வியாழன், நவம்பர் 11, 2010

அன்பே நஞ்சாய்

ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.

எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.

எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.

மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.

நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.

*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.

*அன்பும் நஞ்சுதானடி *
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.

விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!18 கருத்துகள்:

 1. அட நல்லா இருக்குங்க. அந்த word verification எடுத்து விடுங்க. கண்ணை கட்டுது..

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் படிச்சேன், கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க

  பதிலளிநீக்கு
 3. அட நல்லா இருக்குங்க. அந்த word verification எடுத்து விடுங்க. கண்ணை கட்டுது..

  பதிலளிநீக்கு
 4. "/அட நல்லா இருக்குங்க. அந்த word verification எடுத்து விடுங்க. கண்ணை கட்டுது"/..

  எடுத்தாச்சு, எடுத்தாச்சு. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. கவிதை அருமைங்க... தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. கவிதைகள் எல்லாம் சூப்பர்ங்க. தொடர்ந்து எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 7. அப்படியே இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைச்சிடுங்க.

  பதிலளிநீக்கு
 8. உண்மைலேயே கலக்கலா இருக்குங்க ,ரமேசு அண்ணன்தான் இங்க கவிதை எழுதுறாங்க நல்லா இருக்கு அப்படின்னு சொன்னார் .. உண்மைலேயே நல்லா இருக்கு ,,

  பதிலளிநீக்கு
 9. கவிதை அருமை... தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. அன்பெ நஞ்சாய்... ஆஹா அருமையா இருக்குங்க!

  பதிலளிநீக்கு
 11. கவிதை நல்லா தான் இருக்குகுகு... ஆனா உங்க Followers லிஸ்ட் பார்த்தா தான் பயமா இருக்கு... ஒரே கே.டி பசங்களா இருக்காங்க... செல்வா, ரமேஷ், பன்னிகுட்டி, அருண், வெறும்பய, நாக... எல்லாரும் இங்க தான் இருக்கிங்களா? சரி நானும் Follow பண்றேன்...

  பதிலளிநீக்கு
 12. அருண் பிரசாத் கூறியது...

  கவிதை அருமைங்க... தொடர்கிறேன்

  thanks

  பதிலளிநீக்கு
 13. நாகராஜசோழன் MA கூறியது...

  கவிதைகள் எல்லாம் சூப்பர்ங்க. தொடர்ந்து எழுதுங்க.
  அப்படியே இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைச்சிடுங்க.////

  முயற்சிக்கிறேன்.., தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 14. ப.செல்வக்குமார் கூறியது...

  உண்மைலேயே கலக்கலா இருக்குங்க ,ரமேசு அண்ணன்தான் இங்க கவிதை எழுதுறாங்க நல்லா இருக்கு அப்படின்னு சொன்னார் .. உண்மைலேயே நல்லா இருக்கு ,////


  தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 15. வெறும்பய கூறியது...

  கவிதை அருமை... தொடர்கிறேன்  தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 16. அன்பெ நஞ்சாய்... ஆஹா அருமையா இருக்குங்க!

  தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 17. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  அன்பெ நஞ்சாய்... ஆஹா அருமையா இருக்குங்க!
  தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 18. பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

  கவிதை நல்லா தான் இருக்குகுகு... ஆனா உங்க Followers லிஸ்ட் பார்த்தா தான் பயமா இருக்கு... ஒரே கே.டி பசங்களா இருக்காங்க... செல்வா, ரமேஷ், பன்னிகுட்டி, அருண், வெறும்பய, நாக... எல்லாரும் இங்க தான் இருக்கிங்களா? சரி நானும் Follow பண்றேன்...

  இருக்கட்டுங்க. தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி

  பதிலளிநீக்கு