வெள்ளி, மே 26, 2017

மனைவியை விட்டு கொடுத்துதான் கடவுள் அன்பை பெறனுமா?! - நாயன்மார்கள் கதைகள்


எத்தனை இடர் வந்தாலும் கைப்பிடித்தவளை கைவிடக்கூடாதுன்னுதான் எல்லா மதமும், எல்லா நீதிநூல்களும்,  எல்லா வேதங்களும் சொல்லுது.. ஆனா, கைப்பிடித்தவளை கடவுளுக்காக விட்டுக்கொடுக்க முன்வந்து நாயன்மார்கள் வரிசையில்   இடம்பிடித்தார்... அந்த கதையை பார்ப்போம். 

இயற்கை நியதிக்கு புறமபா நடந்துக்கிட்டதால இயற்பகை நாயனார்ன்னு வந்துச்சான்னு தெரில.  இவரின் சொந்த பேரு தெரில.   ஓயாத உழைப்புக்கும்,விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் கடலை புறத்தே கொண்டுள்ள ஊரான காவிரிபூம்பட்டினத்தில்  வசித்தவர் இந்த இயற்பகை நாயனார். வணிகக்குலத்தில் பிறந்து செல்வத்தில் மிதந்தாலும் சிவப்பெருமான் மீதும், சிவனடியார் மீதும் மாறா பக்தி கொண்டு  வாழ்ந்து வந்தவர். சிவனடியார்களுக்காக எதையும் கொடுக்கவும், செய்யவும் சித்தமாய் இருப்பார். 

இயற்பகையார் மகிமையை உலகம் அறிய வைக்கும் பொருட்டு சிவனடியார் வேடம் பூண்டு சிவனே இயற்பகையாரின் இல்லம் நோக்கி வந்தார்.  சிவனடியாரை கண்டதும் ஆனந்த கூத்தாடினார் இயற்பகையார். பாதபூஜை செய்து,  வீட்டினுள் அழைத்து சென்று ஆசனத்தில் அமரச் செய்து சிரம பரிகாரம் செய்வித்தார். சிரமபரிகாரங்கள் முடிந்ததும் அடியாரே! தங்களுக்கு  என்ன வேண்டுமென வேண்டி நின்றார் இயற்பகையார்.

தான் வந்த வேலை இன்னும் சுலபமாகிப்போனதை எண்ணி மகிழ்ந்த அடியவர் வேடம் பூண்ட ஈசன், அடியவர் எது கேட்பினும் நீர் மறுக்காமல் செய்பவர் என கேள்விப்பட்டதால்  நான் வேண்டுவனவற்றை பெற  உம்மை நாடி வந்தோம்’ என கூறினார்.  

ஐயனே! தாங்கள் கேட்பது எதுவாக இருப்பினும் நான் தர சித்தமாய் உள்ளேன். என்னிடமுள்ள எதும் எனதல்ல. எல்லாமே அந்த ஈசன் தந்தது. அவன் தந்ததை அவன் அடியாருக்கு அளிப்பதில் எவ்வித தயக்கமுமில்லை என பணிந்து நின்றார். 

இல்லை, நான் கேட்க இருப்பது இயற்கை நியதிக்கு  மாறுபட்டது. நான் கேட்டப்பின் நீ மறுத்தால்..... எனக்கூறி சென்றார் சிவனடியார்.  அவர் பேச்சை இடமறித்த இயற்பகையார், எதுவாகினும் கேளுங்கள். தர சித்தமாய் உள்ளேன்.  இது அந்த ஈசன்மீது சத்தியம் என கூறினார். 

