ஏண்டி புள்ள, கல்யாண நாளுக்கு சீலை எடுக்க வந்துட்டு, சீலையை பார்க்காம வேறென்னத்தையோ பார்க்குறியே, அப்படி என்னத்தைதான் பார்க்குறே புள்ளை?!
அந்த பொம்பளை போட்டோவை பார்த்துக்கிட்டு இருக்கேன்.யாருங்க மாமா அந்த பொம்பளை?! அதான் கடைக்காரரம்மாவா?! நல்லா அழகா சிரிக்குதுங்க மாமோய்.
அடி கூறுகெட்டவளே! அது கடைக்காரம்மா இல்லடி.புகழ்பெற்ற ஒரு ஓவியம்டி. படத்தோட பேரு ‘மோனலிசா’.
கடந்த 500 வருசமா அந்த புள்ளையோட சிரிப்புல இருக்குற மர்மம புரியாத புதிராக இருந்துச்சு.
கேணைத்தனமா பேசாதீங்க மாமோய், நிஜ பொண்ணாயிருந்தால் அவ சிரிப்புல மர்மம் இருக்குன்னு சொல்லலாம். இது வெறும் படம் தானே மாமா?!
அவசரப்படாதடி என் கேணப்பய பொண்டாட்டி. பிரான்ஸ் நாட்டுல ஃபேமஸ் டிராய்ங்க் ஆர்டிஸ்ட் லியனார்டோ டாவின்சி 1500 களில் வரைஞ்ச அற்புத மான ஓவியம்தான் இந்த “மோனலிசா” ஓவியம். இந்த ஓவியம் அஞ்சு நூற்றாண்டா உலகம் முழுக்க பேசப்படுவதாக அமைஞ்சுது.
அதுக்கு காரணம் மோனலிசா சிரிப்பின் மர்மம். மோனலிசாவின் முகத்தை நேரடியாக பார்க்கும் போது சிரிப்பது தெரியாது. ஆனா ஓவியத்திலிருந்து கொஞ்சம் பார்வையை விலக்கினா அந்த சிரிப்பு தெரியும். இந்த மர்மத்திற்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்கரெட் லிவிங்ஸ்டன் விடை கண்டுபிடிச்சிருக்கார். அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் அவர் தன்னோட ஆய்வை குடுத்திருக்கார்.

மோனலிசாவின் படத்தை உத்து பார்க்கும்போது அந்த சிரிப்பு மறைவதற்கு நம் கண்களின் பார்வைதான் காரணம்னு அவர் சொல்றார்.
அது எப்படிங்க மாமா?! நாம எல்லாத்தையும் ஒரே மாதிரிதானே பார்க்குறோம்?!
அதான் இல்லியாம் புள்ள, நம்ம கண்களுக்கு ரெண்டு விதமான பார்வைகள் இருக்காம். அவை நேர்பார்வை மற்றும் ஓரப்பார்வை. நாம் பெரும்பாலும் நேர்பார்வைதான் யூஸ் பண்றோம். ஓரப் பார்வை குறைவுதான்,.
மோனலிசாவின் சிரிப்பு கிட்டத்தட்ட முற்றிலும் கீழ் பகுதியில் நிகழ்கிறது. எனவே ஓரப்பார்வையில்தான் அது புலப்படும் என்கிறர் மார்கரெட்.
உதாரணத்துக்கு அச்சடிக்கப்பட்ட ஒரு பக்கத்தில் உள்ள எழுத்தை மட்டும் உத்து பார்த்தா, அந்த குறிப்பிட்ட எழுத்துக்கு பக்கத்துல இருக்குற மத்த எழுத்துங்க கூட என்னன்னு தெரியாது.
இதை மையமா வெச்சுதான் டாவின்சி தன்னோட படத்துல யூச் பண்ணியிருக்கார்.
மோனலிசாவின் கண்ணையோ இல்லாட்டி அவ முகத்துல வேறு இடத்தையோ பார்க்கும்போது அந்த சிரிப்பு தெரியாது புள்ள. இந்த மெத்தடை டாவின்சி மட்டுமல்ல, சுக்குளோஸ், ராபர்ட் சில்வர்ஸ் உள்ளிட்ட பல ஓவியர்கள் மனித தன்மைகளை அந்த காலத்துலயே கண்டுகிட்டாங்க. ஆனா விஞ்ஞானிகள் அதை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்கன்னு சொன்னாராம் மார்கரெட்.
அப்படிங்களா மாமா! ஏனுங்க மாமா, ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே!
அடியே, இது கடை புள்ள, வீட்டுக்கு போய் குடுக்குறேன்.
சீ போங்க மாமா, நான் அத கேட்கலை, உனக்கு மட்டும் இதெல்லாம் எப்படி தெரியும்ன்னு கேட்கலாம்ன்னு வந்தேன்,
உன்னை போல 24மணி நேரமும் சீரியல் பார்க்காம நியூஸ், விவாதங்கள் பார்க்குறேன். நியூஸ் பேப்பர் படிக்குறேன். லைப்ரரி போய் புக்ஸ் படிக்குறேன். அதுமட்டுமில்லாம நம்ம வூட்டுல கம்ப்யூட்டர் பொட்டி இருக்கே, அதுல போய் எல்லா பிளாக்கும் படிக்குறென். அதனால, எனக்கு உலக விசய்ம்லாம் அத்துப்படி புள்ள.
