Friday, August 03, 2012
Wednesday, August 01, 2012
ஊடலுக்குப் பின் கூடல்
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின் மனநிலையை இப்படி வடித்திருந்ததாக நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க. இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று. "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!
தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா
வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.
Monday, July 30, 2012
எங்கே தேசப்பற்று?! - ஐஞ்சுவை அவியல்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இந்த ஆடி மாசம் வந்தாலே, சந்து பொந்துல இருக்குற அம்மன் கோவில்லாம் களை கட்டுது. எல்லா கோவில்லயும் கூழ் ஊத்தி, பாட்டுக்கச்சேரின்னு அவனவன் போட்டி போட்டுக்கிட்டு செய்யுறான். இந்தாங்க மாமா அம்மன் கூழ், பொங்கல், பிரசாதம்.
ஏம் புள்ள! ரொம்ப வேலையா?! செத்த நாழி சாஞ்சு, ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆமா, எல்லா மாசத்தையும் விட்டுட்டு இந்த ஆடி மாசத்துல ஏன் கூழ் ஊத்துறாங்கன்னு உனக்கு தெரியுமா புள்ள?
தெரியாதுங்க மாமா, என் பாட்டி சொன்னாங்கன்னு அம்மா ஊத்துனாங்க, அம்மா சொன்னாங்கன்னு நான் ஊத்துறேனுங்க.
அப்படிலாம் பொத்தம் பொதுவா செய்யக்கூடாது. ஒரு செயலை செய்யும்போது அது ஏன் செய்யுறோம்? எதுக்காக செய்யுறோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு செய்யனும். அப்போதோன் அதோட பலன் நமக்கு கிடைக்கும்.
சரிங்க மாமா சொல்லுங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்.
ம்ம் இப்படி பக்கத்துல வந்து உக்காரு..., உன் வேலை செஞ்சு களைச்சு போன உன் கை, காலை குடு இதமா பிடிச்சு விட்டுக்கிட்டே சொல்றேன். கேட்டுக்கோ.
ஐயையோ, பொம்பளை காலை நீங்க பிடிக்குறதா? போங்க மாமா, அதெல்லாம் தப்பு..,
ஒரு தப்புமில்ல புள்ள, நான் உம்மேல வெச்சுருக்குற பாசத்தை உனக்கு காட்ட ஒரு சந்தர்ப்பம்ன்னு நினைச்சுக்கோ, ம்ம் குடு..., பிடிச்சு விடுறது வலிச்சா மட்டும் சொல்லு, இப்போ நான் சொல்றதை கேளு.
ம்ம்ம் சரிங்க மோமோய்...,
ஆடி மாசம்ன்னாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊத்துறதும் வழக்கம், இது ஏன்ன்னா .. ஆடி மாசம் வீசுற காத்துல வேகம் அதிகமா இருக்கும். அதனால எங்க பார்த்தாலும் தூசியாக இருக்கும். இதனால, இருமல், டஸ்ட் அலர்ஜி, சைனஸ் போல பல நோய்கள் வரலாம். இதை வராம தடுக்கவே மாரியம்மன் கோயில்ல ஆடி மாசம் முழுவதும் கூழ் ஊத்துவாங்க.
இதை, ஆடிக்கஞ்சின்னு அந்த காலத்துல சொல்வாங்க. . அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் இதையெல்லாம் லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வெச்சுக்கனும்.அரிசியைக் கஞ்சியாக வேகவெச்சு, அதுல, துணியில இருக்குற மருந்துகளைப் பிழியணும்; இல்லைனா கஞ்சிக்குள்ள அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துடனும். அதைத்தான் ஆடிக் கஞ்சியைப் பரிமாறனும். இதையே எல்லாரும் ஃபாலோ பண்ணா நல்லது. ஆனா, இப்பலாம் இந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு இடிச்சு கஞ்சி பண்ண சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கம்மங்கூழ் காய்ச்சு ஊத்திடறாங்க.
அப்படியா மாமா! இனிமே நான் அதேப்போல செய்யுறேன். ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்.
அதுவா, போன வருசம் நம்ம கோவில்ல பிரசங்கம் பண்ண பெரியவர் சொன்னார்.
ஓ, ஏனுங்க மாமா இன்னிக்கு டிவில நியூஸ் வாசிக்குறதை பார்த்தீங்களா மாமா?
இல்ல புள்ள, வெளில வேலை இருக்கவே பார்க்கலை என்ன புள்ள?
நம்ம ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துல, சம்பா மாவட்டத்துல, 20 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதை ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காங்களாம். அந்த ஊர் கிராமவாசி ஒருத்தங்க கொடுத்த தகவல்னால, ராணுவத்தினர், அந்த சுரங்கத்தை ஆய்வு செய்ஞ்ச போது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில இருந்து இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கு. அதுல, ஒயர்களும் புதைச்சிருக்காங்களாம். அந்த சுரங்கம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ள ஊடுருவதற்கு யூஸ் பண்ணாங்களான்னு போலீஸார் விசாரணை நடத்தி வர்றாங்களாம்.
