
விதைப்பாய் மகிழ்ச்சியை -என
உன்னில் நான் இணைந்த போதே
உணர்ந்துக் கொண்டேன் ...,
பாழிருட்டில் நான்
தவித்திருந்தும்..., என்
வெளிச்சத்தை உன்னிடமே
கொடுத்து வைத்திருந்தேன் ...,
பார்த்திருந்து மகிழ
பொழுது போக
பைத்தியமாய் மாற்றி
பதற வைத்தாய் என்னை..,
என் நினைவினில்,
நிஜத்திலும் நீ ??!!
உனக்கு என்னை தந்தேன்
என் மரணம் உனக்கு இனித்தால்
எனக்கும் அது இன்பமே..,
இழந்தவை ஏதுமில்லை - இனி
இழப்பதற்கும் ஏதுமில்லை
என்னிடம்...,
உயிரே,
உன்னை இழந்தப்பின்..,
என் உயிர் எனக்கெதற்கு??!!
உரிமையாய் உறவாய்
என்னோடு ஒன்றிய
உன் மனதை
கன்றிய மனதாக்கினாய் ....??!!!
அதற்காக நான்
சாகவும் தயார்??!!
உனக்கு இனிக்குமா
என் மரணம்??!!!
காத்திருக்கிறேன்
உன் பதிலுக்காக.....

கவிதை அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை சிறப்பாக இருந்தது... கவிதைக்காக புனையப்பட்ட வரிகளா அல்லது உண்மையான வலிகளின் வரிகளா...
ReplyDeleteமதுரை சரவணன் கூறியது...
ReplyDeleteகவிதை அருமை. வாழ்த்துக்கள்
///////////
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
Philosophy Prabhakaran கூறியது...
ReplyDeleteகவிதை சிறப்பாக இருந்தது... கவிதைக்காக புனையப்பட்ட வரிகளா அல்லது உண்மையான வலிகளின் வரிகளா...
/////////////////
கவிதைக்கு பொய் அழகுனு உங்களுக்கு தெரியாதா? தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
இந்த கவிதை தேறிடும் போல இருக்கே..
ReplyDelete>>காத்திருக்கிறேன்
உன் பதிலுக்காக.....
காலமெல்லாம் காத்திருப்பேன்..?