ஓ இதுதான் சங்கதியா? அதனாலதான் உங்களை ஊர் நாட்டாமையா போட்டிருக்காங்க மாமோய். சரி சீலை எடுத்துக்கிட்டு மழைக்கு முன்னாடி வெள்ளன வூட்டுக்கு போலாம் மாமோய்.

>>அப்படிங்களா மாமா! ஏனுங்க மாமா, ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே!
ReplyDeleteஅடியே, இது கடை புள்ள, வீட்டுக்கு போய் குடுக்குறேன்.
பப்ளிக் பப்ளீக்
240மணி நேரமும்..? எங்கூர்ல 24 மணி நேரம் தானேம்மா கிடைக்குது...?
ReplyDeleteஅதுசரி... ஓரப்பார்வை நாங்க நிறையவே பாக்குறதுண்டு. அதுக்கு ’சைட் அடிக்கிறது’ன்னு பேரு.. ஹா.. ஹா....
Ok... Jokes apar, உரையாடல் வழியா வந்த சங்கதி அருமை. மோனாலிசா ஓவியம் காலங்களைக் கடந்தும் ரசிக்கப்படறதுக்கு இந்த புன்னகை மர்மம் தான் காரணம், அதை அழகா எளிமையாப் புரிய வெச்ச பதிவுக்கு ஒரு சபாஷ் சிஸ்டர்!
எவ்ளோ சீரியஸா மோனலிசா சிரிப்பை பத்தி பேசிட்டு இருக்கோம்,,சிபிய பாருங்க..அவரு புத்தி அவர விட்டு போக மாட்டேங்குதே...ஹி ஹி ஹி எப்பூடி...
ReplyDeleteஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியை மிக அழாகாக எளிமையான தமிழில புரிய வைச்சுட்டீங்க ராஜி. சிறப்பாக இருக்கு புன்னகை விஷயம்
ReplyDeleteஎளிமையான தமிழில் ஆச்சிரியமான விஷயம் எல்லோருக்கும் புரியும் வகையில் ..!
ReplyDeleteசகோ, எப்பூடீ இப்பூடீ எல்லாம் ....நடத்துங்க தகவலுக்கும்,பேச்சு நடையில் உள்ள லொள்ளுக்கும் நன்றி
ReplyDeleteஅறிவியல் விசயத்தை அழகான எழுத்து நடையில் சொல்லிருக்கீங்க,உங்களால் நானும் தெரிந்துக்கொண்டேன்..ரொம்ப நன்றிங்க!!
ReplyDeleteஎப்போதுமே இந்த உரையாடல் பாணி பதிவுகளில் நீங்கதான் அக்கா ராஜா... ச்சீ... ராணி (இருபது நாலு மணி நேரமும் ஆசிரியர் பெயரையே உச்சரிக்கும் மாணவன்...)
ReplyDeleteநல்ல செய்தியை எளிமையான வழக்கு மொழியில் சொல்லி அசத்தி புட்டிக ..
ReplyDeleteஎன் வாழ்த்துகள்
searial visayaththai-
ReplyDeleteooramaaa thaakkideenga..!
nalla kathai!
பேச்சு நடை்யில் உள்ள அருமையான தகவல். ராஜி அக்கா
ReplyDeleteநக்கல் கலந்த மோனாலிசா தகவல் சொலிச்செல்லும் பதிவு நேரம் இல்லாமல் ஓடும் போது உலக நடப்பு. பிளாக் சூப்பர் கடி ராஜி அக்காள்.
ReplyDeleteஎனக்கெல்லாம் ஓரப்பார்வை தான்:)
ReplyDeleteநாட்டுப்புற நடை நல்லாவே இருக்கு. ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே// செம நக்கல்.
ReplyDeleteசெம கரைச்சல் !
ReplyDeleteஅதுமட்டுமில்லாம நம்ம வூட்டுல கம்ப்யூட்டர் பொட்டி இருக்கே, அதுல போய் எல்லா பிளாக்கும் படிக்குறென். அதனால, எனக்கு உலக விசய்ம்லாம் அத்துப்படி புள்ள.
ReplyDeleteஅப்படியா !!!?????
இதுவரை அறியாத அருமையான
ReplyDeleteஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவார்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
///நம்ம வூட்டுல கம்ப்யூட்டர் பொட்டி இருக்கே, அதுல போய் எல்லா பிளாக்கும் படிக்குறென். அதனால, எனக்கு உலக விசய்ம்லாம் அத்துப்படி புள்ள.///
ReplyDeleteநல்ல காலம் பொறக்குது ,,,நல்ல காலம் பொறக்குது நம்ம ராஜி அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்குது
மோனலிசாவின் புன்னகை கலைஞனின் கண்ணுக்கு தான் தெரியும்.
ReplyDelete