இப்படி யாரோ ஒரு சிலர் கவனக்குறைவினாலயும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹெல்ப் பண்ணதாலயும் பல்லாயிரக்கணக்கான வீரர்களின் தேசப்பற்றும், உழைப்பும் கேலிக்கு ஆளானதாலயும், தேசத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதா மாறுதே.
சில ஆயிரங்கள் சம்பளமா வாங்கியும், குடும்பத்தாரை விட்டு, கடும் குளிர், வேக வைக்கும் வெயில்லயும் வெந்து நாட்டுப்பற்றோடு நாட்டுக்காக உயிரையும் துச்சமா நினைச்சு போராடும் மனிதர்கள் இருக்குற இதே நாட்டில்....., கோடி கோடியா பணத்தையும், அதுக்கு மேல புகழையும் சம்பாதிச்சு, இப்போ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கட்டிக்கிட்ட இந்த இந்திய பொண்ணுக்கு நம்ம நாட்டு பற்று துளிக்கூட இல்லைன்னு இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒலிம்பிக்ல எல்லா நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும்போது, நம்ம நாட்டு வீரர்கள் தங்கள் கைகளில் நம்ம நாட்டு தேசியக்கொடியை பிடிச்சுக்கிட்டு போனாங்க மாமா. ஆனா, இந்த பொண்ணு...., ம்ம்ம் யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியலை மாமா.
ஒலிம்பிக்ல எல்லா நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும்போது, நம்ம நாட்டு வீரர்கள் தங்கள் கைகளில் நம்ம நாட்டு தேசியக்கொடியை பிடிச்சுக்கிட்டு போனாங்க மாமா. ஆனா, இந்த பொண்ணு...., ம்ம்ம் யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியலை மாமா.
ம் ம் ம் நீ சொல்றதுல உண்மைதான் புள்ள. சீரியசா பேசிட்டதால, ஒரு ஜோக் சொல்றேன் ஒருத்தன் ஒரு கார் டிரைவர் தன் முதலாளிக்கிட்ட: சாரி சார் பெட்ரோல் போட மறந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாதுன்னு சொல்றான். அதுக்கு அந்த காரோட ஓனர் உன்னை மாதிரியே தத்தி போல, சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே காரை வீட்டுக்கு விடுன்னு சொன்னாராம்.
ம்க்கும் நானா மாமா தத்தி? ஒரு கணக்கு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?
கேளு புள்ள...,
ஒரு வியாபாரி, ஒரு கூடையில மாம்பழங்களை எடுத்துக்கிட்டு விற்க போனார். முதல்ல Aன்றவர் கூடையில இருந்து ஒண்ணை தவிர மத்த பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். அடுத்து, Bன்றவர் மீதி இருக்குற பழங்களில் பாதியை வாங்கிக்கிட்டார். கடைசியா, Cன்றவர் மிச்சம் இருக்குற பழங்களில் பாதியை வாங்கிகிட்டார். அப்படின்னா, வியாபாரி கூடையில் மொத்தம் எத்தனை பழம் எடுத்துக்கிட்டு போனார்?
ம்ம்ம்ம் அது வந்து..., அது வந்து விடை...,
இரு இரு நிதானமா யோசிச்சு சொல்லு. நேத்து உன் ஃபிரண்ட் ராஜி வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தேன். அங்க, நம்ம ராஜியோட சின்ன பொண்ணு இனியா பத்தி பேச்சு வந்துச்சு. அவளுக்கு 4 இல்ல 5 வயசிருக்கும்போது அவ காலைல அவ அப்பா ஆபீஸ் கிளம்பும்போது, அவ தன் அப்பாக்கிட்ட டெடி பியர் பொம்மை கேட்டிருக்கா. அவ, அப்பா ஆபீஸ் டென்சன்ல மறந்துட்டார். வீட்டுக்கும் வரவும் நைட் 11 மணி ஆகிடுச்சாம். இனியா தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்திருக்கா.
ம்ம்ம்ம் அப்புறம்...,
அவ அப்பா வந்ததும், தன் அப்பாக்கிட்ட ஏன் பொம்மை வாங்கி வரலைன்னு கேட்டு அடம்பிடிச்சு இருக்கா. அவ அப்பா, டென்ஷன்ல ஏய், நான் ஆபீசுல இருந்து கிளம்ப 10 மணி ஆகிட்டுது. பத்து மணிக்கு ஈ, காக்கா கூட கடைத்தெருவுல இருக்காது. அப்படி இருக்க எப்படி வாங்கி வ்ர்றது?ன்னு கோவமா கேட்டிருக்கார்.
