Monday, June 10, 2013

குழந்தைக்கு பேர் வைக்குறதுல இப்படியும் ஒரு நன்மையா?! - ஐஞ்சுவை அவியல்

 
ஏனுங்க மாமா! நம்ம பூவாத்தாளுக்கு பொம்பளை புள்ளை பொறந்திருக்கு. அதுக்கு மாடர்னா பேரு வெக்க ஆசைப்படுறா. நான் திட்டிட்டு வந்தேன்..,  தமிழ்ல அழகான பேருலாம் இருக்கு. அதுல ஒண்ணு வை. இல்லாட்டி உன் பாட்டி, அம்மா, மாமியார் பேரு வை.., அப்படியும் இல்லாட்டி எத்தனை சாமி நம்மளை சுத்தி இருக்கு அதுல ஒரு பேரை வைடின்னு சொல்லிட்டு வந்துட்டேன் மாமா.

ஏன் புள்ள? அவ ஆசையில என்ன தப்பு? மாடர்னா பேர் வைக்கட்டுமே! அதை விட்டு லட்சுமி, மாரியாத்தான்னு கூப்பிட முடியுமா? அப்படி கூப்பிட்டாதான் என்ன யூஸ்?!

லூசு போல பேசாத மாமா.., ஸ்ரீரங்கத்துல ஒரு அம்மாவும், பிள்ளையும் இருந்தாங்க. அந்த பையனோட பேரு ரங்கன். ஒரு நாள், அந்த பையன் குளிக்க ஆத்துக்கு போறேன்னு சொல்லிட்டு போயி ரொம்ப நேரம் ஆகிட்டுது. அவன் வரவே இல்ல. அந்தம்மா, தன் மகனுக்கு பிடித்த புளித்த கீரை கடைந்து, சோறு வடிச்சு காத்திருக்கா..,

ம்ம் அப்புறம் புள்ள!

சூடு ஆறிட்டா டேஸ்ட் மாறிடும்ன்னு நினைச்சு..  தெருவில் இறங்கி ரங்கா! ரங்கா!ன்னு சத்தமா கூப்பிட்டா.., வீட்டுக்கும் ஆற்றுக்கும் தூரம்ங்குறதால அது அந்த ரங்கன் காதில் விழவேயில்லை.., ஆனா,காவிரியையும் தாண்டி, ராஜகோபுரத்தையும் தாண்டி, கருடாழ்வார் சந்நிதியையும், திருமணத் தூணையும் தாண்டி சயனத்தில் இருந்த ரங்கநாதரின் காதில் அது விழுந்தது. ஆஹா! இப்படி அன்போடு கூப்பிட தனக்கொரு அம்மா இல்லியேன்னு ஏங்க ஆரம்பிச்சுட்டார்.

சரி, அந்த அம்மா, ராங்கா! ரங்கா!ன்னு தானே கூப்பிட்டாங்க. அதனால, அந்த ரங்கன் போனால் என்ன? நான் போனால் என்னன்னு? அந்த பையன் உருக்கொண்டு அந்த வீட்டுக்கு போய்ட்டார். அம்மா! ஆத்துல குளிச்சதால் பசிக்குது.., சாப்பாடு எடுத்துவைன்னு சொல்லிக்கிட்டே தட்டெடுத்துக்கிட்டு உக்காந்துட்டார். அந்த அம்மா, சோறும், புளிச்ச கீரையும் பரிமாறினாங்க, நீயே பிசைந்து ஊட்டி விடேன்!... பிள்ளை ஏக்கமாகக் கேட்டான்.ஒருநாளும், தன் பிள்ளை இப்படிகேட்டதில்லையே! அம்மா ஆனந்தமாக ஊட்டி விட்டா. ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்ட ஸ்ரீரங்கன்.., அம்மா! என்றுமில்லாம இன்னிக்கு சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லி மொத்தத்தையும் சாப்பிட்டு , பாடசாலைக்கு நேரமாச்சுன்னு ஓட்டமா ஒடிட்டார் கடவுள்.

