக இல்லாமல் ஆன்மீக சுற்றுலாகவும் அமையும். இயற்கை எழில்
சூழ்ந்த நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ததுப் போலவும் இருக்கும்.
அதோ தெரிகிறப் பாறையில்
மாலைவேளையில் வெயில் சாயும் நேரம் சிறுத்தை புலிகள் ஓயவேடுக்குமாம். யானைகளும் இங்க இருக்கு. ஆனா பெரும்பாலும் இந்தப் பக்கம் வருவதில்லையாம். கரடிகள் அவ்வபோது வருமாம். புலிகள் கூட ராத்திரிவேளைகளில் நடமாடிய தடங்கள் இருக்குமாம். ஆனால் இதுவரை பக்தர்கள்
யாரும் பார்த்தது இல்லையாம். ஆனா காலையில் பூஜை செய்ய செல்லும் பூஜாரிகள்
வித்தியாசமான காலடித்தடங்களை பார்த்ததாக சொல்கிறார்கள்.
இதனிடையே இனி ஒரு வித்தியாசமான குரங்கு கூட்டம் நிறைய
வழி மறித்தன. இங்கே கீழே மனிதர்களினால் ஒரே ஒரு செக் போஸ்ட் நிர்வாகிக்கபடுது. ஆனா உள்ளே இங்கே குரங்கார் தின்பண்டங்கள் இருக்கிறதா!? எனப் பார்க்க
நிறைய செக் போஸ்ட் வச்சு இருக்கிறார். கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு ஓடி
விடுகிறார் இந்த சிங்கவால் குரங்கார். நானும் ஒரு கரடியாவது வரும் என கேமராவை ஆன்
செய்தே வைத்திருந்தேன்!!! ஆனா, ஒண்ணுமே வரலை. அதுக்குள்ளே தூரத்தில் கோவில் செல்லும் பாதை
தெரிந்தது.
இந்த இடத்தில இருந்து
கோவிலின் எல்கை ஆரம்பிக்கிறது. இந்த எல்லைக்கு மேல் மாமிச உணவு சமைக்கவோ, கொண்டுச்செல்லவோ
கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் திருமலை நம்பி மிகவும்
சக்தி வாய்ந்தவர். கோவில் எல்லைக்குள் தவறு செய்தவர்கள் நிறையப்பேர் மலைக்கு கீழே
செல்வதற்குள் ஏதாவது ஒருவகையில் தண்டிக்கபடுவது உறுதி என சொல்லப்படுகிறது. ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கை என்னனா நம்பி கோவிலின் சுற்றுவட்ட பாதையில் உள்ளூர்
பகதர்கள் மாமிச உணவு சமைத்து உண்பார்களாம். அந்த ரத்தவாடைக்கு சிறுத்தை புலிகள்
நடமாட்டம் இருக்கும் அது பக்தர்களுக்கு அச்சுறுதலாக அமையும். அதனால மாமிச உணவை
தவிர்க்க அறிவிப்பு வைத்து இருக்கிறாங்க.
இங்கே வேறொரு
அறிவிப்பு பலகையும் இருக்கு. இங்கே திருக்கோவிலுக்கு செல்லுமுன் ஒரு பெரிய நீரோடை
இருக்கு. அதில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் வைத்துள்ளனர். இந்த நம்பியாறு
மூலிகைகள் கலந்த புனிதமான நீரோடை. இதில்தான் பெருமாள் தினமும் அருபமாகவும்
நீராடுகிறார். ஆகவே, இங்கே சோப்பு,சிகைக்காய்
போட்டு குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனியே
கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆகையால் இந்த புனித நீரோடையை அசுத்தபடுத்தாதீர்கள்
மீறி அசுத்தப்படுத்துபவர்கள் இங்கே இருக்கும் காவல் தெய்வமான சங்கிலி பூதத்தாரால்
தண்டிகப்படுவர். இது நிறைய பக்தர்களின் அனுபத்தின் மூலமாக தெரிந்துக் கொண்டோம் ஆகையால் பக்தர்கள் கவனமாக சுத்தமாக இருக்கவேண்டும் என கோவில் நிர்வாகம் மூலம் அறிவிப்பு
வைத்துள்ளனர். இடது ஓரத்தில் படிக்கட்டுகளின் மேலே தெரிவது தான் சங்கிலி பூதத்தான்
சன்னதி .
