Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Thursday, October 04, 2012

காதலில் சொதப்புவது எப்படி?

                                                              
டேய், மச்சான், நான் ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்றேன். அது என்னை திரும்பிகூட பார்க்கலை. அதை நம்ம பக்கம் திருப்பி விட எதாச்சும் ஐடியா சொல்லுடான்னு கேட்டா போதும், டீக்கா டிரெஸ் பண்ணு, சத்தமா பேசாத, முடி வெட்டு, இந்த போனை வாங்கு, இந்த வண்டி ஓட்டுன்னு ஒரு லிஸ்டே அடுக்குவானுங்க.

ஆனா, அந்த பொண்ணுக்கும் அவனுக்கும், செட்டாகி, காதல்ல கசிந்துருகி..,  தீஞ்சு ..., அந்த பொண்ணை விட சூப்பர் ஃபிகர் கிடைச்சுட்டா காதலியை எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம நம்ம பசங்க முழிப்பானுங்க..., ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டா ”ஙே”ன்னு முழிப்பானுங்க..., 

நம்ம பசங்களோட எதிர்கால நலன் கருதி நான் பொண்ணுங்களை கழட்டி விடுறதுக்கு சில ஐடியாக்கள்லாம் தர்றேன்.  யூஸ் பண்ணி பாருங்க. ஹெல்ப்ஃபுல்லா இருந்தா மாலை மரியாதை  பண்ணுங்க. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.


1.  போன்ல பேசிக்கிட்டு இருக்கும்போது...,   முதல்ல, இந்த ம்ம்ம் போடுறதை  விடுங்க. ரெண்டு நிமிசமா   எதுவும் பேசலேன்னா “என்ன, ரொம்ப போர் அடிக்குதா?”ன்னு கேள்வி வரும், கொஞ்சம் கூட பயப்படாம டக்குன்னு ஆமான்னு பதில் சொல்லிடுங்க. (  நேருல பார்க்கும்போது மூஞ்சை தூக்கி வச்சுக்குவாங்க.)   

2. காலைல எழுந்து பொறுப்பு வெளக்கெண்ணெய் போல Good Morning, ராத்திரி க்குGood Night எஸ்எம்எஸ் அனுப்புறதை நிறுத்துங்க. நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)     

3. “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் பொய்யா கொஞ்சுறதை நிறுத்துங்க. “நீ இன்னிக்கு போட்டிருக்குற மஞ்சள் சுடிதார் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி உண்மையை சொல்லிப் பழகுங்க.(சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்றது? தாதலில் தோற்பது அம்புட்டு ஈசியில்லீங்கோ.)

     4.  என்னதான் காஞ்சு போய் கிடந்தாலும், “ஒண்ணே  ஒண்ணு  கொடேன். ப்ளீஸ்!”ன்னு  தப்பித்தவறிக்கூட கேட்டுடப்படாது.  அப்பாலிக்கா கழட்டி விடுறது கஷ்டம்.


5. உங்க ஆள் மற்றும் அவங்க  ஃப்ரெண்ட்ஸ் கூட  (கேர்ள்ப்பா அபுறம் பாய் ஃப்ரெண்டை பார்த்துக்கிட்டிருந்தா தப்பா நினைச்சுக்குவாங்க.)  இருக்கும்போது, அவங்களையே பார்த்துக்கிட்டிருங்க. அவங்களோடயே பேசிக்கிட்டிருங்க. இடையில உங்க ஆளு பேச வந்தாலும் கண்டுக்காதீங்க. (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) உங்க ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரியறதாம்??!!

   6. சும்மா சும்மா அப்பா பர்சுல ஆட்டையை போட்டு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேணாம்! பிசினாறித்தனமா கேட்டா கூட நானே உனக்கொரு கிஃப்ட்; அப்பௌறம் ஏண்டி இன்னொரு கிஃப்ட்ன்னு சமாளிங்க!

 7. சுடுகாட்டுக்கு கூப்பிட்டாலும் சொன்ன நேரத்துக்கு டான்னு போய்  நான்  அரிச்சந்திரன் பேரன்னு  நிரூபிக்க வேணாம். ஒரு மணி நேரம் கழிச்சு போங்க இல்லாட்டி  போகாமலயே  கடுப்பேத்துங்க.