கொஞ்ச நேரத்துல குளிக்க போன ரங்கன் திரும்பி வந்து அம்மா பசிக்குது.., சாப்பாடு போடுன்னு சொன்னதை கேட்டு.., இப்போதானேடா சாப்பிட்டு போனே! அதுக்குள்ள எப்படி பசிக்கும்ன்னு அம்மா கேட்டாங்க.  என்னம்மா சொல்றே! அப்போ குளிக்க போன நான் இப்போதானே வர்றேன்னு கோவமா சொன்னான் ரங்கன். அப்போ யார் வந்து சாப்பிட்டு போனதுன்னு யோசிக்கும்போது.., அந்தம்மாவோட மனக்கண்ணில் ரங்கநாதன்,ஆதிசேஷனில் சயனித்த கோலத்தில், அவள் கண்முன் காட்சி தந்தான். அடுத்து, அவள் பிள்ளையாக மாறி தோற்றமளித்தான்.

ரங்கா! ரங்கா!...நீயா? இங்கு வந்து என் கையால் சாப்பிட்டே. நான் ஏதுமறியாதவளாச்சே!  வேதமும் மந்திரமும் தெரியாதவளாச்சே! என் பிள்ளைக்கு உன் பெயர் வைத்ததால், எனக்கு இப்படி ஒரு கொடுப்பினையா?ன்னு பரவசத்தின் உச்சிக்கே போய்ட்டாங்க அந்தம்மா. இன்னிக்கும், ரங்கநாதர் புளிப்புக்கீரை சாப்பிட்ட, அந்த்தாய் வசித்த ஜீயர்புரத்திற்கு எழுந்தருளுகிறார். அந்தக்கீரையும் பிரசாதமாகவும் தரப்படுது மாமா.

அட, அப்பிடியா! கடவுள் பெயரை அதன் அர்த்தங்கள் தெரியாம, முழு மனசா தூய அன்போடு கூப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும்ன்னு சொல்றே. இதுவும் சரிதான்னுதான் தோணுது புள்ள. அதை விட்டு வாயில நுழையாத பேரை ஏன் வைக்கனும்?!ஆமா! நம்ம பய சின்ன மண்டையன் எங்கே?! 
                      


ஏனுங்க மாமா! எந்த நினைப்புலதான் இருக்கீரு நீங்க?!  இன்னிக்குஇஸ்கோலு தொறந்திட்டாங்க. அவன் இஸ்கோலுக்கு போய் இருக்கான்,

ஓ அப்பிடியா புள்ள! ம்ம் நேத்து கடைவீதில ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனேன். அங்க கூட்டம் நிரம்பி வழிஞ்சுது புள்ள. நாமலாம் இஸ்கோலுக்கு போகும்போது ஒரு மஞ்சப்பைல, ஒரு தட்டு, சிலேட்டு, சிலேட்டுக்குச்சி, ஒரு நோட்டுதான் இருக்கும் எட்டாப்பு வரைக்கு. புக்குலாம் குடுக்க ஒரு மாசம் ஆகும். ஆனா, இப்போ லீவுலயே புக்குலாம் குடுத்து அட்டை போட்டு வரசொல்றாங்க. நாம நியூஸ்பேப்பர்லதான் அட்டை போட்டு போவோம். ஆனா, இப்போ, பள பள பிரவுன் சீட்டுல அட்டை போட்டு.., பல டிசைன்ல வர்ற லேபிள்லை ஒட்டி, யூனிஃபார்முக்கு மேட்சா வாட்டர் கேனு, பென்சில்பாக்ஸ், லஞ்ச் பேக், பென்சில்,பேனா, இஸ்கோலு பேக்ன்னு என்னா அழகா போகுதுங்க இஸ்கோலுக்கு!!?

ம் ம் ம்ம் ஆமா, மாமா இது ஒரு ஃபேசனா போய்ட்டுது.., இஸ்கோலு திறக்குற அன்னிக்கு பூஜை, புது புது பொருட்கள் வாங்குறதுன்னு செம களை கட்டுது...,
 நீங்க என்னமோ இஸ்கோலுக்குலாம் போன மாதிரி பெருமை பீத்திக்குறீங்களே! ஒரு கணக்கு சொல்றேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்...,
                                  


யாருக்கிட்டபோட்டி?! என்கிட்டயா? கேளு புள்ள.., ஒரு நொடில சொல்லிடுறேன் பதிலை...,

ம் ம் ம் பார்க்கலாம் உங்க சாமர்த்தியத்தை..., உங்க சட்டையைவிட, உங்கள் ஃபேண்டின் விலை 100 ரூபாய் அதிகம்.., இரண்டும் சேர்ந்து 110 ரூபாய் எனில், தனித்தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க. பார்க்கலாம்!!