அதுக்கு அவ, சடார்ன்னு நான் உங்களை ஈ, காக்காவா கேட்டேன், பொம்மைதானேன்னு கேட்டேன்னு ,மழலை மாறாம கேட்டதுல டென்ஷம் மறந்து எல்லாரும் சிரிச்சதுமில்லாம, மறுநாளே பொம்மையை மறக்காம வாங்கியும் குடுத்துட்டாராம்.
ஹா ஹா, பசங்க குறும்புத்தனங்களை எம்புட்டு வருசமானாலும் மறக்க முடியாதுங்க மாமோய், குடும்பத்துல பிள்ளைங்க பண்ற குறும்புலாம் சுகம்ன்னா, சமைக்குறது ரொம்ப கொடுமைங்க மாமா.
ஏன் புள்ள அப்படி சொல்றே. சின்ன சின்ன விசயத்துல கவனம் செலுத்தி வேலை செஞ்சா அதுவும் ஒரு அழகான கலையே. அப்புறம் நீயே சமைக்க அலுத்துக்காம சுகமா எடுத்துக்குவே.
எப்படி சொல்றீங்க மாமா?
கூடையில வைக்குற உருளைக்கிழங்கு முளை விடாம இருக்க, கூடவே, கூடையில ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வெச்சா சீக்கிரம் முளை விடாது. சப்பாத்தி மாவு பிசையும்போது கால் பங்கு சோயா மாவு சேர்த்துக்கிட்டா சுவையும் கூடும் குழந்தைகளுக்கு புரோட்டினும் கிடைக்கும். வாழைக்காய் வெட்டும்போது கையில இருக்குற பிசுபிசுப்பு போக தயிர் ஊத்தி கழுவலாம். உரல், அம்மி, கிரைண்டர்ன்னு புதுசா வாங்குனா அதுல எடுத்த உடனே இட்லி, தோசைக்கு மாவு அரைக்காம தவிடு போட்டு அரைச்ச பின்னாடி அரைக்கனும். அப்படி செய்யலைன்னா ஆட்டுக்குக்கல்லில் இருக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன கல்துகள்கள்லாம் மாவுல வந்து மாவே வேஸ்டாகிடும். இப்பலாம் தவிடு எல்லா இடத்துலயும் கிடைக்குறதுல்லை. தவிடு கிடைக்காதவங்க பெரிய வெங்காயம் போட்டு ஆட்டி எடுத்தா கல்லுலாம் வந்துடும்.
சரிங்க மாமா! இனி சின்ன சின்ன விசயத்துலலாம் அக்கறை எடுத்து பார்த்துக்குறேன். உடம்பு வலிலாம் போன இடமே தெரியலை மாமா. நீங்க கால் பிடிச்சு விட்டதுல மனசும் தெம்பாகிடுச்சு. நான் போய் வீட்டு வேலை பார்க்குறேன்.
சரி புள்ள! எனக்கும் கொஞ்சம் கடைத்தெருக்கு போற வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.

Friday, July 27, 2012
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? (பதிவர்களுக்கு டிப்ஸ்)
அடிச்சு பிடிச்சு கரெக்ட் டைமுக்கு ஆபீசுக்கு வந்து, மேலதிகாரிக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டு,சீட்டுக்கு வந்து, கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஒரு போஸ்ட்டை போட்டு அதை திரட்டிகளில் இணைச்சு, படபடன்னு மத்த பிளாக்குகளுக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு போஸ்ட்டை தேத்தி டிராஃப்ட்ல போட்டு, அதுக்கு படங்களைஇணைச்சு..., நிமிர்ந்து பார்த்தா மணி பணிரெண்டுதான் ஆகியிருக்கும்.
சரி, ட்விட்டர், மூஞ்சி புத்தகத்துலலாம் போய் அரட்டை அடிக்கலாம்ன்னு போய் பார்த்தா எல்லாரும், அன்னிக்குன்னு பார்த்து சின்சியரா வேலை பார்க்க போய்ட்டு இருப்பாங்க. நம்மை சுத்தி எல்லாருமே வேலை(ஆபீஸ் வேலை) பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்குதான் ஆபீஸ் வேலை செஞ்சு பழக்கம் இல்லியே. அதனால, நமக்கு போரடிக்கும், அதுமில்லாம நம்மளையே மேனேஜர் உத்து பார்க்குற மாதிரி நமக்கு தோணும்.
அதனால, நாம தீயா?! வேலை செய்றோம்ன்னு சீன் போட்டாகனுமே, அதுக்குதான் சில டிப்ஸ்..., டிரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் என்னன்னு சொல்லுங்க...
1. உங்க மானிட்டரில முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ இல்ல கோடையோ (code) திறந்து வச்சுட்டு..., ஏதையோ யோசிக்குற மாதிரி, அதையே பார்த்துக்கிட்டு இருங்க . பார்க்குறவங்கலாம் நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சுக்குவாங்க.
