செவ்வாய், மே 22, 2012

பேராசை பெரு நஷ்டம்...,


   
ஒரு ஊருல  பெரிய பண்ணையார் ஒருத்தர் இருந்தாராம். அந்த ஊருல  இருக்குற பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கல்நெஞ்சக்காரராம்.  யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார், பணம், பணம்ன்னு பேராசையில் இருக்குறவராம்.


அவர்கிட்ட  நல்லதம்பின்ற உழவர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவருக்குக் குடிசை ஒன்னும், கொஞ்சூண்டு  நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவர், " ஐயா! எல்லாரும் அவங்கவங்க  நிலத்தில உழுது விதை நட்டுட்டாங்க.  என் நிலம் மட்டும் தான்  இன்னும் தரிசாவே இருக்கு. நீங்க  கொஞ்சம்  விதை குடுத்தாஎன் நிலத்திலும் விதைச்சுடுவேன்.  அது வளர்ந்து அறுவடை செய்ததும், விதைக்குண்டான  பணத்தை குடுத்து டுறேன், மீதி என் புள்ளைக படிப்புக்கு உதவியாக இருக்கும் "ன்னு சொன்னார்.

" என் நிலத்திலேயே உழுது  விவசாயம் பார்.  சொந்தமாலாம் பயிரிட வேணாம். பண்ணையாராகும் ஆசையை விட்டுட்டு. கூலியாளாவே இரு, உன் புள்ளைங்களாம் ஒன்னும் படிக்க வேணாம், அவங்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல்லு. அரை வயித்துக் கஞ்சியாவது கிடைக்கும்" ன்னு கோபத்துடன் சொல்லிட்டாரு பண்ணையார்.

சோகத்தோட  வீட்டுக்கு வந்தார் நல்ல தம்பி. தன் பொண்டாட்டிக்கிட்ட " நாம நல்லபடியா உழைச்சு முன்னுக்கு வர்றது பண்ணையாருக்குப் பிடிக்கலை. விதைகள் கொடுக்கமாட்டேன்னுட்டார். நீயும் நம் புள்ளைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் புள்ளைக படிக்க கூட முடியாது போலிருக்குது. இதுதான் நம்ம தலைவிதி" என்று சோகத்தோட  சொன்னார்.

அவங்க குடிசல குருவி ஒன்னு ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் சாப்பாட்டை  நல்லதம்பியும், அவர் பொண்டாட்டியும், குழந்தைகளும் கொடுப்பாங்க.

தங்களோட சின்னஞ்சிறு குடிசைல குருவிக்கும் தங்கறதுக்கு இடம் கொடுத்து சந்தோசப்பட்டாங்க, அந்த கூட்டுல  அந்தக் குருவி நான்கு முட்டைகள் போட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்துச்சு, தினமும் குருவி வெளியே போய்  பூச்சிகளை பிடிச்சுக்கிட்டு வந்து தன்னோட குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டுக்கு வரவே இல்லை.

பாவம் குஞ்சுகள் பசியால் கத்துச்சு, அதைக் கண்ட நல்லதம்பியும், குழந்தைகளும் தங்களோட சாப்பாட்டுல  கொஞ்சம் கொடுத்து, குஞ்சுகளின் பசியைப் போக்கினாங்க.
                                               
திடீர்ன்னு  அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைஞ்சுது.. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிட போச்சு, உடனே அங்கு வந்த நல்லதம்பி  பாம்பை அடித்துக் கொன்ன்னுட்டார். கொஞ்ச நேரத்தில் அம்மா  குருவி வீட்டுக்கு வந்துச்சு, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, அம்மாக்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

அடுத்த சில நாட்களில் நல்லதம்பியும், அவர் குடும்பத்தினரும் வறுமையில் வாடினாங்க. குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் நல்லதம்பிக்கிட்டயும் அவர்  குடும்பத்தினர்கிட்டயும் நன்றி கூறி வானில் பறந்து போயின.

சில நாட்களில் நல்லதம்பி  வீட்டில சாப்பிட எதுவுமே இல்லை என்ற நிலமை, "இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" ன்னு சொன்னா நல்லதம்பி பொண்டாட்டி.

அப்போ அவங்க வீட்டுக் கதவை யாரோ தட்டுற சத்தம்  கேட்டுச்சு. கதவை திறந்து பார்த்தார் நல்லதம்பி. அங்கே அவங்க  வீட்டில கூடு கட்டி இருந்த அம்மாக்குருவி இருந்துச்சு. அதோட  வாயில ஒரு விதை இருந்துச்சு. அதை அவர் கையில் வெச்சுச்சு. " இதை உங்க வீட்டுத் தோட்டத்தில நடுங்க. கொஞ்ச நேரத்துல  வறேன்" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு
மீண்டும் வந்துச்சு அம்மாக்குருவி. இன்னொரு விதையைத் தந்துச்சு. " இதை உங்க வீட்டின் முன்புறத்துல நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போச்சு.

மூணாம் முறையா வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரமா  நடுங்க. எங்க மேல காட்டிய அன்புக்கு நன்றி" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார் .
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்துச்சு. இதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாங்க.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு துண்டாக வெட்டினார் நல்லதம்பி.