நான் சொல்றது இருக்கட்டும்.. ராஜி பிளாக்குக்கு வர்றவங்ககிட்ட முதல்ல கேப்போம்.., அவங்க சொல்லட்டும்.., அப்புறம் நான் பதில் சொல்றேன்.  

ம் ம் ம் அவங்ககிட்ட சவாலா?! பார்க்கலாம்! 
                                   


சரி, அவங்க சொல்றதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லவா?!
என்னது?!
கணவன்:  முன்னலாம் கொஞ்சமா சாப்பிடுவே! இப்போ அதிகமா சாப்பிடுறியே ஏம்மா?! உடம்புக்கு எதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போலாமா?!
மனைவி: அதெல்லாம் ஒண்ணுமில்ல! முன்ன உங்களுக்கு ஒழுங்கா சமைக்க வரலை. இப்போ நல்லா சமைக்குறீங்க, நானும் நல்லா சாப்பிடுறேன்..,

ம்க்கும் எப்போ பார்த்தாலும் பொண்டாட்டியை கேலி பண்ணுறதே இந்த ஆம்பிளைங்களுக்கு பொழைப்பாகிட்டுது.. எம்புட்டு வேலை செய்யுறாங்க பொம்பளைங்க.., ஒரு  நாளைக்கு வீட்டை விட்டு போனா, எப்படி வீட்டை அலங்கோலமாக்கி வெச்சிருக்கீங்க நீங்க?

ம்க்கும் என்னடி பெரிய வேலை, ச்மைக்குறதும் கூட்டுறதுமா??

இது மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்.., க்டைக்கு போய் நீங்க வாங்கி வரும் பொருளை அந்தந்த டப்பவுல போட்டு வைக்கனும்..,  அப்பப்போ அதை சரி பார்க்கனும் பருப்பு, தான்ய பொருட்களில் சீக்கிரம் வண்டு வச்சிடும்.., அதை வெயிலில் கொட்டி, சலிச்சு அள்ளி வைக்கனும்.  அதிகமா உபயோகப்படுத்தும் பொருட்களை நாம் சின்ன சின்ன பிளஸ்டிக் டப்பகளில் போட்டு வைக்கனும். உதாரணத்துக்கு கடுகு, எண்ணைய், உளுந்து, க.பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்கள் தூள், மற்றும் இதர தூள்வகைகள், அரிசில பட்டை மிளகாயை போட்டு வச்சா அதுல  பூச்சிவராது..,, அதில்லாம அ அரிசி அளக்கும் படி இல்ல டம்பளரை இவை எப்போழுதும் அதிலேயே போட்டு வெச்சா  தேட வேணாம்.

அதில்லாம..,  காய்கறிகளை வாங்கி வந்ததும் கழுவி ஈரம் போக காய செச்சு தனித்தனி பிளாஸ்டிக் கவர்ல எடுத்து வைக்கனும் அப்பதான் எல்லாத்தையும் கொட்டி தேடுற அவஸ்தை இருக்காது. எலுமிச்ச காய்ந்து போகாம இருக்க, கவர்ல இல்லாட்டி அலுமின்யம் ஃபாயில் பேப்பர்ல போட்டு எடுத்து வைக்கலாம். கொத்தமல்லி, புதினா, கீரை வகைகளை, வேர்லாம் கிள்ளி, ஆய்ந்து, அலசி, ஈரம் போன பின் கவர்ல எடுத்து வச்சுக்கலாம். பச்சை மிளகாயை காம்பை கிள்ளி வெச்சா சீக்கிரம் பழுக்காது.., இஞ்சி, பூண்டு அரைச்சு ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா கரண்ட் கட் ஆனாலும் பதட்டபடாம சமைக்கலாம்.., இப்படி நாள் முச்சூடும் எதாவது வேலை இருந்துக்கிட்டேதான் இருக்கும் மாமா.

அம்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன். நிறைய வேலைதான் இருக்கு.., ஒத்துக்கிறேன். நீ போய் வேலை பாரு தாயி.., நான் வேணா எதாவது ஹெல்ப் பண்ணட்டா?!

