
ஏதோ ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,
பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்..,
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,
நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய்..,
உன் மணநாள் பரிசாக
என்ன தரலாம் என்று
மனதினுள் யூகித்து நின்றேன்...,??!!!!
இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி...,
ஒருவேளை
இல்லைஎன்று சொல்லி அவன்
மறுத்தாலும் மறுப்பான்..,
என்னிடமிருந்து உனக்குத் தர
எவனிடம் கேட்க வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் ??!! ?!!,

செல்லாது செல்லாது.... போத்தீசுக்கு கூட்டிட்டு பொய் பக்கத்து ஆத்து மாமி வாங்கியிருப்பதை விட விலை உயர்வான பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தா தான் ஆச்சு...
ReplyDeleteசெல்லாது செல்லாது.... போத்தீசுக்கு கூட்டிட்டு பொய் பக்கத்து ஆத்து மாமி வாங்கியிருப்பதை விட விலை உயர்வான பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தா தான் ஆச்சு...
ReplyDelete:)
ReplyDeletePhilosophy Prabhakaran கூறியது...
ReplyDeleteசெல்லாது செல்லாது.... போத்தீசுக்கு கூட்டிட்டு பொய் பக்கத்து ஆத்து மாமி வாங்கியிருப்பதை விட விலை உயர்வான பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தா தான் ஆச்சு...
///////////////////////
தோழிக்கு ஆயுளில் பாதி தரும்போது pothys ல கிராண்டா ஒரு பட்டு புடவை எடுத்துக் கொடுக்க மாட்டாங்களா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ReplyDelete:)
/////////////////////////
:-(