தூரத்தில்
மரங்களுக்கு நடுவே தெரிவதுதான் நம்பி கோவில். இங்கே நிறையக் குரங்குகள் இருக்கின்றன. கோவிலுக்கு செல்லும் முன் அங்கே இருக்கிற நம்பி தீர்த்தத்தில் கைக்கால் அலம்பி
செல்வது நல்லது. நாங்களும் அங்கே சென்று கைக்கால் அலம்பிவிட்டு, கொஞ்சம்
மூலிகை கலந் புனிதநீரை சிறிது பாட்டிலில் எடுத்துகொண்டு கோவிலுக்கு செல்ல
படியேறத்தொடங்கினோம்.
நுழைவாயிலின் வழியே
வந்தவுடன் தெரியும் உள்பிரகார மண்டபம். இந்த திருக்கோவில் எந்த மன்னர்களால்
திருப்பணி செய்யப்பட்டது என இங்கிருக்கும் பட்டர்களுக்கு தெளிவான விளக்கம்
தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். மற்ற திருக்கோவில்களைப் போல் புள்ளிவிவரங்களுடன்
சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சில சம்பவங்களை உதாரணமாக மேற்கோள் காட்டினார்கள்.
இது
திருகோவிலின் பக்கவாட்டு சுவர் இதில் அந்த சமயத்தில் இந்த திருகோவிலுக்கு வருகைத் தந்த
ஒரு ஆங்கிலேய அதிகாரி தன பெயரை cherry
oct 1808 ன்னு கல்லினால சுவரில் கிறுக்கி
வச்சு இருக்கிறார். அதனால இந்த சுவர் 1808 முன்பே கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தோணுகிறது . அடுத்து இங்கே கவனிக்கவேண்டிய
முக்கியமான விஷயம் இங்கிருக்கும் குரங்குகள்.
இங்கே இருக்கும் குரங்கு
கூட்டங்களை மற்ற குரங்குகள் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. இவை அனைத்தும் கோவில்
வளாகத்திலயே இருக்கு. அதனால உணவு பற்றாக்குறையினால கடுமையா ஆக்ரோஷத்துடன் சண்டை
போட்டுக்கொண்டே இருக்கு. அதனால, நாமும் கவனமாப் போகணும். முடிந்த அளவு அவைகளுக்கு
ஏதேனும் உணவு கொண்டு போகலாம். அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு போவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படி எடுத்துப் போக நேரிட்டால் பிளாஸ்டிக் கவர்களை வனங்களில் வீசுவதையாவது தவிர்க்கலாம்.
இதுதான் திருக்கோவிலின் பக்கவாட்டு தோற்றம். ஆரம்பக் காலத்தில் இங்கே இந்த மண்டபம் மட்டும்தான் இருந்ததாம். அதன்பிறகு
சுற்று கட்டு பிரகாரங்கள் கட்டப்பட்டதாம். கீழே இருக்கும் கோவில் வைகுண்டத்திற்கு
கூப்பிடு தொலைவு எனவும், மேலே இருக்கும் திருமலை கோவில் யமலோகத்திற்கு கூப்பிடும் தொலைவு
பக்கத்தில் இருப்பதால் இங்கே ராத்திரி யாரும் தங்குவதில்லை. அதேசமயம் ராத்திரி வேளை
புலி,கரடி,சிறுத்தை முதலிய மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக
காணப்படுமாம்.
இதுதான் திருக்கோவிலின்
முகப்பு. இந்த பெருமாள் மிகவும்
சக்திவாய்ந்தவர் எந்த வேண்டுதல் செய்தாலும் அது பலிக்கும். இது அனுபவப்பூர்வமாக நிறைய பக்தர்களுக்கு நடந்து
இருக்கிறது. இங்கு பூதேவி ஸ்ரீதேவி
சமேதே திருமலை அழகிய நம்பி நின்றப்படி காட்சி தருகிறார். அவருடைய அழகுத் திருமேனி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக
இருக்கிறது. கோவிலினுள்ளும் ஒரு உள்சுற்று பிரகாரம் இருக்கிறது. இங்கே இருக்கும்
பூசாரிகள் மிகவும் அன்புடன், நமது வேண்டுக்கோளை நம்பியிடம் வைத்து அருள்பெறுங்கள்
மிகவும் சக்திவாய்ந்த நம்பி கேட்டவர்க்கு கேட்டவரம் அருளும் நம்பி எனக்கூறி நமக்கு
அவர் பெருமைகளை விளக்கினார்.