8.எப்ப தண்ணியடிசாலும் மறக்காம, அம்மணியை  போன்ல கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” ன்னு கேட்டா ரொம்ப தெகிரியமா  ஆமா, இப்ப அதுக்கென்னன்னு கேளுங்க.

9.ரெண்டு பேரும் ஒண்ணா எங்காவது வெட்டியா ஊர் சுத்தும்போதும் சரி, மொக்கையா கடலை போடும்போதும் சரி..,  அங்க பார்க்குற பொண்ணுங்களைலாம் பார்த்து மறைக்காம ஜோள்ளுங்க. அப்பாலிக்கா, அன்னிக்கு ஃபுல்லா ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

10.    அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை லாம் அடியோடு நிறுத்துங்க. அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுட்டு நான் ரெம்ம்ம்ம்ம்ப நல்லவன்னுலாம்  நடிக்க வேணாம். அந்தாள் பார்க்கும் போதுதான் புகையை ஊதணும்.  கண்டிப்பாய் நம் சாரி உங்க ஆள்கிட்ட  சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே அப்புறம் என்ன இதுக்கோசரம் மரியாதை?)     

11. அவங்க பர்த் டேக்கு , உங்க செல், அப்பா, அம்மா, பாட்டி செல்போன்,  டி.வி, கம்ப்யூட்டர், வாட்ச்ன்னு எதிலெல்லாம், அலாரம் வைக்குற வசதி இருக்கோ அதிலெல்லாம் அலாரம் வச்சு டான்னு  12 மணிக்கு எழுந்து, “ஹாப்பி பர்த்டே”ன்னு  சொல்றதையெலாம் விட்டுடுங்க.  அன்னிக்கு சாயந்தரம் 7 மணிக்கு போன்ல  கூப்பிட்டு “ஆமா, உனக்கு இன்னிக்கு பர்த் டே இல்ல! முக்கியமான வேலை நிறைய இருந்துச்சா சுத்தமா இதை மறந்தே போய்ட்டேன்! ஹாப்பி பர்த்டே!”ன்னு சொல்லி பாருங்க.....,

ரெண்டு பேரும்  பிரியரதுக்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.      அம்மண்ணி காண்டாகி காச் மூச்சுன்னு கத்தும். அப்போ,  இதை மட்டும் மறக்காம சொல்லுங்க. ஏன்னா இதான் ஃபினிஷிங் டச்   “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது நம்ம வேலை! மிச்சம்லாம் அம்மணியே பார்த்துக்குவாங்க...

 டிஸ்கி: எல்லாத்தையும் விட இப்ப நான் சொல்றதுதான் முக்கியம்.   இதை உங்கள் ஆளும் படிக்ககூடும். உங்களைக் கழட்டிவிட அவகங்களும் இதையே யூஸ் பண்ணிக்கலாம், கவனம் தேவை சகோ!   தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! என்ன நான் சொல்றது சரிதானே?!

Friday, April 13, 2012

அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

  
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்...,
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை?!

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி...,
ஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் போலியான புன்னகை?!

படிப்பில் நூறு புள்ளி எடுக்க படிக்கும் இளைஞர்கள்....,
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்?!

நவீன மாற்றங்களால் உலகம் சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்....,
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்?!

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனமாக
மாறிய ஆசிய நாடுகளின்  மதவெறி, இனவெறி..?!

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல.., மனிதனும் தான்....,

மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்

நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர

எனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்
   

Monday, December 19, 2011

வெற்றிக்கு 20 படிகள்....,

                                       
                      
1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,

2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்...

3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்...,

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்...,

5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது...,

6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது...,

7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.

8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது...,

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு...,

                       

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்...,

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.., 

13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள்  புத்திசாலித்தனம் இருக்கிறது...,

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்....,

15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,

16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்...,

17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது...,

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது...,

19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல....,

20. கடவுளை நம்புங்கள்.

டிஸ்கி: இதை நான் சொல்லலீங்கோ. Holiday in Founder கெமன்ஸ் வில்லியம்ஸ் சொல்லியிருக்கார்.