ஒண்ணும் வேணாம் நொட்டை சொல்லு சொல்லாம இருந்தாலே போதும்..,
 

Saturday, June 08, 2013

சின்னு- பாட்டி சொன்ன கதை



"சின்னு மரம்"”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம். காட்டின் நடுவிலே இருக்கின்றது. அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது.

அது சரி அது என்ன அணில் மரம். அந்த கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது.பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது.குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க. மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும். வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர். சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.

சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன.  சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர்.

சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை. எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது.” நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.  

அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது.

மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு,மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது.

தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது. அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது .உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது. சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது. அதன் வால் நீண்டதுக்கு காரணம் “தன் பிள்ளை நல்ல அணிலாக மாறனும்ன்னு.., சின்னுவோட செத்துப்போன அப்பா, அம்மாதான் காரணம்”ன்னும் ஒரு பேச்சு அந்த காட்டுல உலாவுது....  எது எப்படியோ நல்லது நடந்தா சரி.



Friday, June 07, 2013

கல்வி வரம் அளிக்கும் ”ஹயகீரீஸ்வர்” -ஸ்கூல் ரி ஓப்பன் ஸ்பெஷல்

 
                       
பசங்களுக்குலாம் ஸ்கூல் திறக்குற நாள் கிட்ட வந்துடுச்சு. அவங்க நல்லா படிக்கனும்ன்னு செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்குற  செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தோம். 

ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்துல, இந்த உலகத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தாராம் மகாவிஷ்ணு. பிறகு, புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தாராம். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தாராம்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனராம். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனராம்... தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டு, பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனராம்...,

இதனால்  படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தராம்.., பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டு,  உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்ததாக இந்த புண்ணிய தளத்தோட வரலாறு.

கடலூருக்கு பக்கத்திலிருந்து “திருவஹீந்திரபுரம் தேவநாதன்” கோயிலில் இருந்து, அழகான பெருமாள் விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்து,  அவற்றை வைகாசி,  மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு ”வித்யாதோஷ நிவர்த்தி”  ”சங்கல்ப ஆராதனை” என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது.  இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படுகிறது. கல்வியாண்டு துவங்கும் வேளையிலும்,  மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்தும் வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்ன்ற இத்திருத்தலம் இருக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு8 வரை. நங்க நட்ட நடு மத்தியானத்துலதான் போனோம். வெயில் கொளுத்தி படுத்தி எடுத்திட்டுது.

இன்னொரு மனதை நெருடலான ஒரு விசயம்.., வண்டியை விட்டு இறங்கியதும் பத்து வயது  கூட நிரம்பாத குழந்தைகள் துளசி மாலையும்.., கற்பூரத்தையும் விற்க ஓடி வந்து போட்டி போடுதுங்க. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

 படம் கூகுள் ல இருந்து சுட்டது...,

Thursday, June 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்



1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

Wednesday, June 05, 2013

சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!


                                          (கட், காப்பி & பேஸ்ட்ன்னா இதானா?!)

       (சக மனிதன்கிட்ட அன்பு காட்ட வேண்டிய மனிதனை தவிர, அனைத்து    மிருகமும் மனிதன்கிட்ட அன்பாதான் இருக்கு...,)      
               
 (தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் உண்டா?!)

 (சித்திரமும் கைப்பழக்கம்ன்றது இதானோ!?)

                                (கரெக்ட்தான்யா கேக்குறான்!!)
(முதல்ல குழாயை ஆஃப் பண்ணிட்டு.., அப்புறம் ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போடலாம்...)

(இந்த நொடி மட்டுமே நமக்கானதுன்ற உண்மையை உணர்ந்தவன் போல!)

(எவ்வளாவு அழகான் ரோடு!? மாலை நேரத்துல மனசுக்கு பிடிசவங்களோட ஒரு ரவுண்ட் போய் வந்தால்.., எப்படி இருக்கும்?!)

(பெண் என்றாலே  மூளையை பிச்சுக்க வைக்கும்ன்னு சொல்லாம  சொல்றாங்களோ!?

(இப்படிலாம் யோசிச்சா இந்தியா தாங்குமா?!)