உன்னுடைய மனைவி அழகில் மயங்கிவிட்டேன். அவள் எனக்கு வேண்டும். அவளை என்னோடு அனுப்பி வை என்று  தன் நோக்கத்தை முன்வைத்தார் சிவனடியார். மனைவியை வெட்டி போட்டாலும் போடுவாங்களே தவிர  எந்த சூழ்நிலையிலும் மனைவியை அடுத்தவருக்கு விட்டு தர மாட்டார்கள். ஆனா, இயற்பகையார் விட்டுத்தர முன்வந்தார். சிவனடியாரே! என்னிடம் இல்லாத பொருளை கேட்டு என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவீர் என நினைத்து கலங்கி நின்றேன். ஆனால், அப்படி ஒரு நிர்ப்பந்தத்தில் ஆழ்த்தவில்லை.  என் மனைவியை தங்களோடு மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கிறேன் என கூறி வீட்டினுள் சென்றார்.

மனைவியிடம் நடந்ததை சொல்லி, சிவனடியாருடன் செல்ல மனைவியை பணித்தார்.  இயற்பகையாரின் இயல்பை நன்கு அறிந்திருந்த அவரது மனைவி கணவனின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் அவர் விருப்பத்திற்கு இணங்கி சிவனடியாருடன் செல்ல தயாரானாள்.  மனைவியை சிவனடியாரிடம் ஒப்படைத்து அழைத்து செல்க என பணிந்து நின்றார்.
  


சிவனடியாரும், இயற்பகை நாயனாரின் மனைவியும் சேர்ந்து நடக்கலானார்கள். சில அடிகள் நடந்தப்பின் எதையோ யோசித்தவாறு நின்று,  இயற்பகையாரை தன் பக்கம் அழைத்தார்.  எதற்கு நின்றார்?! ஏன் அழைக்கிறார் என புரியாமல் பதறி அடித்து சிவனடியாரிடம் ஓடி ’வேறு எதாவது வேண்டுமா” என கேட்டார் இயற்பகை நாயனார், 

அதற்கு அடியவர் வேடம் பூண்ட சிவன், ‘ஒன்றுமில்லை, இந்த ஊரில் உனது உற்றார், உறவினர்கள் வசிக்கின்றனர். அவர்கள் நான் உன் மனைவியை அழைத்து செல்வதை பார்த்து ஊரை கூட்டி எனக்கு இடையூறாக இருக்கக்கூடும்.  ஆகவே, ஊர் எல்லை வரை நீ எனக்கு துணையாக வந்தால் நல்லது என நினைக்கிறேன் என்றார்.

சுவாமி! இதுப்பற்றி நானே யோசித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய தவறிவிட்டேன். நீங்கள் நினைத்தது சரிதான். நான் உங்களுடன் உங்களுக்கு காவலாக  நானே வருகிறேன் என வாளும், கேடயமும் எடுத்துகொண்டு அவர்களோடு கிளம்பினார்.  சிவனடியார் முன் செல்ல, அவரைத்தொடர்ந்து இயற்பகையாரின் மனைவியும் பின் இயற்பகையாரும் சென்றனர். இதற்கிடையில் வேலையாட்கள் மூலம் நடந்ததை கேள்விப்பட்ட இயற்பகை நாயனாரின் உறவினரும், ஊர்க்காரங்களும் இவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினர். இயற்பகை நாயனாரை நோக்கி, அடே மூடனே! எவரும் செய்ய துணியாத காரியத்தை செய்ய துணிந்து ஊருக்கும், உறவுகளுக்கும், உன் மனைவிக்கும் களங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறாயா?! இப்போதே உன் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல் என ஊரார் கூச்சலிட்டனர்.   அடியவர் விருப்பத்திற்கு மாறாக என்னை நடக்க சொல்லும் உங்கள் அனைவரையும் கொன்றொழிக்க தயங்க மாட்டேன் என சூளுரைத்து எதிர்த்து நின்றவர்களை வாளால் வெட்டி வீழ்த்தினார். தப்பி ஓடியவர்கள் பிழைத்தனர். அந்த இடமே மயானக்கோலம் பூண்டது. எங்கும் மரண ஓலம்.  

