வியாழன், ஜூன் 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

35 கருத்துகள்:

 1. கும்முன்னு உள்ள பெண்ணை விட
  கம்முனு உள்ள பெண்ணை கட்டினா - வாழ்கை
  ஜம்முனு இருக்கும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்தியாரைய்யா சொன்னா சரிதான்.

   நீக்கு
 2. மிகச் சரி
  எல்லோருடைய வண்டியும் இந்த
  ஸ்பீடு பிரேக்கர்களுடந்தான் ஓடிக் கொண்டிருக்கிறது
  அது இல்லாவிட்டாலும் நிறைய வண்டிகள்
  ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கும் என்பதுவும் நிஜம்
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் நிஜம்தான்ப்பா. ஆனா, இது சும்மா கலாய்க்க போடப்பட்ட பதிவு. இதை எழுதினவுங்களுக்கே தெரியும்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமா சகோ! கண்டிப்பா அடுத்த பாகம் விரைவில்...,

   நீக்கு
 4. இன்னாபா எல்லோருக்கும் இதே ஸ்பீடு ப்ரக்கர்கள் தானா? சரி சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டுக்கு வீடு வாசப்படிதான் சகோ!

   நீக்கு
 5. இவ்வளவு தானா ?..:))இன்னும் நிறைய இருக்கே :))
  வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கு.., அடுத்த பாகம் விரைவில்...,

   நீக்கு
 6. மிக முக்கியமாக இந்த காலத்து இளம் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவும் பிறந்த வீட்டினர் வேப்பிலை அடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா, அதுக்காக பொறந்த வீட்டினர் பேச்சில் நியாயம் இருந்தா கேட்டுத்தான் ஆகனும் சகோ!

   நீக்கு
 7. ரசித்தேன்...உதவிக்கு நன்றி...!

  பதிலளிநீக்கு
 8. 2,3,4,7,12 இந்த விசயங்களால் எனக்கு அதிகம் பிரச்சினை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா! ரொம்பதான் அடிவாங்கி இருப்பீங்க போல!

   நீக்கு
 9. 12.... இப்படிக்கூட கேட்கிறது உண்டா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் இப்படி இல்லாட்டி இந்த புடவை எனக்கு மேட்ச் ஆகுதா? இந்த கம்மல் எனக்கு நல்ல இருக்கான்னு கேப்பாங்க

   நீக்கு
 10. அருமை. ரமணி ஐயாவின் கருத்தே என்னுடையதும். இப்படியெல்லாம் வேகத்தடைகள் இல்லாவிடில் வாழ்க்கை வண்டி தறிகெட்டு ஓடிடுமே... சரி, மனைவிக்குக் கணவனிடம் பிடிக்காத பன்னிரண்டு ஏதாவது இருக்குமே... அதையும் சொல்லி சமன் செய்திடுங்கோ ராஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது இருக்கு 120. கண்டிப்பா பதிவிட்டுடலாம் கீதா..,

   நீக்கு
 11. ஸ்பீடு பிரேக்கர்கள் தேவைதான்.
  கீத மஞ்சரி அவர்கள் கேட்டதுபோல்
  மனைவிக்குக் கணவனிடம் பிடிக்காத
  பன்னிரெண்டையும் பட்டியலிடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 12. ம்ம்ம் நல்ல பகிர்வு தான்

  பதிலளிநீக்கு
 13. ராஜிஎங்க வீட்டுக்காரரிடம் இந்த பதிவைக்காட்டி டிக் பண்ண சொல்லி இருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ! உங்க வீட்டுல குழப்பம் ஏற்பட நான் காரணாமா?! உங்க வீட்டுக்காரர் என்னை கொலைவெறில தேடப்போறார்.., மீ எஸ்கேப்

   நீக்கு
 14. பரவாயில்லையே! பெண்ணா இருந்துகிட்டு ஆண்கள் பிரச்னையைக் கூட அழகாக அலசியிருக்கிறீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை ஒத்துக்கத்தானே வேணும் சகோ!

   நீக்கு
 15. லிஸ்ட் கொஞ்சம் கம்மியோ...... :)

  வீட்டுக்கு வீடு வாசப்படி!

  பதிலளிநீக்கு
 16. Manaiviku Piditha Vishayangal...

  1. Thuni Thuvaika Udavai seivathu...
  2. Veetai suthamaaga vaika Udavi seivathu...
  3. Manaiviku theriyamal pengaludan pesuvathu (Inbox, Call History Clear seivathu)...
  4. Kitchen'il athiga velai irukum pothu Urangi kondu bed coffee ketpathu...
  5. Yarudanaavathu sirithu pesinal santhegamaaga parpathu...
  6. Kulanthygal padipil gavanam seyamal irupathu...
  7. Veliku sendru vanthathum paasamaaga irandu varthy pesamal irupathu...
  8. Leave kidaikum samayathil, veliyil kooti sellamal irupathu...
  9. Sambala panathil athigam veen selavu seyvathu...
  10. Drinks, Smoke & etc...
  11. Ella velayum pengale seya vendum endru virumbuvathu...
  12. Manaiviyai compare seythu pesuvathu...

  appapa, pothuma, ippo santhosama Raji mam?

  பதிலளிநீக்கு