இது திருக்கோவிலின்
வெளிப்பிரகார சுற்று. இந்தத் திருக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் இருந்தும் மற்றும்
கேரளாவிலிருந்தும் புரட்டாசி மாசம் விரதம் இருந்து, புரட்டாசி கடைசி சனிக்கிழமை
நடக்கும் விழாவில் பாதயாத்திரையாக கலந்துகொள்வார்களாம்.
கோவிலின் முன்பக்க
கட்டமைப்பில் இருந்து பார்க்கும்போது மலையின் மொத்த அழகும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. மேலும்,இந்த நம்பி கோவிலின் மேல் இருந்து பார்க்கும் போது கீழே ஒரு புளியமரம் தெரிகிறது. இந்த மரத்தின் அடியில் இன்றும் பல்வேறு சித்தர்கள் தவம் செய்கின்றனராம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் அந்த புளியமரத்தின்
அடிப்பாகத்தில் இருந்து சித்தர்கள் வெளியே வந்து தங்களுக்குள் பரிபாஷையில் பேசிப்கொள்வார்கள் என நம்பிமலைக் கோவிலில் இது இன்றைக்கும் நடக்கிறது என இங்கே இருக்கும் ஒரு
பெரியவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
இந்த மலைக்கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை இருக்கிறதாம். அங்கு ‘தாய் பாதம்’ என்று
இடத்திற்கு சென்றால் சித்தர்களின் தரிசனம்
கிடைக்குமாம். அவர்கள் வசிக்கும் குகைகளும்
ஆங்காங்கே நிறையக் இருக்கிறதாம். ஆனால், மிகவும் ஆபத்தான பயணம் என்பதால் வனத்துறையினர் கூட
அங்கே செல்வதில்லையாம். ஆனால், இந்தபகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை நன்கு
அறிந்தவர்கள் மட்டும் ஒரு குழுவாக நான்கு நாள் பயணமாக பொதிகை மலைக்கு சென்று
வருவார்களாம். ஆனால் இப்பொழுது வனத்துறையினரின் கட்டுபாடட்டினால் யாரும்
செல்வதில்லையாம். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து
பூஜை நடக்குமாம்.
ஒரு வழியாக மலை நம்பியை தரிசனம் செய்துவிட்டு
வெளியேவரும்போது திரும்பவும் குரங்குகள் ஆவேசமாக சண்டையிட்டு கொண்டு இருந்தன. கோவிலிருந்து கொஞ்சத் தொலைவில் ஒரு அருவி இருப்பதாகவும் அதில் குளிக்கலாம் எனவும்
சொன்னாங்க. ஆனா, ஒரு பிரிவினர் வேண்டாம் சாயங்காலம் ஆனதால காட்டு மிருகங்கள்
வரத்தொடங்கும் அங்கே செல்வது ஆபத்து. அதேசமயம் கீழே செல்ல 4 கிமீ நடந்து செல்லனும் அதனால சீக்கிரம் மலையிலிருந்து
இறங்கிவிடலாம்ன்னு சொன்னதால நாங்க இறங்கி வந்திட்டோம் அதுக்கு பதிலா வேறு ஒரு
இடத்தில தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் தெளிந்த தண்ணீர் குளுமையா பாறைகளுகிடையில்
ஓடி கொண்டு இருந்தது. மீன்களும் துள்ளிவிளையாடி
கொண்டு இருந்தன. அதில் ஆனந்தமா நீராடிவிட்டு வந்தோம்.
ஆரோக்கியமான
மலைக்காற்று. நன்றாக முங்கி
குளிக்கும்படியான மூலிகைச் சாறு கலந்த நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் மலைகளும்
பசுமையான சூழல்களும், குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான நிகழ்வுகள் நமக்கு
நிச்சயம் மனசுக்கு சந்தோஷத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் இந்த திருமலை அழகிய நம்பி கோவிலுக்கு ஒருமுறை சென்று
இந்த பெருமாளை தரிசித்து வரலாம். மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம்தேடி பயணத்தில்
வேறு ஒரு கோவிலில் இருந்து சந்திக்கலாம்
Subscribe to:
Posts (Atom)


