எது எப்படியாகிலும் சிவனடியார் இயற்பகையாரின் மனைவியோடு  ஊர் எல்லையான சாயாவனம் வரை வந்துவிட்டார். அங்கு அவர்களை எதிர்க்க ஆள் இல்லை. எனவே, இயற்பகையாரை நோக்கி, இனி, உமது காவல் எனக்கு தேவை இல்லை. நீர் திரும்பி உமது ஊருக்கு செல்லுமென கட்டளையிட்டார். அவரது வாக்கை வேதவாக்காக கருதி இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விடைப்பெற்று அங்கிருந்து கிளம்பினார். அப்படி போகும்போது தன் மனைவியை நிமிர்ந்து கூட பாராமல் அதேநேரம் சிறிதும் சலனமின்றி அங்கிருந்து புறப்பட்டார். அவரது செய்கை சிவனடியார் உருவில் இருந்த சிவப்பெருமான் மனம் மகிழ்ந்து, இயற்பகையாரின் பக்தியை எண்ணி இன்புற்றார். இயற்பகையார் கொஞ்ச தூரம் கடந்து வந்துவிட்ட நிலையில், இயற்பகையாரே! காப்பாற்றுங்கள் என ஓலம் கேட்டு பதறியடித்து வந்த வழியே ஓடினார்.  ஐயனே! தங்களுக்கு தீங்கிழைப்பவர் யாராகினும் அவர்களை கொன்றொழிப்பேன் என கத்தியபடியே ஓடினார். அங்கு தன் மனைவி மட்டும் தனித்திருப்பதை கண்டு குழம்பி சிவனடியாரை அங்குமிங்கும் தேடினார். 

அப்போது பேரொளி விண்ணில் எழுந்ததோடு கூடவே சிவனடியாரின் குரலும் ஒலித்தது.   இயற்பகையாரே! உம்மை சோதிக்கவே காமாந்தகாரனாக யாம் வந்தோம். ஊரார் தடுத்தும், எம் இயல்பை எடுத்து கூறியும், உலக மாந்தர்களின் இயல்பான சுபாவத்திலிருந்து மாறியதோடல்லாமல் எத்தனை பேர் தடுத்தும்  நீர் கொண்ட கொள்கையில் மாறாமல் உறுதியாக நின்றீர். சிவனடியாரை உபசரிக்கும் உமது பண்பு கண்டு இவ்வுலகம் வியக்கும். அதை உணர்த்தவே யாம் இங்கு வந்தோம் எனக்கூறி நீரும், உமது பேச்சை மீறாத  உமது மனைவியும், உங்கள்மீது அன்புக்கொண்டு உம்மை காப்பாற்ற வந்த உமது உற்றார் உறவினர்களும் சிவலோகம் வந்தடைவீர் என அருள் புரிந்தார்.  இயற்பகையார் மெய்சிலிர்த்து நின்றார். அவர்மீதும் அவர் மனைவி மீதும் விண்ணவர் பூமாரி பொழிந்தனர். அனைவரும் சிவனடி சேர்ந்தனர். 

இயற்பகை நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரமாகும்....


பின்குறிப்பு: இயற்பகை நாயனார் கதையை கேட்கும்போது அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சு. இது நாயன்மார்கள் வரிசையில் வரும் பதிவுங்குறாதால இத்தோடு விடுறேன். இயற்பகையார்  பத்திய விமர்சனத்தை வேற பதிவில் பதிகிறேன். விவாதிக்கலாம் வாங்க

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்காக....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461305

நன்றியுடன்,
ராஜி.

25 கருத்துகள்:

 1. #அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சு#
  நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள் :)

  சரி சரி ,கோவிச்சுக்காம http://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_25.html தளத்துக்குப் போய் ,உடனே என் கவலையைத் தீர்த்து வைங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துட்டேன். பதிலை உங்க தளத்துலயே வந்து சொல்றேன் அண்ணே

   நீக்கு
 2. //இயற்பகையார் பத்திய விமர்சனத்தை வேற பதிவில் பதிகிறேன்//

  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா விரைவில் இயற்பகையாரின் விமர்சனம் வரும். பக்தி வேறு, பைத்தியம் வேறுப்பா