ஒரே ஆச்சர்யம்! அதுக்குள்ள இருந்து விதவிதமான சாப்பாட்டுப் பொருள்கள் வந்துச்சு. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டாங்க. மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒண்ணு சேர்த்தாங்க. பழையபடி அது முழுப் பூசனிக் காயாச்சு.எல்லாரும்சந்தோசப்பட்டாங்க , " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு சாப்பாடு தேவைப்படும் போது பிளந்தால் சாப்பாடு கிடைக்கும். மறுபடியும் சேர்த்துட்டா பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாதுன்னு சொன்னார் நல்லதம்பி.
                                
"வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாங்க. அதுக்குள்ள  என்ன இருக்குன்னு பார்த்துடலாம்" ன்னு சொன்னாங்க நல்லதம்பி மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக்கிட்டு வந்தார் நல்லதம்பி. கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான டிரெஸ், விலை உயர்ந்த மணிகள், நவரத்தினங்கள்லாம் கொட்டுச்சு. அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதுக்குள்ள இருந்து பொற்காசுகள்லாம்  கொட்டுச்சு.

அதன் பிறகு, அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல சாப்பிட்டாங்க. நல்ல ட்ரெஸ் போட்டுக்கிட்டாங்க.  பெரிய வீடு ஒண்ணை  கட்ட ஆரம்பிச்சாங்க.. பெரிய ஸ்கூல்ல அவங்க பிள்ளைகளை  படிக்க வச்சாங்க. . நல்லதம்பி தன்னைப் போல் ஊருல கஷ்டப்படுறவங்களுக்கெல்லாம்  உதவி செய்யத் தொடங்கினார்.

நல்லதம்பி கொஞ்ச நாளுல  பெரிய பணக்காரனாயிட்டார். தன்னை விட நல்லதம்பி பெரிய ஆளாகிட்ட்தை கேள்விப்பட்ட  பண்ணையார்,நல்லதம்பி வீட்டுக்கு  வந்து, " டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்துச்சு? உண்மையைச் சொல்லுடா" ன்னு அதட்டி கேட்டார். நல்லதம்பியும்  நடந்ததைலாம் அப்படியே சொன்னார்.

பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஜீரணிக்கவே  முடியலை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது இன்னும் நிறைய  செல்வம் சேர்க்க ன்னு நினைச்சார். வீட்டின் மேற் கூரையில்  குருவிக் கூடு ஒண்ணாஇ  அவரே கட்டினார். குருவிகள் வந்து அதுல அதில் தங்கும் ன்னு அவர் எதிர்பார்த்தார்.

அவர் நினைச்ச மாதிரியே. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் போட்டுச்சு. அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தன.

ஆனா,'பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஊருல  இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டுக்கு  பக்கத்துல விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.

அய்யோ, நான் நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணாகிட்டதே ன்னு ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். . வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கொஞ்ச  நாளுல தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.

"மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட பெரிய பணக்காரனாகப்போறேன்னு  கர்வத்துல  காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டிச்சு குருவி. பண்ணையார்கிட்ட மூன்று விதைகளைத் தந்து. " ஒண்ணை வீட்டின் பின்புறம் நடு. ரெண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூணாவதைக் கிணற்றோரம் நடு" ன்னு சொல்லிட்டுப் பறந்து போய்டுச்சு குருவி. தான் நினைக்குறதெல்லாம் நடக்குதுன்னு சந்தோசப்பட்டாரு பண்ணையார்.  மூணு விதைகளையும் நட்டார். மறுநாளே மூணு பெரிய பூசனிக் காய்கள் காய்ச்சுச்சு

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்து வெட்டினார்.அதுக்குள்ள  இருந்து நிறைய பூச்சிகள் வெளிவந்தன. மக்களை ஏமாற்றி சேர்த்து வெச்சிருந்த  வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் திண்ணுட்டு மறைஞ்சு போச்சு.

வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கிட்டு . முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதுக்குள்ள இருந்து  இருந்து நெருப்பு வந்துச்சு. அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தலை.

அய்யோ எல்லாமே போச்சேன்னு, மூணாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் ன்னு பேராசைப்பட்ட  பண்ணையார், அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்து போய்டுச்சு. அதை கேள்விப்பட்ட அந்த ஊரு மக்கள் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் ன்னு சந்தோஒசப்பட்டு, பண்ணையார் ஏமாத்தி புடுங்கிகிட்ட தங்களோட வயல்ல கடுமையா உழைச்சு எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க.

