Monday, March 26, 2012

கடவுள் பக்தி என்றால் என்ன? - ஐஞ்சுவை அவியல்

                                 narada
          பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.  செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

      ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.  அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.  கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று  பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

**************************************************************
சிரிக்க...,

                                 
அப்பா: பரிட்சையில் எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன்: ஒண்ணே ஒண்ணுதான்!

அப்பா: ஒண்ணே ஒண்ணுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
****************************************************************** 
பசிக்குதா?
என் சின்ன பொண்ணு இனியாக்கு அப்போ 4 வயசு. எங்க வீட்டுல நாங்கலாம் சாப்பிடுறதுக்கு முன் காக்காவுக்கு ஒரு பிடி வச்சுட்டு, காக்கா சாப்பிட்டுடுச்சான்னு பார்த்துட்டு நாங்கலாம்   சாப்பிடுறது எங்க பழக்கம். டான்னு 8 மணிக்கு காக்காவுக்கு சாப்பாடு வச்சுடுவோம். அன்னிக்கு எதோ காரணத்துனாலே சமைக்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு.

பசிக்குதுன்னு இனியா சொல்லிக்கிட்டே இருந்தா. இன்னும் சமைக்கலைம்மா லேட்டாகிடுச்சுன்னு, ரொம்ப பசிச்சா பெரியம்மா வீட்டுல போய் சாப்பிடுன்னு சொன்னேன்.  மணி எட்டு தாண்டிடுச்சு. தற்செயலா  ஒரு காக்கா வந்து எங்க வீட்டு வாசல்ல “கா கா கா”ன்னு கத்தினதை பாப்பா பார்த்துட்டு, ஹலோ காக்கா! இங்க இன்னும் சாப்பாடு ரெடியாகலை, ரொம்ப பசிச்சா எங்க பெரியம்மா வீட்டுக்கு வான்னு சொல்லி வேகமா எங்க அக்கா விட்டுக்கு போய்ட்டா.
*********************************************************
சிந்திக்க..., 
                                       
விரிச்ச தலை முடியத் தெரியாத பொம்பளைக்கு, அவள் பெற்ற பிள்ளைகள் விதத்தாலே ஒரு பெயர். அவள் யார்?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...,
*****************************************************
தோட்டம் அமைக்க.....
முத‌லி‌ல் தோ‌ட்ட‌ம் அமை‌க்க‌ப்பட வே‌ண்டிய இட‌‌ம் சூ‌ரிய ஒ‌ளி படு‌ம் இடமாக இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
தோ‌ட்ட‌ம் அமை‌ப்பத‌ற்கு மு‌ன்பு, அ‌ப்பகு‌தி‌க்கு‌ள் கா‌ல்நடைகளோ, கோ‌ழி போ‌ன்றவையோ வ‌ந்து ‌விடாம‌ல் தடு‌க்கு‌ம் வே‌லி அமை‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.
செடிகளை நடுவத‌‌ற்கு மு‌ன்பு ம‌க்‌கிய தொழு உர‌ம் போ‌ட்டு ம‌ண்ணை‌க் கொ‌த்‌தி‌வி‌ட்டு ம‌ண்ணை இள‌க‌ச் செ‌ய்து வை‌த்‌திரு‌ங்க‌ள்.

28 comments:

  1. சாப்பாடு எப்போ ரெடி ஆச்சு?

    ReplyDelete
  2. கதையில் பக்திமானாக இருந்தால் மட்டும் போதாது.....
    வரலாறும் அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கீங்க..

    ReplyDelete
  3. கதை சுப்பரா சொன்னதுக்கு வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  4. மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!///////////////

    உங்கட வாழ்க்கை அனுபவத்தை எம்மோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  5. முதல் கதை தம்பிக்கு புடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும்... மத்தது எல்லாம் சூப்பர் அக்கா.. முக்கியமா அந்த விடுகதையோட பதில நானும் அடுத்த பதிவுல சொல்றேன்...:))

    ReplyDelete
  6. /
    அப்பா: பரிட்சையில் எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

    மகன்: ஒண்ணே ஒண்ணுதான்!

    அப்பா: ஒண்ணே ஒண்ணுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

    மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
    //

    இது இன்னக்கி எக்ஸாம் ல நடந்ததா ?

    ReplyDelete
  7. மிக அருமையான அவியல்

    ReplyDelete
  8. பக்திக்கதை அருமை.
    இனியா கெட்டிக்காரிதான்

    ReplyDelete
  9. இனியாவின் சுட்டித்தனம் ரசனை! பக்திக் கதை சுவாரஸ்யம்! புதிர்...? தலைசுற்றுகிறது! ஸீயு!

    ReplyDelete
  10. puthirukku vidai :


    thennampillai

    ReplyDelete
  11. அட, கலை சொன்ன விடை சரிதான் போலருக்கே... வாழ்த்துக்கள்மா கலை!

    ReplyDelete
  12. எது பக்தி கதையும் கருத்தும் அழகு. நம்பிக்கைதான் வாழ்க்கை. செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு அது அதிகமாகவே உள்ளது.

    ReplyDelete
  13. என்னங்க உங்க பெரிம்மா வீட்டு விலாசம் தாங்க வயிறு பசிக்குது. உங்க வீட்டுக்கு வந்தாலும் அங்கதான் கையை காண்பிக்க போறீங்க. அதுக்கு நேரா அங்கயே போய்டுறேன். நீ ரொம்ப சமத்துதானம்மா

    ReplyDelete
  14. சரி சாப்பிட்டீங்களா இல்லையா சொல்லவே இல்ல

    ReplyDelete
  15. பக்தி,,..நல்ல விளக்கம்

    ReplyDelete
  16. கலைங்கற பேர்ல நீங்களே கமெண்ட் போட்டுக்கிட்டீங்களா? இத்தனை கமெண்ட் இருக்கு ? ஹி ஹி

    ReplyDelete
  17. நல்ல சுவையான கதம்பம். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    கலைங்கற பேர்ல நீங்களே கமெண்ட் போட்டுக்கிட்டீங்களா? இத்தனை கமெண்ட் இருக்கு ? ஹி ஹி///

    சிபி சார் எல்லாருடைய பதிவையும் கொஞ்சம் படிங்க......கலை நிறைய பதிவில அதிகமாதான் கமெண்ட் போடுறாங்க...

    பிளீஸ் கலை மேடம் அவர் பதிவுக்கும் சென்று கமெண்ட் போட்டிடுங்க அப்பொழுதான் நம்புவார்...ஹிஹி!

    ReplyDelete
  19. தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
    கதையில் பக்திமானாக இருந்தால் மட்டும் போதாது.....
    வரலாறும் அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கீங்க../////

    மக்கா..வரலாறு அல்ல புராணம்! பிரகாஸ மறுபடியும் ஒன்னாம் வகுப்புல சேர்த்துங்க.....ஒழுங்க படிச்சாத்தானே!

    ReplyDelete
  20. கதை நல்லாயிருக்குங்க....உண்மையான பக்தியே இறைவனை அடைய வழி என்பதை விளக்கியிருக்கிறீர்கள்.....

    ReplyDelete
  21. அனைத்துப் பகுதிகளும் அருமை சகோ. கடவுள் பக்தி அவரை முழு இதயத்தோடு நம்புவது. மூளையை வைத்தல்ல. இதயத்திலே உள்ளது விசுவாசம். நகைச்சுவை, மகளோடு அனுபவம், தோட்டம் அமைக்க டிப்ஸ். விடை தெரியாத அருமையான சிந்தனைக் கேள்வி என்று அத்தனையும் அசத்தல். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. கதை சுவாரஸ்யம்...அவியல் அருமை...

    ReplyDelete
  23. ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?

    ReplyDelete
  24. இந்த உலகத்தில் மனிதனை விட அனைத்துவிதமான எதிரி யாருமில்லை

    ReplyDelete