   நீக்கு
 3. Arumaiyana nana kathai soli irukega vaalthukal. en paarviyel naan uanarthathu pingalai moochai aan endrum, ida kalai moochai pen endrum, utrar uravinar keta manam aagavum, uadavi seithavargal bakthi manam aagavum,eduthu kondal piravi enum perugadali neenthi sela intha kathai eduthu kondu mukthi enum kadavuali adiyalam. moochai epdi seer paduthu vathu endru katheil soli irukaga.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லுறதுக்காக கோவிக்காதீங்க. இதுலாம் முட்டுக்கொடுக்குற வேலைங்க சகோ. நாயன்மார்கள் கதையில் எந்த உள்ளர்த்தமும் கொண்டில்ல. எல்லா கதையிலும் நேரடி அர்த்தம் இருக்கையில் இது மட்டும் மாறுபடுமா?!

   நீக்கு
 4. க்கும்... ஏதாவது சொல்லிட போறேன்... அடுத்த பகிர்வு வரட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லுங்கண்ணே சொல்லுங்க. பேசினால்தான் தெளிவு கிடைக்கும்

   நீக்கு
 5. அறியாத அறிந்தேன்
  பத்திக்கிட்டு வந்தது நியாயமே
  (இயற்பகை நாயனார் எங்கள்
  ராஜிப்பகையாகி போனாரே
  அதற்கான பதிவில் என்னபாடுப் படப்போகிறாரோ ?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா விரைவில் பதிவு வரும்ப்பா

   நீக்கு
 6. தர்மரே தேவலாம் போலிருக்கே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம் ஹரிச்சந்திரன்கூட அடிமையாய்தான் விற்றான். ஆனா, இவரு பொண்டாட்டிய அனுபவிக்கவே அனுப்புறாராம். அவருக்கு நாயன்மார்கள் வரிசையில் இடமும் கொடுத்திருக்காங்க. கருமம்

   நீக்கு
 7. இந்த வரலாறு கொஞ்சம் இடிக்கிறது. மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இறைவன் இப்படியான விளையாடலை விளையாடுவாறா? தன் கண் முன் பலரும் கொல்லப்படுவதை ஏற்பாரா? இது போன்ற புராணக் கதைகளை மனம் ஏற்பதில்லை.

  துளசி, கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தன் கண் முன் பலரும் கொல்லப்படுவதை ஏற்பாரா?//

   கேட்டால் அதற்கும் ஒரு முன்கதையும், பரிகார புராணமும் இருக்கும் கீதா!

   நீக்கு
  2. பலிக்கொடுக்குறதைக்கூட ஏத்துக்கலாம். இது கொஞ்சம் ஓவரா இருக்கு. நம்ப முடியாததாவும் இருக்கும்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   நீக்கு
 9. நாயன்மார்களின் கதைகளில் இதையொத்த வேறு கதைகளும் உண்டு. அனைத்தையும் நான் படித்துள்ளேன்.. உங்களின் இதற்கான மறு கோணத்தைக் காணக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவனுக்கு தொடுத்த மாலைய முகர்ந்ததற்காக கையை வெட்டிய கதை உண்டு... சிவனை நிந்தித்ததால் மனைவியை உடலால் மட்டும் வைத்த கதையுண்டு. ஆனா மனைவியையே அனுப்பிய கதை இதுமட்டுமே.

   நீக்கு
 10. Vaalthukal en arivuku patathu sonan. m.youtube.com/channel/UC63Yfp819I0jNumHVPqhK3Q mudithaal intha video paarkavum. e8g

  பதிலளிநீக்கு
 11. Nandriga. ungal thegathiula theivathai kaanalam paguthi 2 ai aavathu paarthu vitu mela sona kathai ai adutha pagutheiyai veliyedugal. vaalthukal. 0

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா பார்க்குறேன் சகோ

   நீக்கு
 12. இறைவன் இப்படியும் சோதிப்பானா?
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிலாம் சோதிக்கனுமான்னு கேளுங்கப்பா

   நீக்கு