உன் உயிர் தந்து
என் உயிர்
வளர்த்த தாயே !!
தரணியில் நானும்
அவதாரம் எடுத்திட
துணையாய்
இருந்தவளே !!
ஈரைந்து மாதங்கள்
எனை கருவாய்
வயிற்றில்
சுமந்தவளே !!
பசியால் நீ
வாடிடும் போதும்
நான் பசியறியாது
செய்தவளே !!
நோயினால் நீ
வாடிய போதும்
என் மனம்
நோகாமல்
பார்த்தவளே !!
உன்னை
என்னவென்று
நான் சொல்வேன்...
நீ தெய்வம் என்று
சொன்னால் கூட
உனக்கு அது
இழுக்கு தான்...!!
நீ தெய்வத்துக்கு
மேலே தான்
என் மனதில்...!!
ஒரு அன்னையாய் பொறுப்புணர்ந்து, என் அன்னைக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள தாய்மை குணம் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் “அன்னையர் தின வாழ்த்துக்களை” சொல்லிக்குறேன்.
அம்மான்னா சும்மா இல்லம்மா... அவ இல்லன்னா யாரும் இல்லம்மா... அன்னையின் சிறப்பைப் பாடிய, மனதைத் தொட்ட கவிதையை இயற்றிய (மூன்று குழந்தைகளின்) அன்னையே! உனக்கு என் மனம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்மா!
ReplyDeleteநிஜம்தான்! எங்கம்மா என்னை ஒரு நாள்கூட பசியில வாட வி்ட்டதில்ல. எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போயிடறாங்க. எல்லா அன்னையர்களுக்கும் இந்தக் கவிதை பொருந்தும். அனைவருக்கும் என்னோட அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் சேர்த்து தான் சகோ
தங்கள் கவிதை கூறிய முற்றும்
ReplyDeleteஉண்மை!
புலவர் சா இராமாநுசம்
தாய் - ஒப்பீடட்றவர் ..!
ReplyDeleteஇந்த உலகில் உள்ள எதுவும் அவருக்கு இணையாகாது ..!
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் .. சகோ
ReplyDeleteஇன்று
ReplyDeleteயார் தெய்வம் ?
அன்னைக்கு ஈடு
ReplyDeleteஅவனியில் யாரு?
-காரஞ்சன்(சேஷ்)
கவிதை அழகு. அன்னையர் தின வாழ்த்துகள்
ReplyDeleteஅன்னை என்றுமே அன்னை மட்டும்தான்.நல்ல் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரிகள் அருமை தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .
ReplyDeleteஅன்னையர்தின வாழ்த்துக்கள். கவிதை அருமை.
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
ReplyDeleteநிச்சயம் தெய்வத்தை விட மேலானவள் தான்..அன்னையர் தின வாழ்த்துகள்..
ReplyDeleteகவிதை வரிகள் அருமை அன்னையான உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .
ReplyDeleteகவிதை அருமை. அன்னையைப்போற்ற ஒரு அன்னையர்தினம் மட்டுமா ஒவ்வொருதினமுமே அன்னையர்தினம்தான்.
ReplyDeleteஎன் அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும்....
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகண்டிப்பாக.. உங்களுக்கு மட்டுமல்ல.. அன்னை எப்போதுமே கடவுளுக்கு மேல் தான்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்..!
தாய்க்கு நிகராக மனிதர்களில் எவரையும் ஒப்பிட முடியாது. ஆனால் அதற்காக அந்த தாயையும் படைத்த இறைவனுக்கு மேல் என்று சொல்வது தவறான வாதம் அல்லவா?
ReplyDeletesako!
ReplyDeletenalla thayai thernthedukkum-
urimai namakku illai!
nalla thaayai namakku-
thantha iraivane!
mikka melaanavan!
pasiththaal paaloottum-
annai potruthalukkuriyaval!
naam karuvil irukkumpothe-
paalai surakka seytha iraivane-
vanakkathukku uriyavan!
"அழகான வரிகள் ! வாழ்த்துக்கள் !"
ReplyDeleteஎம்மை அழிக்கும், பயமுறுத்தும், அடிமைப்படுத்தும் இறைவனை(?) விட எம்மை இமை போல காக்கும் தாய் இறைவனை(?) விட மேலானவளே!
ReplyDeleteபசியாற்றினாள்
ReplyDeleteமொழி கற்றுத்தந்தாள்
கல்வி கற்றுக்கொடுத்தாள்...
தான் துன்பத்தை சுமந்து
நமக்கு இன்பத்தைக் கொடுத்தவள்
தெய்வத்திற்கு மேல்தான்....
ஸலாம் சகோஸ்..!
ReplyDelete//////////////////////////
பிளாகர் Seeni கூறியது...
sako!
nalla thayai thernthedukkum-
urimai namakku illai!
நல்ல தாயை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்ல..!
nalla thaayai namakku-
thantha iraivane!
mikka melaanavan!
நல்ல தாயை நமக்கு தந்த இறைவவே மிக்க மேலானவன்..!
pasiththaal paaloottum-
annai potruthalukkuriyaval!
பசித்தால் பாலூட்டும் அன்னை போற்றுதலுக்குரியவர்..!
naam karuvil irukkumpothe-
paalai surakka seytha iraivane-
vanakkathukku uriyavan!
நாம் கருவில் இருக்கும்போதே பாலை சுரக்க செய்த இறைவனே வணக்கத்துக்கு உரியவன்..!
5/14/2012 2:06 AM
////////////////////////////////
சகோ.சீனி,
வாவ்..!
வாவ்..!
அருமை..!
நான் படித்ததிலேயே மிகச்சிறப்பான பின்னூட்டம் இது..! நன்றி சகோ..!
தாய்க்கும் சேய்க்கும் இறைவனின் கிருபையை பாருங்கள்..!
For most pregnant women, the hormones are in place to produce the breast-milk even before delivery of course, but most women won't leak before their baby is born..!
Typically, the first milk(சீம்பால்) that comes in is colostrum, which is filled with extra nutrients -none can equal to this in the earth- one & only for the baby. Then, the normal milk comes in..!
God is really greatest of all the mothers in the world..!
தெய்வத்தை விட ஃபீமேல் ஆனவள் ?? ஹி ஹி
ReplyDelete