2. அடிக்கடி நெத்தியை சொறிஞ்சுக்கோங்க. . எப்ப பார்த்தாலும்னெத்தியை சொறிஞ்சுக்கிட்டு இருந்தாலும் சந்தேகம் வந்துடும். அதனால, கொஞ்சம் மாத்தி பல்லை(உங்க) கடிச்சுக்கோங்க. ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செஞ்சுட்டு யோசிக்குற மாதிரி பாவ்லா காட்டுங்க.
3. கம்ப்யூட்டர் மவுஸையூஸ் பண்ணாம கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை யூஸ் பண்ணா பிஸியா, வேகமாக வேலை செய்ற மாதிரி தோணும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைச்சுக்கிட்டும், வெறிச்சிக்கிட்டும் பாருங்க. கூடவே நகத்தையும் கடிங்க.
.5. சீட்டுல சாய்ஞ்சு உட்காராம முன்னால இழுத்து விட்டு, சில நிமிசங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிங்க.
6. அப்பப்போ பேப்பர் ஃபைல்களை கலைச்சு விட்டு பெருமூச்சு விடுங்க. நீங்க முக்கியமான பேப்பர் எதையோ தேடுறீங்கன்னு நினைச்சுக்குவாங்க. கடைசியில எதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." இல்லைன்னா "சக்சஸ்" ன்னு சொல்லுங்க.
7. எங்காவது எழுந்து போகும்போது, வேகமாக நடந்து போங்க. ஏதோ முக்கியமான விஷயத்துக்காக நீங்க போறீங்கன்னு மத்தவங்க நினைச்சுக்குவாங்க.
8. உங்க கைகளை பிசைஞ்சுக்கோங்க. , கைவிரல்கள்ல சொடக்கு எடுத்துக்கோங்க . அப்பப்போ டென்ஷனா டேபிளில் ஒரு தட்டு தட்டுங்க.
9. உங்க மானிட்டருக்கு பகக்த்துல, எப்பவும் ஒரு நோட்டையும்,பேனாவையும் திறந்தே வையுங்க. அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை, நம்பர்களையும் கிறுக்கிக்கிட்டிருங்க.
10. ஆபீசுக்குள்ள எங்கே போறதாயிருந்தாலும் கையில ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போங்க. நீங்க முக்கியமான மீட்டிங்குக்கோ, இல்ல ஹிண்ட்ஸ் எடுக்கவோ போறீங்கன்னு நினைச்சுக்குவாங்க.
11. ஆபீஸில் நடந்து போகும்போது எதிர்க்க வர்றவங்க சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாம போங்க. அப்பதான் நீங்க டென்ஷனா வேலை செய்யுறதா நினைச்சுக்குவாங்க. அப்புறமா அவங்ககிட்ட போய் பிஸியாக இருந்தேன், ஸாரி ன்னு சொல்லிக்கலாம்.
12. சரியாக காபி வர்ற நேரத்துல எங்காவது எழுந்து போய்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து காபி கேளுங்க. மீட்டிங் போயிருந்தேன், ஃபைல் தேடினேன்னு புருடா விடுங்க.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நாலு இல்லை அஞ்சு அப்ளிகேஷன்களையோ இல்ல பைல்களையோ திறந்து வெச்சுக்கோங்க. அப்பப்போ அதையெல்லாம் ஓபன் செஞ்சு, குளோஸ் செஞ்சு, மாத்திக்கிட்டே இருங்க.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கிட்டிருங்க. சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு குறுக்கும் நெடுக்கும் நடங்க.
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயா இருந்தா (உங்களைப் போலவே வெட்டியா இருக்குற) உங்க டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்க. போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டுட்டு வாங்க.
16. முதல்ல வர்ற காபியைக்குடிக்காதீங்க. அப்படியே ஆற விடுங்க. மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிங்க. கொஞ்சம் பிஸியா இருந்ததால காபி குடிக்க முடியவிலைன்னு (மற்றவர் காதில் விழும்படி) சத்தமா சொல்லுங்க.
17. இதையெல்லாத்தையும் மீறி உண்மையாவே ஏதாவது ஆபீஸ் வேலை செய்ஞ்சுட்டா?! அதை மத்தவங்ககிட்ட சந்தோஷமா சொல்லுங்க.. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா, நமக்காக யார் பேசுவாங்க!?
டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.
டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.
Wednesday, July 25, 2012
அம்மாவின் அறிவுரை
சலிச்சு எடுத்த அரிசியை கையில் எடுத்து!!
பாத்திரத்தில் போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!
முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!
அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!
அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!
வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!
பாத்திரத்தில் போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!
முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!
அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!
அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!
வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!
Subscribe to:
Posts (Atom)







