Showing posts with label மூச்சு. Show all posts
Showing posts with label மூச்சு. Show all posts

Wednesday, October 10, 2012

அன்பும் நஞ்சுதானடி.....,


ஊற்ற, ஊற்ற...,
உளவாங்கியபடியே
நிரம்ப விரும்பாத...,
மது கோப்பை!

எனை மீட்டும் உன் அன்பும்..,
அது மீட்கும் உன் நினைவும்...,
மதுவை விடவும்??!!
 மயக்கமாய்...,

எப்போது தொடங்கினாய்..,
என்னென்ன பேசினாய்..,
என்ன சொல்லி முடித்தாய்!!??
எந்த பிரக்ஞையுமின்றி நான்.....

மூச்சுத் திணறுகிறது...,
மூச்சு விட முடியவில்லை..., 
மூழ்கி கொண்டிருக்கிறேன்...,
 உன் அன்பிற்குள்??!!

நீந்தி கரசேரும் நிலையில் நானில்லை..,
நினைவும் எனதாயில்லை..,
கரம் நீட்டி கேட்கிறேன்..,
கரையேற்றி விடும்படி....,

”நீயாய் நீந்தி .., கரை சேர்”!
எனச்சொல்லி ...,
தேய்ந்து புள்ளியாய்..., 
போய் கொண்டேயிருக்கிறாய்!!??

”அன்பும் நஞ்சுதானடி”
அசரீரி காதில் விழ...,
 அண்ணாந்து...,
வானத்தை  பார்க்கிறேன்...,

விடியும் வானில்..,
சிரித்தபடி..,
மேக மூட்டத்திலிருந்து விலகி..,
கண் சிமிட்டுகிறது “விடிவெள்ளி”