பணம், பணம் ன்னு  பேராசையால ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடம், ஹாஸ்பிட்டல்ன்னு கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் எல்லாருக்கும் நன்மைகள் செஞ்சு தானும் நல்லா இருந்தாங்க.35 கருத்துகள்:

 1. நல்ல கருத்துள்ள கதை...நீதிக் சிறு வயது நீதிக் கதைகளை ஞாபமூட்டியமைக்கு மிக்க நன்றி...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்ன வயசு ஞாபகம் வந்துட்டுதா? கருத்துரைத்தமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 2. நல்ல நீதிக்கதை. பேராசை பெரு நஷ்டம் அப்படின்னு நீதி சொல்லாமல் முடித்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. அட... பாலர் மஞ்சரி! இந்த மாதிரி சிம்பிளான நீதிக் கதைகள் சின்ன வயசுல படிச்சது. மீண்டும் அந்த நாட்களை நினைவூட்டி மகிழ்ச்சி தந்த தங்கைக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 4. ஒரு சினிமா பார்த்தாப்ல இருக்கு கதை, பேசாம சினிமா டைரக்ட் பண்ண கிளம்பும்மா...!!!

  பதிலளிநீக்கு
 5. பாப்பாவுக்கு பிளஸ்டூ ரிசல்ட்.. கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணி நல்ல மார்க் எடுக்கட்டுன்மு பிரார்த்தனை பண்றதை விட்டுட்டு பதிவு போடும் உங்க கடமை உணர்ச்சியை கண்டு நான் வியக்கேன் .. பாப்பா அம்மாவை பார்த்துக்கோ ஹி ஹி பத்தவை டா பரட்டை

  பதிலளிநீக்கு
 6. உண்மை, நேர்மை, உழைப்பு, உயர்வு ..! :)

  பதிலளிநீக்கு
 7. சின்ன வயசுல எங்க பாட்டி சொன்னது ம்ம்

  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 8. நடந்ததோ நடக்கலையோ கதை மனதிற்குள் நீதி சொல்கிறது.நல்வழிக்கதைகளில் எவ்வளவு உண்மைகள் ராஜி !

  பதிலளிநீக்கு
 9. ம்ம்ம்... நல்ல கதை சகோ
  நல் கருத்து அருமை

  பதிலளிநீக்கு
 10. சிந்தனை வளர்க்க இப்படி படிச்சா தான் உண்டு (என்னைய சொன்னேன்)..
  பகிர்வுக்கு நன்றிங்க சிஸ்டர்

  பதிலளிநீக்கு
 11. சிறார்களுக்கு மட்டுமல்ல,பெரியவர்களுக்கும்தான் இக்கதை.நன்று
  த.ம.6

  பதிலளிநீக்கு
 12. நல்ல நீதிக்கதை . நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல நீதி போதனை!
  வீட்டில் உள்ளக குழந்தைகளுக்குப் பெற்றோர்
  சொல்லத் தக்கக் கதை! அருமை!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 14. பெரிய பொருள் கொண்ட சிறுவர்களுக்கான
  அருமையான கதை
  ரசித்துப் படித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. நல்ல நீதிக்கதை... 2 old for me-:)...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. என் குழந்தைக்கு சொல்ல சிறுவர்களுக்கான ஒரு நல்ல கதை நன்றி சகோ. முதலில் உங்கள் பதிவிற்குள் வந்ததும் நான் உங்கள் சகோ கணேஷ் அவர்களின் பதிவிற்கு நான் வந்துவிட்டேனோ திகைத்து போனேன் காரணம் நீங்கள் போட்ட படம்தான்

  பதிலளிநீக்கு
 17. நல்வழிமுறைகள் கூறும் நீதிக்கதைகள் என்றுமே
  இனிப்பானவை..
  பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரி...

  பதிலளிநீக்கு
 18. நிச்சயம் பேராசைப்பட்டால் பெரும் நஷ்டம்தான் அக்கா

  பதிலளிநீக்கு
 19. அறத்தைக் கூறும் சிறந்த கதை பாராட்டுகள் தொடர்க

  பதிலளிநீக்கு
 20. வலைச்சரத்திற்கு வாங்கோ (;

  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 21. நீதிக்கதைகளை எத்தனை வயதில் கேட்டாலும் மனதுக்கு சுகம்தான். நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 22. நல்ல நீதிக்கதை.இன்றும் பண்ணையார்கள் உலா வரத்தான் செய்கிறார்கள்,பல உருவங்களில்,பலமனோநிலைகளில்/

  பதிலளிநீக்கு
 23. hello sir/madam
  i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

  பதிலளிநீக்கு
 24. சூப்பர் அக்கா . அருமையான நீதிக்கதை மறுபடி மறுபடி படிக்க வைக்கும் கதை.....

  பதிலளிநீக்கு
 25. i MIss U = உன் அருகாமை இன்மையின் வலியினை உணர்ந்தேன்!!!

  பதிலளிநீக்கு
 26. ரொம்ப நாளாச்சுங்க இது போல படிச்சு. நன்றி.

  பதிலளிநீக்கு
 27. நல்ல கதை.. உங்கள் வலைபூ கூட சூப்பர்..
  "மோனலிசா புன்னகையின் மர்மம்" இந்த பதிவு மிக கவர்ந்தது. இது போல இன்னும் எழுதுங்கள்..
  "சும்மா இருக்கீங்களா!? பிளீஸ் இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...," இந்த பதிவும் சூப்பர்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 28. நல்ல கதை. என் மகனுக்கு சொல்ல ஒரு கதை கிடைத்தது! நன்றி.

  பதிலளிநீக்கு
 29. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு